For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத படிச்சா.. இனிமேல் வாழைப்பழ தோலை தூக்கி போடவே மாட்டீங்க...

By Maha
|

அனைவருக்கும் வாழைப்பழத்தின் நன்மைகளைப் பற்றித் தெரியும். பலரும் வாழைப்பழத்தின் உள்ளே உள்ள கனியில் தான் நன்மைகள் நிறைந்துள்ளது என்று நினைத்து, அதன் தோலை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அதன் தோலில் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் நன்மைகள் அடங்கியுள்ளன.

அதிலும் ஆரோக்கிய நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் வாழைப்பழத்தோலில் உள்ளன. உலகில் உள்ள சில நாடுகளில் வாழைப்பழத் தோலை மக்கள் உட்கொண்டு வருகின்றனர். இப்போது நாம் இந்த வாழைப்பழத் தோல் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்துக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெண்மையான பற்கள்

வெண்மையான பற்கள்

தினமும் வாழைப்பழத் தோலின் உட்பகுதியைக் கொண்டு பற்களைத் தேய்த்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் வெள்ளையாக இருப்பதை நீங்களே காண்பீர்கள்.

சரும மருக்கள்

சரும மருக்கள்

உங்கள் சருமத்தில் மருக்கள் அதிகம் இருந்தால், அதனை வாழைப்பழத் தோலைக் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு வாழைப்பழத் தோலின் உட்பகுதியை மருக்களின் மேல் வைத்து கட்டி, இரவு முழுவதும் வைத்து மறுநாள் காலையில் எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் அது உதிர்ந்துவிடும்.

முகப்பரு

முகப்பரு

உங்களுக்கு முகப்பரு அதிகம் வருமாயின், வாழைப்பழத்தின் தோலை பருக்கள் அதிகம் வரும் பகுதியில் தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.

சரும சுருக்கம்

சரும சுருக்கம்

உங்கள் முகத்தில் சுருக்கங்கள் வர ஆரம்பிக்கிறதா? அப்படியெனில் வாழைப்பழத்தின் தோலை முகத்தில் தேய்த்து, 30-35 நிமிடம் ஊற வையுங்கள். இப்படி தினமும் செய்து வர, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-ஏஜிங் தன்மை, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும்.

சொரியாஸிஸ்

சொரியாஸிஸ்

சொரியாஸிஸ் வகையைச் சேர்ந்த சரும பிரச்சனைகள் இருப்பவர்கள், வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து வர, சொரியாஸிஸ் பிரச்சனைகளில் இருந்து விரைவில் தீர்வு கிடைக்கும்.

வலி நிவாரணி

வலி நிவாரணி

உங்களுக்கு ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்போது வாழைப்பழத்தின் தோலை அவ்விடத்தில் தேய்த்தால், வலி பறந்தோடும். இதற்கு வாழைப்பழத்தில் உள்ள வலி நிவாரணி பண்புகள் தான் காரணம்.

பூச்சிக்கடி

பூச்சிக்கடி

பூச்சிக்கடியால் ஏற்படும் தாங்க முடியாத அரிப்பு மற்றும் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு அவ்விடத்தை மசாஜ் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Once You Read THIS You Will Never Throw Away This Part of the Banana

We all throw it away after eating the banana, but people in some countries, such as India use the nutritional benefits of the banana skin by eating it for decades. Here is now to use the banana peel.
Desktop Bottom Promotion