For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தவறாக 'தவறான' படங்களை அப்பாவின் நண்பருக்கு அனுப்பியதால் ஏற்பட்ட வினை - My Story #278

தவறாக 'தவறான' படங்களை தந்தையின் நண்பருக்கு அனுப்பியதால் ஏற்பட்ட வினை - My Story #278

By Staff
|

என் வயது 26. என் கணவருக்கு வயது 30. நாங்கள் இருவரும் கல்லூரி பயிலும் போதிலிருந்தே காதலித்து வந்தோம். நான் பேச்சுலர் டிகிரி படித்து வந்த போது, அவர் மாஸ்டர் டிகிரி படித்து வந்தார்.

எங்களுக்கு ஒரு மகன் (4), மகள் (2) இருக்கிறார்கள். என் அம்மா நான் பள்ளி படித்து வந்த போதே நோய் காரணமாக இறந்துவிட்டார். என்னை முழுக்க, முழுக்க வளர்த்தது என் அப்பா தான்.

என் அப்பா என்பதை காட்டிலும், அவரை சிறந்த நண்பர் என்றே கூறுவேன். என் காதலில் இருந்து, படிப்பு, வேலை என எதிலுமே அவர் பெரிதாக தலையிட்டது இல்லை. எனக்கு அத்தனை சுதந்திரம் அளித்திருந்தார்.

ஆனால், எனக்கும், என் கணவருக்கும் இருந்த ஒரு விசித்திரமான பழக்கத்தால்... என் வாழ்க்கை பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டது. ஒருவேளை என் அம்மா இருந்திருந்தால்... நான் இப்படியான தவறை செய்திருக்க மாட்டேனா என்ற எண்ணங்களும் எழுகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பன்னாட்டு நிறுவனம்!

பன்னாட்டு நிறுவனம்!

என் கணவர் வேலை செய்வது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில். மிக குறுகிய காலத்திலேயே அந்த நிறுவனத்தில் அவர் பெரும் இடத்தை பிடித்துவிட்டார். இன்று பல பிராஜக்ட்களுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பில் இருக்கிறார். அவர் படித்து முடித்ததில் இருந்து, இன்று வரை அதே நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வருகிறார்.

பிரிந்திருக்கும் சூழல்!

பிரிந்திருக்கும் சூழல்!

பொறுப்புகள் அதிகம் என்பதால்... நிறைய நாள் எங்களால் சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலை. இது சமீபத்தில் என்றில்லை, எங்கள் முதல் குழந்தை பிறந்ததில் இருந்தே இப்படி தான்.

மாதத்தில் பாதி நாள் கூட வீட்டில் இருக்க முடியாது. மீட்டிங், பிராஜக்ட் பிரபோசல், அது இது என்று வெளி நாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் அடிக்கடி செல்ல வேண்டி இருக்கும்.

டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்!

டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்!

பெரும்பாலும் பலரது காதல் கதைகளில்... காதலிக்கும் போது பிரிந்திருந்திருப்பார்கள்... திருமணத்திற்கு பிறகு சேர்ந்து வாழ்வது போல இருக்கும். ஆனால், நாங்களோ காதலிக்கும் போது பெரும்பாலும் கல்லூரியில் சேர்ந்து இருந்தோம். தினமும் சந்தித்து கொண்டோம். ஆனால், திருமணத்திற்கு பிறகு.. முக்கியமாக குழந்தை பிறந்த பிறகு டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிபில் இருக்கிறோம்.

பழக்கம்!

பழக்கம்!

பெரும்பாலும் பிரிந்து இருப்பதால்... வீடியோ கால், வாட்ஸ்-அப்பில் படங்களை பரிமாறிக் கொள்வதில், ஆடியோ செய்திகளில் தான் எங்கள் காதல் பயணித்துக் கொண்டிருந்தது.

இதனால், கடந்த மூன்றாண்டு காலமாக (வாட்ஸ்-அப் பயன்படுத்த துவங்கியதில் இருந்து.) எங்கள் ப்ரைவேட் படங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தோம். இது எங்களுக்குள் ஒரு ரொமாண்டிக்கான விஷயமாக இருந்து வந்தது.

ஆனால், இது வினையாகும் என்று ஒருநாளும் நினைக்கவில்லை.

அப்பாவின் நண்பர்!

அப்பாவின் நண்பர்!

ஒருமுறை எப்போதும் போல, என் கணவருக்கு புகைப்படங்கள் அனுப்பினேன். ஆனால், ஏதோ குளறுபடியால் படங்கள் மாறி என் அப்பாவின் நண்பர் ஒருவருக்கு சென்றுவிட்டது.

அப்போது வாட்ஸ்-அப்பில் அனுப்பிய செய்திகளை அழிக்கும் வசதி இல்லை. எனவே, முதலில் அவரிடம் டெலிட் செய்துவிடுமாறு கூறினேன். அவரும் சரி என்றார்.

இரவு!

இரவு!

பிறகு இரவு என் கணவருடன் பேசிய போது நடந்தவற்றை கூறினேன். ஏனோ மனது முழுவதும் ரணமாகிவிட்டது. எங்கே, என் அப்பாவிடம் இது குறித்து கூறிவிடுவாரோ என்ற அச்சம். என் கணவர் தான் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார். அவரும் உன் அப்பா மாதிரி தானே. அவர் இதை புரிந்துக் கொள்வார். எதையும் தவறாக செய்ய மாட்டார் என்று கூறினார் என் கணவர்.

மறுநாள் காலை...

மறுநாள் காலை...

ஆனால், நடந்ததோ வேறு... நான் அனுப்பிய படங்களை எனக்கே மீண்டும் அனுப்பினார் என் அப்பாவின் நண்பர். அதிர்ச்சியுற்றேன்! டெலிட் செய்துவிடுவதாக கூறியவர்.. எனக்கு என் படங்களை அனுப்பினார்.

ஏன் இப்படி செய்கிறீர்கள்.. நான் உங்கள் மகளை போல... இப்படி செய்வது நாகரீகமானது இல்லை என்றேன். அதற்கு, நீ செய்தது மட்டும் நாகரீகமானதா? என்று பதில் கேள்வி கேட்டார்.

அதன் பின் எந்த செய்தியும் ரிப்ளை செய்யாமல் பதட்டத்தில் உறைந்து போய்விட்டேன்.

கணவர் திரும்பினார்...

கணவர் திரும்பினார்...

இந்த சம்பவம் நடந்து முடிந்த ஒரு நாள் கழித்து என் கணவர் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வீடு திரும்பினார். அவர் எனக்கு அனுப்பிய செய்திகளை காண்பித்தேன். முதலில் நேரில் பேசி பார்க்கலாம் என்று கணவர் கூரினார்ன்.

ஆனால், அறுபது வயதில் அந்த முதியவருக்கு என் மீது ஆசை இருப்பதை என்னவென்று பேசி தீர்க்க. மேலும், அவரது மொபைலில் என் ப்ரைவேட் படங்கள் வேறு இருந்தது. ஆகையால் அவரிடமே பேசுவதை காட்டிலும் வேறு வழி எங்களுக்கு இல்லை.

பேசினோம்!

பேசினோம்!

பிறகு, நானும் என் கணவரும் குழந்தைகளை அப்பா வீட்டுக்கு அனுப்பிவிட்டு. அவரை தனிமையில் சந்தித்து பேசினோம். முதலில் கொஞ்சம் கரடுமுரடாக பயமுறுத்துவது போல பேசிய அவர். பிறகு தனது சுயரூபத்தை வெளிப்படுத்தினார்.

இந்த டெக்னாலஜி வளர்ச்சியால் எல்லாமே மிக எளிதில் வெளியுலகிற்கு பரவிவிடுகிறது. டீனேஜ் பிள்ளைகள் தான் இப்படியான தவறை செய்கிறார்கள் என்றால்.. நன்கு படித்து திருமணமாகி குழந்தைகள் பெற்ற நீங்களும் இப்படியான தவறில் ஈடுபடலாமா.

இதுவே அந்த படங்கள் எனக்கு வந்ததால் பரவாயில்லை. வேறு யாருக்காவது சென்றிருந்தால் என்ன செய்வீர்கள் என்று திட்டினார்.

அறிவுரை!

அறிவுரை!

இனிமேல், இப்படியான தவறான பழக்கங்களை பின்பற்ற வேண்டாம். உங்களை பயமுறுத்த வேண்டும். இது எவ்வளவு தவறு என்பதை உணர செய்ய வேண்டும் என்று தான் அப்படி செய்தேன். அந்த படங்களை நான் அழித்துவிட்டேன். இனி இப்படி செய்யாதீர்கள் என்று கூறி எங்களை அனுப்பிவைத்தார்.

எல்லாம் வாட்ஸ்-அப் மயம்!

எல்லாம் வாட்ஸ்-அப் மயம்!

நிஜமாகவே, அவருக்கு பதிலாக வேறு யாருக்காவது சென்றிருந்தால் என்ன ஆவது. வீடு கேபிள் கனக்ஷன் தரும் நபரில் இருந்து, காய்கறி நபர், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பொருள் கொண்டு வந்து எப்போதும் வீட்டில் டெலிவரி செய்யும் நபர் என பலரது எண்கள் மொபைலில் இருக்கிறது. அனைவருமே இப்போது வாட்ஸ்-அப்பில் தான் தொடர்பு கொள்கிறார்கள்.

இந்த சம்பவம் நடந்ததில் இருந்து. நாங்கள் ப்ரைவேட் படங்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்திவிட்டோம். ஒரு சிறிய சிற்றின்ப ஆசை. ஆனால், அதனால் ஏற்படவிருந்த வினை என்பது எங்கள் உறவையே சிதைத்திருக்கும் அளவிற்கு வீரியம் கொண்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: I Wrongly Sent Private Pics of Mine to Fathers Friend, Which Risks my Relationship Now!

Being of Mother of two. Me and my hubby has a habit of sharing naked pic of each other, when we are in distance. But once i wrongly sent the pics to my fathers friend. It put on my relationship in risk.
Desktop Bottom Promotion