வாக்சிங் செய்த பிறகு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

வாக்ஸிங் செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க முடியும். இது அதிகபட்சம் ஒருமாத காலத்திற்கு நீடித்திருக்கும். இதனால் அதிகப்படியானோர் வாக்ஸிங் செய்வதையே விரும்புகின்றனர். நீங்கள் வாக்ஸிங் புதிதாக செய்பவராகவோ அல்லது எப்போதாவது செய்பவராகவோ இருந்தால், வாக்ஸிங் செய்த பின்பு நீங்கள் உடலில் இந்த சில மாற்றங்களை உணர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறிய புண்கள் :

சிறிய புண்கள் :

நீங்கள் வாக்ஸிங் செய்யும் போது, முடியின் வேர்க்கால்கள் மிக வலிமையாக இருந்தால், முடியை நீக்கும் போது வேர்க்கால்கள் இருந்த இடத்தில் மட்டும் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

தொற்றுகள்

தொற்றுகள்

வாக்ஸிங் மூலமாக நீங்கள் உங்களது அந்தரங்க பகுதிகளில் உள்ள முடிகளை நீக்கும் போது, அந்த இடங்களில் நீர் வழிந்து தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

எரிச்சல்

எரிச்சல்

ஹாட் வாக்ஸிங் உபயோகித்தால் சருமத்தில் எரிச்சல் ஏற்படும். ஆனால் அழகுக்கலையில் வல்லுனர்களாக இருப்பவர்கள் எரிச்சலை ஹாட் வாக்ஸிங்கை உபயோகப்படுத்தமாட்டார்கள். ஆனால் நீங்கள் முகப்பரு க்ரீம்கள் அல்லது முதிர்ச்சியை தடுக்கும் க்ரீம்களை உபயோகித்தால், அதில் உள்ள ஒரு வகை கெமிக்கலால் உங்களுக்கு சற்று எரிச்சல் உண்டாகலாம்.

சேதமாகிறது :

சேதமாகிறது :

வாக்ஸிங் செய்வதால் முடி வளரும் சருமப்பகுதி சேதமடைகிறது. எனவே அங்கே முடி வளரும் தன்மையே இல்லாமல் போய்விடுகிறது. எனவே டீன் ஏஜ் பருவத்தில் இருந்தே வாக்ஸிங் செய்வதை முடிந்தவரை தடுப்பது நல்லது.

சருமத்துளைகள்

சருமத்துளைகள்

வாக்ஸிங் செய்யும் போது சருமத்துளைகள் திறந்துவிடுகின்றன. இதனால் அழுக்குகள் உள்ளே சென்று சருமம் சேதமடைய வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முறையாக வாக்ஸிங் செய்ய வேண்டியது அவசியம். எனவே வாக்ஸிங் செய்யும் போது சிறந்த வல்லுனர்களிடன் சென்று செய்வது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

what happens after waxing

what happens after waxing
Story first published: Thursday, September 14, 2017, 12:05 [IST]
Subscribe Newsletter