For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பணமும், அதிகாரமும் இருப்பதால், ஒவ்வொரு இரவிலும் அவன் கைகளால் பலியாகிறேன் - My Story #243

  By Staff
  |

  25 வயது வரை ஒரு வீட்டில், தனக்கு மிகவும் பரிச்சயமான, தன்னை மிகவும் நேசிக்கும் நபர்களின் அரவணைப்பில் வாழ்ந்துவிட்டு. திடீரென ஒருநாள் உனக்கு இவனுடன் தான் திருமணம். உனது மீத முப்பது, நாற்ப்பது ஆண்டுகளை நீ என்ன நடந்தாலும் இவனுடன் தான் வாழ வேண்டும் என்று நிர்பந்தம் செய்வது எப்படியான கொடுமை? இல்லறம், உறவுகள் என்ற பெயரில் இந்த சமூகம் இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கியது எதற்கு?

  நமது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பெரிய மனித உரிமை மீறலே திருமணம் தான் என்று நான் கருதுகிறேன். ஒருவேளை எனது இல்லறத்தை போன்ற ஒரு கொடுமையான அனுபவத்தை யார் கடந்து வந்தாலும், இப்படியான ஒரு கருத்தை தான் வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தகமே இல்லை.

  ஏனெனில், நமது சமூகத்தில் மனிதமும், மனித நேயத்தையும் விட பணத்திற்கும் அதிகாரத்திற்கும் தான் அதிக மதிப்பும், மரியாதையும் இருக்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஆரம்பத்தில்...

  ஆரம்பத்தில்...

  அவன் ஆரம்பக் காலக்கத்தில் இப்படி இல்லை. மிகவும் அன்பாகவும், பணிவாகவும், அக்கறையுடனும் என்னை பார்த்துக் கொண்டான். எப்போதிருந்த அவனுள் என் மீது காரணமே இல்லாமல் சந்தேகம் வளர துவங்கியது என்று இதுநாள் வரையிலும் எனக்கு தெரியாது.

  எங்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. அதில் கடந்த இரண்டு மாத காலமாக நாம் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறேன். எனக்கு உதவ ஒரு நபர் கூட முன்வரவில்லை.

  அறுத்தெறி!

  அறுத்தெறி!

  அவனது சந்தேகம் வளர, வளர எனது நட்பு வட்டாரங்கள் குறைய ஆரம்பித்தனர். என் கைபேசியில் எந்த ஒரு ஆணின் தொடர்பு எண்ணும் இருக்கக் கூடாது. எனது சமூக தளங்களில் நான் எந்த ஒரு ஆணுடன் நட்பு வைத்துக் கொள்ள கூடாது. என்னுடன் நீண்ட நாள் நட்பில் இருக்கும் ஆண்களுடன் கூட நான் பேசக் கூடாது என பல ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் பிறப்பிக்கப்பட்டது அவனால்.

  இப்படியான வகையில் பெண்களை ஏமாற்றுகிறார்கள் , அதற்காக தான் உன்னை பத்திரப்படுகிறேன் என்று கூறினான். நானும் அவனை நம்பினேன்.

  பித்துப்பிடித்தது போல...

  பித்துப்பிடித்தது போல...

  ஆனால், கொஞ்ச நாட்களில் அவன் பித்துப்பிடித்தது போல நடந்துக் கொள்ள ஆரம்பித்தான். என் வட்டத்தை சேர்ந்த எந்த ஒரு ஆணுடனும் பேசக் கூடாது, அவர்களும் என்னை அணுக கூடாது, பழக்கம் கூடாது என பல சட்டத்திட்டங்கள் விதித்தான். என்னால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் கூறுபவை எல்லாம் முட்டாள்தனமாக இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் என்னுடன் படித்த ஆண் நண்பர்களுடன் கூட பழக கூடாது என்று கூறினான்.

  நான்கு சுவர்களுக்குள்...

  நான்கு சுவர்களுக்குள்...

  ஒரு கட்டத்தில் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு ஒரு அசௌகரியான சூழலில் நான்கு சுவர்களுக்குள் சிறைப்பட்டேன். அவன் மீது நாளுக்கு, நாள் அச்சம் தான் அதிகரிக்க துவங்கியது.

  ஒரு கட்டத்தில் என்னுள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம் நேரே சென்று, எனக்கு இனிமேலும் உன்னுடன் வாழ விருப்பம் இல்லை. நான் விவாகரத்து வழக்கு தொடரவிருக்கிறேன் என்று கூறினேன்.

  முழுப் போதை!

  முழுப் போதை!

  அன்று இரவு முழுவதும் குடித்துவிட்டு என்னை அடிக்க துவங்கினான். நான் கதறி அழுதும், கெஞ்சியும் கூட அவன் என்னை விடவில்லை. ஒருகட்டத்தில் உதவிக்காக நான் பலமாக கத்தினேன். ஆனால், கதவுகள் பூட்டப்பட்டிருந்ததாலும், நாங்கள் இருந்த அபார்ட்மெண்ட் குடியிருப்புகளில் நிறைய வீடுகள் காலியாக இருந்ததாலும் உதவிக்கு யாரும் வரவில்லை.

  நான் சுயநினைவு இழந்து தரையில் விழுந்தேன். காலை எழுந்து பார்த்த போது, என்னை சுற்றிலும் இரத்தம். அது என்னுடையது தான். என்னால் எழுந்திருக்க கூட முடியவில்லை. ஒருசில நாட்கள் அதே இரத்த கரையுடன் எழுந்து நிற்க முடியாமல் அவதியுற்று கிடந்தேன்.

  காயம்!

  காயம்!

  உடலளவில் ஏற்படும் காயங்கள் மறைந்துவிடும், ஆனால், மனதளவில் ஏற்படும் காயங்கள்...?

  அதன் பிறகு தினமும் அவன் குடித்துவிட்டு வந்த என்னை அடிக்க துவங்கினான். பல சமயங்களில் நான் கடவுளை வேண்டியதுண்டு. ஆனால், எந்த கடவுளும் என்னை காப்பாற்றவில்லை. மேலும், எனது வயதான பெற்றோர் மற்றும் சாமானிய வாழ்க்கை வாழும் நண்பர்கள் உறவினர்கள் என யாருமே அவனது பணம் மற்றும் அதிகாரத்தை எதிர்த்து எனக்கு உதவ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

  தப்பித்து ஓடினேன்...

  தப்பித்து ஓடினேன்...

  ஒருசில முறை நான் அவனிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு ஓடி சென்றுள்ளேன். ஆனால், எப்படியோ ஒரே நாளுக்குள் என்னை கண்டுபிடித்து மீண்டும் அந்த சிறைக்குள் அடித்துவிடுவான். நான் எப்படியாவது வேறு ஒரு நகரத்திற்கு சென்று விட வேண்டும். இல்லையேல் இதே நரகத்தில் கிடந்து சாக வேண்டும்.

  இன்று வரையிலும் இவன் எதனால் இப்படி திடீர் சந்தேக பிராணி ஆனான் என்று தெரியாமல் தவிக்கிறேன். இந்திய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு நாளுக்கு, நாள் பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது.

  நான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட ஒரே காரணமாக இருப்பது, எங்களுக்கு குழந்தை இல்லை. ஒருவேளை குழந்தை இருந்திருந்தால், அவன் அந்த குழந்தையை சந்தேகத்தின் பெயரில் கொலையும் கூட செய்திருப்பான்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Real Life Story: He Beaten Up Me Till I Got Unconscious, This is My Relationship with Him!

  Real Life Story: It's undoubted that we live in a society where money and fame are bigger than a human right.
  Story first published: Thursday, April 26, 2018, 13:15 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more