குழந்தை பிறந்த பிறகு, உடலுறவில் ஈடுபட மனைவி மறுக்கிறார், இதற்கு என்ன காரணம்? - இரகசிய டைரி #010

Posted By: Staff
Subscribe to Boldsky

எனக்கும் (29), என் மனைவிக்கும் (27) திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. முதல் ஒருவருடம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற தீர்க்கமான முடிவு எடுத்திருந்தோம். ஆனால், ஆறே மாதத்தில் கரு தரித்தது. இதில் எங்களுக்கும் பிடிக்காமல் என்று ஏதும் இல்லை. மிக விருப்பத்துடன் தான் குழந்தை பெற்றுக் கொண்டோம். குழந்தை பிறந்து ஒரு வருடம் நிறைவு பெற போகிறது.

சிசேரியன் என்பதால் முதல் ஆறு மாதங்கள் உடலுறவில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கி இருந்தார். ஆனால், ஒரு வருடம் ஆனா பிறகும் கூட, என் மனைவி உடலுறவில் ஈடுபட மறுக்கிறார். அது ஏன்? இந்த திடீர் மாற்றம் எதனால் என்று என்னால் அறிய முடியவில்லை. இதுக் குறித்து மருத்துவரிடம் சென்று கேட்கவும் கூச்சமாக இருக்கிறது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோழரே!

தோழரே!

சிசேரியனாக இருந்தாலும் சரி, சுக பிரசவமாக இருந்தாலும் சரி பிரசவத்திற்கு பிறகு இந்த காலத்தில் பெண்கள் மத்தியில் உடல்நலத்தில் வெகுவாக மாற்றங்கள் காணப்படுகின்றன. உங்களிடம் மருத்துவர் கூறியது போலவே ஆறு மாத காலத்திற்கு பிறகு இந்த விஷயத்தில் பெண்கள் இயல்பு நிலைக்கு திரும்புவிடுவார்கள். ஆனால், இந்த ஆறு மாத காலம் என்பது உடல் ரீதியாக மட்டுமே இயல்பு நிலைக்கு திரும்ப எடுத்துக் கொள்ளப்படும் காலம்.

மனம்!

மனம்!

உடல் ரீதியாக மட்டும் இயல்பு நிலைக்கு திரும்பினால் போதுமானதா? உடலுறவு என்பது உடல் ரீதியாக இணைவது அல்ல. மன ரீதியாக ஒருவர் மீது நம்பிக்கை, காதல் ஏற்பட்டு உண்டாகும் காரியம். ஒருவேளை, பிரசவ கால வலி அல்லது அச்சம் போன்றவை இன்னும் உங்கள் மனைவி மனதில் அகலாமல் இருந்தால், ஒருவேளை... இதன் காரணமாக அவர் உடலுறவில் ஈடுபட தயக்கம் காண்பிக்கலாம்.

அலைச்சல்!

அலைச்சல்!

மேலும், குழந்தை பிறந்து முதல் ஒருவருட காலமானது பெண்களுக்கு மிகவும் சிரமமானது. அதிலும் முதல் குழந்த பெற்ற காலத்தில் அவர்களுக்கு எப்படி கையாள வேண்டும், குளிப்பாட்ட வேண்டும், சோறூட்ட வேண்டும் என எதுவும் பெரிதாக தெரியாது. எனவே, டயப்பர் மாற்றுவதில் இருந்து குழந்தையை உறங்க வைப்பது வரை அவர் மிகுந்த மன மற்றும் உடல் அலைச்சலுக்கு ஆளாக இருப்பார். இதனால் ஏற்படும் அசதி காரணத்தாலும் கூட அவர் தாம்பத்தியத்திற்கு மறுப்பு தெரிவிக்கலாம்.

சமநிலை இன்மை..

சமநிலை இன்மை..

குழந்தை பராமரிப்பு, உடல்நல வலிமை இன்மை, உணர்ச்சி சார்ந்தே சமநிலை இன்மை போன்றவை காரணத்தால் உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒரு நிலையில் அவரால் இயங்க முடியாமல் போகலாம். இதை எல்லாம் ஒரு பெண் முதல் முறை தாய்மை அடையும் போது கடந்து வர ஒரு குறிப்பிட்ட காலம் பிடிக்கும். ஒரு சிலர் ஆறு மாதத்திற்குள் சரியாகி விடுவார்கள். ஒருசிலர் ஓராண்டு காலம் கூட பிடிக்கலாம்.

வலி!

வலி!

சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது வலி அதிகமாக உணரலாம். அந்த வலியை தவிர்க்க கூட தாம்பத்தியத்தில் ஈடுபட மறுப்பு தெரிவிக்கலாம். சிலருக்கு உடல் எடை கூடியிருக்கும், பெண்ணுறுப்பு பகுதியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். உட்காயங்கள் அல்லது எரிச்சல் உணர்வு கூட இருக்கலாம். எனவே, எதற்கும் மருத்துவ ஆலோசனையும் பெறுவது நல்லது.

வலிமிகுப்புணர்ச்சி!

வலிமிகுப்புணர்ச்சி!

ஆங்கிலத்தில் இதை Dyspareunia என்று அழைக்கின்றனர். சுகப்பிரசவம் மட்டுமல்ல, சிசேரியன் செய்துக் கொள்ளும் பெண்கள் மத்தியிலும் இந்த வலிமிகு புணர்ச்சி காணப்படுகிறது. சிசேரியன் முறையில் குழந்தை பெற்ற 40.7% பெண்கள் மற்றும் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்ற 26.2% பெண்கள் இதை கடந்து வருகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தாய்ப்பால்!

தாய்ப்பால்!

தாய் பால் அளிக்கும் வரையினில் கூட பெண்களுக்கு செக்ஸ் சார்ந்த உணர்ச்சிகளின் வெளிபாடு குறைவாக வெளிப்பட வாய்ப்புகள் உள்ளன. தாய்ப்பால் சுரக்க வேண்டிய சுரப்பிகள் அதிகமாக வேலை செய்துக் கொண்டிருக்கும். குழந்தைக்கு தாய்ப்பால் அளித்தல் மிகவும் அவசியம். இதை காரணம் காட்டி மனைவியை தாய்ப்பால் ஊட்ட வேண்டாம் என்று கூறிட வேண்டாம்.

நீங்கள் மட்டும்...

நீங்கள் மட்டும்...

குழந்தை பிறந்த சில காலம், நீங்கள் மட்டும் போதுமென்றும் என்னலாம். அதாவது செக்ஸ் வாழ்க்கையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, நீங்கள் அவருடன் இருந்தால் போதும், உங்கள் அரவணைப்பு, அக்கறை, உதவி போன்றவற்றை அதிகம் எதிர்ப்பார்ப்பார்கள். இவை சரியாக உங்களிடம் இருந்து கிடைத்துவிட்டாலே போதும், அவர்களுக்குள் மீண்டும் பழைய உற்சாகம் பிறக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

தன்னம்பிக்கை இழத்தல்!

தன்னம்பிக்கை இழத்தல்!

சில பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை கண்டு தங்கள் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். எங்கே இந்த உடல் கணவனுக்கு பிடிக்காதோ என்றும், இதனால் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது சங்கடங்கள் உண்டாகுமோ என்றும் கருதுகிறார்கள். இதன் வெளிப்பாட்டால் அவர்கள் உடலுறவில் இணைய தவிர்ப்பதும் உண்டு.

மருத்துவ ஆலோசனை!

மருத்துவ ஆலோசனை!

ஒருவேளை அவர் மனதில் தேவையற்ற அச்சம் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள். அந்த அச்சத்தின் காரணமாக கூட அவர் உடலுறவில் இணைய மறுப்பு தெரிவித்து வரலாம். அப்படியான அச்சத்தை நீங்கள் கண்டறிந்தால் தகுந்த மருத்துவரிடம் அழைத்து சென்று அந்த அச்சம் தேவையற்றது என்பதை மருத்துவர் மூலமாகவே உணர செய்யுங்கள். இது அவர் வெகு விரைவில் அந்த அச்சத்தில் இருந்து வெளிவர உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secret Confession: My Wife is not Ready to Have Sex after the Baby!

Secret Confession: My Wife is not Ready to Have Sex after the Baby!
Story first published: Monday, April 9, 2018, 15:00 [IST]