வியர்க்குரு அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

குளித்த ஒரு மணிநேரத்தில் நீங்கள் அணிந்த உடை ஈரமாகிவிடுகிறதா? இதற்கு கொளுத்தும் வெயிலால் அதிகப்படியான அனல் நம்மைச் சுற்றி இருப்பது தான். இதனால் அதிகம் வியர்த்து, சருமத்தில் சிறு தடிப்புகளுடன், சருமமும் சிவந்து வியர்க்குருவை உண்டாக்குகிறது.

4 Natural Home Remedies for Prickly Heat

வியர்க்குரு ஒருவருக்கு வந்தால், அது ஊசியால் சருமத்தை குத்துவது போல் இருப்பதுடன், எரிச்சலுடனும் இருக்கும். இந்த வியர்க்குரு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே பாடாய்படுத்தும். உங்களுக்கு வியர்க்குரு அதிகமாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏனெனில் இக்கட்டுரையில் வியர்க்குரு வராமல் தடுக்கும் வழிகள் மற்றும் குத்தும் வியர்க்குரு பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தடுக்கும் வழி #1

தடுக்கும் வழி #1

முதலில் உடலை குளிர்ச்சியுடனும், நல்ல காற்றோட்டத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இறுக்கமான உடையை அணியும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். குழந்தைகளுக்கு கோடையில் டயப்பர் போட்டு விடுவதைத் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

தடுக்கும் வழி #2

தடுக்கும் வழி #2

முக்கியமாக கோடையில் வெளிரிய நிறத்திலான உடை மற்றும் தளர்வான உடையை அணிய வேண்டும். இதனால் உடல் முழுவதும் காற்றோட்டம் சிறப்பாக இருந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும். அதோடு கோடையில் சிந்தடிக் உடைகள் அணிவதைத் தவிர்த்து, காட்டன் உடைகளையே தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.

தடுக்கும் வழி #3

தடுக்கும் வழி #3

உடல் வெப்பமாவதைத் தடுக்க நீர்ச்சத்துள்ள பானங்களை அதிகம் பருக வேண்டும். குறிப்பாக இளநீர், எலுமிச்சை ஜூஸ், தண்ணீர் போன்றவற்றை அதிகம் பருக வேண்டும். ஆல்கஹால் மற்றும் கார்போனேட்டட் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

தடுக்கும் வழி #4

தடுக்கும் வழி #4

பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன சாலட்டுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் கோடையில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் போதுமான அளவில் கிடைத்து, உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

தடுக்கும் வழி #5

தடுக்கும் வழி #5

கோடையில் சருமம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். ஆனால் வியர்வை வெளியேறினால், அதைத் தவறாமல் துணியால் அவ்வப்போது துடைக்க வேண்டும். இதனால் சருமத்தில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தைத் தடுக்கலாம். மேலும் கோடையில் பவுடரை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

போக்கும் வழி #1

போக்கும் வழி #1

வியர்க்குரு அதிகம் இருந்தால், தயிரை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வியர்க்குரு போய்விடும்.

போக்கும் வழி #2

போக்கும் வழி #2

200 மிலி ரோஸ் வாட்டர், 4 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 200 மிலி நீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஐஸ் ட்ரேயில் ஊற்றி ப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கி, அவற்றை ஒரு மஸ்லின் துணியில் வைத்து, தினமும் 4-5 முறை வியர்க்குரு உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

போக்கும் வழி #3

போக்கும் வழி #3

சந்தன பவுடரை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

போக்கும் வழி #4

போக்கும் வழி #4

2 டீஸ்பூன் புதினா பேஸ்ட்டுடன், 3 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடர் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

4 Natural Home Remedies for Prickly Heat

Here are some natural home remedies for prickly heat. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter