For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுக்கு உற்சாகம் தரும் தக்காளிப்பழம்

By Sutha
|

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் தக்காளியில் ஏராளமான உயிர்ச்சத்துக்களும், கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது. இதன் காரணமாகவே தக்காளியானது ஏழைகளின் ஆப்பிள் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. இதை விலை மலிவாக இருப்பதால்தான் எண்ணற்றோர் இதனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதில் உள்ள சத்துக்களையும் தெரிந்து கொள்வதில்லை. தக்காளிப் பழத்தில்,

நாட்டுத்தக்காளி, ஆப்பிள் தக்காளி என்று பல வகைகள் இருந்தாலும் மருத்துவ குணத்திலும், சத்துக்களிலும் எல்லாம் ஒன்றுதான்!

மற்ற பழங்களைப்போல தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட வேண்டும். இருப்பினும் தக்காளியை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும் அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும்.

உடலுக்கு பலம்

தக்காளியில் வைட்டமின் ஏ,பி, பி2 மற்றும் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இவைத் தவிர சுண்ணாம்புச்சத்தும் உள்ளது. இதன் மூலம் உடலுக்கு நல்ல பலம் அதிகரிக்கும், ரத்தம் விருத்தியடையும். உடலில் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. தக்காளிப்பழத்தை ஒரு டானிக் போல அன்றாடம் சாப்பிட்டு வந்தால் நோய் தொற்று ஏற்படாது.

கண் நோய்களை தடுக்கும்

நரம்புத்தளர்ச்சியைப் போக்கி பலப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனால் மூளை பலம் பெருவதோடு கண்பார்வையில் தெளிவு ஏற்படும். கண் தொடர்பான பல நோய்களை கண்டிக்கும் குணம் இதற்கு உண்டு. சருமவியாதிகளான சொறி, சிரங்கு, புண் போன்றவற்றை ஆற்றவல்லது. பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலத்தை அளிக்க வல்லது வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற புண்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.

சருமம் மென்மையாகும்

உடல்வளர்ச்சியை அளிப்பதோடு தோலையும் மிருதுப்படுத்தும். மேல் தோலுக்கு மினுமினுப்பை அளிக்க வல்லது. தக்காளிப் பழத்தைச் சூப்பாக வைத்துக் காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவிதப் பொலிவுடனும் இருக்கும். இதற்குக் காரணம் தக்காளியில் உள்ள பொட்டாசியம் சத்துதான். மேலும், களைத்துப் போன உடலுக்குப் புத்துணர்வை ஊட்டுவதில் தக்காளி முதலிடம் பெறுகிறது.

கருவுற்ற பெண்கள்

கருவுற்ற பெண்கள் தக்காளிப்பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. புதிய ரத்தம் உற்பத்தியாகும்.

தக்காளி ரசம், உடலுக்கு உரமூட்டும். தக்காளி சட்னி, தக்காளி சூப், தக்காளி என்று எப்படிச் சாப்பிட்டாலும் அதனுடைய சத்துக்கள் மாறுவதில்லை.

யார் சாப்பிடக்கூடாது?

பித்த உடல்வாகு கொண்டவர்களும், வாதநோய், நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகளும் தக்காளிப்பழத்தை அளவுடன் சாப்பிடலாம். அதிகம் சாப்பிட்டால் நோயின் தொல்லை அதிகரிக்கும்.

English summary

medicinal uses of tomato | ஏழைகளின் ஆப்பிள் தக்காளி

The tomato is not acid forming; it contains a great deal of citric acid but is alkaline forming when it enters the bloodstream. It increases the alkalinity of the blood and helps remove toxins, especially uric acid, from the system. As a liver cleanser, tomatoes are wonderful, especially when used with the green vegetable juices.
Story first published: Monday, May 2, 2011, 12:16 [IST]
Desktop Bottom Promotion