For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்பிக்கை துரோகம் என்றால் இப்படியும் இருக்கலாம்! my story #262

திருமணம் செய்வதாய் சொல்லி ஏமாற்றிய நம்பிக்கை கொடுத்து ஏமாற்றிய காதலன் அந்தப் பெண்ணை மட்டுமல்லாது குடும்பத்தையே ஏமாற்றிய உண்மை சம்பவம்.

|

துரோகம் செய்வது பெரும்பாலும் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களாகத்தான் இருக்கிறார்கள். நாம் பாதுகாப்பாக ஜாக்கிறதையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எல்லாம் நம்மை விட்டு விலகி அல்லது நம் முன்னேற்றம் குறித்து அக்கறை செலுத்தாதவர்கள் நமக்கு அறிமுகமில்லாத நபர்களிடம் தான் சற்று விலகி இருக்க நினைப்போம்.

இதே நேரத்தில் நாம் உடன் மிக நெருக்கமாக பழகியவர்கள், நம்மை நம்ப வைத்த மோசம் செய்தவர்களை எல்லாம் எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று தான் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் துரோகத்தை கடந்து வந்திருப்பார்கள் அப்படி ஒருவர் கடந்த ஒரு கசப்பான சம்பவம் எப்படி வாழ்க்கை முழுவதும் அவரை பின் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறது, அதை விட அது நம்மை மட்டுமல்லாமல் நம்முடன் சார்ந்திருக்கும் நபர்களையும் எப்படியெல்லாம் பாதிப்பினை உண்டாக்கியிருக்கிறது என்பதை பகிர்ந்து கொண்ட கடிதத்தின் சாரம்சமாக இந்த கதை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண் குழந்தை :

பெண் குழந்தை :

எங்கள் வீட்டில் நாங்கள் மூவருமே பெண் குழந்தைகள் தான். அப்பாவிற்கு அரசாங்க உத்தியோகம் இருந்ததால் மாதம் ஆனால் நிலையான வருமானம் வந்துவிடும். படிப்பு, உணவு போன்ற அடிப்படை எல்லாம் மிக சுவாரஸ்யமாக கிடைத்திடும்.

ஒரு அக்கா தங்கை என நடுவில் பிறந்த அதிர்ஷ்டக்காரி நான். பள்ளி முடிக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய அக்காவிற்கு திருமணம் ஆனது. அப்பா தேடித்தேடி சலித்து கண்டுபிடித்து டவுன் மாப்பிள்ளை.

ஒப்பந்தம் :

ஒப்பந்தம் :

அக்காவை திருமணம் செய்து கொள்ளும் போதே இரண்டாவது பெண்ணை தம்பிக்கு மணமுடிக்க சம்மதமா என்று கேட்டார்கள். அந்த நேரத்தில் என்ன சொல்லிவிட முடியும். பேசிக்கலாம் என்றார் அப்பா ஆனால் முழு மனசோட சம்மதம் சொல்லுங்க வேணும்னா இப்பவே பூ வச்சிடலாம் என்றெல்லாம் பேசினார்கள்.

இன்னும் பள்ளிக்கூடம் கூட முடிக்கல படிப்பு முடிஞ்சதும் பாதுக்கலாம் என்றார் சரியென்று ஒப்புக் கொண்டார்கள்.

ஆசை :

ஆசை :

அக்கா வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அக்காவும் அப்பா அவள இவரு தம்பிக்கே பேசி முடிக்கலாம்பா எந்த பிரச்சனையும் இல்ல என்று சொல்ல அப்பாவும் சரிம்மா என்றார்.

கல்லூரி முதலாம் ஆண்டு செல்வதற்கு முன்பே எனக்கான வாழ்க்கைத் துணை முடிவெடுக்கப்பட்டது. வீட்டினர் எல்லாரும் சொல்லச் சொல்ல என் மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டேன். வீட்டு விசேசங்களின் போது சந்தித்துக் கொள்வது, பேசிக் கொள்வது உண்டு.

சுயரூபம் :

சுயரூபம் :

அக்காவிற்கு திருமணமாகி இரண்டாண்டுகள் கழித்து தான், அவர் தம்பி தம்பி என்று சொல்வது சொந்தத் தம்பியை அல்ல, தந்தையின் இரண்டாம் மனைவியின் பிள்ளையை என்பது தெரிந்தது. அதுவும் அந்த சித்தி மாற்று சாதியை சேர்ந்தவர் என்பதால் இவர்கள் யாருமே வீட்டிற்குள் கூட அனுமதிக்காமல் இருக்கிறார்கள்.

பல ஆண்டுகள் கழித்து அவர்களின் மகன், அதாவது எனக்கு பேசியவன் வளர்ந்த பிறகு தான் பழைய பகையை மறந்து சேர்த்திருக்கிறார்கள். இதைக் கேட்டதுமே அப்பாவிற்கு சற்று தயக்கம். என்னம்மா இப்போ புதுசா இப்டி ஒரு கதைய சொல்றாங்க என்று தயக்கம் காட்டினார்.

நீ என்னைய காதலிக்கிறயா :

நீ என்னைய காதலிக்கிறயா :

இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் போது நாங்கள் இருவரும் மிக ஆழமாக காதலில் விழுந்திருந்தோம். இப்போது அப்பா வேண்டாம் என்று சொன்னால் கூட இல்லை நான் அவனுடன் தான் வாழ்வேன் என்று உறுதியாக சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தேன்.

ஒரு முறை அவர் என்னிடம் பேசுகையில், நான் உனக்கு வேணுமா? என்று கேட்டார் கண்டிப்பா நீ எல்லாம் நான் உசிரோட இருக்க மாட்டேன் என்றேன். அப்போ ஓர் உதவி செய் என்று கேட்டார். சொல்லுங்க என்னால முடிஞ்சா நான் செய்றேன் என்றேன். இல்ல உன்னால கண்டிப்பா முடியும் நீ செய்யணும் என்றார்.

பில்டிங் காண்ட்ராக்ட் :

பில்டிங் காண்ட்ராக்ட் :

டவுன்ல நான் எடுத்திருக்கிற பில்டிங் காண்ட்ராக்ட் முடியப் போகுது, அடுத்த காண்ட்ராக்ட் வேணும்னா ஒரு பத்துலட்ச ரூபா வரைக்கும் விடணும். வெளிய நான் கொஞ்சம் ஏற்பாடு பண்ணியிருக்கிறேன் மீதி... என்று இழுத்தார்.

எவ்ளோ வேணும் என்னால எப்டி அவ்ளோ பணத்த கொடுக்க முடியும். அப்பாகிட்ட சொல்லி வேணா ஒரு ஐம்பதாயிரம் ரூபா வாங்கித்தரேன் என்றேன். இல்ல எனக்கு நாலு லட்சம் வரைக்கும் வேணும் என்றார். ஐயோ அவ்ளோ பணமா? என்கிட்ட ஏது என்று அதிர்ந்தேன். ஏய் உன்கிட்ட இருக்காதுன்னு தெரியும். வேற ஏற்பாடு எதாவது பண்ணலாம் என்று சிறிது நேரம் யோசித்தவன் வீட்டு பத்திரத்த கொண்டு வந்து தா நான் அத அடமானம் வச்சு பணத்த வாங்கிட்டு ரெண்டு மாசத்துல பத்திரத்த திருப்பி கொடுத்திடறேன் என்றான்.

வீட்டு பத்திரமா? ஐயோ என்னால எல்லாம் முடியாது. அப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோ தான் என்னைய கொன்றுவாரு என்றேன்.... ஏய் நீ என்ன யாருக்கோ தர்றீயா? உன் புருஷனுக்கு தான தர்ற... அதோட எப்பிடியும் ரெண்டு மாசத்துல நான் திரும்பி கொடுக்க போறேன்... அவசரம்னு தான கேக்குறேன். சரி, அது ஏன் தெரியாம கொடுத்துட்டு அப்பாட்ட சொல்லியே வாங்கி கொடுக்கிறேனே என்றேன் ஆனால் அவன் ஒப்புக்கொள்ளவில்லை. அவன் சொன்னது போல எடுத்துக் கொடுத்தேன். ஏதோ ரிஜஸ்டர் ஆபிஸிலிருந்து அழைப்பதாய் அப்பாவின் நண்பர் சொல்ல அங்கே சென்ற அப்பாவிற்கு விஷயம் தெரிந்து விட்டது.

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

வீட்டிற்கு வந்த அப்பா எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தார். நம்ம வேற வீட்டுக்கு போறோம் என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

கதவைத் தட்டி பின்னாலேயே சென்ற அம்மா கத்தியதில் ஒரு கணம் அதிர்ந்தே விட்டேன். அப்பா தரையில் மயங்கிக் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதன் பிறகு அப்பா பழைய சுறுசுறுப்பிற்கு மீளவேயில்லை. விஷயம் தெரிந்து அம்மா தான் என்னை திட்டித்தீர்த்தார். அப்பா அது கூட இல்லை.

உறவுகள் :

உறவுகள் :

எனக்கு திருமணம் செய்ய பேச்சு எடுத்தார்கள். அக்காவின் மாமியார் வீட்டிற்கு சென்று அப்பா பேசினார், வீடு 30 லட்சம் போகும் அத கல்யாணத்துக்கு முன்னாடியே கொடுத்துட்டதால வரதட்சனை கொடுக்க மாட்டோம் கல்யாண செலவு மட்டும் பாத்துக்குறேன் என்றார் அப்பா.

அது எப்டிங்க ஒத்துக்க முடியும். சபைல ஒரு மாரியாதை வேண்டாமா? பெரிய பொண்ணுக்கு செஞ்ச மாதிரி வரதட்சனை கண்டிப்பா செய்யணும் என்றார்கள்.... பெரிய பொண்ண விட அதிகமாவே தான மாப்பிள்ள கிட்ட கொடுத்திருக்கேன். அடுத்து இன்னொரு புள்ளையும் இருக்கு அதையும் நான் பாக்கணும்ல என்றார் அப்பா. யோசிச்சு சொல்றோம் என்று அனுப்பி விட்டார்கள்.

அக்கா வாழ்க்கை :

அக்கா வாழ்க்கை :

முன்னாடி வசதி இருந்துச்சு, இப்போ ஓட்டு வீட்டுல இருக்காங்க, சொந்த வீடு கூட இல்ல என்று வரிசையாக குறைகளை அடுக்கினார்கள். அக்காவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தால் அவன் கேட்டா எடுத்து கொடுத்திருவாங்களா? அவன் கூப்டான்னு உன் தங்கச்சி பின்னாடியே போயிருப்பாளா?

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை இந்தப் பிரச்சனை இழுத்தடிக்கப்பட்டது. என்ன இது புது சோதனை என்னால் தானே எல்லா பிரச்சனையும் என்று எனக்கே என் மீது கோபமாய் இருந்தது.

உடல் நலம் :

உடல் நலம் :

கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன், மனதளவிலும் உடல் அளவிலும் சோர்ந்து விட்டேன். அப்பாவின் ரிட்டையர்மெண்ட் தொகை மட்டுமே எங்களது வருமானமாக இருந்தது. அதில் வீட்டு வாடகை, அப்பாவின் மருத்துவம், தங்கை பள்ளி செலவு பணம் வந்த வேகத்திலேயே கரையத் துவங்கியிருந்தது.

ஒண்ணுமில்லாத வீட்டுல எப்டி நாங்க பொண்ணு எடுக்குறது என்று கேட்டார்கள். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன், மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

திருமணம் :

திருமணம் :

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நான் மீண்டு வந்தேன். மருத்துவமனையில் இருந்த போது விசாரிக்க வந்த போலீஸிடம் வயித்த வலின்னு சொல்லு நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான் அவன், அவனின் குடும்பத்தாரும் அதையே சொல்ல அப்பாவும் சரிம்மா வீணா நமக்கு பிரச்சனை வேண்டாம் என்று சொன்னார்.

எல்லாம் சுமூகமாய் முடிந்து திருமண நாளும் குறிக்கப்பட்டது. இருக்கிற சுமை போதாதென்று அப்பா தன் சக்திக்கு மீறி கடன் வாங்கி திருமண ஏற்பாடுகள் செய்தார். திருமண நாளின் போது மண்டபத்தில் நாங்கள் எல்லாரும் தயாராய் காத்திருக்க, குலசாமி கோவில்ல பூஜை பண்ணிட்டு வரோம் என்றவர்கள் திரும்ப வரவே இல்லை.

ஊரைகூட்டி திருமணம் செய்வார்கள். ஆனால் நாங்கள் ஊரைக் கூட்டி அவமானப்பட்டோம். அடுத்த இரண்டு நாட்களில் அக்காவிடமிருந்து விவாகரத்து கேட்டு நோட்டிஸ் அனுப்பியிருந்தார் மாமா. இப்போது என்னால் என் குடும்பமே நடைபிணமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: relationship my story love life women
English summary

Girl Cheated by her would be

Girl Cheated by her would be
Story first published: Thursday, June 7, 2018, 14:00 [IST]
Desktop Bottom Promotion