For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகரின் தோற்றம் குறித்த கதைகள்!!!

By Super
|

இந்து புராணங்கள் பெரும்பாலும் வாய்வழிக் கதைகளே. பல ஆண்டுகளாக வழிவழியாகச் சொல்லப்படுவதனால், ஒவ்வொரு கதைக்கும் பல கிளைக்கதைகளும், பல பதிப்புகளும் உள்ளன. விநாயகரின் தோற்றம் குறித்த கதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

மூலக்கதை ஒன்றாக இருந்தாலும் பலரால் பலமுறை திருப்பிச் சொல்லப்பட்டிருப்பதால் விநாயகரின் தோற்றம் குறித்து மூன்று கதைகள் சொல்லப்படுகின்றன.

Versions Of The Ganesha Birth Story

கதை: 1

கைலாச மலையில் பார்வதி தனிமையாக உணர்ந்த போது, அவர் உடலில் இருந்த அழுக்கையெல்லாம் திரட்டி ஒரு சிறுவனின் சிலையை செய்தாராம். பிறகு அதை உயிர்ப்பித்து கணேசர் என்ற பெயரும் சூட்டினார். பின் தான் குளிக்கச் செல்லும் போது, வாயிலைக் காக்க கணேசரை பணித்துவிட்டு குளிக்கச் சென்றாராம்.

அப்போது அங்கே வந்த சிவனை கணபதி தடுக்க, கோபம் கொண்ட சிவன் கணபதியின் தலையை சீவிவிட்டாராம். கணபதியின் அலறலைக் கேட்ட பார்வதி ஓடிவந்து, அவரின் நிலையை கண்டு கோபம் கொண்டாராம். அதுமட்டுமல்லாது அவரது மகன் கணபதி மீண்டும் உயிர்பெறவில்லையென்றால் உலகத்தையே அழிக்கப்போவதாக சூளுரைத்தாராம். அங்கு நடந்த குழப்பத்தில் கணபதியின் தலையைக் காணவில்லை.

பிறகு கிங்கரர்களை அழைத்த சிவன், காட்டிற்கு சென்று முதன்முதலில் தென்படும் மிருகத்தின் தலையை எடுத்து வாருங்கள் எனப் பணிக்கவே, அவர்களும் அவ்வாறே ஒரு யானையின் தலையை எடுத்து வந்தார்கள். பிறகு கணபதியின் தலை இருந்த இடத்தில் ஒரு வெள்ளை யானையின் தலையை மாட்டி, அவரை உயிர்ப்பித்தாராம் சிவன்.

கதை: 2

இரண்டாவது கதை ஏறத்தாழ ஒரேமாதிரியாக இருந்தாலும், இதில் அழுக்கிற்கு பதில் விநாயகரை சந்தனத்தைக் கொண்டு பார்வதி உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. மேலும் பார்வதியின் முழு அருளையும் பெற்ற கணபதியை அழிக்க வேண்டுமானால், ஒரு முழு ராணுவமே தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.

கதை: 3

இம்மார்டஸ் ஆஃப் மெலுஹுவா என்ற புதிய நாவலில் இந்த மூன்றாவது கதை வருகிறது. எழுத்தாளர் அம்ரிஷ் புதிய திருப்பத்துடன் கூடிய கதையை சொல்லியிருக்கிறார். சதியின் முதல் கணவருக்குப் பிறந்த கணேசர் சில குறைபாடுகளுடன் பிறந்ததால், சதியின் தந்தை கணேசரை நாகர்களின் இடத்திற்கு விரட்டிவிட்டாராம். கணேசர் சிவனின் குழந்தை அல்ல என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக இந்த கோணம் பதிவு செய்கிறது.

இவை மூன்றும் கணேசரின் பிறப்பு பற்றிய பதிப்புகளாகும், உங்களுக்கு வேறு கதைகள் தெரிந்தால் தயவுகூர்ந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Versions Of The Ganesha Birth Story

There are several versions of Lord Ganesha birth story. The core of the story remains the same but it has been re-told by changing a few details many times. Here are the three different versions in which the birth of Ganesha has been described in Hindu mythology to mark the holy occasion of Ganesha Chaturthi.
Story first published: Sunday, September 8, 2013, 16:38 [IST]
Desktop Bottom Promotion