For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  என்ன வேசின்னு சொல்றவங்களுக்கு, என் வாழ்க்கைய பத்தி என்ன தெரியும்? My Story #265

  By Staff
  |

  நான் பி.யு.சி வரைக்கும் தான் படிச்சிருந்தேன். என் சொந்த ஊரு கேரளாவுல ஒரு கிராமம். எங்க ஊருல 17 வயசுக்கு மேல ஒரு பொண்ணு கல்யாணம் ஆகாம இருந்தா ஊரே ஒரு மாதிரி பார்க்கும். பொண்ணுக்கு ஏதாவது குறையான்னு கேட்காதது மட்டும் தான் மிச்சம். ஊரு முழுக்க அந்த பொண்ண பத்தின பேச்சாதான் இருக்கும். இருபது வயசுக்குள்ள ரெண்டு குழந்தைகளுக்கு தாயாக வேண்டியது எங்க தலைவிதி.

  நான் படிப்புல ரொம்ப பெஸ்ட் எல்லாம் இல்ல. கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் வர நான் தமிழ்நாடே வந்தது கிடையாது. என் கல்யாண வாழ்க்கையில ஏற்பட்ட விரக்தி, ஒரு ஆசை வார்த்தைக்கு மயங்கி நான் தமிழ்நாடு வந்த கதி, குழந்தை மேல இருந்த ஆசையினால எனக்கு ஏற்பட்ட மனவலி... இப்போ என்ன எல்லாரும் ஒரு வேசி மாதிரி பாக்குறதுக்கு காரணங்களா ஆயிடுச்சு.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தொடக்கம்!

  தொடக்கம்!

  எனக்கு அப்போ பி.யு.சி (இங்க +1, +2 மாதிரி கேரளாவுல) முடிச்சுட்டு வீட்டுல இருந்த காலம். மத்த பொண்ணுங்க மாதிரி நாங்க ரிசல்ட்டுகாக எல்லாம் காத்திருக்க மாட்டோம். ஏன்னா, அதுதான் எங்களுக்கு கடைசி காலம்.

  காலேஜ் படிக்கிறதுக்கு எல்லாம் எங்களுக்கு வாய்ப்பும் இல்ல, கொடுப்பினையும் இல்ல. அப்பதான் எனக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணாங்க. அவரு யாரு எவருன்னு கூட தெரியாது. நானும் அவரும் முதல் முறையா பேசிக்கிட்டது, முதல் ராத்திரி முடிஞ்சு தான்.

  மனுஷியா மதிக்கல!

  மனுஷியா மதிக்கல!

  எனக்கு அப்ப வயசு 18 கூட ஆகல. யாருன்னே தெரியாது, அட்லீஸ்ட் அவரு முதல் ராத்திரி அன்னைக்காவது என்கூட கொஞ்சம் பேசி இருக்கலாம். அவருக்கு தேவையானது என்னோட உடம்பா தான் இருந்துச்சு. எல்லாம் முடிச்சு... மறுநாள் காலையில காபி எடுத்துட்டு வந்தப்ப தான் பக்கத்துல உட்கார வெச்சு பேசுனாரு. இத வெச்சே என்னோட திருமண வாழ்க்கை எவ்வளவு அழகா இருந்திருக்கும்ன்னு தெரிஞ்சுக்கலாம்.

  அடுத்தடுத்து!

  அடுத்தடுத்து!

  எனக்கு 20 வயசு ஆகுறதுக்குள்ள அடுத்தடுத்து ரெண்டு பிள்ளைங்க. ரெண்டுமே ஆம்பளை பசங்க. அதனால, என் மாமியாருக்கு என்ன கொஞ்சம் பிடிச்சது. பொம்பளை பிள்ளையா பிறந்தா அதுக்கு வேற குறை சொல்லுவாங்க. ஆனால், குழந்தை பெத்துக்கிட்டத தவிர எனக்கும், என் கணவருக்குமான உறவு பெருசா எதுவும் இல்ல. நைட்டான முந்தானை விரிக்கணும், பகலானா சோறு பரிமாறனும். அதுக்கு மேல எனக்கான ஆசைகள் எதுவுமே இருக்க கூடாது.

  ஒரு நாள்...

  ஒரு நாள்...

  திடீர்ன்னு ஒரு நாள் அவருக்கு ஒரு சின்ன விபத்து. அதனால, அவரால கொஞ்ச நாள் சரியா உடலுறவுல ஈடுபட முடியல. அதுக்கு நான் என்ன பண்ண முடியும். டாக்டர் ஆறேழு மாசத்துல எல்லாம் சரி ஆயிடும்னு சொல்லிட்டாரு.

  ஆனா, அந்த மனுஷனால அதுக்கூட பொறுத்துக்க முடியல. அவருனால முடியால. அவர்கிட்ட நானும் எதுவும் கேட்கல, விரும்பல. ஆனால், தன்னோட ஆண்மை பத்தின பிரச்சனையினால என்மேல கோபத்த காமிக்க ஆரம்பிச்சாரு. திட்ட எல்லாம் மாட்டாரு அடி, உதை மட்டும் தான்.

  ஆசை வார்த்தை!

  ஆசை வார்த்தை!

  அப்ப எனக்கு 24 வயசு இருக்கும். குழந்தைங்க ரெண்டும் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிருந்தாங்க. அந்த ஆறேழு மாசமும் நரக வேதனை தான். அவரால, டாக்டர் சொன்ன காலம் பொறுத்துக்க முடியாம, அப்பப்பா முயற்சி பண்ணி, அப்பறம் முடியாம போனா அந்த கோபத்த, வெறிய என்மேல காமிப்பாரு. அப்ப தான் என்னைவிட இருபது வயது மூத்த ஒருவர் பழக்கம் உண்டாச்சு. அவரு நிறைய அறிவுரை சொன்னாரு.

  ரெண்டாவது தவறு

  ரெண்டாவது தவறு

  ஏறத்தாழ ஊருல அரசல்புரசலா என்னோட வேதனை எல்லாருக்கும் தெரியும். அதாவது தினமும் அடி, உதை வாங்குறேன்னு மட்டும். கிட்டத்தட்ட என் அப்பா வயசு இருக்கும் அவரு, அடிக்கடி எங்க ஊருக்கு வந்து போறவரு தான்.

  என்கிட்ட ஆசையா நிறையா பேசினாரு. அதுல ஒரு அன்பு இருந்துச்சு. இன்னுமா இவன்கிட்ட சிக்கி சீரழிய போற. உனக்கு என்ன வயசாச்சு. 25 வயசெல்லாம் ஒரு வயசா. வாழ்க்கையில அனுபவிக்க வேண்டியது, கத்துக்க வேண்டியது நிறையவே இருக்குன்னு சொன்னாரு. அவர் பேச்ச நம்பி, ஊரைவிட்டு கிளம்பினேன்.

  என் வாழ்க்கையில் முதல்ல நடந்த தவறுக்கு நான் காரணம் இல்ல. ஆனா, ரெண்டாவது தப்புக்கு நான் தான் முழுப் பொறுப்பு.

  கோவை!

  கோவை!

  கோயம்புத்தூர் அவுட்டர்ல ஒரு பகுதியில என்ன தங்க வெச்சிருந்தாரு. வாரம் ஒரு நாள் என்ன வந்து பார்த்துட்டு போவாரு. கிட்டத்தட்ட ஒரு சின்ன வீடா தான் இருந்தேன். கொஞ்ச நாள்ல நான் பண்ணது தப்போன்னு தெரிஞ்சுது. குறைந்தபட்சம் வெறும் செக்ஸ் பொருளா இல்லாம, என்னோட வாழ்க்கைய நான் வாழ முடியிதேன்னு யோசிச்சேன்.

  வாரம், வாரம் தவறாம வந்து பார்த்துட்டு செலவுக்கு பணம் கொடுத்துட்டு போவாரு. அதுல சேமிச்சு வைக்கிற பணத்துல என் குழந்தைங்கள பார்க்க போறப்போ எதாவது வாங்கிட்டு போவேன்.

  ரெண்டாவது கல்யாணம்!

  ரெண்டாவது கல்யாணம்!

  நான் ஊரை விட்டு வந்து நாலஞ்சு மாசத்துல என் புருஷன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அத தப்புன்னு சொல்ற யோக்கியதை எனக்கில்ல. ஆனா, என் குழந்தைங்கள பார்க்க எனக்கு உரிமை இருக்கு.

  எல்லாத்துக்கும் மேல அவங்க தான் என் உயிரே. ஊருல யாருக்கும் தெரியாம, அவங்க ஸ்கூலுக்கு போய் அவங்கள பார்த்துட்டு வருவேன். நான் மானத்த வாங்கிட்டேன்னு என் அப்பா, அம்மா யாருக்கும் என்ன பிடிக்காம போயிடுச்சு.

  என் வாழ்க்கை புயலடிச்சு ஓஞ்ச மாதிரி, அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாத ஒரு அமைதியான நிலையல நகர்ந்துட்டு இருந்துச்சு.

  கருக்கலைப்பு!

  கருக்கலைப்பு!

  என்ன பார்த்துட்டு இருந்த.. அதாவது உபயோகப்படுத்திட்டு இருந்த அவரால நான் நாலு முறை கர்ப்பம் ஆனேன். அவரு நாலு முறையும் கருக்கலைப்பு பண்ண சொல்லிட்டாரு. எனக்கு குழந்தை பெத்துக்கலாம்ன்னு ஆசை. எப்படியும் இதுவும் ஒரு ரெண்டாவது கல்யாணம் மாதிரி தானேன்னு நெனச்சேன்.

  ஆனால், ஒரு அளவுக்கு மேல நான் குழந்தை பெத்துக்க கேட்கிறது பிடிக்காம, அவரு என்ன பார்க்க வரத நிறுத்திட்டாரு. அப்பறம் திரும்பவும் ஒரு மயான அமைதி என் வாழ்க்கையில.

  குழந்தைங்கள பார்க்க போக முடியாது, வீட்டு வாடகை கொடுக்க முடியாது, அடுத்த வாரம் சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறோம்ன்னு ஒன்னும் தெரியாது.

  படிப்பு!

  படிப்பு!

  நான் பி.யு.சி படிச்சது அப்ப தான் எனக்கு உபயோகமா இருந்துச்சு. பத்தாவது வரைக்கும் படிச்சவங்க வேலைக்கு வேணும்ன்னு ஒரு ஆபர் பார்த்தேன். ஒரு சின்ன ஹாஸ்ப்பிடல், அதுல ரிசப்ஷனிஸ்ட் வேலை. பெருசா ஒன்னும் இல்ல. வரவங்க, போறவங்க பெயரு, இன் டைம், அவுட் டைம் குறிச்சு வைக்கனும். அவ்வளவு தான்.

  மாசம் என் வாழ்க்கைய நகர்த்துர அளவுக்கு சம்பளம். ஆனா, குழந்தைங்கள போய் பார்க்க்க முடியாத நிலை. அவங்களுக்கு இப்போ விபரம் தெரிஞ்சிடுச்சு. என்னை பத்தி அவங்க சொன்னதுல பாதி உண்மை பாதி பொய். அந்த பாதி உண்மையே போதும் அவங்க என்னை வெறுக்க.

  மீதி வாழ்க்கை!

  மீதி வாழ்க்கை!

  இப்ப எனக்கு வயசு 33 தான். இன்னும் ஏறத்தாழ பாதி வாழ்க்கை இருக்கு. ஆனா, எதுக்காக வாழ்றேன், யாருக்காக வாழ்றேன்னு எதுவுமே தெரியல. ஒருவேளை நைட் ஷிப்ட் வர பொண்ணு லேட் ஆயிட்டாளோ, நான் நைட் ஷிப்ட் பார்க்கும் போது காலையில கூட வேலை பார்க்குற பையன் என்ன வீட்டுல வந்து டிராப் பண்ணிட்டு போனாலோ அத தப்பதான் பாக்குறாங்க.

  ஆமா, நாலஞ்சு வருஷத்துக்கு முன்ன ஒருத்தன் வாரம் , வாரம் வந்துட்டு போனான். இப்ப யாராரோ வந்து விட்டுட்டு போறாங்க. இவள ஊரு என்னனு சொல்லும். உங்க மனசுல எந்த வார்த்தை முந்திட்டு வந்து நிக்குதோ அத சொல்லி தான் எல்லாரும் என் காதுப்பட பேசுறாங்க.

  ஆசை!

  ஆசை!

  இதெல்லாம் விதியா. இல்ல எனக்கு நானே பண்ணிக்கிட்ட சதியான்னு தெரியல. புத்தர் ஆசை படாதேன்னு சொன்னாருன்னு சொல்வாங்க. எனக்கு ஆசையே இல்லை. என் செலவுக்கு போக மீதமிருக்க பணத்த உதவி அற்றோர் ஆசிரமம், முதியோர் இல்லம், நிவாரண நிதிக்குக் கொடுத்திடுவேன்.

  கூட வேலை பண்றவங்க உன் கடைசி காலத்துல எதுக்காவது அவசர உதவிக்கு பணம் வேணும்னா என்ன பண்ணுவடி சேமிச்சு வைன்னு சொல்லுவாங்க. எனக்கு ஒரே ஒரு ஆசை தான். ஹாஸ்பிட்டல்ல விழுந்து இழுத்துட்டு சாகாம, பொசுக்குன்னு உசுரு போயிடனும். வேற எதுவுமே இல்ல.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Real Life Story: I Want to Have Kids, But He Does Not Want. Because, We Are Not Married!

  Real Life Story: I Want to Have Kids, But He Does Not Want. Because, We Are Not Married!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more