திருமணத்திற்கு முன்பே என் அக்காளின் மகளுக்கு அப்பாவான கணவன்! my story# 137

Posted By: Staff
Subscribe to Boldsky

இருபத்தி ஏழு வயதில் பெண் பார்க்க ஆரம்பித்து இரண்டு வருட தீவிர தேடலுக்கு பின்னர் எனக்கு ரேணு கிடைத்தாள். ரேணுவை முதன் முதலாக பார்க்கச் சென்றதிலிருந்து அவளுடன் நான் பழகிய நாட்கள் ஒவ்வொன்றும் சொர்கம் என்றே சொல்லலாம்.

திருமணம் நிச்சயமாகிவிட்டது அவள் எனக்குத் தான் என்ற நிலை வந்தாலும், ஆரம்பத்தில் ஒரு தயக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவள் எனக்கானவள் என்பதில் என்ற மாற்றுக்கருத்தும் இல்லை தான் ஆனாலும் புதிதாக ஒரு பெண், இனி என் வாழ்க்கை முழுவதும் வரப்போகிறவள் இனி அவளுடன் தான் என் வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் அவளுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது, அவள் என்னை அப்படியே ஏற்றுக்கொள்வாளா?

before marriage guy has his baby daughter

அவளுக்காக நான் எதாவது மாற்ற வேண்டுமா என்று எதுவும் தெரியாது எல்லாம் குழப்பமாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிலில் சந்திப்பு :

கோவிலில் சந்திப்பு :

நண்பர்களிடம் அன்று காலையிலிருந்தே புலம்பிக் கொண்டிருந்தேன். உனக்கென்னடா அண்ணனுக இருக்காங்க பாத்து பாத்து செஞ்சிருவாங்க இங்க பாரு எங்க வீட்ல நான் தான் மூத்தவன் எல்லா பொறுப்பும் என் மேல தான் என்று சலித்துக் கொண்டான் ஒருவன்.

முதலில் கோவிலில் பார்க்கலாம், பிடித்திருந்தால் வீட்டிற்கு வாருங்கள் என்று சொல்லியிருந்தார்கள் பெண் வீட்டார் இதுவும் நல்ல ஐடியா தான் என்று எங்கள் இரு குடும்பம் மட்டும் கோவிலுக்கு சென்றோம். அவர்கள் முதலிலேயே வந்து விட்டார்கள் போல நாங்கள் சற்று தாமதமாக சென்றிருந்தோம்.

அம்மா அப்பா அண்ணன்கள் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு சற்று தள்ளி எட்ட நின்று அவர்களை பார்த்தார்கள். நான் கோவிலுக்குள் வராமல் வெளியேவே காத்திருந்தேன். உள்ளே செல்லவே எனக்கு வெட்கமாக இருந்தது.

வெட்கச் சிரிப்பு :

வெட்கச் சிரிப்பு :

இரு குடும்பமும் பேசச் செய்தார்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து அம்மாவிடமிருந்து போன்.... வாசல்ல நின்னு என்னடா பண்ற ? பொண்ணு உனக்கு தான் பாக்க வந்திருக்கு நீ வாசல்ல யார பாக்குற? உள்ள வா என்றார். போன் பேசிக் கொண்டே கேஷுவலாக உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.

எங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரியாமல் சுற்றி வந்தேன். பெண்ணொருத்தி நின்றிருந்தாள் என்னை பார்ததுமே வெட்கப்பட்டுக் கொண்டு கோவிலுக்குள்ளே ஓடினாள். அட நம்மளையும் பாத்து ஒரு பொண்ணு வெக்கப்படுவதே என்று சிரிப்பாக இருந்தது. சிரித்துக் கொண்டே அவள் பின்னால் போனேன். நான் நினைத்தது சரி தான்.... அங்கே எங்கள் குடும்பத்தினர் உட்கார்ந்திருந்தார்கள்.

தனியாக பேச வேண்டும் :

தனியாக பேச வேண்டும் :

பேச்சுக்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. பெண்ணுடைய அண்ணன் என்னருகில் வந்தார். உங்ககிட்ட எதோ பேசணுமாம் என்று சொல்லி அழைக்க நான் அம்மாவின் முகத்தை பார்த்தேன்.

ஏதோ தாரள மனம் படைத்தவர் போல, போடா.... இதுக்கெல்லாம் எதுக்கு என் மூஞ்சிய பாத்துட்டு இருக்க என்றார். அண்ணன்களும் போடா.... என்று அவசரப்படுத்த எழுந்து கொண்டேன். நானும் அவளும் மட்டும் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு சற்று தள்ளி சிறிது தூரம் நடந்து சென்றோம்.

நானே ஆரம்பம் :

நானே ஆரம்பம் :

அவள் என்ன கேட்கப் போகிறாளா? என்ற பயம் உள்ளுக்குள் இருந்தது. நான் மிகவும் பதட்டத்துடன் இருந்தேன். அதோடு அவள் கேட்பதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும். முன்னால் காதல் எதாவது இருக்கிறதா என்று கேட்கப்போகிறாளா அல்லது தான் யாரையும் காதலிப்பதாக சொல்லப்போகிறாளா மிகவும் குழப்பமாக இருந்தது.

ஒரு திண்ணையில் இருவரும் உட்கார்ந்து கொண்டோம். மேலே தூணில் இருந்த சிற்பங்களை பார்த்துக் கொண்டேயிருந்தால் எதுவும் பேசவில்லை. நீண்ட நேரத்திற்கு பின் நானே பேச்சை ஆரம்பித்தேன்.

அக்காவின் கதை :

அக்காவின் கதை :

ஆரம்பத்தில் படிப்பு, வேலை குறித்த முதல் அடிப்படை பேச்சுக்கள் நகர்ந்தன. பின் மீண்டுமொரு அமைதி. பின் பேச ஆரம்பித்தாள்,

உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும். என்று மெல்ல முழுங்கிக் கொண்டே வார்த்தையை தேடித் தேடி பேசினாள். என்ன விஷயம் சொல்லுங்க என்று நான் தயாரானேன்.

எனக்கு முன்னாடி ஒரு அக்கா இருக்காங்க... சாரி இருந்தாங்க. இப்போது அக்காவைப் பற்றி பேச என்ன இருக்கிறது என்று புரியாமல் விழித்தேன்.

ஓர் அதிர்ச்சி :

ஓர் அதிர்ச்சி :

இப்போ எதுக்கு அக்கா கதை? என்றேன்.

அக்காவும் மாமாவும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிடாங்க அதுல அம்மா அப்பாக்கு கொஞ்சம் கோபம். ஆனாலும் பேசினாங்க தான்.

என்று மீண்டும் நிறுத்தினாள். இது பக்கா அரேஞ்சுடு மேரேஜ் தானே இதில் எதற்காக அக்காவின் கதையை நுழைக்கிறாள் என்று யோசித்தேன்.

அவ்வப்போது ம்ம்... கொட்டிக் கொண்டிருந்தேன்.

உங்களுக்கு சம்மதமா? :

உங்களுக்கு சம்மதமா? :

ஒரு நாள் எங்க மாமாக்கு ஆக்ஸிடண்ட் ஆகிடுச்சு. அழுதுட்டே அக்கா போன் பண்ணா, அப்போ தான் நாங்க எல்லா மொதோ தடவ அவ வீட்டுக்கு போறோம். அப்பறம் நிறைய ஹாஸ்பிட்டல் மாத்தி மாமாவுக்கு ஆறு மாசம் ரொம்ப கஷ்டப்பட்டு ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். தலைல அடிப்பட்டதால நாலு மாசம் வரைக்கும் கோமாலயே இருந்தாரு. எப்டியும் காப்பாத்திடலாம்னு நினச்சப்போ திடிர்னு ஒரு நாள் இறந்துட்டாரு.

ஒரு கணம் :

ஒரு கணம் :

ஒரு கணம் திக்கென்றது. எதுவும் புரியவில்லை, இறந்துடாங்களா என்று அதிர்ச்சியுடன் கேட்டேன்.

அதோடு இப்போ இந்த கதை எதுக்கு என்ற புரியாத கேள்வியும் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. அக்காவ எவ்ளோவோ கெஞ்சி ஊருக்கு வரச் சொல்லி கூப்டோம். அங்க குழந்தைய க்ரீச்ல விட்டுட்டு இவ வேலைக்கு போய்ட்டு ரொம்ப கஷ்டப்படறான்னு அம்மாக்கும் அப்பாக்கும் ரொம்ப வருத்தம்.

ஓரளவுக்கு யூகித்தேன். கல்யாணத்துக்கு அப்பறம் உங்க அக்காவும் குழந்தையும் நம்மளோட இருக்கணுமா? என்றேன்.

அச்சோ இல்ல.... என்று மீண்டும் ஒரு ட்விஸ்ட் வைத்திருந்தாள்.

குழந்தை :

குழந்தை :

வீட்ட எதிர்த்து நம்ம கல்யாணம் பண்ணியிருக்கோம் அவங்க முன்னாடி நம்ம நல்லா வாழ்ந்து காட்டணும்னு வெறியோட இருந்தா.... கல்யாணமாகி மாமாவுக்கு ரெண்டுவருஷம் சரியாவே வருமானம் இல்ல அதக்கூட அவ எங்ககிட்ட சொல்லல... அவரும் போய்ட்டாரு..... என் வாழ்க்கையே முடிஞ்சதுன்னு சொல்லி ஒரு நாள் வீட்ல குழந்தைக்கு தூக்க மாத்திரையை கொடுத்துட்டு இவ தூக்கு மாட்டிட்டு இறந்துட்டா.

அப்போ எதார்த்தமா கேஸ் கொடுக்குற பையன் வந்து கதவ தட்டியிருக்கான் தொறக்கலன்னதும் ஜன்னல் வழியா பாத்து ரெண்டு பேரையும் ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போயிருக்காங்க. பாப்பாவ காப்பாத்திட்டோம். ஆனா அக்கா தான்..... நிறுத்தினாள்

நான் ஏற்றுக் கொள்கிறேன் :

நான் ஏற்றுக் கொள்கிறேன் :

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மவுனமாக இருந்தேன். என்ன சொல்கிறாள் இதிலிருந்து என்ன எதிர்ப்பார்க்கிறாள் என்று எதுவும் புரியவில்லை. அவளும் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டே நின்றிருந்தாள்.

இப்போ நான் என்ன பண்ணனும் என்றேன்.

இல்ல..... விவரம் தெரியறதுக்கு முன்னாடியே பாப்பாக்கு அம்மா அப்பா இறந்துட்டாங்க அதனால அந்த குழந்தைய கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம தத்தெடுத்து.... என்று தயங்கி நின்றாள்.

இனி குழந்தைக்கு நான் தான் தகப்பன் :

இனி குழந்தைக்கு நான் தான் தகப்பன் :

ஒரு கணம் சிலிர்த்துப் போனது. ரேணு... அவள் கையை பிடித்துக் கொண்டேன். இவ்ளோ பெரிய விஷயத்த எப்டி இவ்ளோ சாதரணமா சொன்ன?

நான் கொஞ்சம் கூட இந்த விஷயத்த யோசிக்கவேயில்ல..... இப்போ சொல்றேன். கண்டிப்பா அந்த குழந்தைக்கு நம்ம தான் அம்மா அப்பா. இந்த உலகம் அந்த குழந்தைய எப்டி பாக்கும் அதுவும் ஒரு அனாதை பெண் குழந்தையினா எப்டி நடத்தும்னு எனக்கும் தெரியும் அந்த வலி நம்ம குழந்தைக்கு வேணாம்.

எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம். உன்னையும், குழந்தையையும் நான் முழு மனசோட ஏத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு ஆத்ம திருப்தியுடன் வெளியே வந்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

before marriage guy has his baby daughter

before marriage guy has his baby daughter
Story first published: Tuesday, January 9, 2018, 16:47 [IST]