நானும், என் கணவரும் உறவுக் கொண்டு 10 ஆண்டுகள் ஆகிறது - இரகசிய டைரி #009

Posted By: Staff
Subscribe to Boldsky

எனக்கும் (40) என் கணவருக்கும் ஏழு வருட வயது வித்தியாசம். நாங்கள் கடைசியாக உடலுறவுக் கொண்டது இரண்டு வருடங்களுக்கு முன்னர். அதற்கு மூன்று வருடத்திற்கு முன் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாள். எங்களுக்கு ஏற்கனவே 15 வயதில் இரு மகன் இருக்கிறான். கடைசி பத்து வருடங்களில் நாங்கள் உடலுறவில் இணைந்தது ஓரிரு முறை தான்.

எனக்கு அன்பும், அக்கறையும், தாம்பத்தியமும் வேண்டும். ஆனால், இந்த மூன்றுமே என் கணவரிடம் இருந்து கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. தீண்டல் உறவின்றி இருப்பது என் நாட்களை கடுமையானதாக ஆக்குகிறது. என்னுள் எப்போதும் யாருடனாவது உடலுறவில் ஈடுபடலாமா என்ற எண்ணம் எழுகிறது. இது தவறு என்பதை அறிந்தும், இத்தகைய எண்ணங்களை என்னால் தடுக்க இயலவில்லை.

ஒருவேளை நான் அப்படியாக வேறு ஆணுடன் உடலுறவில் ஈடுபட்டால் நிச்சயம் இந்த சமூகம் என்னை தவறாக பேசும். ஆனால், இதே உறவில் உடலுரவின்றி நீடிப்பது எனக்கு கொஞ்சம் கடினமாக இருக்கிறது நான் என்ன செய்ய?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறல்ல...

தவறல்ல...

நீங்கள் யாரேனும் ஒரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடலாம் என்ற எண்ணம் எழுகிறேது என்று கூறுகிறீர்களே... அது தவறல்ல. இதுப் போன்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் எழும். வெறும் எண்ணமாக மட்டும் இருக்கும் வரையிலும் இது தவறல்ல. ஆனால், இது செயலாக தான் மாறிவிடக் கூடாது.

வயது!

வயது!

நீங்கள் வயது வித்தியாசத்தை ஒரு குறையாக கூறியுள்ளீர்கள். ஆனால், உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் ஒன்றும் பெரியது அல்ல. இது மிகவும் சாதாரணம்.

அதிலும், நீங்கள் கிட்டத்தட்ட முந்தைய தலைமுறை என்பதால், இந்த சாதாரண விஷயம் உங்களுக்கு பெரிதாக தெரிவதற்கு காரணம், இந்த தலைமுறை ஜோடிகளாக கூட இருக்கலாம்.

இயற்கை!

இயற்கை!

இயற்கையாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடையே உடல் ரீதியான முதிர்ச்சி மற்றும் மன ரீதியான முதிர்ச்சியில் பெரிய இடைவேளை இருக்கும். அதனால் தான் நமது முன்னோர்கள் ஆண், பெண்ணுக்கு இடையே திருமண வயதில் ஒரு வித்தியாசம் உண்டாக்கினார்கள்.

மனரீதியாக பார்த்தால்.... 20 வயது பெண்ணுக்கும், 27 வயது ஆணுக்கும் ஒரே அளவிலான முதிர்ச்சி தான் இருக்கும்.

உடல் ரீதியாக பார்த்தல்... ஒரு ஆணுக்கு செக்ஸ் மீதான ஆர்வம் மற்றும் உடற்திறன் 60கள் வரைக்கும் நீடிக்கும், பெண்களுக்கு இது 50கள் வரைக்கும் நீடிக்கும்.

பிரச்சனை!

பிரச்சனை!

ஆனால், இப்போது இருக்கும் பிரச்சனை என்னவெனில்... ஆண்கள் மத்தியில் ஆண்மை குறைபாடு மற்றும் செக்ஸ் ஹார்மோன் பிரச்சனைகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இதன் காரணமாக அவர்களுக்கு செக்ஸ் மீதான ஆர்வம் மற்றும் ஈடுபாடு குறைந்து வருகிறது என்று உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுகின்றன.

காரணங்கள்!

காரணங்கள்!

இதற்கு மது, புகையுடன் நமது மாறுபட்ட வாழ்வியல் முறையும் தான் காரணம். முக்கியமாக துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நாள் முழுக்க உட்கார்ந்தே வேலை செய்யும் முறை. உடற்பயிற்சி குறைபாடு, சர்க்கரை நோய், உடல் பருமன் என பலவற்றை நாம் இதற்கான காரணங்களாக அறிய முடிகிறது.

உங்கள் வாழ்க்கை!

உங்கள் வாழ்க்கை!

உங்கள் வாழ்க்கை கொஞ்சம் இதிலிருந்து மாறுபட்டு தான் இருக்கிறது. நீங்கள் இருவரும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பெற்றுவிட்டீர்கள். ஒருவேளை உங்கள் கணவரின் வேலை மற்றும் வேறு காரணங்களால் (மன அழுத்தம், ஆன்மிகம்) அவர் உடலுறவில் நாட்டம் இன்றி இருக்கலாம். ஒருசில நேரத்தில் ஆண்களுக்கு ஒரே மாதிரியான சுழற்சி முறை வாழ்க்கை அலுத்து கூட இதுப் போன்ற விஷயங்களில் நாட்டம் குறைந்துப் போகலாம்.

முயற்சி!

முயற்சி!

உங்கள் கணவரிடம் நீங்கள் இதுக் குறித்து வெளிப்படையாக பேசுங்கள். அவர் என்ன கூறுகிறார் என்று கேளுங்கள். முடிந்தால் உங்களை நீங்கள் புதிதாக உங்கள் கணவருக்கு எப்படியாவது காட்ட இயலுமா என்று முயற்சி செய்யுங்கள். புதிய அலங்காரம், புதிய யுக்திகள் என ஏதாவது ஒன்று உங்கள் கணவரை மீண்டும் ஈர்க்க வாய்ப்புகள் உள்ளன.

புரிந்துக் கொள்ளுங்கள்!

புரிந்துக் கொள்ளுங்கள்!

அனைத்திற்கும் மேல் நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவெனில், இந்த காலக்கட்டத்தில் ஆண்கள் மத்தியில் ஹார்மோன் ரீதியான மாற்றங்கள் நாம் உண்ணும் உணவு முறையில் இருந்து செய்யும் வேலை வரை பல தாக்கங்களால் ஏற்படுகின்றன.

எனவே, ஒருவேளை இந்த தாக்கங்கள் கூட உங்கள் கணவர் உடலுறவில் கவனம் செலுத்த மறுப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

தவறாக தான் பேசும்!

தவறாக தான் பேசும்!

இரண்டு பிள்ளைகள் பெற்ற பிறகு உடலுறவு குறித்த ஆசை வரக்கூடாது அல்ல வரக் கூடாதா என்றெல்லாம் யாராலும் தடைப்போட முடியாது. இது, உயிருள்ள அனைத்து ஜீவராசிகள் மத்தியிலும் இயற்கையாக நடப்பது.

ஆனால், நாகரீகம் என்ற பெயரில் மனிதர்கள் நாம் உறவு என்ற கோட்பாடினை பின்பற்றி வருவதால் சிலவற்றை முயற்சிக்க கூடாது என்ற நிலை உண்டாகிறது.

காதல்!

காதல்!

நீங்கள் நிச்சயம் உங்கள் குடும்பத்தை விரும்பும் இல்லத்தரசி தான். ஒருவேளை, இதனால் நீங்கள் மனரீதியாக அவதிப்படுவதாக இருந்தால், நீங்களும் உங்கள் கணவரும் நல்ல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே இதற்கான ஒரு நல்ல தீர்வு. இதை நீங்கள் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்கலாம்.

மேலும், வெறும் உடலுறவுக்காக வேறு ஆணை தேடுவது அல்லது வேறு ஆணுடன் இணைவது நிச்சயம் உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்வதாக அமையும். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secret Confession: Me and My Husband had Slept With Each Other A Decade Ago!

Secret Confession: Me and My Husband had Slept With Each Other A Decade Ago!
Story first published: Saturday, March 24, 2018, 17:34 [IST]