Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
அழகான முடியை பெற தவறாமல் செய்ய வேண்டிய செயல்கள்!!!
தலை முடி என்பது நம்முடைய அழகை மெருகேற்ற உதவும் ஒரு முக்கியமான பகுதி என்பதில் மாற்று கருத்து இல்லை. இது பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் தான். அதனால் முடியை பராமரிப்பதில் ஆண்களும் பெண்களும் அதிகம் மெனக்கெடுவதுண்டு. தலை முடியினால் மீண்டும் உங்கள் நாள் மோசமானதாக அமைந்துள்ளதா? ஆரோக்கியமான தலை முடி என்ற வெற்றிகரமான மகுடம் உங்கள் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றிவிடும். கீழ்கூறிய எளிய வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் தலை முடி ஆரோக்கியமாக இருக்கும்.
தலை முடி வறட்சியாகவும், சுருண்டு கொள்ளவும் செய்தால், வாரம் ஒரு முறை சூடான எண்ணெய் மசாஜ் செய்யுங்கள். அதனை தொடர்ந்து சாதாரண ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி குளியுங்கள். அளவுக்கு அதிகமான கலரிங், இரசாயனங்கள் மூலம் முடியை நேராக்குதல் அல்லது சுருட்டி விடுதல் மற்றும் இதர ரசாயன சிகிச்சைகளை சில வாரங்களுக்கு மூட்டை கட்டி வையுங்கள்.
வீட்டில் செய்யப்பட்ட தலை முடி மாஸ்க்கை பயன்படுத்துவது, ட்ரையர் பயன்படுத்துவது தவிர்ப்பது போன்றவைகள் தலை முடியை நன்றாக வைக்கும். இப்போது தலை முடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று பார்ப்போம்.

வீட்டில் செய்யும் ஹேர் மாஸ்க்
- அரை கப் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளவும்.
- இதனை ஒரு இரவு முழுவதும் இரண்டரை கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பின் ஊறிய வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
- இப்போது இந்த பேஸ்டை தலையில் தடவி கொள்ளுங்கள்.
- கொஞ்ச நேரம் ஊற வைத்து பின் அலசி விடுங்கள்.

ஷாம்பு போடும் போது நினைவில் கொள்ள வேண்டியவை...
தலைக்கு குளிக்கும் போது, ஸ்கால்ப்பை சுத்தம் செய்வதில் கவனம் இருக்க வேண்டும். அதனால் விரல்களை கொண்டு மென்மையாகவும், திடமாகவும் ஸ்கால்ப்பில் நுரையுடன் மசாஜ் செய்யுங்கள். தலையை கழுவிய பின் நல்ல கண்டிஷனரை பயன்படுத்துங்கள். அதனை ஒவ்வொரு முடியிலும் படுமாறு தடவி, பின் நன்றாக கழுவி விடுங்கள்.

தவிர்க்க வேண்டியவை
- வெப்ப முறையில் தலைமுடியின் ஸ்டைலை மாற்றுவது அல்லது அயர்ன் மற்றும் வெப்பமான கர்லரை பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்த்து, ஈர தலைமுடி இயற்கையாகவே காய விடுங்கள்.
- ஆல்கஹால் உள்ள தலைமுடி ஜெல் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
- சுத்தமில்லாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சீப்பு மற்றும் பிரஷ்களை எல்லாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- தலைமுடியை கடுமையான ஷாம்புவை கொண்டு அடிக்கடி கழுவக்கூடாது.

டிப்ஸ்
வேலை பளு மிக்க நாட்களில் களைத்து போய் வீட்டிற்கு வரும் போது நேராக கட்டிலில் போய் சாய்ந்து விடுவோம். அப்படி செய்யும் முன் கூந்தலை முடிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக உங்கள் கூந்தல் நீளமாக இருக்கும் போது தவறாமல் செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் கூந்தலுக்கு லேசான சடை ஒன்றை பின்னிக் கொள்ளுங்கள் அல்லது இரண்டு பின்னல் கூட போட்டுக் கொள்ளலாம். சடை போட்டு படுத்துக் கொண்டால், முடியானது தூங்கும் போது பாதுகாப்பாக இருக்கும்.

தலை சருமத்தை எண்ணெயை கொண்டு மசாஜ் செய்யுங்கள்
- சீரான முறையில் கூந்தலுக்கு எண்ணெய் தடவினால், முடியின் தரத்தில் ஏற்படும் வித்தியாசத்தை கண்டிப்பாக நீங்கள் கவனிக்கலாம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆகவே தலைக்கு எண்ணெயை கொண்டு இதமாக மசாஜ் செய்யுங்கள்.
- மூலிகை கலந்த ஆலிவ், ஜோஜோபா, பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்களில் முடியை மேம்படுத்தும் குணங்கள் உள்ளது. அதனால் அது தலை சருமத்திற்கு சில ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
- தலைக்கு நன்றாக ஒரு மசாஜ் ஒன்றை செய்தால், நல்ல தூக்கம் வரும். மேலும் காலை புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கவும் உதவும்.
- முடிக்கு எண்ணெய் தேய்க்கும் போது, அதன் நுனிகளில் படுமாறு தேய்க்க வேண்டும்.

முடி கழிகிறதா?
அப்படியெனில், அரை கப் வெந்தயம், 500 மி.லி. தூய்மையான தேங்காய் எண்ணெய், நன்றான சூரிய வெளிச்சம் தேவை.

செய்முறை:
- வெந்தயத்தை தேங்காய் எண்ணெய் உள்ள ஜாடியில் போட்டு, அதனை நேரடி சூரிய கதிர்கள் படும் படி தினமும் வையுங்கள். இதனை ஒரு வாரம் செய்யுங்கள்.
- இந்த எண்ணெயை கொண்டு வாரம் மூன்று முறை தலையில் மசாஜ் செய்தால் முடி கழிதல் ஏற்படாது.

தேங்காய் எண்ணெயை சிறப்பானதாக எப்படி மாற்றுவது?
டபுள் பாய்லர் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதில் 500 மி.லி. தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள். அதனுடன் சேர்த்து, காய்ந்த செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை போட்டு, நெல்லிக்காய்களை சிறு துண்டுகள் சேர்த்து கொஞ்சம் மகா ப்ரிங்கராஜ் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இலைகளையும் சேர்க்கவும். இந்த கலவை நன்றாக உருகட்டும். அதன் பின் ரோஸ், லாவெண்டர் மற்றும் டெய்ஸி போன்றவற்றையும் வாசனைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை நீண்ட நேரத்திற்கு கொதிக்க வைக்கக்கூடாது. ஒரு முறை கொதித்த பின்னர், அந்த கலவையை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஆற விட்டு, அதன் பின் அதனை உபயோக்கிகலாம்.



Click it and Unblock the Notifications