Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
Propose Day: தமிழ் சினிமாவின் சிறந்த ப்ரொபோஸ் சீன்கள்... இதுல உங்களுக்கு பிடிச்ச படம் இருக்கானு பாருங்க...!
Propose Day: உலக சினிமா மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் பல்வேறு விதமான காதல் உறவுகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. காதல் உணர்வு எப்போதுமே மிகவும் ஸ்பெஷலானதுதான். காதலின் அழகே அதனை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது.
காதலை வெளிப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதனை மிகவும் அழகாக வெளிப்படுத்திய சில காதல் காட்சிகள் தமிழ் சினிமாவில் உள்ளன. காதல் படங்களுக்கு புகழ் பெற்ற மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன் போன்றோர் படங்களில் காதல் காட்சிகளும், காதலை வெளிப்படுத்தும் விதமும் எப்போதும் மிகவும் கவித்துமாகவும், அழகாகவும் இருக்கும்.

அவர்களின் திரைப்படங்கள் மட்டுமின்றி வேறு சில இயக்குனர்களின் திரைப்படங்களும் காதலை வெளிப்படுத்தும் விதத்தில் சில சுவாரஸ்யமான காட்சிகளைக் கொண்டுள்ளன. இந்த பதிவில் தமிழ் சினிமாவின் சிறந்த ப்ரோபஸ் செய்யும் காட்சிகளைப் பார்க்கலாம்.
மௌன ராகம்
தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் படங்களில் ஒன்றான 1986-ல் வெளியான மௌன ராகம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பெற்ற காதல் திரைப்படமாகும். திருமணத்திற்கு பிறகான காதல் பற்றி பேசிய இந்த திரைப்படத்தின் பிளாஷ்பேக்கில் வரும் கார்த்திக் மைக்கில் தனது காதலை ரேவதியிடம் வெளிப்படுத்தும் விதம் மிகவும் குறும்புத்தனமாகவும், ரசிக்கும்படியும் இருக்கும். இந்த காட்சி தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத காதல் காட்சியாகும்.
அலைப்பாயுதே
2000 ஆம் ஆண்டு ரிலீஸான இந்த ரொமான்டிக் படத்தில் ஷாலினியிடம் ரயில்வே ஸ்டேஷனில் " சக்தி நான் உன்னை விரும்பல" அப்படினு வர வசனத்தை நாம் வாழ்க்கையில் ஒரு முறையாவது சொல்லி பார்த்திருப்போம். அந்த அளவிற்கு இத ப்ரொபோஸ் காட்சி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் பிடித்துள்ளது.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்த திரைப்படம் காதலின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு காட்டியிருக்கும். குறிப்பாக அஜித்-தபு காதல் காட்சிகள் மிகவும் அழகாக எழுதப்பட்டிருக்கும். அஜித் தனது காதலை வெளிப்படுத்தும் இடமும், க்ளைமாக்சில் "என்னை கல்யாணம் பண்ணிப்பியா" என்று கேட்கும் இடமும் அதற்கு மிகவும் பொருத்தமான ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசையும் இந்த காதல் காட்சிகளை இன்றும் மறக்க முடியாததாக மாற்றியுள்ளது.
மௌனம் பேசியதே
ஆண்களின் காதலைப் பற்றியே பேசி வரும் திரைப்பட உலகில் ஒரு பெண்ணுடைய காதல் எவ்வளவு அழகானது மற்றும் ஆழமானது என்பதை இந்த திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் கூறியிருக்கும். படத்தின் மொத்த கதையும் கடைசி ஒரு நிமிடத்தில் மாறும் இந்த திரைப்படம் காதலர்களுக்கு எப்போதும் ஸ்பெஷலானதுதான்.
பருத்திவீரன்
தமிழ் திரைப்பட வரலாற்றில் பருத்திவீரன் ஒரு மறக்க முடியாத படமாகும். அதுவரை முரடனாக மட்டுமே இருக்கும் பருத்திவீரன் முத்தழகின் காதலை உணர்ந்து தன்னுடைய காதலை "புல் அடிச்சும் போதை இல்லை" கவிதை சொல்லி வெளிப்படுத்தும் காட்சி தமிழசினிமாவின் மறக்க முடியாத காதல் காட்சியாகும்.
வாரணம் ஆயிரம்
இந்த படத்தின் காதல் காட்சிகளுக்கு இப்போதும் மிகப்பெரிய ரசிக பட்டாளமே இருக்கிறது. "ஹாய் மாலினி ஐ அம் கிருஷ்ணன்" என்று தனது காதலை பார்த்தவுடனேயே சொல்லும் இந்த காட்சியை நாம் நிச்சயம் ஒரு முறையாவது முயற்சித்து பார்த்திருப்போம். இதே திரைப்படத்தில் வரும் ட்ரெயின் காதல் காட்சியும் அற்புதமானதாக இருக்கும். ஒரே திரைப்படத்தில் இரண்டு ப்ரொபோஸ் காட்சியும் மறக்க முடியாததாக இருக்கும் அதிசயம் இந்த திரைப்படத்தில் நடந்திருக்கும்.
காவலன்
தளபதி விஜய் பல ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் அதில் காவலன் படத்திற்கு எப்போதுமே தனியிடம் உண்டு. போனிலேயே காதல் செய்யும் விஜய்-ன் கதாபாத்திரம் 90's கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. பார்க்கில் தனது போன் காதலியிடம் காதலை சொல்வதாக நினைத்து நிஜ காதலியிடமே காதலை சொல்லும் அந்த காட்சியும், அதில் தளபதி விஜயின் நடிப்பும் பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
தனி ஒருவன்
பொதுவாக ஆக்சன் படங்களில் காதல் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பது எழுதப்படாத விதி. ஆனால் இந்த விதியை உடைத்த பெருமை தனி ஒருவன்-க்கே சேரும். வசனமே இல்லாமல் தனது காதலை ஜெயம் ரவி புத்திசாலித்தனமாகவும், உணர்வுபூர்வமாகவும் வெளிப்படுத்தும் இந்த காட்சி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காதல் காட்சியாகும்.
விண்ணைத்தாண்டி வருவாயா
மீண்டும் ஒரு கௌதம் மேனன் படம். காதல் திரைப்படங்களில் கல்ட் அந்தஸ்தை பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று. கார்த்திக் தனது காதலை ஜெஸ்ஸி-யிடம் கூறும் காட்சியும் சரி, ஜெஸ்ஸி தனது காதலை கார்த்திக்கிடம் சொல்லும் காட்சியும் சரி இரண்டுமே தமிழ் சினிமாவின் அற்புதமான காதல் காட்சிகளாகும்.
ரெமோ
இந்த திரைப்படம் குறித்து பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் முதல் முறை இந்த ப்ரொபோஸ் செய்யும் காட்சியை பார்க்கும் போது நாம் நிச்சயம் ரசித்திருப்போம். இப்போதும் இந்த காட்சி பார்க்க மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications









