For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்!!!

By Maha
|

அனைவருக்குமே நல்ல ஆரோக்கியமான மற்றும் நீளமான கூந்தல் வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பல செயல்களை மேற்கொள்வோம். அதில் முக்கியமான ஒன்று தான் ஆயில் மசாஜ். ஏனெனில் ஆயில் மசாஜ் செய்தால், கூந்தலின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, ஸ்காப்பில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வறட்சியான கூந்தலில் இருந்து விடுபடலாம். ஆனால் அவ்வாறு மசாஜ் மேற்கொள்ளும் போது, சரியான எண்ணெய்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால கூந்தல் வளர்ச்சியின் நல்ல மாற்றமானது நன்கு தெரியும்.

பெரும்பாலும் ஆயில் மசாஜ் என்றால் தேங்காய் எண்ணெயைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் ஆயில் மசாஜ் செய்வதற்கு நிறைய எண்ணெய்கள் உள்ளன. அதில் விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் இதுப்போல வேறு சில எண்ணெய்களும் உள்ளன. இத்தகைய எண்ணெய்களில் கூந்தலுக்கான நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

அதுவும் இந்த எண்ணெய்களுடன் செம்பருத்தி, தயிர் அல்லது எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து கூந்தலுக்கு பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலனைப் பெறலாம். சரி, இப்போது தலைக்கு ஆயில் மசாஜ் செய்வதற்கு எந்த எண்ணெய்கள் சிறந்தது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

ஆயில் மசாஜ் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் மிகவும் பிரபலமானது. இந்த எண்ணெய் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், கூந்தலின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, கூந்தல் உதிர்தல், ஸ்கால்ப் வறட்சி மற்றும் அரிப்பு போன்றவை நீங்கிவிடும். அதிலும் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து, 1-2 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால், அந்த எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கூந்தலுக்கு தடவலாம்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயும் கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். குறிப்பாக இந்த எண்ணெய் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், கூந்தலானது நன்கு அடர்த்தியாக மற்றும் நீளமாக வளரும். அதற்கு இந்த எண்ணெயை இரவில் படுக்கும் முன் தலைக்கு தடவி மசாஜ் செய்து, காலையில் எழுந்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதுடன், ஸ்காப்பில் ஏற்படும் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

அக்காலத்தில் எல்லாம் கூந்தலுக்கு விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்துவார்கள். அதனால் தான் அப்போதுள்ள பெண்களுக்கு கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கிறது. எனவே கூந்தலின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்கலாம்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

அதிகமான கூந்தல் உதிர்தல் பிரச்சனை இருந்தால், கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்தால், கூந்தல் நன்கு கருப்பாகவும், நீளமாகவும் வளரும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சிக்கும் உதவியாக உள்ளது. ஆகவே ஆலிவ் ஆயிலை இரவில் படுக்கும் போது மசாஜ் செய்து, ஊற வைத்து, காலையில் எழுந்து நீரில் அலசினால், நல்ல பலன் கிடைக்கும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

வாரம் ஒரு முறை தலைக்கு நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் தடவி மசாஜ் செய்து வர, கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும்.

ரோஸ்மேரி ஆயில்

ரோஸ்மேரி ஆயில்

ரோஸ்மேரி எண்ணெயை, ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து வந்தால், ஸ்கால்ப் பிரச்சனைகள் நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்று, அதன் வளர்ச்சியானது அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Oils For Hair Growth

There are many oils for hair care. However, coconut oil is very popular. This is because of the numerous hair benefits that this oil offers. However, castor oil and almond oil are few of the best oils for hair care. So, which are the best oils for hair? Check out..
Desktop Bottom Promotion