Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Mars Make Vipreet Rajyog On 11 May 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய், இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படியான செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.

தற்போது செவ்வாய் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 11 ஆம் தேதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மிகவும் சக்தி வாய்ந்த ருச்சக ராஜயோகம் உருவாவதோடு, சில ராசிகளில் விபரீத ராஜயோகத்தையும் செவ்வாய் உருவாக்கவுள்ளார். இதன் விளைவாக அந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான நன்மைகளைப் பெறுவதோடு, நிதி நிலையில் திடீர் உயர்வைக் காண்பார்கள்.
ஜோதிடத்தின் படி, செவ்வாய் மேஷம், விருச்சிம் அல்லது மகர ராசிகளில் (1, 4, 7, 10 ஆம் வீடுகளில்) இருந்தால் ருச்சக யோகம் உருவாகும். அதே வேளையில் 6, 7, 12 ஆம் வீடுகளில் இருந்தால், விபரீத ராஜயோகத்தை உருவாக்கும். அந்த வகையில் செவ்வாய் மேஷம், விருச்சிகம், கன்னி மற்றும் ரிஷப ராசிகளில் விபரீத ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இப்போது செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல துறைகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்க முடியும். தைரியம், வீரம் போன்றவை அதிகரிக்கும். கருத்துக்களை அலுவலகத்தில் திறம்பட வெளிப்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஐடி, ஊடகம் போன்றவற்றில் வேலை செய்பவர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும்.
கூட்டு தொழில் செய்பவர்களும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆனால் உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். முதலீடுகுளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். செல்வம் பெருகும். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கையும், தைரியமும், வீரமும் அதிகரிக்கும். மருத்துவம், விளையாட்டு, ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இந்த ராஜயோகம் சிறப்பான பலன்களைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



