For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுவரை பேசப்படாத மகாராணியின் இன்னொரு பக்கம்! My Story #170

மகாராணி என்றாலே ராஜபோக வாழ்க்கை என்று தானே நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால் அவர்கள் சந்தித்த மிக முக்கியமான பிரச்சனை இது!

|

இங்கே எல்லாமே சில காலம் தான். ஒரு விஷயம் நமக்கு பிடித்து விட்டது என்றால் அதனை அடையும் வரை, அது நமக்கு சொந்தமாகும் வரை மட்டும் தான் அதனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்போம்.

நம் கைக்கு கிடைத்துவிட்டது என்றால் சிறிது காலம் தான் அதன் பிறகு அந்த சுவை, ஈர்ப்பு, ஆசை எல்லாம் மறைந்திடும், எப்போதும் உடன் இருப்பது தானே என்னிடம் தானே இருக்கும் என்னை விட்டு எங்கேயும் செல்லாது என்ற மனத்திருப்தியில் நாம் நகர்ந்துவிடுவோம்.

அப்படி கவனிக்க மறந்த பல பெண்களில் ஒருப் பெண் பேசுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளமை :

இளமை :

இங்கே வயது தான் நம் காதலை, நம்முடைய இடத்தை, நம்முடைய தகுதியை தீர்மானிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. இப்போது அவள் மிகவும் இளமையுடன் துறுதுறுவென்று இருக்கிறாள், அழகுடன் மிளிர்கிறாள், என்னை விட உயரம், என்னை விட அழகு, என்னை விட திறமைசாலியாகவும் இருக்கிறாள். இளமையின் வேகம் அவள் முகத்தில் தெரிகிறது.

ஒரு நாள் எல்லாம் மாறும், அவளும் என்னைப் போலவே முதுமையடைவாள் எல்லா ஆட்டமும் அடங்கிப் போகும், காதலின் திளைப்பில் அவளையே சுற்றி வந்து கொண்டிருக்கும் அரசர் அடுத்தப் பெண்ணை, அவளை விட அழகானவளாக தேடி அழைத்து வருவார். இப்போது அவளும் என்னோடு சேர்ந்து இப்படித் தான் புலம்பிக் கொண்டிருப்பாள்.

நான் :

நான் :

நான் ஒரு அரச குடும்பத்தின் இளவரசி.அப்பாவைவிட அம்மா தான் எப்போதும் எனக்கு அதீத அன்பு செலுத்தினார். எப்போதும் என்னை பட்டாடைகளும் நகைகளும் அணிவித்து அழகு பார்ப்பார்கள்.

அப்போது எங்கள் அரசவைக்கு பட்டாடை விற்க வரும் வியாபாரியின் மகன் என் பெயர் நெய்த ஆடையை யாருக்கும் தெரியாமல் எனக்குக் கொடுத்தான். ஏனோ அதை வெளியில் யாரிடமும் சொல்லத் தோன்றவில்லை ரகசியமாக பேசிக் கொள்ள ஆரம்பித்தோம்.

பதிமூன்று வயதில் :

பதிமூன்று வயதில் :

பதிமூன்று வயதில் நான் பருவமடைந்ததும் பக்கத்து நாட்டு அரசருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்ல, இந்த அரசரை நீ திருமணம் செய்து வைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும், நம்மை விட பல மடங்கு பெரிய ராஜ்ஜியத்தை வைத்திருக்கிறார். இந்த நாட்டின் மகாராணி ஆகப்போகிறாய் என்று ஆசை வார்த்தைகளை கூறி என்னை சமாதானப்படுத்தினாரே தவிர நான் சொல்ல வருவதை கேட்க தயாராக இல்லை.

நீ அரச குடும்பத்துப் பெண் என்னோடு எல்லாம் வந்து வாழ்வாயா என்று கேட்டனுக்கு சத்தியமாய் வருவேன் என்று செய்து கொடுத்த சத்தியம் காற்றோடு கரைந்து போயிருந்தது.

அம்மா :

அம்மா :

அதோடு அம்மா போட்ட இன்னொரு கணக்கு என்னை அதிர்ச்சியடையவைத்தது. என்னை சமாதானப்படுத்தும் போது சொன்ன விஷயம் இது, அரசரின் நான்காவது மனைவி நான். எப்போதும் முதல் மனைவியின் வாரிசைத் தான் அடுத்த அரசராக அறிவிப்பார்கள். அந்த வாரிசுக்குத் தான் நாடாளும் தகுதியிருக்கிறது.

அதன் படி பார்த்தால் உன் தமையனுக்கு நாடாளும் உரிமை கிடைக்காது, இந்த அரசவையில் ஏதேனும் ஒரு பொறுப்பில் பணியமர்த்தப்படுவான். உன்னையாவது ஓர் அரசருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம் என்றார்.

அந்த இளம் வயதில் அம்மா சொன்ன இந்த வார்த்தைகளின் வீரியம் எனக்கு புரியவில்லை, ஆனால் காலம் உணர்த்தியது.

மகாராணி :

மகாராணி :

இளவயதில் வாள் பயிற்சியிலும், குதிரையேற்றத்திலும் மிகச்சிறந்து விளங்கினேன். எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார்களே அசந்து போகும் அளவிற்கு கற்றுத் தேர்ந்தேன். கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவள் என்று வரலாறு பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு எல்லாம் மறைந்துவிட்டது. நான் அரசரின் மனைவியல்லவா அதனால் இந்த வாள்,குதிரை எல்லாம் ஒரம்கட்டி வைத்துவிட்டு மகாராணியாக உன்னை அலங்கரித்துக் கொள், அதிகார க்ரீடத்தை எடுத்து மாட்டிக் கொள் என்று பணிக்கப்பட்டேன்.

35 வயதில் :

35 வயதில் :

வாழ்க்கை ஓடியது. எனக்கு இரண்டு மகன் ஒரு மகள் பிறந்தார்கள். கணவரான மகாராஜாவுக்குப் பிறகு அடுத்ததாக ஆட்சியில் அமர என் மகனை தயார் செய்து கொண்டிருந்தேன். அவனுக்கு கல்வியையும் வீரத்தையும் சம அளவு கற்க ஏற்பாடு செய்தேன்.

அதே நேரத்தில் என் மகளுக்கு திருமணம் செய்து வைக்க இளவரசர்களை தேடிக் கொண்டிருந்தேன்.

அரசர் இல்லாத போது :

அரசர் இல்லாத போது :

போர் மற்றும் சுற்றுப் பயணங்களை அரசர் மேற்கொள்ளும் போது அவரது இடத்தில் நானிருந்து நாட்டை வழிநடத்திச் சென்றேன். ஒவ்வொரு முறை வெளியூர் பயணங்களை சென்று வரும் போதெல்லாம் எனக்கு ஏதேனும் விலையுயர்ந்த பரிசை கொண்டு வருவார். ஒரு முறை அவருடன் சென்று வந்த வேலையாள் அரசர் பக்கத்து நாட்டு ராணியை திருமணம் செய்து கொண்டு வரப்போகிறார் என்றான்.

வீணாக உளராதே :

வீணாக உளராதே :

நான் நம்பவில்லை அரசர் என் மீது எத்தனை காதல் வைத்திருக்கிறார் தெரியுமா? ஒவ்வொரு முறை என்னைவிட்டு பிரிந்து வெளியூர் பயணங்கள் மேற்கொண்டு வரும் போதெல்லாம் எனக்கு விலையுயர்ந்த பரிசைகளை கொண்டு வருகிறார்.

எப்போதும் என் நினைவுடனே இருக்கும் அவரால் எப்படி இன்னொரு திருமணம் செய்து கொள்ள முடியும்? வீணாக உளராதே என்று அந்த பணியாளை கடிந்து அனுப்பி வைத்தேன்.

வந்தாள் ஒருத்தி :

வந்தாள் ஒருத்தி :

வழக்கம் போல பயணம் மேற்கொண்டு வந்த அரசரிடம் சற்று நடுக்கம் தெரிந்தது. எங்கே பரிசு இல்லையா என்று நிலமையை சகஜமாக்கி அருகில் சென்றேன். என்னை தவிர்த்துவிட்டு உள்ளே சென்றார்.

மீண்டும் தொடர்ந்து வற்புறுத்த , அமைதியாக என் முன்னால் வந்து நின்றார்.மெல்ல பேசத்துவங்கினார். நான் சொல்வதைக் கேட்டு பதட்டப்படாதே , நம் நாடு தற்போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது, எப்போது வேண்டுமானாலும் எதிரிப்படை நம் நாட்டை நோக்கி வரலாம் என்று நிறுத்தினார்.

கலவர முகத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் நாட்டிற்கு உதவி செய்யுமாறு நம் நட்பு நாட்டினை அழைக்க.... ஆனால் அவரோ என் மகளை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால் தான் ஆதரவு கொடுப்பேன் என்கிறார் என்றார்.

உண்மை! :

உண்மை! :

நம் நாட்டிற்காக நான் சம்மதிக்க வேண்டியதாய் போயிற்று என்று தலையை குனிந்து கொண்டார். வேண்டாம் என்று மறுத்தால் நாட்டு மக்கள் மீது உனக்கு அக்கறையில்லையா என்று கேட்பார். அமைதியானானேன் ஆனால் அவரையே நம்பி கட்டப்பட்டிருந்த என் இதயம் அந்த கணமே சுக்குநூறாகிப் போனது என்னவோ உண்மைதான். பெற்றோரிடம் சொன்னால் அரசரான கணவரை பகைத்துக் கொள்ளாதே... அது உனக்கு மட்டுமல்ல நம் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் என்றார்கள்.

விசாரித்ததில் இவரே திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தது தெரியவந்தது என்னுடைய சம்மதத்தை பெற இப்படி மழுப்பியிருக்கிறார்.

சமூகம் :

சமூகம் :

ஒரு ஆண், மிகப்பெரிய அந்தஸ்த்தில் இருந்தால் அவன் என்ன செய்தாலும் இந்த சமூகம் அவனை ஏற்றுக் கொள்ளும், தவறுகளை மன்னிக்கும், அரசனான என் கணவன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

ஒரு பெண் அவள் ஏழை விவசாயி வீட்டில் பிறந்தவளாக இருந்தாலும் சரி, நாடாளும் அரசரின் மனைவியாக இருந்தாலும் சரி நீ கணவனுக்கு பயந்து, அவருக்கு கீழே தான் வாழ வேண்டும். ஏன் சொந்தப் பெற்றோரே கணவனை விட்டு பிரிந்து வந்து விடாதே அது உனக்கு மட்டுமல்ல எங்களுக்கு கௌரவக் குறைச்சல் என்று சொல்லி கஷ்டமோ நஷ்டமோ கணவன் வீட்டிலேயே இரு என்றே எங்களுக்கு பாடம் எடுப்பார்கள்.

நான் இருக்க வேண்டிய இடமல்லவா இது :

நான் இருக்க வேண்டிய இடமல்லவா இது :

அந்த நாளும் வந்தது. என் கணவர் அது தான் இந்த நாட்டை ஆளும் அரசர் தன் புதுமனைவியை திருமணம் செய்து கொண்டு அழைத்து வந்தார்.

அவளைப் பார்த்தேன். பார்த்ததும் தோன்றிய வார்த்தைகளைத் தான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் படித்தீர்கள். எப்படி அவளுக்கு என் கணவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவன் இன்னொருத்தியின் கணவன் என்று தெரியாமல் இருந்திருக்குமா? இதில் யாருடைய தவறு ஏற்கனவே திருமணமான ஆணை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த அந்த இளவரசி மீதா? அல்லது தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறந்து அடுத்த பெண்ணின் மீது விருப்பங்கொண்ட என் கணவரான அரசர் மீதா?

பார்க்கும் போதெல்லாம் :

பார்க்கும் போதெல்லாம் :

அரண்மனையில் எனக்கென்று தனி இடம் மினி அரண்மனை ஒதுக்கப்பட்டது. முன்னால் அரசி என்ற பெயருடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டேன். ஒவ்வொரு முறை அவர்கள் சேர்ந்து நடப்பது, சிரிப்பது, உலாவுவது ஆகியவற்றை பார்க்கும் போதெல்லாம். இந்த இடத்தில் நான் இருந்திருக்க வேண்டும். இப்படித்தானே என்னுடனும் சிரித்துப் பேசி மகிழ்ந்தீர்கள்.

உன்னை விட்டு ஒரு நாளும் பிரியமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்களே என்று கண்ணீர் விடுவதைத் தவிர எனக்கு வேறு வழி இருந்திருக்க வில்லை.

நானாக நான் இல்லை :

நானாக நான் இல்லை :

நான் நேசித்த வியாபாரியன் மகனை திருமணம் செய்து கொள்ளாது பெற்றோர் காண்பித்த இவரே உலகம் என்று நம்பி வந்து அவரது அன்பையும் பெற்று வந்த நேரத்தில் திடீரென்று என் இடத்தில் இன்னொருத்தியை பொருத்திப் பார்க்க என்னால் இயலவில்லை.

என்னை அலங்கரித்துக் கொள்வதில், வண்ண பட்டாடைகள் அணிவதில் ஆர்வம் குறைந்து போனது. கணவர் உயிருடன் இருந்துமே ஓர் விதவையைப் போலவே நான் உணர்ந்தேன்.

அம்மாவிடம் :

அம்மாவிடம் :

இரண்டாம் மனைவி ஒருத்தி வந்ததற்கு என் மனம் இவ்வளவு பாடுபடுகிறதே என் அம்மா அப்பாவுக்கு நான்காவது மனைவி.... நினைக்கவே ஆத்திரமும், அழுகையும் வந்தது. ஒரு முறை நேரில் சந்தித்துக் கொண்ட போது கேட்டேன்.

உனக்கு உயிரான ஒருவனுக்கு உன்னை விட அன்பு செலுத்த மூன்று பேர் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை எப்படி இவ்வளவு காலம் ஏற்றுக் கொண்டாய் , பொறுத்துக் கொண்டாய் எனக்கேட்டேன்.

சிரிப்பையே பதிலாக உதிர்த்துவிட்டு நகர்ந்து கொண்டார்.

அப்படியென்றால் கதலென்று சொல்லிக் கொண்டு பற்று இல்லாமல் தான் இருக்கிறார்களா?

என்னை நினைப்பீர்களா?

என்னை நினைப்பீர்களா?

அரச குலத்தில் பிறந்து என் காதல் தான் எனக்கு முக்கியம் என்று சொல்லி அன்றைக்கே என் காதலனுடன் சென்றிருந்தால் இந்த சமூகம் என்னை தூற்றியிருக்கும். ஒரே சமுகத்தில் இணைந்து வாழும் ஆணுக்கும் பெண்ணுக்கும் நேர் எதிர்மறையான சட்டங்கள்.

நான் இறந்த பிறகு சில காலங்கள் என்னைப் பற்றி பேசுவார்கள். அதன் பிறகு? இப்படியான ஒருத்தி வாழ்ந்தாள், அவளுக்கு இன்னயின்ன திறமைகள் இருந்திருக்கிறது, அவளது சாதனைகள், அவளுக்கு விருப்பமானவை என்று எதுவுமே யாருக்குமே தெரியாது. நாட்டிற்காக நான் செய்தது எதுவுமே இந்த வரலாறு வைத்துக் கொள்ளாது.

கட்டாயத்திற்குள் :

கட்டாயத்திற்குள் :

பொதுவாக அரசரின் மனைவி அல்லது நாடாளாப்போகும் இளவரசரின் தாய் ஆகியோரைத்தான் இந்த வரலாறு தன்னகத்தே நிலைத்து நிற்கச் செய்திடும். அப்படிப் பார்த்தால் இரண்டு தகுதிகளிலும் எனக்கு வாய்ப்பில்லை. இதுவரை நான் செய்த தியாகங்கள் இந்த நாட்டு மக்களுக்கான என்னுடைய போராட்டங்கள் யாவும் தெரிய வாய்ப்பில்லை

அவ்வளவு தானா? மகனை அரசனாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த என் கனவு நிறைவேறுமா? மகளை மிகப்பெரிய ராஜ்ஜியத்தின் இளவரசியாக்கவேண்டும் என கனவு கண்டு மீண்டும் என் குழந்தைகளையும் இதே சமூக கட்டுப்பாட்டுக்குள் திணிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கேனே.....

இந்த பெயர்கள் :

இந்த பெயர்கள் :

கடந்த காலத்தில் நிகழ்ந்த சந்தர்ப்பங்களை வரலாறாக படித்திருப்போம். நிறைய மன்னர்கள், அவர்களது சாதனைகள், அவர்கள் வென்ற போர்கள், மன்னருக்கு உதவிய ஒற்றர்கள், அவைப் புலவர்கள், மன்னருக்கு ஆலோசனை வழங்கிய தளபதிகள், முதன்மையாக போரிட்ட வீரர்கள் என எத்தனையோ பெயர்களை கடந்து வந்திருக்கும் நேரத்தில் உங்களுக்கு நாகமதி, கஷிபாய்,மரியம் உஸ் ஜமானி,நூர்ஜஹான் இந்த பெயர்கள் எல்லாம் யாரென்று தெரிகிறதா?

அடையாளம் :

அடையாளம் :

ஒரு சில பெயர்கள் எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்கலாம்... இவர்கள் எல்லாம் என்னைப் போல தங்களது அடையாளத்தை தொலைத்தவர்கள். ஆம், நாகமதி ரனா ராவல் ரத்தன் சிங்கின் முதல் மனைவி. கஷிபாய் பஜிராவ் பெஷ்வானின் முதல் மனைவி. மரியம் அக்பரின் முதல் மனைவி.நூர்ஜகான் ஜஹாங்கீரின் முதல் மனைவி.

இவர்களைப் போல இன்னும் ஏராளமான பெண்கள் தங்கள் அடையாளத்தை தொலைத்தவாறு இன்றும் இருக்கிறார்கள் என்பது தான் பெருஞ்சோகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unspoken Story About queen

Unspoken Story About queen
Story first published: Monday, February 12, 2018, 15:43 [IST]
Desktop Bottom Promotion