For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உன்னை நம்பியதைத் தவிர என்ன பாவம் செய்தேன்! My Story #206

By Staff
|

இதைச் சொன்னாலும் எத்தனை பேருக்கு புரிகிறது என்றெல்லாம் தெரியாது, ஆளமான அதே நேரத்தில் மிகவும் எமோஷனலான காதல் கதை. சமீபத்தில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு மகளின் பள்ளியில் சிறப்பு விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அங்கே தாய்மார்கள் மட்டும் வரவேண்டும் என்ற கட்டாயத்தால் நான் சென்றேன், கலைநிகழ்ச்சிகள், மாணவர்களை எப்படி கையாள வேண்டும், அவர்களை எப்படி வழிநடத்துவது என சில சிறப்பு விருந்தினர்களின் பேச்சு, மனநல ஆலோசகரின் பேச்சு என ரெகுலரான ஓர் நிகழ்ச்சியாக சென்றது.

இறுதியாக, வந்திருக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் சொன்னார்கள். சிலர் வந்து பேசிச் செல்ல முன் வரிசையில் உட்கார்ந்திருந்த என்னை வலுக்கட்டாயமாக மேடையில் ஏற்றினார்கள்.பேச்சே வரவில்லை, கை கால் எல்லாம் நடுங்கியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீ ஏன் இப்டி இருக்க? :

நீ ஏன் இப்டி இருக்க? :

அனைவருக்கும் மகளிர் தான வாழ்த்துக்கள் சொல்லி பேச ஆரம்பித்தேன், பெரிதாக அட்வைஸ் எல்லாம் இந்த நாளில் பேச விரும்பவில்லை, என் குழந்தைகளுக்கு சொல்ல நினைத்தது என் குழந்தைகளிடம் பகிர நினைத்தது உங்களுக்கும் உங்களின் குழந்தைகளுக்கும் நிச்சயம் உங்களது குழந்தை மற்றும் உங்களுக்கும் அவசியம் தேவைப்படும்.

நான் எம்.பி.ஏ பட்டதாரி. பார்த்தால் அப்படித் தெரிகிறதா? கேட்டவுடன் கூட்டத்தில் சலசலப்பு. நீ ஏன்ம்மா இப்டி இருக்க, உன்னைய பாத்தாலே என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்க தயவு செஞ்சு ஸ்கூலுக்கு வராதம்மான்னு என் பசங்க சொல்லுவங்க பொண்ணும் பையனும் ரெண்டு பேருமே இங்க தான் படிக்கிறாங்க.

நான் ஏன் இப்டி இருக்கேன்னு புரிஞ்சுக்கிற வயசு இப்போ அவங்களுக்கு வந்திருச்சுன்னு நினைக்கிறேன் அதனால இங்க இந்த மேடையில என்னுடைய கடந்த கால வாழ்க்கைய பத்தி......

இடது பக்கம் உட்கார்ந்திருந்த ஆசிரியர்கள் குழுவினரிடம் சொல்லலாமா என்று அனுமதி கேட்டேன். கூட்டத்திலும் சொல்லுங்க.... சொல்லுங்க என்று சத்தம் கிளம்ப ஆசிரியர்கள் தொடர்ந்து பேசச் சொல்லி சைகை செய்தார்கள்.

 கல்லூரி :

கல்லூரி :

எல்லா திரைப்படங்களிலும் வருவது போல எனக்கும் என் கணவருக்கும் காதல். நாங்கள் நான்கு பேர் ஒரே ஏரியா, ஒரே பள்ளி, ஒரே கல்லூரி. நாங்கள் அப்போது கோயம்புத்தூரில் வசித்து வந்தோம். நகரில் மிகவும் புகழ்ப்பெற்ற கல்லூரி அது.

கல்லூரிக்கு முதல் நாள் சென்று உட்கார்ந்த போதே நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து தான் சென்றோம்.

காதல் :

காதல் :

ஏய்..... நம்ம எல்லாம் பெரிய பசங்க ஆகிட்டோம், லவ் யூ லவ் யூ நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணலாம் சரியா என்று சொன்னான் வினோத்.

நம்மளா? லவ்வா...... ஐந்து வயதாகும் போதிருந்தே எங்கள் இருவருக்கும் பழக்கம், எங்களை விட எங்களின் பெற்றோரும் நெருங்கிய நண்பர்கள். விளையாட்டாய் ஏராளமான விஷயங்களை பேசியிருக்கிறோம், கிண்டலடித்திருக்கிறோம், வம்பிழுத்திருக்கிறோம். அப்படி அந்த லிஸ்டில் இதுவும் என்று நினைத்து ம்ம்.... ஒகே லவ் பண்லாம் என்று சொல்லி விட்டேன்.

யாரிடமும் சொல்ல வேண்டாம் :

யாரிடமும் சொல்ல வேண்டாம் :

நாம் பழகிப் பார்க்கலாம், யாரிடமும் சொல்ல வேண்டும் நம் கேங்கில் இருக்கக்கூடிய மற்ற இருவருக்கும் தெரிய வேண்டாம் என்றான், அந்த நேரத்தில் தான் நம் புத்தி வேலை செய்யாது மழுங்கடித்து கிடக்குமே அதுவும் சரி நம்ம வினோத் தான சொல்றான்... ஒகே ஒகே சொல்லல என்று சொல்லியாகிவிட்டது.

பொண்டாட்டி :

பொண்டாட்டி :

இரண்டு வருடங்கள் யாருக்கும் தெரியாமல் எங்கள் காதலை ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தோம், இப்போது நட்பையும் தாண்டி ஏதோ ஒரு பந்தம் எங்களுக்குள் வளர்ந்து விட்டதை நான் உணர்ந்திருந்தேன்.

நிஜமாலுமே என்னைய கல்யாணம் பண்ணுவல்ல.... என்று கேட்க வினோத் என் தலையில் அடித்து சத்தியம் செய்வான், நீ தான் என் பொண்டாட்டி என்று திரும்ப திரும்ப சொல்வான்.

எல்லை மீறி :

எல்லை மீறி :

இரண்டாம் ஆண்டு ஆரம்பித்திருந்த நேரம், எங்களிடம் அதிக நெருக்க உண்டானது, என் மீது எல்லை மீறி நடந்து கொள்ள ஆரம்பித்தான். ஒரு கட்டத்திற்கு மேல் அவனை விலக்கவும் முடியவில்லை.

அந்தளவிற்கு இடம் கொடுத்து வைத்திருந்தேன், விருப்பமில்லை என்றாலும் கட்டயாப்படுத்தி என்னை தன் ஆசைக்கு இணங்க வைத்தான்.

ப்ரேக் அப் :

ப்ரேக் அப் :

இதிலேயே எங்களுக்கு அடிக்கடி சண்டை வரும். லவ் பண்ற பொண்ணு நீ என்னைய லவ் பண்றியா இல்லையா? எனக்காக இது கூட பண்ண மாட்டியா.... என்னைய சந்தேகப்படுறியா... என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவான்.

ஒரு கட்டத்தில் என்னாலும் அவன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமை உருவாகியிருந்தது. சில நேரங்களில் ப்ளாக் மெயில் கூட செய்ய ஆரம்பித்தான்.

தீபாவளி :

தீபாவளி :

அன்று தீபாவளி, எல்லாரும் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். வினோத்தும் வந்திருந்தான், விளையாட்டாக அப்பா எதையோ கேட்க.... ஏன் அங்கிள் இதெல்லாம் கேக்குறீங்க பொண்ணு கொடுக்க போறீங்களா என்று கேட்டுவிட்டான்.

ஒரு நிமிடம் அப்பா தடுமாறினாலும் அம்மா வந்து நிலைமையை சமாளித்தார். அதன் பிறகு அன்றைய தினம் இரவு அம்மா என்னிடம் வினோத் எப்டி? இவ்ளோ நாள் இல்லா இன்னக்கி எல்லார் முன்னாடியும் ஏன் அப்டி கேட்டான்.... உங்களுக்குள்ள எதாவது... என்று இழுத்தார்.

ஐயோ அம்மா அதெல்லாம் ஒண்ணுமில்ல அவன் சும்மா விளையாட்டா கேட்டிருப்பான் அதெல்லாம் நீங்க ஏன் சீரியசா எடுத்துட்டு என்றேன்.

சேர்ந்து சுற்ற :

சேர்ந்து சுற்ற :

வீட்டில் லேசாக போட்டுவிட்டோம் பெரிதாக எதிர்ப்பும் இல்லை என்கிற தைரியம் நாங்கள் இருவரும் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தோம். எப்போதும் கல்லூரிக்கு சேர்ந்தே வருவது போவது என்றிருந்தோம்.

கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் எங்கள் வகுப்பறைக்கே பரவியிருந்தது.

 ஹோட்டல் :

ஹோட்டல் :

ஒரு முறை வீட்டில் தேர்விறுக்கிறது என்று சொல்லிவிட்டு கிளம்பிச்சென்றவள், வினோத்திடம் உட்கார்ந்து ஹோட்டலில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தேன். அதை வினோத்தின் அப்பா பார்த்திருக்கிறார். நான் கவனிக்கவில்லை எங்களை பார்த்துவிட்டு தூரத்திலிருந்து போன் செய்ய எடுத்து அட்டெண்ட் செய்தவன் கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருப்பதாக சொன்னான்.

எந்த கிரவுண்ட் சொல்லு நான் வரேன் என்று சொல்ல..... என்ன சொல்வதென்று தெரியாமல் கட் செய்துவிட்டான்.

மாலையில்... :

மாலையில்... :

வினோத் அப்பா எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை, இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்கு அம்மாவையும் அப்பாவையும் அழைத்திருந்தார். எங்களுக்குத் தான் அவர் எங்களை பார்த்த விஷயம் தெரியாதே.... படிக்க வேண்டும் என்று சொல்லி நீ உங்கள் வீட்டிலேயே இரு நான் வந்து விடுகிறேன் என்றான் வினோத்.

அப்படியே நடந்தது நான் மட்டும் வீட்டில் இருக்க அம்மாவும் அப்பாவும் வினோத் வீட்டிற்கு கிளம்பினார்கள். சென்றதும் மெசேஜ் செய்ய வினோத் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டான்.

இருட்டில் :

இருட்டில் :

இரவு ஒன்பது மணியிருக்கும். திடீரென்று கதவைத் திறந்து அம்மா உள்ளே நுழைந்து விட்டார். அறையில் இருந்த எங்களை கவனித்தாரா இல்லையா என்று தெரியவில்லை ஆளுக்கு ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து உட்கார்ந்தோம்.

எங்க போன திங்க கிழம? வந்ததும் வராததுமாய் கேட்க புரியாமல் விழித்தோம்.

வெளிய போ :

வெளிய போ :

இங்க என்ன பண்ணிட்டு இருக்க நீ.... காலகாலத்துல வீடு போய் சேரு என்று சொல்ல எழுந்து வீட்டை விட்டு ஓடிவிட்டான் வினோத், வீட்டில் பயங்கர சண்டை எங்களை பார்த்ததை அவர் அப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.

என்னோட அப்பா அப்டியெல்லாம் இருக்காது என்று சொல்ல, வினோத்தின் அப்பா நாங்க உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த புகைப்படத்தை காட்டியிருக்கிறார்.

வினோத் வீட்டிலும் :

வினோத் வீட்டிலும் :

வீனோத் வீட்டிலும் பயங்கர பிரச்சனை, இவன் அறையை பூட்டிக் கொண்டு உள்ளே உட்கார்ந்திருக்க, வெளியில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயங்கர சண்டை மானமே போய்டுச்சு... புள்ளைய வளர்த்திருக்குற லட்சணத்த பாரு, இனிமே செலவுக்கு காசுன்னு கேளு கால உடைக்கிறேன் என்று கத்தி ரூமுக்குள்ள போய் என்னடா பண்ற வெளிய வாடா சாவடிக்காம விட மாட்டேன் என்று கத்தியிருக்கிறார்.

பயந்து போய் அங்க என்னாச்சு, திடீர் ஏன் ரெண்டு பேர் வீட்லயும் என்று எனக்கு மெசேஜ் செய்தான் நான் நடந்த விவரத்தை அனுப்பி வைத்தேன்.

மிரட்டல் :

மிரட்டல் :

உனக்கு அறிவிருக்கா சரி சின்ன பசங்க தெரிஞ்ச பையனாச்சேன்னு விட்டா ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு திரியுறீங்க.... கருமத்த என்ன மெசேஜ் அது படிக்க முடியல , என் மானத்த வாங்குறதுக்குனே வருவீங்களா?

வெளிய தெரிஞ்சா என்னாகுறது, அவங்கப்பன் பிஸ்னஸ்ல பார்டனர் அவ்ளோதான் இதுவரைக்கும் நம்ம வீட்டுக்கு வந்திருப்பானா? இல்ல நம்ம தான் அங்க போயிருப்போமா.... போயும் போயும் அவன் பையன காதலிக்கிறேன்னு வந்து நிக்கிறா பாரு

 கல்லூரியில் :

கல்லூரியில் :

இரண்டு நாட்கள் கழித்து கல்லூரிக்கு வந்தேன், நாங்கள் பேசிக்கொள்கிறோமா இல்லையா என்பதை கண்காணிக்க எங்கள் குழுவில் இருந்த ஒருத்தியை அப்பா ஏற்பாடு செய்திருந்தார். அவளுக்கு எங்கள் காதல் விவகாரங்கள் எல்லாம் ஏற்கனவே தெரியும் என்பதால் பயப்பட அவசியம் இருக்கவில்லை.

வீட்டில் பயங்கர எதிர்ப்பு என்ன செய்யலாம்? இன்னும் படிப்பை முடிக்கவில்லை.... இப்போது திருமணம் செய்து கொண்டாலும் வேலை இல்லாமல் எப்படி வாழ்வது, ஒரு வழியாய் கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம், அதுவரைக்கும் அமைதியாக இருக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

கல்லூரிக்கு செல்ல மாட்டேன் :

கல்லூரிக்கு செல்ல மாட்டேன் :

வினோத் வீட்டில் பயங்கர பிரச்சனை ஆகியிருக்கிறது, ஒரு கட்டத்தில் நான் அவளைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விடாப்படியாக சொல்ல, மீண்டும் பஞ்சாயத்து ஆரம்பித்தது.

இனி இவர்கள் சந்தித்து கொள்ளவே கூடாது என்று முடிவெடுத்தார்கள். கல்லூரியை விட்டு நிறுத்தினார்கள், அவனை துபாயில் உள்ள அவனது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அவன் அப்பா, அப்பா என்னிடம் வந்தார், உன் வாழ்க்கைய கெடுத்துக்காத உன் இஷ்டத்துக்க எதாவது பண்ணனும்னு நினச்ச உன்னை கொன்னு போடக்கூட தயங்கமாட்டேன் என்றார்.

வீட்டில் முடக்கம் :

வீட்டில் முடக்கம் :

வீட்டின் அறையில் அடைக்கப்பட்டேன், மூன்று வேலைக்கு உணவு கிடைத்தது கிட்டத்தட்ட பைத்தியம் போலத்தான். வினோத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை, என் நண்பர்களையும் அப்பா பார்க்கவோ என்னிடம் பேசவோ அனுமதிக்கவில்லை.

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியது, அதன் பிறகு மெல்ல இனி இந்த வாழ்க்கை நமக்கு வேண்டாம், வினோத் இனி கிடைக்கமாட்டான் என்று வெளியே வர ஆரம்பித்தேன். தூக்கமின்றி மிகுந்த மன அழுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நான் மெல்ல என்னிலிருந்து விடுபட ஆரம்பித்தேன்.

அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டார்கள்.... கல்யாணம் பண்ணி வச்சிடலாங்க

எண்ணங்கள் :

எண்ணங்கள் :

காலங்கள் ஓடினாலும் என் மனம் முழுவதும் அதிலிருந்து விடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும், உடன் பழகிய நண்பனை காதலித்தேன் இதில் என்ன தவறு இருக்க முடியும் இருவரும் குழந்தை பருவத்திலிருந்தே பழக்கம்.

நண்பனாக பழகிக் கொள் ஆனால் திருமணம் மட்டும் வேண்டாம் என்று சொன்னால் என்ன அர்த்தம்? திருமண பந்தத்திற்கு மட்டும் ஏன் அவ்வளவு நெருக்கடி? இந்நேரம் வினோத் என்ன செய்து கொண்டிருப்பான், என்னை மறந்திருப்பானா? காதல் என்றாலே யாருக்குமே பிடிக்காதா இனி அவனை தேடி செல்லலாமா வேண்டாமா.... காதலினால் என் வாழ்க்கை கெட்டுவிடுமா என்று ஏகப்பட்ட கேள்விகள்.

கட்டாயம் :

கட்டாயம் :

வீட்டில் எனக்கு தெரியாமல் திருமண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்கள்.... அதில் இஷ்டமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறினேன். எனக்கு பிடித்த வாழ்க்கையும் கிடைக்காமல் அவர்கள் காட்டிய வாழ்க்கையையும் வாழ முடியாமல் பெரும் அவஸ்தையான தினங்கள் அவை.

திருச்சியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் தங்கி மன நலனுக்கு சிகிச்சை பெற்றுவந்தேன், அங்கிருந்தே எனக்கு நர்சிங் பயிற்சி வழங்கினார்கள். அப்போது என்னிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வந்தவனுக்கு அப்படியே வினோத்தின் சாயல்.

அவனின் கதை :

அவனின் கதை :

அவனுக்கு பெரிதாக எந்த ஃபிளாஷ்பேக்கும் இல்லை அத்தை மகளை காதலித்திருக்கிறான், இவனுக்கு சரியான படிப்பு இல்லை..... எங்கோ கட்டிட வேலைக்கு சென்று கொண்டு இருந்திருக்கிறான், வீட்டில் பயங்கர எதிர்ப்பு.... வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார்கள்.

சிறுவயதிலேயே அம்மா அப்பாவை இழந்து விட்டு தாத்தா பாட்டி அரவணைப்பில் வளர்ந்தவன், படிப்பு பணம் அந்தஸ்த்து என்று ஏதுமில்லாதவன் அவனைப் போயா திருமணம் செய்து கொள்வாய் என்று சொல்லி இவர்கள் வசித்த வீட்டிற்கு தேடிப்போய் இவனை அடித்துப் போட்டுவிட்டு பெண்ணை அழைத்துச் சென்று விட்டார்கள். சில காலங்கள் அவளைத் தேடி அலைந்திருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து தான், அவள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிந்திருக்கிறது. அதன் பிறகு ஐயா முழு நேரமும் குடி தான்.

கொல்லாம விடமாட்டேன் :

கொல்லாம விடமாட்டேன் :

ஒரு வித சைக்கோவோக மாறி ஊரில் பார்ப்பவர்களை எல்லாம் உன்னைய கொல்லாம விடமாட்டேன்.... நீ தான் எங்கள பிரிச்ச என்று சொல்லி மிரட்டி வந்திருக்கிறான். சிலரை கல்லால் அடித்தும் காயப்படுத்தியிருக்கிறான்.

நிலைமை கை மீறி போகவே மனநல பாதிப்பிற்கு எங்கள் இல்லத்தில் வந்து சேர்த்தார்கள். அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தான், சங்கிலியால் கட்டிப்போட்டு வைத்தியம் செய்தோம். அவர்களை பராமரிக்கும் நர்ஸ் ஒரு நாள் லீவ் எடுக்க நான் அந்த பணிக்கு சென்றேன், என்னிடம் மட்டும் அவனுக்கு கொஞ்சம் கரிசனம் எல்லாரிடமும் முரண்டு பிடிக்கும் அவன் என்னிடம் மட்டும் பெட்டிப் பாம்பாய் அடங்கிடுவான்.

இந்தா சாப்டு..... மாத்திரைய சாப்டாதான் சீக்கிரம் சரியாகும், சிகரெட் பிடிக்காத, நான் சொன்னா கேப்பியா மாட்டியா என்று நான் சொல்லும் சின்ன சின்ன அட்வைஸை கூட மிகவும் சிரம் தாழ்ந்து ஏற்றுக் கொண்டு கடைபிடித்தான்.

 காதல் :

காதல் :

ஒரு வருடத்தில் முழுவதுமாக தேறி வந்துவிட்டான். குடியை முழுவதுமாக மறந்திருந்தான், என் வாழ்க்கையில இவ்ளோ வருஷம் எப்டி போச்சுன்னே தெரியல.... இனி வாழப்போற வாழ்க்கையாவது அர்த்தமுல்லதா வாழணும்னு நினைக்கிறேன், நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?

காதல்ன்ற போர்வையில நிறைய ஏமாற்றங்களையும் துரோகங்களையும் வலியையும் சந்திச்சுட்டு இருக்குறவங்க இங்க நிறைய ஒரு கட்டத்துல வாழ்க்கையில நீங்களும் நானும் தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கோம். நம்மளோட காதல இந்த சமூகம் பிரிச்சிருக்க........ என் மனைவிய இழந்துட்டேன் இனி இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது அதுக்கு நம்ம சேர்ந்து எதாவது பண்ணலாமா என்று கேட்டான்.

திருமணம் :

திருமணம் :

இவ்வளவு அழகான புரிதலா? கேட்டதும் வியப்பாய் இருந்தது, ஆம் அவன் சொல்வதும் சரி தான் எங்கள் காதலை இந்த சமூகம் தான் பிரித்தது ஈவு இரக்கமின்றி எங்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.

திருமணத்திற்கு சம்மதித்தேன், வழக்கம் போல் என் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த இல்லத்தில் இருப்பவர்கள் எங்களுக்கு எளிமையான திருமணத்தை நடத்தி வைத்தார்கள்

இழந்தேன் :

இழந்தேன் :

தொடர்ந்து நாங்கள் இயங்க ஆரம்பித்தோம் பல காதலர்களை ஒன்றாய் சேர்த்து வைத்தோம், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார்கள் சிலர் எங்களை தாக்கவும் செய்தார்கள்.

ஒவ்வொரு அவமானங்களையும், அடியையும் வாங்கும் போதும் இன்னும் இன்னும் தீவிரமாக இயங்க வேண்டும் என்ற வேகம் தான் எங்களுக்குள் அதிகரிக்கும். பத்து வருடங்கள் உருண்டோடிவிட்டது , அவருக்கு உடல் நலக்கோளாறுகள் தலை தூக்கியது கடன் வாங்கி வைத்தியம் பார்த்தேன்.... சரியாக வருமானம் வேறு இல்லை என்னுடைய வருமானத்தை மட்டுமே நம்பி காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம் நடுவில் இரண்டு குழந்தைகள் கணவனின் வைத்திய செலவுகள், போதாகுறைக்கு சுற்றிலும் எங்களை மிரட்டும் சமூகம். மீண்டும் மனச்சிதைவுக்கு ஆளானார் குடிக்க ஆரம்பித்தார். குடிக்க ஆரம்பித்து ஆறே மாதங்கள் தான் மாரடைப்பு ஏற்பட்டு எங்களை எல்லாம் பிரிந்து சென்றுவிட்டார்.

அன்புடன் நேசித்ததை தவிர என்ன தவறு செய்தோம் நாங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Family Plays A Drama To Separate Lovers

Family Plays A Drama To Separate Lovers
Story first published: Friday, March 16, 2018, 11:12 [IST]