For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை எளிதில் போக்க சில டிப்ஸ்...

கருவளையங்கள் பலரையும் பயமுறுத்தும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது அதனை போக்க சில எளிமையான குறிப்புகள்

By Lekhaka
|

கண்ணைச் சுற்றிலும் உண்டாகும் கருப்பான வட்டங்களைத் தான் கருவளையங்கள் என்று சொல்கின்றனர். இந்த கருவளையங்கள் என்பது இல்லத்தரசிகள் மத்தியில் மட்டும் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனை இல்லை. மேலும் மிக தீவிரமான வேலை அட்டவணைகளை கொண்டவர்களுக்கும் மற்றும் ஒழுங்கற்ற தூக்கத்தைக் கொண்டவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் ஒன்றும் மிகப்பெரிய பிரச்சனை இல்லை.

இருப்பினும், இந்த நிலையில் ஒருவரை மிக வயதானவரான தோற்றத்தில் பார்க்க முடியும். எவ்வளவு தான் சந்தையில், மூப்படைதலுக்கு எதிரான சருமத்தை வெளுக்க வைக்கும் க்ரீம்கள் பெறக்கூடியதாக இருந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில், கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் ஃபேஷன் உலகத்தில் ஒரு பெரும் குற்றமாகக் கொண்டு, அதற்குண்டான சிகிச்சையில் ஈடுப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது.

ஆகவே கோரமாகக் காணப்படும் கருவளையங்களை நீக்குவதற்காக உதவும் சில இயற்கை வீட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பயன்படுத்தி, கருவளையங்களை போக்கி, அழகாக திகழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி, பின்பு அதனை அரைத்து, அதில் உள்ள சாற்றினை இரண்டு பஞ்சுருண்டைகளால் நனைத்து கண்களின் மேல் வைத்து, 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து, பின் கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் கருவளையங்கள் அகலும்.

தக்காளி மற்றும் எலுமிச்சை

தக்காளி மற்றும் எலுமிச்சை

தக்காளி மற்றும் எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை கண்களை சுற்றியுள்ள கருவளையங்களின் மீது தடவ வேண்டும்.

பாதாம் மற்றும் பால்

பாதாம் மற்றும் பால்

4-5 பாதாம் பருப்புகளை எடுத்துக் கொண்டு, அதனை பால் சேர்த்து அரைத்து விழுது தயார் செய்து, பின்பு அந்த பேஸ்டை கருவளையம் உள்ள பகுதியில் தடவி 10-15 நிமிடங்கள் விட்டுவிடவும். இது கண்களை சுற்றியுள்ள சருமத்தின் கருமை நிறத்தினைக் குறைக்கும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

சிறிது மஞ்சள் தூளை எடுத்து, அதில் அன்னாசி பழச்சாற்றில் கலந்து கண்களை சுற்றியுள்ள கருவளையங்களின் மீது தொடர்ந்து தடவுவதால், அது கருமை நிறத்தினைக் குறைக்கின்றது.

வைட்டமின் ஈ க்ரீம்

வைட்டமின் ஈ க்ரீம்

ஒவ்வொரு இரவும், உறங்குவதற்கு முன்பு கண்களைச் சுற்றி வைட்டமின் ஈ மற்றும் சி கொண்ட க்ரீமைத் தடவி தூங்கினால், கருவளையங்களில் இருந்து விடுபடலாம்.

புதினா

புதினா

கொஞ்சம் புதினா இலைகளைக் கசக்கி, கண்களை சுற்றியுள்ள கருவளையங்களின் மீது தடவவும். இது போன்று செய்வதால், சோர்வாக இருக்கும் கண்களுக்கு ஒரு குளிர்ச்சியை தந்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது .

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ்

ஒரு டம்ளர் தக்காளி ஜூஸில், சிறிது புதினா இலைகள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து குடிக்கவும். இது போன்று ஒரு நாளைக்கு இருமுறை குடிப்பதுவும் இன்னொரு மருந்தாகும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் துண்டுகளை வட்டமாக வெட்டி, அதனை கண்களுக்கு 10-15 நிமிடம் வைத்து உட்கார்ந்தால், கண்களில் உள்ள கருவளையங்கள் நீங்குவதோடு, கண்களையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ

2 சீமைச்சாமந்தியின் டீ பேக்கை சூடான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை குளிர்ந்த நீரில் அலசி, அந்த டீ பேக்கை கண்களின் மீது 20 நிமிடம் வைத்தால், கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் கருவளையம் மறைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Cure Dark Circles

Dark circles are a common problem not only amongst hassled housewives but also anyone with hectic work schedules and erratic sleep hours. They are not a very grave problem but can make you look much older than you already are. Here are some natural home remedies to help to get rid of those ghastly-looking dark circles.
Desktop Bottom Promotion