Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
பட்டுப் போன்ற கூந்தலைப் பெற உதவும் அற்புத எண்ணெய்கள்!!!
நல்ல அழகான பட்டுப் போன்ற கூந்தலைப் பெற ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் இந்த மாதிரியான கூந்தல் ஒருசிலருக்கு மட்டும் தான் இருக்கும். குறிப்பாக நமது அம்மா, பாட்டி போன்றோரின் கூந்தலை இப்போது பார்த்தாலும் நன்கு மென்மையாக இருக்கும். இதற்கு காரணம் வேறொன்றும் இல்லை எண்ணெய் தான். ஆனால் இக்காலத்தில் தலையில் எண்ணெய் வைப்பது என்பது அசிங்கமாக பலர் எண்ணுகின்றனர். இதனால் தான் பலருக்கு கூந்தல் உதிர்தல், வழுக்கைத் தலை, பொலிவிழந்த கூந்தல், கரடுமுரடான கூந்தல் போன்ற பிரச்சனைகள் எல்லாம் எழுகிறது.
பொதுவாக கூந்தல் நன்கு அழகாக இருப்பதற்கு பலர் நிறைய பணம் செலவழித்து அழகு நிலையங்களுக்கு சென்று, கூந்தலைப் பராமரிக்கின்றனர். இவ்வாறு பணம் செலவழித்து கூந்தலைப் பராமரித்தால் எந்த ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக பல்வேறு பிரச்சனைகளைத் தான் சந்திக்ககூடும். மேலும் ஸ்டைல் என்ற பெயரில் பலர் தலைக்கு எண்ணெய் தடவுவதில்லை. இப்படி ஸ்டைலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கூந்தலுக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்காமல் இருந்தால், பின் நாளடைவில் வழுக்கையைத் தான் அடைய முடியும்.
ஆகவே நல்ல ஆரோக்கியமான மற்றும் பட்டுப் போன்ற கூந்தல் வேண்டுமானால், எண்ணெயைப் பயன்படுத்தி, கூந்தலை அடிக்கடி பராமரிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய்களைக் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், நிச்சயம் ஆரோக்கியமான கூந்தலுடன், மென்மையான கூந்தலைப் பெறலாம். சரி, இப்போது அந்த எண்ணெய்கள் என்னவென்று பார்ப்போமா!!!

அவகேடோ எண்ணெய்
அவகேடோ எண்ணெய் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், நல்ல பட்டுப் போன்ற கூந்தலைப் பெறலாம். அதிலும் அவகேடோ-தேங்காய்-ரோஸ்மேரி போன்ற எண்ணெய்களை ஒன்றாக கலந்து, கூந்தலுக்கு தடவி நன்கு மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்தால், நல்ல பட்டுப் போன்ற கூந்தலைப் பெறலாம்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, நன்கு ஸ்கால்ப்பில் படும் படி தலையில் தடவி மசாஜ் செய்மு, காட்டன் துணி கொண்டு தலையைச் சுற்றி, 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நல்ல அடர்த்தியான மற்றும் மென்மையான கூந்தலைப் பெறலாம்.

தேங்காய் எண்ணெய்
காலம் காலமாக தலைக்கு தேய்த்து வரும் ஒரு எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெயை தினமும் ஸ்கால்ப்பில் படும்படியாக கொஞ்சமாக தடவி மசாஜ் செய்து வந்தால், கூந்தல் வளர்ச்சி சீராக இருப்பதோடு, நல்ல அடர்த்தியான மற்றும் பட்டுப் போன்ற கூந்தலைப் பெறலாம். ஆகவே மலிவான விலையில் கிடைக்கக்கூடிய இந்த எண்ணெயை தவறாமல் நாள்தோறும் உபயோகித்து பயன் பெறுங்கள்.

ஆலிவ் ஆயில்
எண்ணெய்களிலேயே மிகச்சிறந்த எண்ணெய் என்றால் அது ஆலிவ் ஆயில் தான். இதனை இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த எண்ணெய் கொண்டு கூந்தலைப் பராமரித்தால் கூந்தல் நன்கு வலுவோடு, பொடுகின்றி ஆரோக்கியமாக வளரும். அதிலும் ஆலிவ் ஆயிலில் சிறிது தேன் சேர்த்து கலந்து, கூந்தலுக்கு மாஸ்க் போட்டால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று இருக்கும்.

ரோஸ்மேரி ஆயில்
ரோஸ்மேரி ஆயிலில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, நரை முடியை தடுத்து, நல்ல மென்மையான மற்றும் பொலிவான கூந்தலுக்கு வழிவகுக்கும். ஆகவே வாரம் ஒரு முறை இந்த எண்ணெய் கொண்டு ஆயில் பாத் எடுங்கள்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்புக்கள் உள்ளன. இவை கூந்தலை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். இந்த எண்ணெயின் சிறப்பம்சம் என்னவென்றால், எந்த பயமின்றியும் இதனை மற்ற எண்ணெய்களோடு சேர்த்து ஹேர் மாஸ்க் போடலாம்.

லாவெண்டர் ஆயில்
நறுமணமிக்க எண்ணெயான லாவெண்டர் எண்ணெய் பொடுகுத் தொல்லையை நீக்கி, கூந்தலை பட்டுப் போன்று வைத்துக் கொள்வதில் சிறந்தது. அதிலும் இந்த எண்ணெயை டீ-ட்ரீ ஆயிலுடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, மைங்ல ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

புதினா எண்ணெய்
கூந்தல் ஆரோக்கியத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் உதவும் சிறப்பான எண்ணெய்களுள் ஒன்று தான் புதினா எண்ணெய். அதற்கு இந்த எண்ணெயை தலைக்கு குளிக்கும் போது ஷாம்புவில் சிறு துளிகள் சேர்த்து கலந்து குளிக்க வேண்டும். இதனை தினமும் பயன்படுத்தினால், நல்ல அழகான கூந்தலைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications
