For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டீன்-ஏஜ் பெண்களுக்கான முக்கியமான 7 அழகு குறிப்புகள்!!!

By Boopathi Lakshmanan
|

பொதுவாக நாம் மேக்கப் செய்வதற்கான சரியான வழியை சொந்த அனுபவத்தின் மூலமாகவே கற்றுக் கொள்வோம். ஆனால் காலத்தையும் நேரத்தையும் சேமித்து பல எரிச்சல் மற்றும் தோல்வியை தரும் அனுபவங்களை தவிர்ப்பதற்கு நான் இங்கு சில கருத்துக்களையும் யோசனைகளையும் கூற விரும்புகின்றேன்.

ஒவ்வொரு டீன் ஏஜ் பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய மேப் அப் ரகசியங்களில் சிலவற்றை இந்த பகுதியில் பார்ப்போம். இது ஒரு வகையான கலை. இதை செய்வதற்கு எந்த ஒரு விதிகளும் கிடையாது. எப்படி இருந்தாலும் புதிதாக அழகு சாதன பொருட்களை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயன் தரும் டிப்ஸ்களாக விளங்கும். இங்கு 7 அழகு குறிப்புகளை நாம் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்சீலர் போடவும்

கண்சீலர் போடவும்

கண்சீலர் போடுவது என்பது சுய விளக்கமளிக்கும். ஆனால் இதை செய்யும் போது தேய்த்து தடவி தவறு செய்கின்றனர். நமது முகத்தில் இருக்கும் புள்ளிகள் மற்றும் தழும்புகளை மறைப்பதற்காக போடப்படும் கண்சீலரின் பயன் இவ்வாறு தேய்ப்பதன் மூலம் முழுமையாக கிடைப்பதில்லை. இனிமேல் அதை பயன்படுத்தும் போது உங்கள் மோதிர விரலால் சிறிது எடுத்து மெதுவாகவும் இதமாகவும் தடவவுது சிறந்தது. இது ஒவ்வொரு டீன் ஏஜ் பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய மேப் அப் ரகசியங்களில் ஒன்றாகும். இதை நீங்கள் மட்டும் தெரிந்து கொள்ளமல் மற்றவரிடமும் கூறுங்கள்.

எண்ணெய் தலைமுடிக்கு ஒரு முடிவு

எண்ணெய் தலைமுடிக்கு ஒரு முடிவு

அழகாகவும் பளபளப்பாகவும் கூந்தலை வைத்துக் கொள்ள சிறிது கடினம் தான். ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளித்தால் இதை நாம் நிச்சயம் பெற முடியும். நாம் பயன்படுத்தும் வேதிப் பொருட்களின் தாக்கமும் குறைவாக இருக்கும். எப்படி இருந்தாலும் தலை முடியை சுத்தமாக வைக்க வேண்டும். நாம் பளபளப்பூட்டும் ஷாம்புக்களை பயன்படுத்தலாம். ஆனால் அவை தீர்ந்து போனால் என்ன செய்வது? இப்படிப்பட்ட சமயத்தில் குழந்தைகள் பயன்படுத்தும் பவுடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை தலையில் போட்ட பின் அதிலிருக்கும் எண்ணெய்களையும், பிசுபிசுப்பையும் அறவே நீக்கிவிடும். பயன்படுத்தி பாருங்கள். நிச்சயம் வித்தியாசம் காணலாம்.

வேசலின் - எப்போதும் சிறந்தவை

வேசலின் - எப்போதும் சிறந்தவை

வேசலின் எப்போதும் நமக்கு ஒரு அற்புத பொருளாக விளங்குகிறது. எந்த ஒரு தேவைக்கும் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக உதட்டிற்கு ஈரப்பதமூட்டும் வேலையாக இருந்தாலும், மேக்கப்பை துடைப்பதாக இருந்தாலும், உதட்டின் வறண்ட மேல் தோலை உரிப்பதற்காவும், முடியை உடைபடாமல் காக்கவும், காயம் அல்லது வெட்டு ஆகிய பல விஷயங்களுக்கும் வேசலின் பயன்படுகிறது. ஆகையால் எப்போதும் ஒரு வேசலின் பேக்கை உங்கள் பைகளில் வைத்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள். இதுவே அவசர நேரங்களில் உதவும் ரகசிய ஆயுதமாகும்.

ஃபவுண்டேசனை தேர்ந்தெடுப்பது

ஃபவுண்டேசனை தேர்ந்தெடுப்பது

நீங்கள் ஒரு டீன் ஏஜ் பெண்ணாக இருந்தால் முழு ஃபவுன்டேசனை தேர்ந்தெடுக்க சொல்ல மாட்டேன். இவை உங்களுக்கு விகாரமான முகத்தை அளிக்கக்கூடும். ஆனால் நீங்கள் BB கிரீம் அல்லது நிறத்தை அளிக்கும் மாய்ஸ்சுரைசர் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவை திரவம் போல் இருப்பதால் எளிதாக பயன்படுத்தலாம். இதை நாம் நேரடியாக பயன்படுத்தும் முன்பு கழுத்து பகுதியில் பயன்படுத்தி சரிபார்த்தல் நல்லது. இவ்வாறு செய்வதால் நமது தோலின் தன்மைக்கு ஒத்துப்போகிறதா என்று எளிதாக கண்டறிய முடியும். இதை நாம் சரியாக கண்டறிந்தால் உடம்பில் உள்ள எல்லா பாகங்களிலும் போடும் போது மிகவும் நல்ல பலன் கிடைக்கும்.

கலைந்து போகும் கண் மை வேண்டாமே!

கலைந்து போகும் கண் மை வேண்டாமே!

கண் மை எப்போதும் கலைந்து போகும் பெண்களுள் ஒருவராக நீங்கள் இருந்தால் இதோ உங்களுக்கு ஒரு தீர்வு! கண் மையை பூசுவதற்கு முன் எண்ணெய் இழுக்கும் காகிதத்தை கொண்டு கண்களை சுற்றி உள்ள இடங்களில் நன்கு துடைக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் நீண்ட நேரம் கலையாத கண் மைகள் விற்பனையில் உள்ளது. அவைகளை வாங்கி நீண்ட நேரம் பயன்படுத்தலாம்.

சரும பராமரிப்பு

சரும பராமரிப்பு

உங்களுக்கு எவ்வளவு மேக் அப் போட்டாலும் உங்கள் தோலை சரியாக பராமரிக்காவிடில் அவை அழகாகவே இருக்காது. சருமப் பராமரிப்பு எப்போதும் முதன்மையானதாகவும் அவசியமானதாகவும் விளங்குகிறது. அதிக அளவு ஈரப்பதமூட்டுவது மற்றும் SPF ஆகியவற்றை மேக் அப் போடுவதற்கு முன் பயன்படுத்த வேண்டும். எப்போது மேக் அப் போட்டாலும் இரவில் கழுவ வேண்டும் என்பதை மறக்க கூடாது.

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் பராமரிப்பு

அவ்வப்போது பயன்படுத்தும் ஷாம்புவை மாற்ற வேண்டும் என்று ஒரு சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஒரே ஷாம்புவை பயன்படுத்தும் போது கூந்தல் அந்த திரவத்திற்கேற்ப மாறுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒழுங்காக கழுவப்படாத போது அதன் மீதங்கள் அங்கேயே தங்கி கேடு விளைவிக்கின்றது. இது எவ்வளவு உண்மை என்று தெரியாது. ஆனால் நம் கூந்தல் அழகாகவும் எப்போதும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும். தலை முடியை நாம் நன்கு பராமரித்து அவ்வப்போது உங்கள் ஹேர் ஸ்டைலை மாற்றி கொள்வதன் மூலம் உங்களை விதவிதமாக வேறுபடுத்தி காண்பிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Beauty Secrets Every Teen Should Know for Sure

Makeup doesn't have rules; it’s almost like art! However there are useful tips that you should consider following especially if you are new to cosmetics. So here are 7 beauty secrets every teen should know, broken down in detail!
Desktop Bottom Promotion