2வது குழந்தை எனக்கு பிறந்ததே இல்லை. அம்மா, மனைவி சேர்ந்தே ஏமாற்றுகிறார்கள் - My Story #232

Posted By: Staff
Subscribe to Boldsky

எங்கள் ஊர் ஒரு டவுன் பகுதி. சொந்த வீடு, குடும்பத்தை நடத்த போதுமான அளவுக்கு மேலாகவே நான் சம்பாதிக்கிறேன். இது போக, இரண்டு கடை வாடகை வருகிறது. எனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான். சிறு வயதில் இருந்து குடும்ப பாரம் தாங்கி கொண்டு வளர்ந்தவன் நான். அம்மா, தம்பிக்கு சாப்பாடும், படிப்பும் அவசியம் என்ற நிலை காரணமாக பத்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டு நான் வேலைக்கு சென்றேன்.

சிறுக, சிறுக சேமித்து பழைய வீட்டை மாற்றி கட்டனேன். அதன் பிறகே திருமணம் செய்துக் கொண்டேன். தம்பியை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தது வரை எனது சம்பாத்தியத்தில் தான். எனக்கு திருமணம் ஆன போது வயது 31. எனக்கும் என் மனைவிக்கும் 8 வருட வயது வித்தியாசம்.

கடவுள் என்னை மட்டுமே சோதிக்கிறான். என் மனைவி, அம்மா, சகோதரன் என அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க... நான் மட்டும் ஒரு பயந்த சுபாவத்துடன் சோகங்களை, சங்கடங்களை ஏற்று வாழ்ந்து வருகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமண வாழ்க்கை!

திருமண வாழ்க்கை!

எனக்கும், மனைவிக்கும் நடுவே எந்தவொரு பிரச்சனையும் இல்லை. திருமணமான முதல் வருடமே எங்களுக்கு குழந்தையும் பிறந்தது. நான் கொஞ்ச நஞ்சம் நிம்மதியாக, சிரித்து வாழ்ந்தது அந்த ஓராண்டு காலம் தான் என்று கூறலாம். எங்கள் முதல் குழந்தை தேவதை மகள் என்பதால் கூடுதலாக இனிமேல் உழைக்க வேண்டும் என்று கருதினேன். அப்படி தான் உழைத்தேன்.

ஆண்மை இல்லை..

ஆண்மை இல்லை..

என் சொந்த அம்மாவே எனக்கு ஆண்மை இல்லை என்று எங்கள் ஊர் முழுக்க சொல்லிக் கொண்டு திரிந்தார். ஏதோ கோபத்தில் இப்படி சொல்லிக் கொண்டு திரிகிறார். ஊரார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னதான் இருந்தாலும், இதை எல்லாம் பொறுமையா பார்த்துட்டு இருக்காதன்னு எனது தோழர்கள் எல்லாம் அறிவுரை கூறினார்கள்.

அச்சம்!

அச்சம்!

நான் அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளேன். நான் யாருக்குமே தீங்கு நினைத்ததே இல்லை. ஆகையால், என்னை யாராது திட்டினாலும் கூட அதைக் கண்டுக் கொள்ளாமல் நகர்ந்து சென்றுவிடுவேன். சிறு வயதில் இருந்து அம்மாவிடம் நிறைய திட்டு வாங்கியுள்ளேன். நான் கோழையா? அல்ல கெட்டதை கண்டு விலகி செல்லும் சுபாவம் கொண்டவனா என்று எனக்கே சந்தேகங்கள் எழும்.

அரசல்புரசலாக...

அரசல்புரசலாக...

அப்போது தான் எனது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிலர், நான் இல்லாத நேரத்தில் வேறு யாரோ ஒரு ஆண் வீட்டுக்கு அவனது செல்வதாகவும். அம்மாவுக்கு தேர்ந்தே இது நடந்து வருவதாகவும் கூறினார்கள். நான் முதலில் அதை நம்பவில்லை. வீட்டில் இதுகுறித்து ஏதாவது கேள்வி எழுப்பினால் மனைவி கோபித்துக் கொண்டு போய்விடுவாளோ என்ற அச்சமும் என்னுள் அதிகம்.

தைரியசாலி!

தைரியசாலி!

என் மனைவி மிகவும் தைரியசாலி, என்னக்கு அப்படியே நேர்மாரானவள். குழந்தைக்கு ஏதாவது என்றால் நான் பதறிவிடுவேன். அவள் தான் தைரியமாக இருக்க சொல்லி, முற்றிலும் குழந்தையை கவனித்துக் கொள்வாள். அவளுக்கு நிறைய தோழர்கள்,தோழிகள் உண்டு. கல்லூரி முடித்தவள். எங்கள் ஊரில் சும்மா யாராவது வந்தாலே தவறாக தான் பேசுவார்கள். ஆகையால், நான் அப்போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கூச்சம்!

கூச்சம்!

உண்மையை கூற வேண்டும் என்றால் எனக்கு உடலுறவில் ஈடுப்படவே கூச்சமாக தான் இருந்தது. அவள் தான் எனது கூச்சம் போக்கி, இது இயற்கை என்று கூறி புரிய வைத்தவள். எனக்கான அறிவு அவ்வளவு தான். இப்படியான ஒரு மனைவி மீது எப்படி சந்தேகம் கொள்வது என்ற குழப்பம் என்னுள் அதிகமாக இருந்தது. என்னை ஏமாற்ற வேண்டும் என்றால், அவள் முன்னதாகவே ஏமாற்றி இருக்க கூடும்.

கண்முன்!

கண்முன்!

ஒரு நாள்... நான் வேலை செய்து வந்த இடத்தில், ஓனரின் உறவினர் யாரோ தவறிவிட்டார் என்று கூறி, அவர் மதியமே கம்பெனியை மூடிவிட்டு சென்றுவிட்டார். ஆகையால், நான் மதியமே வீடு திரும்பிவிட்டேன். எப்போதும் இரவு எட்டு மணிக்கு மேல் வரும் என்னை அவர்கள் மதிய வேளையில் எதிர்பார்க்கவில்லை. நான் என் வீடு வசித்திருக்கும் சாலையில் நுழையும் போது.. என் வீட்டில் இருந்து யாரோ ஒருவன் வெளியே வந்து, வண்டியை எடுத்துக் கொண்டு பைக்கில் செல்வதை கண்டேன்.

கவனிக்கவில்லை!

கவனிக்கவில்லை!

நான் தெரு முனையில் வருவதை என் அம்மாவும், மனைவியும் கவனிக்கவில்லை. யாரோ உறவினர் தான் வீட்டுக்கு வந்து செல்கிறார் என்று கருதினேன். நான் வீட்டுக்குள் நுழைந்ததும் இருவரும் இயல்பாக இருப்பது போல நடித்தனர். யாராச்சும் வீட்டுக்கு வந்தாங்களா? என்று அம்மாவிடம் கேட்டதற்கு. காலையில இருந்து வீட்டுல நான், அம்மா, பாப்பா மட்டும் தான் இருக்கோம் என்று மனைவி முந்திரி கொட்டை போல முந்திக் கொண்டு பதில் அளித்தாள்.

ஏதோ தவறு..

ஏதோ தவறு..

ஒருவேளை எனக்கு மனைவி துரோகம் செய்வதாகவே இருந்தாலும், அம்மாவையும் வைத்துக் கொண்டா செய்வாள் என்ற எண்ணினேன். ஆனால், நான் கண்ட அந்த நபரை என்னிடம் இருந்து இவர்கள் ஏன் மறைக்க வேண்டும் என்பதே எனது கேள்வி. அன்றையில் இருந்து நான் மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்பிவிடுவேன். மதிய வேளை உணவுக்கு வீட்டுக்கே வந்தே சாப்பிட்டு விட்டு செல்ல ஆரம்பித்தேன்.

தடுமாற்றம்!

தடுமாற்றம்!

இடையில் என் அம்மா, மனைவிடம் சில தடுமாற்றங்கள் உணர்ந்தேன். இன்று மதிய உணவு சமைக்கவில்லை, வெளியே செல்கிறோம் என்று கூறினார்கள். என் நண்பனை வீட்டுக்கு சென்று பார்க்க சொன்ன போது, அவர்கள் வீட்டில் இருப்பது தெரியவந்தது. வீட்டுக்கு யாரோ உறவினர் வந்திருக்கிறார்கள் என்று கூறினார்கள். அறிந்துக் கொண்டேன் அதே நபர் தான். ஆனால், என்னால் உடனே சென்று தட்டிக் கேட்க முடியாமல் போனது. அச்சம். அச்சத்தினால் மனதுக்குள்ளே புழுங்கிக் கொண்டு வேலை செய்யும் இடத்திலேயே இருந்துவிட்டேன்.

உடலுறவு!

உடலுறவு!

முதல் குழந்தைக்கு பிறகு மூன்று ஆண்டுகளாவது இடைவேளை வேண்டும் என்று கூறி இருந்தாள். அவள் கூறியே நாங்கள் ஆணுறை அணிந்து உறவில் ஈடுபட்டு வந்தோம். ஆணுறை பயன்படுத்தினாலும் கூட கருத்தரிக்க வாய்ப்புள்ளது என்று நான் அறிவேன். ஆயினும், அவளது இரண்டாம் முறை கர்ப்பத்திற்கு நான் காரணம் இல்லை என்று நான் நூறு சதவிதம் அறிவேன்.

என்ன செய்வது?

என்ன செய்வது?

மூன்று வருடம் இடைவேளை கேட்டாய், இப்போது ஒரு வருடத்திற்குள் ஏன் குழந்தை என்று கேட்டேன். கருகலைப்பு செய்துவிடு என்று கூறியதற்கு அம்மாவும், மனைவியும் அது பாவம் என்று கூறி தட்டிக் கழித்தனர். ஒன்பதாவது மாதத்திலேயே பிறந்தது குழந்தை. ஆண் குழந்தை. அனைவருக்கும் ஆண் குழந்தை என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும். ஆனால், எனக்கு இரட்டிப்பு சோகம் ஏற்பட்டது. அது யார் மகன்? அவன் யார் என்றே எனக்கு தெரியாது.

வேண்டாம்?

வேண்டாம்?

ஆனால், என் மகளை நான் மிகவும் நேசிக்கிறேன். அவள் என்னுயிர், அவன் என்னிடம் தனியாக வளர்வதை காட்டிலும், அவளது அம்மாவிடம் வளர்ந்தால் நிச்சயம் நன்கு வளர்வாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், அம்மாவின் தைரியம் மட்டும் வந்தால் பரவாயில்லை. வேறு விஷயங்களும் ஒட்டிக் கொண்டால் என்ன செய்வது. குழந்தை பிறந்த பிறகு, அவனது வருகை இல்லை. அதன் பிறகு யாரும் என்னிடம் அவன் குறித்து அரசல்புரசலாக எதுவும் சொல்லவும் இல்லை.

அந்த ஒரு வருடம்...

அந்த ஒரு வருடம்...

என் வாழ்வில் அந்த ஒரு வருடம் என்ன நடந்தது, நான் ஏன் சில தருணங்களில் கோழையாக இருந்தேன் என்று இன்று வருந்துகிறேன். என்னை கண்டு சிலர் திட்டலாம். ஆனால், என்னை போலவும் சிலர் இந்த உலகில் இருக்க தான் செய்கிறார்கள். பிரச்சனை வேண்டாம் என்று நாங்கள் ஒதுங்கி செல்கிறோம். அதை இந்த சமூகம் இவன் தான் ஏற்ற ஆள் என்று கருதி ஏமாற்றி செல்கிறது.

ஆனாலும், தட்டிக் கேட்க தைரியம் இல்லாத என்னிடமும் தவறு இருக்க தான் செய்கிறது. நான் தைரியமாக இருந்திருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: Mom Helps My Wife To Cheat in Marriage Life. I dont Know What to Do

My Story: Mom Helps My Wife To Cheat in Marriage Life. I dont Know What to Do