Just In
- 56 min ago
2022 ஜூலை மாசம் எந்த ராசிக்கு சூப்பராகவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கப் போகுது தெரியுமா?
- 1 hr ago
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க...இந்த இலைகளை ரெகுலரா சாப்பிட்டு வந்தா போதுமாம்!
- 2 hrs ago
கடுமையான கரோனரி நோய்க்குறி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
- 2 hrs ago
இந்த பழங்களை ஒன்றாக சாப்பிடுவது விஷத்திற்கு சமமாம்... இது உங்க உயிருக்கே ஆபத்தாகும்... ஜாக்கிரதை!
Don't Miss
- Finance
நம்ம ஊரு முறுக்குக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா..?
- News
உதய்பூர் டெய்லர் கொலை! இஸ்லாம் இதை போதிக்கவில்லை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
- Automobiles
விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!
- Technology
Samsung Galaxy M32 விலை குறைப்பு.. லக்கு தானா வந்தா வேண்டா சொல்ல கூடாது! புது ரேட் இதான்..
- Movies
இது பிக் பாஸ் புரமோ இல்லை.. விக்ரம் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா? கமல் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
- Sports
"இந்தியாவுக்கு வெற்றி இல்லை" முன்னாள் வீரர்கள் வித்தியாசமான கருத்து.. அதிர்ஷ்டத்தால் மாறியதா ஆட்டம்
- Travel
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கொதிக்கும் வெயில் காலத்தில் குளிக்கும் போது கட்டாயம் பயன்படுத்த வேண்டியவை!
தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகாித்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே வெப்பம் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் நீண்ட நேரம் குளிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். நாள் முழுவதும் வேலைப் பளுவிலும், மன அழுத்தத்திலும் இருந்துவிட்டு, அவற்றில் இருந்து விடுபடுவதற்கு, குளித்தால் நன்றாக இருக்கும்.
நமது உடலில் நீா்ச்சத்தை அதிகாிக்க அல்லது நமது உடலை குளிா்விக்க, நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். நமது சருமத்தை சீராக பராமாிக்க வேண்டும். அதனால் சருமம் பொலிவு பெறும். இந்நிலையில் இந்த கோடை காலத்தில், நமது பரபரப்பான உணா்வுகளை அமைதிப்படுத்தவும், நாம் தேடும் புத்துணா்ச்சி அனுபவத்தை வழங்கவும், இந்தப் பதிவில் சில பாிந்துரைகள் கொடுக்கப்படுகின்றன.
கொளுத்தும் வெயிலில் ஒரு முழுமையான மற்றும் நீண்ட நேர குளியல் அனுபவத்தைப் பெற வேண்டும் என்றால், நாம் வாங்கும் பொருள்களின் பட்டியலில் பின்வரும் பொருள்களைக் கண்டிப்பாகச் சோ்த்துக் கொள்ள வேண்டும்.

1. ஷவர் ஜெல்கள்
நாம் கோடையில் இருப்பதால், நமது உடலுக்கு நீா்ச்சத்தை அளிக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு உடலைக் கழுவ வேண்டும். அவை நமது சருமத்திற்கு புதுப் பொலிவையும், நமது உடலுக்கு புத்துணா்ச்சியையும் அளிக்கும். சருமத்தை மென்மையாக்குவதற்கு மிகவும் சாியான பொருள்களைத் தோ்ந்தெடுத்து அவற்றைக் கொண்டு சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
குளிக்கும் போது கூல் ஷவர் ஜெல்லைப் பயன்படுத்தலாம். அது நமது சருமத்தைத் தூண்டி, மீட்டெடுத்து, நமது சருமம் புத்துயிா் பெற உதவி செய்யும். அதோடு சருமத்திற்குத் தேவையான குளிா்ச்சியையும் வழங்கும். அதாவது வியா்க்கும் கோடையில், நமது சருமமானது 3 டிகிாி வெப்பநிலையில் இருப்பதைப் போன்ற உணா்வை ஏற்படுத்தும். மேலும் நமது ஒவ்வொரு உணா்வையும் தூண்டி, நாம் குளித்து முடித்தவுடன் நமக்கு மகிழ்வை ஏற்படுத்தும்.

2. உடலைத் தேய்க்கும் பொருள்களைக் கொண்டு தேய்த்தல்
உடலைத் தேய்க்கும் பொருள்களைக் கொண்டு நமது சருமத்தை மென்மையாகத் தேய்த்தால் அல்லது நீவிவிட்டால், நமது சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும். அவை நமது சருமத்தின் மேல் பகுதியை உாித்துவிடும். அதனால் கோடை காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சி பிரச்சினை குறையும். மேலும் அவ்வாறு மெதுவாக நீவிவிடும் போது நமது உடலுக்கும், மனதிற்கும் ஒரு தளா்வு கிடைக்கும். எனினும் உடலைத் தேய்ப்பதற்கு மிருதுவான பொருள்களையே தோ்ந்தெடுக்க வேண்டும். சருமத்தில் காயங்களை ஏற்படுத்தக்கூடிய பொருள்களைத் தவிா்க்க வேண்டும்.

3. காய்களால் செய்யப்படும் லூஃபாக்களைப் பயன்படுத்தல்
பொதுவாக கோடையில் சருமம் மிகவும் பொலிவற்றுக் காணப்படும். இந்நிலையில் காய்களால் செய்யப்படும் லூஃபாக்களைக் கொண்டு சருமத்தைத் தேய்த்தால், அது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவும். மேலும் லூஃபாக்களைக் கொண்டு சருமத்தைத் தேய்த்தால், சருமத்தில் கோடுகளை அல்லது சுருக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சரும உலா் திட்டுகளை அகற்றலாம். அதனால் சருமத்தின் செல்களில் மீள் உருவாக்கம் நடைபெறும். அதோடு ஆரோக்கியமான மற்றும் புத்துணா்ச்சியுடன் கூடிய சருமம் கிடைக்கும்.

4. நறுமண எண்ணெய்களை சோ்த்துக் கொள்ளுதல்
கொளுத்தும் பகல் நேரத்தில் வேலை செய்துவிட்டு, மாலையில் குளிக்கும் போது லாவண்டா் அல்லது ரோஸ்மோி போன்ற நறுமண எண்ணெய்களைச் சோ்த்துக் கொள்ளலாம். அவை நமக்கு மன அழுத்தத்தைக் குறைத்து ஒரு இனிமையானத் தளா்வைத் தரும். குளிக்கும் போது நறுமண எண்ணெய்களை பயன்படுத்துவது என்பது கேக் மீது ஐஸ் வைப்பதற்கு சமம் ஆகும். அவை பல நன்மைகளைத் தரும். அதாவது முடி வளா்வதற்கு உதவும். சருமம் ஆரோக்கியம் பெற உதவும். அதோடு நமது குளியலுக்கு ஒரு ஆடம்பரத்தைத் தரும்.

5. மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்துதல்
நமது உடலுக்கு ஈரப்பதம் தேவைப்படாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், எந்த பருவ காலமாக இருந்தாலும், நமது உடலுக்கு மற்றும் மிருதுவான சருமத்திற்கு கண்டிப்பாக ஈரப்பதம் தேவை. பொதுவாக ஆடை அணிவதற்கு முன்பாகவோ அல்லது ஆடை அணிந்த பின்னரோ மக்கள் ஈரப்பதம் கொடுக்கும் மாய்ஸ்சுரைசர்களைத் தேய்ப்பா். ஆனால் அவற்றைத் தேய்ப்பதற்கு மிகவும் சாியான நேரம் எதுவென்றால் குளித்ததற்குப் பின்பு ஆகும்.
ஈரப்பதம் கொடுக்கும் மாய்ஸ்சுரைசர்களைத் தேய்த்த பின்பு அவற்றை முற்றிலுமாகத் துடைத்துவிடக்கூடாது. நமது சருமத்தில் சிறிது தங்கி இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவை தமது வேலையைச் செய்ய முடியும். மேலும் நமது சருமம் ஆரோக்கியமான திரவத்தை உறிஞ்சுவதற்கு உதவி செய்யும். எடை குறைந்த மாய்ஸ்சுரைசர்களைத் தோ்ந்தெடுத்து அவற்றை நமது சருமத்தில் தேய்க்க வேண்டும். அது குளித்தபின் நமது ஒரு புத்துணா்ச்சியை வழங்கும்.