For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான முடிப் பிரச்சனைகள்!!!

By Maha
|

ஆண்கள் அவ்வளவாக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறானது. ஆண்களுக்கும் அவர்களது அழகு பற்றிய கவலை உள்ளது. பெரும்பாலும் அழகில் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவது, கூந்தல் பிரச்சனையில் தான். சொல்லப்போனால், ஆண்களுக்கு சருமத்தை விட, கூந்தல் தான் அழகு தரும். எனவே கூந்தலில் ஏதாவது பிரச்சனை வந்தால், பின் அது அவர்களது தோற்றத்தையே மாற்றிவிடும். மேலும் பெண்களை விட ஆண்களுக்குத் தான் கூந்தலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் பலர் கூந்தல் பிரச்சனையால், வாழ்க்கையே வெறுத்துவிடுகின்றனர்.

எனவே இத்தகைய ஆண்களுக்காகத் தான் அவ்வப்போது ஃபேஷன் என்ற பெயரில் பல ஹேர் ஸ்டைல்கள் வருகின்றன. மேலும் பலர் புத்திசாலித்தனத்துடன், தமக்கு இருக்கும் கூந்தல் பிரச்சனையை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் இருப்பதற்கு, அத்தகைய பிரச்சனையையும் ஃபேஷன் என்று சொல்லி தப்பிக்கின்றனர். உதாரணமாக, வழுக்கை ஏற்பட்டால், அதனை ஃபேஷன் என்று சொல்லி சமாளிப்பது. அதிலும் தற்போது கோடைகாலம் என்பதால், கூந்தலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஏனெனில் அதிகப்படியான வியர்வையால், தலையில் அழுக்குகள் படிந்து, பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல் போன்றவற்றை உண்டாக்கிவிடும். ஆகவே கூந்தலை சரியாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. இப்போது, ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான கூந்தல் பிரச்சனைகள் என்னவென்று பார்த்து, அதனை எவ்வாறு சரிசெய்வது என்று பார்ப்போமா!!!

Common Hair Problems Of Men

கூந்தல் உதிர்தல்

இன்றைய காலத்தில் பெரும்பாலான ஆண்கள் இளம் வயதிலேயே வழுக்கை அடைந்துவிடுகின்றனர். இவ்வாறு வழுக்கை ஏற்படுவதற்கு காரணம் சரியான பராமரிப்பு கூந்தலுக்கு கொடுக்காததால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, இறுதியில் வழுக்கையை ஏற்படுத்திவிடுகின்றன. எனவே கூந்தல் அதிகம் உதிர ஆரம்பிக்கும் போதே, எவ்வளவு வேலை இருந்தாலும் சரியான பராமரிப்பை கொடுத்து வந்தால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம். இல்லாவிட்டால், தன்னம்பிக்கை இழந்து, வாழ்க்கையையே இழக்க நேரிடும்.

வழுக்கை

வழுக்கை ஏற்படுவதற்கு காரணம், சரியான பராமரிப்பு இல்லாதது மட்டுமின்றி, ஆண்களின் மயிர்கால்கள் அளவுக்கு அதிகம் சென்சிட்டிவ்வாக இருப்பதால், எளிதில் உதிர்ந்து விடுகின்றன. மேலும் ஆண்களின் உடலில் உள்ள டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனும் சென்சிட்டிவ்வாக இருப்பதும் ஆகும். சில சமயங்களில் பரம்பரை வழியாகவும் வழுக்கை ஏற்படும். இத்தகைய நிலையை மாற்ற முடியாது.

பொடுகு

பெண்களுக்கு மட்டுதம் தான் பொடுகு ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். ஆண்கள் பலரும் இந்த பொடுகுத் தொல்லைக்கு ஆளாகின்றனர். இவ்வாறு பொடுகுத் தொல்லை ஏற்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்ய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவை கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும். மேலும் தினமும் தலைக்கு குளிப்பதும் பொடுகுத் தொல்லையை தடுக்கும்.

நரைமுடி

ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் நரை முடியும் ஒன்று. அதிலும் இளம் வயதிலேயே நரை முடி ஏற்பட்டுவிட்டால், இதுவரை பார்த்த பெண்கள் கூட, வயதானவர் என்று நினைத்து, பார்ப்பதை நிறுத்திவிடுவார்கள். இத்தகைய பிரச்சனை ஏற்படுவதற்கு, மரபணு, சுற்றுச்சூழல் மற்றும் கெமிக்கல் அதிகமாக கூந்தலில் படுவது போன்றவை காரணங்களாகும். எனவே நரை முடி ஆரம்பித்துவிட்டால், மற்றவர்கள் பார்த்து வயதாகிவிட்டதா என்று கேட்பதற்கு முன், அதனை போக்குவதற்கோ அல்லது மறைப்பதற்கோ முயற்சிப்பது நல்லது.

ஒல்லியான முடி

சிலருக்கு தலையில் முடி இருக்கும் ஆனால் இருக்காது என்பது போன்று காணப்படும். அத்தகையவற்றிற்கு காரணம், போதிய சத்துக்கள் உடலில் இல்லாததும், மன அழுத்தமும் தான் காரணம். ஒல்லியான முடி ஏற்படுவதற்கு ஆரம்ப நிலை கூந்தல் உதிர்தல் தான். எனவே கூந்தல் உதிர்வதற்கான உணவுகளை சாப்பிட்டு, மனதை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வதன் மூலம், இத்தகைய ஒல்லியான முடி ஏற்படுவதை தடுக்கலாம்.

English summary

Common Hair Problems Of Men | ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான முடிப் பிரச்சனைகள்!!!

Usually there is a notion that men do not have much beauty concerns like women. But this concept is absolutely wrong. Men are also conscious about their looks and style. Working in hot climate and workplace with high temperature like foundry or engine rooms also causes hair loss. Here are some common hair problems that make men more concerned about the importance of hair care.
Desktop Bottom Promotion