கருப்பா அசிங்கமா இருக்கும் அந்தரங்க பகுதியை வெள்ளையாக்கும் சில வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

கருப்பாக இருக்கும் ஒவ்வொருவருக்குமே வெள்ளையாக வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். கருப்பு அழகு தான், இருந்தாலும் சில இடங்களில் சரும நிறங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அனைவருக்குமே வெள்ளையாக வேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. அதற்காக பலர் தங்களது கை, கால், முகம், கழுத்து மற்றும் உடலின் பல பகுதிகளில் உள்ள கருமையையும் போக்க பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

Remedies For Dark Skin Around Private Parts

அதில் வெளியே மற்றவர்களிடம் சொல்லாமல் ரகசியமாக பலர் வெள்ளையாக்க முயற்சிக்கும் ஓர் பகுதி தான் தங்களது அந்தரங்க பகுதி. சிலருக்க இப்பகுதி மிகவும் கருமையாக இருக்கும். இதற்கு மரபணுக்கள் தான் காரணம். அதோடு இறுக்கமான உள்ளாடை அணிவது, சில வகையான சரும நோய்கள், தொடர்ச்சியான ஷேவிங், இறுக்கமான உள்ளாடை மற்றும் தொடர்ச்சியாக தோல் உரசிக் கொண்டிருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மேலும் அதிகப்படியான வியர்வையும், இறந்த செல்களின் தேக்கமும் மற்றொரு காரணங்களாகும். சரி இந்த சென்சிடிவ்வான பகுதியில் உள்ள கருமையைப் போக்க கடைகளில் விற்கப்படும் க்ரீம் பொருத்தமானதாக இருக்காது. இதில் உள்ள கெமிக்கல்களால் சரும ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். ஆனால் அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்குவதற்கு சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் அந்தரங்க பகுதியை அழகாக்கிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

* கற்றாழை சரும கருமையைப் போக்கும் அற்புத பொருள். இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமைகள் மறைய ஆரம்பித்துவிடும். மேலும் கற்றாழை பாதிக்கப்பட்ட சரும செல்களைப் புதுப்பிக்கும்.

* கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதனை நேரடியாக கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

* எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், எப்பேற்பட்ட கருமையையும் அகற்றும். இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீங்கி, சரும நிறத்தை மேம்படுத்தும். மேலும் எலுமிச்சை சாறு புதிய செல்களின் உருவாக்கத்தையும் தூண்டும்.

* உங்கள் அந்தரங்க பகுதியைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க பாதி எலுமிச்சையை எடுத்து, கருப்பாக உள்ள அந்தரங்க பகுதியில் தேய்த்து, 10-15 நிமிடம் கழுத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

* இல்லாவிட்டால்,1/2 எலுமிச்சையின் சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் தன் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.

வெள்ளரிக்காய் சாறு

வெள்ளரிக்காய் சாறு

* வெள்ளரிக்காயிலும் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்தில் மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, சரும கருமையைக் குறைக்கும். மேலும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இது சரும வறட்சியைத் தடுத்து, சரும பொலியை மேம்படுத்தும்.

* வெள்ளரிக்காயின் சாற்றினை எடுத்து, அதை கருமையாக உள்ள அந்தரங்க பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்வது நல்லது.

* இல்லாவிட்டால், 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அந்தரங்க பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்

* ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட பின் அதன் தோலை தூக்கிப் போடாமல், அதனை உலர வைத்து பொடி செய்து, அதைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்தால், வெள்ளையாகலாம். ஏனெனில் இதில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளது. மேலும் இதன் தோலில் தான் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளித்து, சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து, அத்துடன் சிறிது தேனையும் கலந்து கொள்ளவும். பின் அதை அந்தரங்க பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின், நீர் பயன்படுத்தி மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.

தக்காளி

தக்காளி

* தக்காளி சரும கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. இதில் உள்ள லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், சூரியனால் சருமம் பாதிப்படையாமல் தடுக்கும்.

* அதற்கு தக்காளியின் ஒரு துண்டை எடுத்து, அந்தரங்க பகுதியில் 2 நிமிடங்கள் தேய்த்து, 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம்

பாதாம்

* பாதாம் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டிற்குமே சரும சருமையைப் போக்கும் திறன் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஏ, சரும செல்களுக்கு ஊட்டமளித்து, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ளும்.

* இரவில் படுக்கும் முன் 5-6 பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் அதை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்யலாம்.

* இல்லாவிட்டால் தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, கருமையாக உள்ள பகுதியில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்வதாலும், அப்பகுதியில் உள்ள கருமையைப் போக்கலாம்.

பால்

பால்

வீட்டில் உள்ள வெறும் பால் கொண்டும், கருப்பாக இருக்கும் பகுதியை வெள்ளையாக்கலாம். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள மெலனின் அளவைக் குறைத்து, சருமத்தை வெள்ளையாக்கும். அதற்கு பாலை பஞ்சுருண்டையில் நனைத்து அந்தரங்க பகுதியில் தடவி 5 நிமிடம் கழித்து, மீண்டும் பாலைத் தடவுங்கள். நன்கு காய்ந்த பின் அப்பகுதியை நீர் கொண்டு மசாஜ் செய்து கழுவுங்கள். இப்படி தினமும் 2 முறை செய்வதால், நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவைக் கொண்டு எளிய வழியில் அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்கலாம். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் போக்குவதோடு, அதிகமாக வியர்ப்பதையும் தடுக்கும். அதற்கு ஒரு பௌலில் பேக்கிங் சோடா மற்றும் நீரை 3:1 என்ற விகிதத்தில் கலந்து, அந்தரங்க பகுதியில் தடவி காய்ந்த பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம். சென்சிடிவ் சருமத்தைக் கொண்டவர்களானால், இந்த முறையைப் பயன்படுத்தாதீர்கள்.

பப்பாளி

பப்பாளி

* 1/4 கப் நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து, கருமையாக உள்ள அந்தரங்க பகுதியில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுவதாலும், கருமை அகலும்.

* இல்லாவிட்டால், 1/4 கப் பப்பாளி காயை அரைத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் வைட்டமின் ஈ ஆயில் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.

சந்தனம்

சந்தனம்

* ஒரு பௌலில் 1/2 எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் 3-4 டீஸ்பூன் சந்தனப் பவுடர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* அதன் பின் இந்த கலவையை இரவில் படுக்கும் முன், கருமையாக உள்ள பகுதிகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுங்கள்.

* இச்செயலை கருமை போகும் வரை தினமும் இரவில் பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remedies For Dark Skin Around Private Parts

There are many easy and natural methods to lighten private parts skin. These methods may take some time, so you need to start early in the season and have patience to get positive results. Read on...
Story first published: Thursday, February 22, 2018, 9:30 [IST]