For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுக்காகதான் இந்த நாடகமா? my story #272

நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறாள் என்று சொல்லி ஒரு பெண்ணின் திருமணம் நின்றிருக்கிறது. இதைப் பற்றிய ஒரு அனுபவ கதை.

|

பள்ளியிலிருந்தே எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். நான் ஸ்போர்ட்ஸில் வேறு இருப்பதினால் போட்டிக்காக என்று செல்லக்கூடிய இடங்களிலும் எனக்கு நண்பர்கள் சேர்ந்து எப்போதும் பெரும் கூட்டத்தினரோடு தான் இருப்பேன். நண்பர்களோடு இருப்பது தான் எனக்கு உற்சாகமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு திரியும் நான் இப்போதெல்லாம் எதற்காக எனக்கு இத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் இதனால் நான் எத்தனை பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்று புலம்பிக் கொண்டிருக்கிறேன்.

கேட்பவர்களுக்கு எல்லாம் இது வினோதமான பிரச்சனையாக இருக்கலாம். அல்லது நானாகவே கற்பனை செய்து கொண்டு புலம்புவதாய் தோன்றலாம். ஆனால் உண்மை நாம் எதிர்பார்க்காத பல திருப்பங்களை கொண்டதாய் இருக்கிறது. இந்த பிரச்சனையால் நான் மட்டுமல்ல என்னுடைய ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீட்சா :

பீட்சா :

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு எங்கள் கல்லூரியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். இந்த தகவல் எப்படியோ எனக்கு முன்பாக நண்பர்களுக்கு தெரிந்து அவர்கள் மூலமாக ஒட்டுமொத்த வகுப்பறைக்குமே தெரிந்து விட்டிருக்கிறது.

அன்று வகுப்பறைக்கு சென்றதுமே.... ட்ரீட் ட்ரீட் என்று கத்தினார்கள். பல பரிந்துரைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு நாளை பீட்சா சாப்பிடச் செல்வதாய் முடிவெடுக்கப்பட்டது.

செல்ஃபி :

செல்ஃபி :

கல்லூரி முடிந்ததும் எல்லாரும் கிளம்பிச் சென்றோம். அமைதியாய் வெறிச்சோடி கிடந்த அந்த கடை எங்கள் கும்பலின் வருகைக்குப் பின் கலகலப்பானது. சின்ன கடை தான் என்பதால் நாங்கள் சென்றதுமே ஒட்டுமொத்த கடையும் சுறுசுறுப்பானது.

ஆட்டம்,பாட்டம்,செல்ஃபி என இரண்டு மணி நேரம் ஓடியதே தெரியவில்லை.

பெண் பார்க்க :

பெண் பார்க்க :

ஒரு விடுமுறை நாளில் ஊரிலிருந்து பாட்டியும் அத்தையும் வந்தார்கள். மறுநாள் என்னை பெண் பார்க்க வருவதாய் சொல்லப்பட்டது. திருமணம் குறித்தெல்லாம் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை அதோடு பெற்றோர் சொல்லும் பையனை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததினால் இதற்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. ஒரேயொரு வேண்டுகோள் மட்டும் இருந்தது.

திருமணத்திற்கு பின்னால் நான் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான். நான் ஸ்போர்ட்ஸில் இருப்பதினால் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கையுண்டு அதை விட படிப்பிலும் நான் கெட்டி எல்லா செமஸ்டரிலும் 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வைத்திருந்தேன்.

வெளியில்... :

வெளியில்... :

வந்தார்கள் பார்த்தார்கள் பேசினார்கள் பெரியவங்கள கூட்டிட்டு வரோம் என்று சொல்லி கிளம்பிவிட்டார்கள். என்னை வரன் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டில் என் போன் நம்பர் வாங்கி பேச ஆரம்பித்தார்.

வெளியில் செல்லாம் என்று சொல்லி கல்லூரிக்கே வந்து என்னை பிக்கப் செய்ய வந்து விட்டார். நண்பர்களிடம் என்னவென்று சொல்லி நழுவுவது என்று தெரியவில்லை எதுவும் உறுதியாகாத நேரத்தில் அவர்களிடம் என்னவென்று சொல்வது. எப்படியோ ஒரு வழியாய் வந்துவிட்டேன். வந்தவுடன் இனிமே இப்டி வராதீங்க ஃபிரண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க என்று சொன்னேன்.

ஃபாலோ :

ஃபாலோ :

இதுல என்ன இருக்கு நம்ம கல்யாணம் பண்ணப் போறவங்க தான. ஃபிரண்ட்ஸ் கிட்ட என்னைய உன் வுட் பீனு இண்ட்ரோ கொடு என்றார். உங்க வீட்ல இருந்து எதுவும் கன்ஃபார்மா சொல்லல என்றேன்.

தினமும் கல்லூரிக்கு செல்லும் போதும் வரும் போதும் அவன் மட்டும் தனியாகவோ அல்லது நண்பனுடன் பைக்கிலும் என்று என் பின்னாலேயே வர ஆரம்பித்தான். நண்பர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் ரெண்டு நாளா பாக்குறேன் டெய்லி உன் பின்னாடி வர்றான் என்று கேட்டான் ஒரு நண்பன். முதலில் தெரியாதது போல சமாளிக்க முயன்றேன் ஆனால் முடியவில்லை பின் உண்மையைச் சொல்லிவிட்டேன்.

நிச்சயதார்த்தம் :

நிச்சயதார்த்தம் :

நண்பர்கள் எல்லாரும் அவன் தான் என் இணை என்று மனதளவில் உறுதி செய்திருந்தார்கள். நண்பர்கள் எல்லாரையும் அறிமுகப்படுத்தி வைத்தேன் அவரும் எல்லாரிடமும் பேச ஆரம்பித்தார்.

இரண்டு வாரங்களில் எங்களுக்கு பெண்ணை பிடித்துவிட்டது நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி அவர்களது சொந்த ஊரான விருதுநகரில் நிச்சியதார்த்தம் நடத்தலாம் திருமணத்தை இங்கே நடத்தலாம் என்றார்கள்.

உரிமை :

உரிமை :

நிச்சயம் ஆனவுடன் நிறைய உரிமை கொள்ள ஆரம்பித்தான். ஏன் இவ்ளோ நேரம் ஆன்லைன்ல இருக்க, நாலு மணிக்கு காலேஜ் முடியுது அப்போ ஏழு மணி வரைக்கும் வெளிய என்ன பண்ற?, இனிமே ஸ்போர்ட்ஸ் ப்ராக்டிஸுக்கு எல்லாம் போகாத, ஏன் ஃபேஸ்புக்ல இவ்ளோ போட்டோ போட்ருக்க இப்படி ஏகப்பட்ட கேள்விகள்.

தோழி ஒருத்தியின் ரிஷப்சன் பார்ட்டி என்று சொல்லி வீட்டிலிருந்து எட்டு மணிக்கு கிளம்பினேன் வந்து விடுவதாய் சொல்லி ஏற்றிக் கொண்டான். என்னை மண்டபத்தின் வாசலிலேயே விட்டுவிட்டு சென்றான். எவ்வளவோ சொல்லியும் உள்ளே வரவில்லை பத்தரை மணிக்கு நண்பர்களுடன் வெளியே வந்தால் அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

எல்லாரும் வந்திடுங்க :

எல்லாரும் வந்திடுங்க :

கல்லூரி முடியும் நாளில் கல்யாணம் அப்போ சொல்வேன் எல்லாரும் வந்திடுங்க என்று சொல்லி சந்தோசமாக விடைப்பெற்றேன். அவரவர் தங்களுக்கான பாதையை வகுத்துக் கொண்டு பிஸியாகிவிட்டார்கள். அவ்வப்போது சாட்டிங் நடக்கும்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து நண்பனொருவன் வீட்டிற்கு வந்தான். என்ன காலேஜ் முடிஞ்சதும் கல்யாணம்னு சொன்ன இன்னும் கல்யாண சாப்பாடு போடல எங்க யார்கிட்டயும் சொல்லாம மேரேஜ் முடிச்சிட்டியா என்றான்.

கல்யாணம் வேண்டாம் :

கல்யாணம் வேண்டாம் :

அவனிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் என்னைத் தானே அசிங்கமாக பேசுவார்கள் நிச்சயம் செஞ்சுட்டு வேண்டாம்னு திருப்பிட்டாங்களாம். குறை யார் மீது இருப்பினும் பழி மொத்தமும் பெண்ணின் மீது தானே வரும் .

அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தேன் ஏய் என்ன நீ காலேஜ் படிக்கும் போது எப்பவும் கலகலன்னு பேசிட்டேயிருப்ப ஒரு ரெண்டு நிமிஷம் வாய மூடுன்னு கெஞ்சுவோம் ஆனா இப்ப என்னடான்னா ஒரு வார்த்தை பேசுறதுக்கு இவ்ளோ யோசிக்கிற என்று சொல்லி சிரித்தான். பின் அவனாகவே எதோ பிரச்சனைன்னு புரியுது சொல்லணும்னு நினச்சா சொல்லு இல்லன்னா வேண்டாம், உனக்கு நாங்க இருக்கோம் என்று சொல்லி விடைப்பெற்றான்.

சொல்லிடறேன் :

சொல்லிடறேன் :

அவனிடம் மறைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்து நில்லு சொல்றேன் என்று நிறுத்தினேன். நிச்சயம் முடிஞ்சதுல இருந்து ரொம்ப டார்ச்சர் விளையாடக்கூடாது,வேலைக்கு போக கூடாது, மார்னிங் ஜாக் போக கூடாது, ஸ்லீவ்லெஸ் போடக்கூடாது, அது இதுன்னு நிறைய ரூல்ஸ் அதவிட எனக்கே தெரியாம என் பேக்ல ரெக்கார்டர் வச்சு என்னைய கண்காணிச்சிருக்கான். கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிச்சுதான் உள்ள ரெக்கார்டர் இருக்குற விஷயமே தெரிஞ்சது.

ப்ளான் பண்றது, வீட்டுல சொல்லாம எங்காயவது போனா கூட எப்படி இவனுக்கு மூக்கு வேர்த்து வந்து நிக்கிறான்னு ஆச்சரியமா இருக்கும். முதல்ல கேட்டப்போ உன் பேக்ல இருக்கா ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்னு சமாளிச்சான். தெரியாம என் பேக்ல போடுறப்போ தான் ரெக்கார்டரா ஆன் பண்ணி போடுவியா வர்ற வாய்ஸெல்லாம் உன் நம்பருக்கு செண்ட் ஆகுற மாதிரி செட் பண்ணிட்டு தான் போடுவியான்னு கேட்டேன் உடனே கோபம் வந்திருச்சு போய்ட்டான்.

குடும்பம் :

குடும்பம் :

இப்படி ஒரு சந்தேக புத்திகாரன்கூட என்னால வாழ்க்கைய நடத்த முடியாதுன்னு சொல்லி அவன் வேண்டாம்னு சொல்லிட்டேன். வீட்ல கொஞ்சம் வருத்தப்பட்டாங்க அவன் இப்டி எல்லாம் பண்ணிருக்கான்னு தெரிஞ்சதும் எதுவும் பேசல சொந்தக்காரங்க தான் அப்பாவையும் அம்மாவையும் ரொம்ப பேசிட்டாங்க, நிச்சயம் ஆகி திருப்பினா யாரும் உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க நீ அட்வைஸ் பண்ணி சம்மதிக்க வச்சிருக்கணும் அது இதுன்னு ஏகப்பட்ட அட்வைஸ்.

இவளால இவளுக்கு அடுத்து இருக்குற புள்ளைங்க வாழ்க்கையும் பாழாப்போச்சுன்னு எல்லாம் அசிங்கமா பேசினாங்க வீட்டுல என்ன நினச்சாங்களோ என்கிட்ட ஒரு வார்த்த இதப்பத்தி பேசல.... இந்த ரெண்டு வருஷமா ஒரு ஜெயில்ல கிடந்த மாதிரி தான் இருக்கேன் என்றேன்.

திருமணம் :

திருமணம் :

அவ்வளவு நாளாய் மனதில் தேக்கி வைத்திருந்த சுமை இறங்கியதைப் போலொரு உணர்வு. இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு என்றேன். மீண்டும் நண்பர்கள் எனக்கு தோல் கொடுத்தார்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். மூன்றாண்டுகள் கழித்து திருமணம் முடிவானது.

கழுத்துல தாலி ஏற்ற வரைக்கும் எதுவும் சொல்ல முடியாது என்று எல்லாரும் பயம்காட்ட தாலி கட்டும் நொடி வரையில் பயந்து நடுங்கிக் கொண்டேயிருந்தேன் இந்த திருமணமும் தள்ளி போய்விடுமா என்று.... என்னால் எதற்காக அம்மா அப்பா கஷ்டப்பட வேண்டும் வருகிறவன் எவ்வளவு கொடுமைக்காரனாய் இருந்தாலும் பொறுத்துக் கொண்டால் என்ன என்று ஒரு பக்கமும்.... நான் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: relationship love my story
English summary

Girl Marriage Stops Because Of Friends

Girl Marriage Stops Because Of Friends
Story first published: Tuesday, June 19, 2018, 15:40 [IST]
Desktop Bottom Promotion