நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பே கிடையாது! My story #223

Posted By:
Subscribe to Boldsky

தெரியாம செஞ்ச தப்புக்கு மன்னிக்க மாட்டீங்களா? பலரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஒவ்வொரிடமுமிருந்து ஒவ்வொரு பதில் வந்தது. நிச்சயமாய் மன்னிப்பு உண்டு என்று என் வாழ்க்கை எனக்கு காட்டிவிட்டது .

அது யார் செய்த பாவமோ அல்லது வயதின் கோளாறா என்றெல்லாம் தெரியாதுகாதல் மனதைக் கேட்டு நான் எடுத்த முடிவு எங்கள் குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இது நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னமும் அதன் சுவடுகளை நானும் என் வீட்டினரும் சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

குழந்தைகளான நமக்கு ஆடம்பரப் பொருட்கள் மீது ஈர்ப்பு வந்து கொண்டேயிருக்கும். அதை அடைய வேண்டும் என்ற ஆசையும் அதை வாங்கித் தர மறுக்கிறார்களே என்று பெற்றோர் மீது கோபமும் வரும்.அப்படி பிள்ளைகள் அடம் பிடித்தால் தயவு செய்து எதையும் வாங்கிக் கொடுக்காதீர்கள் ஒரு வேளை அன்றைக்கு நான் கேட்டபோதே முடியாது வேண்டாம் என்று சொல்லியிருந்தால் என் வாழ்க்கை இப்படி தடம் மாறியிருக்காதே என்று இன்று வருந்துகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்பம் :

குடும்பம் :

அம்மா அப்பா நான் மூன்று பேர் தான் எங்கள் வீட்டில். அப்பாவுக்கு தனியார் மில்லில் வேலை அம்மா வீட்டில் நூல் வேலைகளை செய்து கொடுப்பார். அளவான வருமானம், இறுக்கிப் பிடித்து மாசக்கடைசியை தாண்டுவதற்குள் இருவருமே விழி பிதுங்கி நிற்பர்.

அந்த வறுமயிலும் என்னை ஒரு நாளும் வேலைக்குச் செல் என்று சொன்னதேயில்லை.... நல்லா படி படிச்சாதான் நாளைக்கி உனக்கு சோறு என்று தான் சொல்வார்கள்.

செல்போன் வாங்கி குடு :

செல்போன் வாங்கி குடு :

பள்ளி முடிந்து அப்போது எங்கள் ஊரிலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய ஒரு கலைக்கல்லூரியில் சேர்ந்தேன். என்னை இன்ஜினியரிங் படிக்க வைக்க வேண்டுமென்று ரொம்பவே மெனக்கெட்டார் ஆனால் பொருளாதாரம் ஈடு கொடுக்காததால் மனதை தேற்றிக் கொண்டார்.

அம்மா இப்ப தான் நான் காலேஜ் போக ஆரம்பிசுட்டேன்ல.... ரொம்ப தூரம் வேற பஸ்ல போய்ட்டு வரேன் லேட்டானா சொல்லக்கூட முடியல என் கிளாஸ் புள்ளைங்க எல்லாம் செல்போன் வச்சிருக்காங்க எல்லாரும் உன் நம்பர் குடுன்னு கேக்குறப்போ ஒரு மாதிரி அசிங்கமா இருக்கும்மா. எல்லாரும் என்னைய கேலியா பாத்து சிரிக்கிறாங்க அப்பாட்ட சொல்லி ஒரு செல்போன் வாங்கி குடும்மா என்றேன்.

அப்பாவிடம் :

அப்பாவிடம் :

விஷயம் அப்பா காதுகளுக்குச் சென்றது. படிக்கிற பிள்ள படிக்கிற வேலைய மட்டும் பாரு. இப்போ உனக்கு எதுக்கு போனு அப்பறம் ரீசார்ஜ் பண்ணனும்னு மாசம் 100 200ன்னு செலவு இழுத்து வைப்பியா இங்க கொட்டி கிடக்கு பாரு என்றார்.

ரெண்டு நாட்கள் அழுது அடம்பிடித்தேன். ஏங்க காலேஜ்ல எல்லாரும் நம்ம புள்ளைய பாத்து கிண்டலடிக்கிறாங்கன்னு வேற சொல்றா பாவம் வாங்கி கொடுங்களேன் என்று அம்மா எனக்காக பேச ஆரம்பித்தார்.

உன் இஷ்டம் :

உன் இஷ்டம் :

அம்மாவும் பொண்ணும் சேர்ந்துட்டு என்ன நாடகமா போட்றீங்க என்று அப்போதும் திட்டு ஒரு வழியாக ஒரு மாதமாகியும் நான் தொடர்ந்து அடம் பிடித்து நச்சரித்ததாலும் அம்மாவின் வர்புறுத்தலாலும் அப்பா இறங்கி வந்தார்.

ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஆண்டிராய்டு போனை வாங்கிக் கொடுத்தார். அவ்வளவு சந்தோஷம். விதவிதமாக போட்டோ எடுத்து தீர்த்தேன்.நீ கேட்ட மாதிரி போன் வாங்கி கொடுத்தாச்சு இனி ஒழுங்கா படிக்கணும் என்றார் அப்பா.

தலையாட்டினேன்.

பேருந்தில்.... :

பேருந்தில்.... :

இரண்டு வருடம் தொடர்ந்து பேருந்திலேயே கல்லூரிக்குச் சென்று வந்தேன். இரண்டாம் ஆண்டின் முடிவில் தான் அவன் எனக்கு அறிமுகமானான். தினமும் பேருந்தில் அவனைப் பார்ப்பேன். ஆனால் பேசிக் கொண்டதில்லை.

ஒரு நாள் அவர்களின் கல்லூரியில் பேப்பர் பிரஷண்டேஷன் இருப்பதாகவும் பல கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் வருவார்கள் உங்கள் கல்லூரியிலிருந்து மாணவர்களை அழைத்து வரச் சொல்லி ஒரு இன்விடேஷனைக் கொடுத்தான். எண்களை பரிமாறிக் கொண்டோம்.

கல்லூரிக்குச் சென்ற வந்த பிறகு இருவருமே பேச ஆரம்பித்தோம்.

சந்திப்பு :

சந்திப்பு :

அவன் என்னைப் பார்க்க எங்கள் கல்லூரிக்கே அடிக்கடி வர ஆரம்பித்தான். இங்கேயும் சில நண்பர்கள் பழக்கமிருந்ததால் அவர்களின் பெயரைச் சொல்லி கேட்டில் தப்பித்துக் கொண்டான். உன் கூட பேசினா தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு, நீ இருந்தா லைஃப் ஃபுல்லா ரொம்ப சந்தோஷமா இருப்பேன், உனக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று பல டயலாக்குகள்.

இப்போது தான் அவையெல்லாம் டயலாக்குகள் போலத் தெரிகிறது அப்போது, அதுவும் ஒரு ஆணிடமிருந்து அந்த வார்த்தைகளை கேட்கையில் உணர்வுப்பூர்வமாகவே அவனை நம்பத் துவங்கினேன்.

விட்டு போகாத :

விட்டு போகாத :

ஒரு கட்டத்தில் அவனில்லாமல் என்னால் இருக்க முடியாது, ஏன் பேசாமல் கூட இருக்க முடியாது என்ற நிலை உருவானது. வெளியில் அடிக்கடி சந்தித்துக் கொள்ள ஆரம்பித்தோம். திருமணம் குறித்தெல்லாம் பேசவில்லை இப்படியே இந்த நாட்கள் இருக்க வேண்டும் என்று தான் தோன்றியது.

அந்த கமிட்மெண்ட் இருவருக்குள்ளும் ஏற்பட்ட அந்த உணர்வு அது காதலா அல்லது காமமா என்று வகைப்படுத்த முடியவில்லை ஒவ்வொரு முறை நான் கிளம்புறேன் என்று சொல்லும் போதெல்லாம் விட்டுப் போகாத டீ கூடவே இருடீ என்பான்.

கல்யாணம் கட்டிக்கலாம் :

கல்யாணம் கட்டிக்கலாம் :

ஏதோ இரண்டு சிறுவர்கள் சினிமாவிற்கு டிக்கெட் எடுக்க கிளம்பியது போலத்தான் நாங்கள் திருமணத்திற்கு தயாரானோம். ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. அந்த சண்டையின் தீர்வாய் எங்களைச் சுற்றியிருந்த நண்பர்கள் கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும் என்று அறிவுரை அளித்தார்கள்.

வீட்டில் பேசி அனுமதி வாங்க வேண்டும் என்றெல்லாம் இருவருக்கும் தோன்றவில்லை. ஊர்ல ஃபிரண்டு இருக்கான் என்று சொல்லி ஏற்பாடானது. காதலித்தவனை கரம்பிடிக்கப் போகிறேன் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை.

கடிதம் :

கடிதம் :

வழக்கம் போல கடிதம் என்றாலே சில டயலாக்குகள் இடம் பெறுமே.... என்னைத் தேட வேண்டாம். மன்னித்துவிடுங்கள் அப்பா அம்மா. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று சொல்லி எழுதி வைத்து விட்டு கல்லூரி செல்வதாகச் சொல்லி கிளம்பிவிட்டேன்.

இரவாகியும் வராததைக் கண்டு தான் அவர்களுக்கு சந்தேகமே வலுத்திருக்கிறது. போன் செய்தார்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டேன். அந்த நேரத்தில் வாழ்க்கை குறித்தோ அப்பா அம்மா குறித்தோ எதுவும் தோன்றவில்லை. அவனுடன் இருக்கிறேன் அவன் பார்த்துக் கொள்வான் என்றே நினைத்திருந்தேன்.

அம்மா அப்பா :

அம்மா அப்பா :

அப்பாவுக்கு இந்த அதிர்ச்சி தாங்கவில்லை. இருவருக்கும் யாரிடம் பேசி எப்படி என்னை தொடர்பு கொள்வது என்று தெரியாமல் இருவருமே அழுது புலம்பியிருக்கிறார்கள். அதுவரை அம்மா அப்பா பொறுப்பில் வறுமையிலிருந்தாலும் நிறைவான வாழ்க்கை தான் வாழ்ந்தேன்.

உண்ணவும் உறங்கவும் ஒரு நாளும் பிரச்சனை வந்ததில்லை வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த நிமிஷத்திலிருந்து எங்களுக்கு பிரச்சனை துரத்த ஆரம்பித்து, எங்கே தங்குவது? செலவுக்கு என்ன செய்வது? திருமணம் செய்து கொள்ள எதேதோ விபரங்களை கேட்கிறார்கள் நண்பன் ஒருவனை நம்பி வந்தால் அவன் இன்னொருவனைக் கை காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். இரவு பதினோரு மணிக்கு நடுரோட்டில் நின்ற போது தான் புத்திக்கு உறைக்க ஆரம்பித்தது.

 வீடு :

வீடு :

ஒரு வழியாக நண்பர்கள் தங்கியிருக்கும் எங்களுக்கு ஒர் அறையை கொடுத்தார்கள். அந்த வீட்டில் ஆறு பேர் ஆண்கள் தங்கியிருந்தார்கள் அங்கேயே என்னையும் தங்க வைத்தான் ஆசைக் காதலன். உள்ளே போகவே பயமாய் இருந்தது.

வேண்டாம் சொன்னா கேளு வெளிய போய் தங்கலாம் என்றேன். இந்த நேரத்துல எங்க போவ? யாரு ரூம் குடுப்பா நமக்கு காசு வச்சிருக்கியா நீ சும்மா சின்ன புள்ள மாதிரி எல்லாத்துக்கும் அடம் பிடிக்காத என்று அதட்டி அவன் போக்கிலேயே கூட்டிச் சென்றான்.

இரண்டு நாட்கள் :

இரண்டு நாட்கள் :

ஒரு வேலையில் உட்கார்ந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்றான் இருவருமே வேலை தேட ஆரம்பித்தோம். இரண்டு நாட்களில் கொண்டு வந்த பணம் காலியானது. நண்பர்களிடம் கடன் கேட்க ஆரம்பித்தான்.அவர்கள் இடத்தில் உட்கார்ந்து கொண்டு, செலவுக்கு காசு தராமல் அவர்களிடமே கடனும் கேட்பது அவர்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தியது. அவர்கள் முகம் காட்ட ஆரம்பித்தார்கள்.

அவங்க நமக்கு தங்க இடம் கொடுத்திருக்கிறதே பெருசு மறுபடியும் அவங்கட்ட போய் காசு கேக்குற.... என்ன நினைப்பாங்க என்றேன்.

இம்சை :

இம்சை :

ஏன் நீ தர்றது. ஏன் சும்மா நை நைன்னு டார்சர் பண்ற இம்சை மாதிரி கூடவே ஒட்டிக்கிட்டு கொஞ்சம் நேரம் தனியா நிம்மதியா இருக்க விடுறியா எப்ப பாத்தாலும் குத்தம் சொல்லிட்டு குறை பாடிட்டு ச்சை இந்த பொம்பளைங்களே இப்டித்தான்.

பேச்சில் எரிச்சலும் மாற்றங்கள் தெரிந்தது. இருவருக்குமே வாக்குவாதம் ஆனது நீ தான என் பின்னாடி வந்த என்று நானும் இப்டி தான் எவன் கூப்டாலும் போவியா? என்று அவனும் ஆரம்பிக்க சண்டை பெரிதானது.

வீட்டிற்கு போன் :

வீட்டிற்கு போன் :

அன்று அறைக்குள் என்னை விட்டுவிட்டு அவன் முன் அறையில் நண்பர்களுடன் படுத்துக் கொண்டான். இரவு முழுவதும் அவன் சமாதானம் சொல்ல வருவான் வருவான் என்று காத்திருந்து ஏமாந்து போனது தான் மிச்சம் ஆனால அவன் வரவில்லை.

எங்கோ வந்து மாட்டிக் கொண்டோமோ என்ற பயம் அப்போது தான் வந்தது. அவனை நம்பி வந்தோம் அவனே இப்படி நம்மை உதாசீனப்படுத்துகிறானே இனி என்ன செய்வேன் என்று அழுது தீர்த்தேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். இறப்பதற்கு முன்னால் ஒரு முறை அம்மாவிடம் பேச வேண்டும் என்றிருந்தது.

போன் செய்தேன்... அம்மா தான் எடுத்தார். ஹலோ?

அம்மா....

 அடிச்சு கொல்லுப்பா :

அடிச்சு கொல்லுப்பா :

எந்த சலனமும் இல்லை. அம்மாவின் குரலைக் கேட்டதும் அழுகையும் குற்றவுணர்வில் அம்மா தெரியாம தப்பு பண்ணிட்டேன்ம்மா என்று அழுதேன். ஆனால் அம்மாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

எங்கயிருக்க? சென்னை என்றேன் விவரங்களை வாங்கிக் கொண்டார் மறு நாள் அம்மாவும் அப்பாவும் வந்து கூட்டிச் சென்றார்கள். வழியில் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் தான் அழுது கொண்டே வந்தேன். அம்மா பேசும்மா... அப்பா என்னைய அடிப்பா நான் பண்ண தப்புக்கு என்னைய அடிச்சுக் கொல்லுப்பா என்றேன்.ஆனால் இன்று வரை ஒரு வார்த்தை கூட அதைப் பற்றி பேசாமலேயே இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Girl Feels Guilty When She Marry Her Boy Friend

Girl Feels Guilty When She Marry Her Boy Friend
Story first published: Wednesday, April 4, 2018, 15:46 [IST]