For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயரமான கணவன் - குட்டையான மனைவி உறவில் ஏற்படும் தாக்கம் என்ன?

உயரமான கணவன் - குட்டையான மனைவி உறவில் ஏற்படும் தாக்கம் என்ன?

|

எல்லா கல்யாண மேடைகளிலும் விருந்தினர்களின் விமர்சனத்திற்கு ஆளான ஒரு விஷயம் தான் இது. பெண் பார்க்கும் படலத்தின் போதே மற்ற விஷயங்களுடன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விஷயமும் இது என்பதை ஆணித்தரமாக கூறலாம்.

பொண்ணு ரொம்ப குட்டையா இருக்கு, பையன் இன்னும் கொஞ்சம் உயரமா இருந்தா நல்லா இருக்கும் என்று எதிர்பார்த்திடாத பெண்வீட்டாரோ, ஆண்வீட்டாரோ இல்லை. இதை இடைத்தரகர்களே ஒப்புக் கொள்வார்கள். சிலசமயம் இருவீட்டார் எதிர்பார்க்கவில்லை என்றாலும் இந்த இடைத்தரகர்கள் கிழப்பிவிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்துவிடுவார்கள்.

சரி! கணவன், மனைவி உறவிற்கும் உயரத்திற்கும் என்ன சம்மந்தம்? ஏதேனும் ஒரு வகையில் இந்த உயரம் தாக்கம் எதையேனும் ஏற்படுத்திவிடுமா என்ன? சமீபத்தில் பெண்கள் மத்தியில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு முடிவுகள் இதுக்குறித்து என்ன சொல்கிறது என்று இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்க எப்படி?

நீங்க எப்படி?

உங்கள் கல்யாண நேரத்தில்., அல்லது உங்களுக்கு ஒருவேளை திருமணம் ஆகவில்லை என்றால்.. வருங்கால துணையின் உயரத்தை பற்றி நீங்கள் ஏதேனும் கனவுகள் கொண்டுள்ளீர்களா? அப்படி ஏதேனும் இருந்தால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து வாசிக்க துவங்குங்கள்.

உயரமான கணவன் - குட்டையான மனைவி இல்லற உறவு தான் இருப்பதிலேயே மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்கிறார்கள் என்று கூறுகிறது சமீபத்தில் Konuk Universityல் பேராசிரியர் கிட்டே சோஹன் எடுத்த ஆய்வு முடிவுகள்.

ஈர்ப்பு!

ஈர்ப்பு!

இந்த ஆய்வினை ஏறத்தாழ 7,850 பெண்கள் மத்தியில் நடத்தியுள்ளது ஆய்வுக் குழு. இந்த ஆய்வில் சம உயரம் அல்லது ஏறத்தாழ ஒரே உயரம் கொண்ட ஆணை திருமணம் செய்துக் கொண்ட பெண்களுடன் ஒப்பிடும் போது, உயரமான ஆணை திருமணம் செய்துக் கொண்ட பெண்கள், தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாய் கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும், உயரமான ஆண்களை திருமணம் செய்துக் கொண்ட பெண்கள், தங்கள் கணவர் மீது அதிக ஈர்ப்பு கொண்டுள்ளதாகவும் கூறி இருந்தனர். உயரமான கணவனை பெண்கள் வலிமையானவன் மற்றும் தங்களை பாதுகாக்க தகுந்தவனாக கருதுகிறார்கள்.

வேறொரு ஆய்வு!

வேறொரு ஆய்வு!

ரைஸ் பல்கலைகல்கதை சேர்ந்த டேவிட் ரூத் மற்றும் வடக்கு டெக்ஸாஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த எல்லன் ரோசெட்டி நடத்திய வேறொரு ஆய்வில், உயரமான கணவனை மனைவியர் தங்களை பாதுகாக்க உரியவனாகவும், பெண் இயல்பை புரிந்துக் கொள்ள கூடியவனாகவும் கருதுகிறார்கள் என்ற தகவலை வெளியிட்டிருந்தது.

ரொமான்ஸ்!

ரொமான்ஸ்!

தம்பதிகள் மத்தியிலான ரொமான்ஸ் வாழ்க்கையில் உயரம் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்விகளுக்கு, உயரமான கணவனை கொண்ட பெண்கள், எப்போதும் போல ரொமான்ஸ் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருப்பதாய் கூறி இருந்தனர். உயரம் குறைவான கணவனை கொண்ட பெண்கள் சிலர், ரொமான்ஸ் நேரத்தில், கணவனின் கண்களை தலை குனிந்து பார்ப்பது மட்டும் கொஞ்சம் வினோதமான உணர்வை அளிக்கும் என்று பதில் அளித்திருந்தனர்.

உரிமை!

உரிமை!

உயரமான கணவன் தான் வேண்டுமா என்று பெண்களின் தனிப்பட்ட தேர்வு. ஆனால், காலம், காலமாக உயரமான துணை வலிமையாகவும், தங்களை பாதுகாக்கும் திறன் உடையவனாகவும் இருப்பான் என்பது பெண்கள் மனதில் பதிந்த ஒன்றாக இருக்கிறது. காதல் என்று மட்டுமின்றி வீட்டில் துணை தேடும் போதும், பெண்ணை கட்டிலும் ஆண் உயரமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக காணப்படுகிறது.

மாற்றம்!

மாற்றம்!

இது மருவி வரும் காலம். இன்று கணவன் தான் வீட்டிற்கு தேவையானதை வாங்கி வர வேண்டும். மனைவியர் வீட்டிலே உட்கார்ந்து சமைத்துப் போட வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் உடைந்துவிட்டது. இருவரும் இல்லறத்தில், இல்லற மேம்பாட்டில் சமவுரிமை கொண்டிருக்கிறார்கள். வரும் காலங்களில் இந்த உயரம் சார்ந்த எதிர்பார்ப்பு மற்றும் கருத்துகள் மாறுபட நிறைய வாய்ப்புகள் உள்ளன.

வருங்காலம்!

வருங்காலம்!

இந்த ஆய்வில் வரும் காலத்தில் எப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கும். அல்லது திருமணமாக பெண்கள் தங்கள் எதிர்கால கணவனிடம் எதை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து விளக்கவில்லை என்பதால்... நிச்சயம் வரும் காலத்தில் உறவில் இந்த உயரம் சார்ந்த எதிர்பார்ப்பு பெரிதாக இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Effects in-between Short Wives and Tall Husbands in a Relationship?

Do you know What Effects in-between Short Wives and Tall Husbands in a Relationship?, Read here to know, what research says.
Desktop Bottom Promotion