For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மனைவியின் பிறப்புறுப்பில் ஆசிட் அடித்த கொடூர கணவன் - My Story #201

  By Staff
  |

  இந்தியாவில் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு நிகழ்வுகள் பெரும்பாலும் காதல் நிராகரிப்புகள் மற்றும் எதிர்கால உறவுகள் சார்ந்தே நிகழ்ந்துள்ளன. இது ரேஷ்மா வின் வாழ்வில் நடந்த துயரமான சம்பவம்.

  ரேஷ்மா எதிர்கொண்ட அமில வீச்சு காதல் நிராகரிப்பு காரணமாக நடந்தது அல்ல. அவளால் பெண் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்ற காரணத்தால் நடந்தது. ரேஷ்மா பெண் குழந்தை பெற்றதற்கு காரணம் அவளல்ல, அவளது கணவன் என்பது உண்மை. நியாப்படி அவனது ஆணுறுப்பில் தான் அவனே ஆசிட் வீசியிருக்க வேண்டும்.

  ஆனால், இந்த ஆணாதிக்க சமூகம் தனது தவறுகளுக்கும், இயற்கையாக நடக்கும் விஷயங்களுக்கும் கூட பெண்களை தான் தண்டிக்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  என் பெயர் ரேஷ்மா...

  என் பெயர் ரேஷ்மா...

  பொதுவாக பெண்களின் மீது கோபம் கொண்டு சில மிருகங்கள் அழகை சிதைக்கும் வண்ணம் முகத்தில் அமில வீச்சு தாக்குதல் நடத்துவதை பல செய்திகளில் கண்டிருப்போம். ஆனால், ரேஷ்மா வின் சம்பவத்தில் இது வலியுடன் கொடூரம் மிகுந்ததாய் அமைந்தது. அந்தரங்க உறுப்புகளில் அமில வீச்சு என்பது அவரது கணவர் எத்தகைய மிருகத்தனம் நிரம்பியவர் என்பதை வெளிக்காட்டுகிறது.

  இதுக்குறித்து ரேஷ்மா கூறுகையில், "என் பெயர் ரேஷ்மா . ரேஷ்மா மட்டுமே, யாருடைய பெயரையும் என் பெயருக்கு பின்னால் இணைத்துக் கொள்ள தான் விரும்பவில்லை" என்பதை முதல் வரியிலேயே தெள்ளத் தெளிவாக அறிவித்துவிட்டார் ரேஷ்மா .

  உழைப்பு!

  உழைப்பு!

  எனது இன்றைய நிலைக்கு எனது அயராத உழைப்பும், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுமே என்று தெரிவித்துள்ளார். Chhanv எனும் அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆசிட் வீச்சு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறது.

  குடும்ப சூழல்...

  குடும்ப சூழல்...

  "நாங்கள் மொத்தம் மூன்று பேர். என் உடன்பிறந்தவர்கள் இருவர். நான் தான் மூத்தவள். எனது குடும்ப சூழல் காரணமாக, எனது பெற்றோரால் எங்கள் மூவருக்கும் நல்ல கல்வி அளிக்க முடியவில்லை. எனக்கு திருமணமான போது வயது 14. திருமணத்திற்கு பிறகு கான்பூரில் இருந்து லக்னோ குடி பெயர்ந்தேன்.

  திருமணத்திற்கு பிறகு நான் நிறைய புதிய மக்களுடன் பழகுவேன். நான் விரும்பியது எல்லாம் செய்ய முடியும் என்றே கருதினேன். ஆனால், என் கற்பனைக்கு நேர் மாறாக அனைத்தும் வித்தியாசமாக நடந்தன."

  முதல் குழந்தை...

  முதல் குழந்தை...

  "எனது 16 வயதில் முதல் குழந்த பெற்றெடுத்தேன். அவள் பெண் குழந்தை. பெண் குழந்தை பிறந்தது எனக்கு மட்டுமே மகிழ்ச்சியை அளித்தது. எனது கணவர் மற்றும் அவரது வீட்டார் விரும்பவில்லை. அவர்களுக்கு மகன் தான் அவசியமாக இருந்தான்.

  பெண் குழந்தை பிறந்த உடனேயே அவர்களது குணாதிசயங்கள் மாறத் துவங்கின. என்னை கடுமையாக திட்டினார்கள், கொடுமை படுத்தினார்கள். 18 வயதில் மீண்டும் கருத்தரித்து, இரண்டாம் பெண் குழந்தை பெற்றெடுத்தேன். இப்படியாக தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐந்து பெண் குழந்தைகளை பெற்றேன்."

  மோசமாக மாறினார்கள்...

  மோசமாக மாறினார்கள்...

  "பிறந்த ஐந்து குழந்தைகளும் பெண்களாக போக எனக்கும், கணவருக்கும் இடையேயான உறவு மிகவும் மோசமாக மாறியது. நாங்கள் இருவரும் ஒரு கட்டத்தில் பேசிக் கொள்ளவே இல்லை. என் மீதான அவரது அவரது கோபமும் நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டே போனது.

  ஒவ்வொரு முறையும் என்னை வெறுப்பதாகவும், தன் வாழ்வில் நான் அவசியமற்றவள் என்றும் கூற துவங்கினார். ஒவ்வொரு முறையும் அவர் இப்படியாக நடந்துக் கொள்ளும் போது எனக்கு வியப்பு மட்டுமே மிஞ்சியது. இவர்கள் அனைவரும் என் மீது கோபித்துக் கொள்ள ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பது மட்டும் தான் காரணாமா? என்ற கேள்வி பெரிதாகி கொண்டே போனது."

  ஜூலை 24, 2013 !

  ஜூலை 24, 2013 !

  ஆண் குழந்தை பிறக்காதது ரேஷ்மாவின் குற்றம் இல்லையே.

  அன்று ஜூலை 24, 2013, ரேஷ்மா தன் வாழ்வில் மறக்க முடியாத நாள்.

  "நான் சமையல் அறையில் அன்றாட வேலையை செய்து வந்தேன். கணவர் ரேஷ்மா? எங்க இருக்க என்று கத்திக் கொண்டே வந்தார். நான் என்ன செய்தேன் என்று இவர் இப்படி என் பெயர் கூறி கத்திக் கொண்டிருக்கிறார் என்பதை அறியாது வெளியே சென்றேன்."

  அமில வீச்சு...

  அமில வீச்சு...

  "நான் வெளியே சென்றதும் எனது தலையை பிடித்து கீழே தள்ளி, எனது அந்தரங்க உறுப்புகள் மீது அமிலத்தை ஊற்றினார் கணவர். நான் திகைத்தேன், கிட்டத்தட்ட அந்த வலியில் இறந்தே போனேன். நான் கதறி அழுது, துடித்துக் கொண்டிருந்தேன். அங்கே இருந்த ஒருவர் கூட என்ன? எது? என்று கேட்க முன்வரவில்லை. இரண்டு நாட்கள் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன்."

  Image Source: Google

   ஜூலை 26, 2013 !

  ஜூலை 26, 2013 !

  "ஜூலை 26 அன்று எனது அப்பாவுக்கு அழைத்து பேசினேன். என்னை அவருடன் அழைத்து செல்ல கூறினேன். அந்த வலி தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. என்னை பார்க்க அப்பாவை அவர்கள் அனுமதிக்கவில்லை. அவரை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பினார்.

  பிறகு ஜூலை 30ம் நாள் மீண்டும் என் தந்தை என்னை காண வந்தார். கணவருடன் சண்டையிட்டு என்னை கான்பூரில் இருந்த லாலா லாஜ்பட் ராய் மருத்துவமனையில் அனுமதித்தனர். "

  கர்ப்பம்!

  கர்ப்பம்!

  "ஆரம்பத்தில் மருத்துவர்கள் எனக்கு மருத்துவம் செய்ய இயலாது என்றனர். பிறகு என் தந்தை மிகவும் கெஞ்சி கேட்டுக் கொண்டதற்கு இணங்க எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனக்கான சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது தான், நான் இரண்டரை மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறினார்கள். "

  கருகலைப்பு?

  கருகலைப்பு?

  "என் குழந்தயை பெற்றேடுக்கவே நான் எனது ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியாயிற்று. அமில வீச்சு காரணமாக கீழ் உடல் மிகவும் சிதைந்து போயுள்ள காரணத்தால், கருகலைப்பு செய்ய மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ஆனால், எனது குழந்தையை கொல்ல நான் தயாராக இல்லை."

  மீண்டும் சண்டை!

  மீண்டும் சண்டை!

  "மருத்துவர்கள் பலமுறை அறிவுரைத்தும் கூட, எனது முடிவில் தீர்க்கமாக இருந்தேன். எனது தைரியத்தை முன் வைத்து, கருகலைப்பு செய்யாமல், எப்படி அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை காக்கலாம் என்று மருத்துவர்கள் ஆலோசித்தனர்.

  மருத்துவமனையில் இருந்த போது, திடீரென ஒரு நாள் மிகையாக யாரோ கத்திக் கொண்டிருக்கும் சப்தம். வலியுடன் எழுந்து அறைக்கு வெளியே வந்து பார்த்தால், கணவர் எனது தந்தையை மோசமான வார்த்தைகளால் திட்டி, கடித்துக் கொண்டிருந்தார்."

  கைது!

  கைது!

  "அப்போது தான் என் வாழ்க்கையில் இனிமேல், எனது சொந்த காலில் பயணிக்க வேண்டிய தருணத்தை உணர்ந்தேன். அங்கே சுற்றி இருந்த நிருபர்களை கையசைத்து அழைத்தேன். எனக்கு நிகழ்ந்த அனைத்து கொடூரங்களையும் கூறினேன். அன்று ஆகஸ்ட் 12, 2013. என் கணவரை கைது செய்தனர். 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. என்னை குறித்து செய்திகள் நாளேடு மற்றும் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் வெளியாகின.

  என் கணவரின் உறவினர்கள் எப்.ஐ.ஆர் திரும்பப்பெறும் படி கெஞ்சினார்கள். ஆனால், என் முடிவில் இருந்து பின்வாங்க நான் தயாராக இல்லை. அவர்கள் எனக்கு 50, 60 ஆயிரம் தருவதாக கூறினார்கள். முடியாது என்று தலை அசைத்தேன்."

  மகன்...

  மகன்...

  "என் மகள்களிடம் நான் மிகவும் வலிமிகுந்த நாட்களை கடந்து வருவதாக கூறினேன். கணவரின் உறவினர்கள் என் மகள்களை மூளைச்சலவை செய்தனர்.

  அன்று பிப்ரவரி 1, 2014 என் மகன் பிறந்தான்.

  என்னால் முடிந்த வரை அவனை அக்கறையாக பார்த்துக் கொண்டேன். சில மாதங்களில் தையல் வேலை கற்றேன். என் குடும்பத்தார் எனக்கும், என் மகனுக்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அனைத்தும் செய்தனர். நான் என் பெற்றோருடன் தான் ஒரு வருட காலம் வாழ்ந்து வந்தேன்."

  லக்ஷ்மி அகர்வால்!

  லக்ஷ்மி அகர்வால்!

  "மார்ச் 2015, லக்ஷ்மி அகர்வால் என்ற பெண் என்னை காண வந்தார். அவரும் ஆசிட் வீச்சு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர் தான். என்னை குறித்து செய்திகள் படித்தறிந்து என்னை காண வந்ததாக கூறினார்.

  எனக்கு அவர் நிறைய தைரியம் அளித்தார். என்னை போல ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பலர் தங்கள் வாழ்க்கையுடன் போராடி வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறினார். அவரது தொண்டு நிறுவனத்திற்கு என்னை அழைத்து சென்றார்."

  Image Source: wikipedia

  மகிழ்ச்சி, நம்பிக்கை!

  மகிழ்ச்சி, நம்பிக்கை!

  "அவர்களது Sheroes எனும் காபி நிறுவனத்தில் எனக்கு வேலை அளித்தனர். உணவு பரிமாறுவது, காய்கறி வெட்டி தருவது, சமைப்பது போன்ற வேலை செய்து வந்தேன். அந்த தொண்டு நிறுவனம் எனக்கு, என் வாழ்வில் மகிழ்ச்சியை அளித்தது, நம்பிக்கையை பெற்றுக் கொடுத்தது.

  இப்போது எனது மகனுக்கு வயது 4. என் பெற்றோருடன், அவனது தாத்தா பாட்டியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான்."

  Image Source: sheroeshangout

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  My Story: Ex Husband Poured Acid on Private Parts!

  My Story: Ex Husband Poured Acid on Private Parts!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more