அனுஷ்காவை ஏன் காதலித்தீர்கள் விராத்? அனுஷ்கா சர்மா - விராத் கோஹ்லி லவ் ஸ்டோரி!!

Posted By:
Subscribe to Boldsky

அடுத்த நட்சத்திரக் கல்யாணத்திற்கு தயாராகுங்கள்.... கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாக கிரிக்கெட் ரசிகர்களின் மனதையும், தன்னுடைய பேரழகினால் நம் இதயங்களை கொள்ளைக் கொண்ட விரோட் கோஹ்லிக்கு திருமணம்.....

மணமகள் யார் தெரியுமா? நம் பாலிவுட் சுந்தரியும் விராட்டின் காதலியுமான அனுஷ்கா ஷர்மா தான்.

கிட்டதட்ட ஐந்து வருடக் காதல், இடையில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள், சின்னச் சின்ன சண்டைகள், பிரிவுகள் எல்லாவற்றையும் விட அத்தனைக்காதல். மீடியாவில் அவர்களைப் பற்றிய எந்த செய்தி கசிந்தாலும் உடனடியாக பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.

Secret Love Story of Virat Kohli and Anushka sharma

எப்படி கடந்தது இவர்களின் ஐந்து வருடங்கள். இருவருக்குமிடையிலான காதல் உணர்ந்த தருணங்கள்,காதலை வெளிப்படுத்திய நிமிடங்கள் , எந்த சூழலிலும் உனக்காக நானிருக்கிறேன் என்று கைகோர்த்த கணங்கள் எல்லாம் ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளம்பரம் :

விளம்பரம் :

இருவரும் தங்களது துறைகளில் கொடிக்கட்டிப் பறக்க அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது விளம்பர நிறுவனம் ஒன்று. . 2013 ஆம் ஆண்டு ஒரு விளம்பரத்தில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள்.

அதன் பிறகு பல இடங்களில் ஒன்றாக சேர்ந்து சுற்ற அவர்களைச் சுற்றி வதந்தியும் சேர்ந்து பறக்க ஆரம்பித்தது.

மும்பை :

மும்பை :

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிகா கிரிக்கெட் டூரின் போது மும்பை வந்திரங்கியது. அணி வீரர்கள் எல்லாம் ஓட்டல் அறைக்குச் செல்ல, நம் ஹீரோவோ மும்பையில் இருக்கிற அனுஷ்காவின் அப்பார்ட்மெண்ட்டுக்குச் செல்கிறார்.

புரளிக்கு உருவம் கிடைத்தது.

 சர்ப்ரைஸ் :

சர்ப்ரைஸ் :

இலங்கையில் நடைப்பெற்ற பாம்பே வெல்வெட் என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் அனுஷ்கா. அப்போது, திடிரென இலங்கையில் அனுஷ்கா தங்கியிருக்கும் இடத்திற்கே சென்று ஷாக் கொடுத்திருக்கிறார் விராத்.

அதே போல உதய்பூரில் அமிர்கானின் பி.கே திரைப்பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, அப்போதும் அதிரடியாக சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்திருக்கிறார் விராத். அன்றைக்கு அனுஷ்காவின் 26வது பிறந்தநாள் என்பது கூடுதல் ஹைலைட்

பொது இடத்தில் :

பொது இடத்தில் :

அப்போது வரை இருவரும் இணைந்து வெளியில் தலை காண்பிக்காமல் இருக்க அக்டோபர் 2014 ஆம் ஆண்டு சேர்ந்து காட்சியளிக்க ஆரம்பித்து விட்டனர். அப்போது நடைப்பெற்ற இந்தியன் சூப்பர் லீக் தொடரைப் பார்க்க இருவரும் சேர்ந்தே வருவது, விமானத்தில் ஒன்றாக பயணிப்பது என்று தொடர புரளிக்கு கை கால் முளைத்தது.

காதலிக்கு அன்பு முத்தம் :

காதலிக்கு அன்பு முத்தம் :

நவம்பர் 2014, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடியது இந்திய அணி. அப்போது அரை சதமடித்த விராத் மைதானத்தில் இருந்த படியே அனுஷ்கா உட்கார்ந்திருந்த திசையை நோக்கி ஒரு ஃப்ளையிங் கிஸ்ஸை பறக்கவிட்டார்.

புரளி வலுவானது.

Image Courtesy

ஒளிவு மறைவு இல்லை :

ஒளிவு மறைவு இல்லை :

செல்லும் இடங்களில் எல்லாம் விராத்திடம் அனுஷ்காவைப் பற்றியும் அனுஷ்காவிடம் விராத் பற்றியும் கேட்கப்பட்டது.

எங்கள் இருவருக்குமிடையில் ஒன்றுமில்லை எங்களுக்கு இடையில் மறைத்து வைக்க ஒன்றும் மில்லை, நாங்கள் எதையும் மறைக்கவும் இல்லை மிகச் சாதரணமான இளம் ஜோடிகள் நாங்கள் அவ்வளவு தான் என்று சொல்லி வைத்தார் போல அறிவித்தார்கள்.

மை லவ் :

மை லவ் :

விராத்துக்கும் அனுஷ்காவுக்குமிடையில் ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கிறது என வெளியில் தெரிந்தது எப்போது தெரியுமா? அதற்கு முன்பே லேசாக இவ்விஷயம் வெளியே புகைய ஆரம்பித்திருந்தாலும் 'NH10'

என்ற திரைப்படத்தில் நடித்திருந்த அனுஷ்காவின் பெர்ஃபாமென்ஸை பாராட்டி டிவிட்டரில் அனுஷ்காவின் நடிப்பை பாராட்டி ப்ரில்லியண்ட் ஃபெர்ஃபாமென்ஸ் பை மை லவ் என்று குறிப்பிட்டிருந்தார்.

புரளி மெல்ல நிஜமாக உருவெடுக்க ஆரம்பித்தது.

விராத் மனைவி :

விராத் மனைவி :

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மெல்பர்னில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக்கேல் ஸ்லேட்டர். வேகமக வர்ணனைகளை சொல்லிக் கொண்டிருக்கும் போது தவறுதலாக விராத்தின் மனைவியான அனுஷ்கா சர்மா என்று உச்சரிக்க, விஷயம் பயங்கர வைரலானது.

Image Courtesy

காதல்ல இதெல்லாம் சாதரணமப்பா :

காதல்ல இதெல்லாம் சாதரணமப்பா :

காதலில் அன்பு மட்டும் மாறி மாறி பகிர்ந்து கொண்டிருந்தால் எப்படி? சண்டை வேண்டாமா அப்போது தானே காதல் இன்னும் ஸ்திரமாகும். இதோ நம் லவ்லி கப்புல்ஸுக்கும் சண்டை.

ஆண்களுக்கான மேகசின் ஒன்றின் அட்டைப் படத்திற்கு கவர்ச்சியான போஸ் கொடுத்திருந்தார் அனுஷ்கா. இது விராத்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

விஷயம் விவகாரமானது.

Image Courtesy

லவ் ப்ரேக் அப் :

லவ் ப்ரேக் அப் :

இவ்விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் பிரிந்து விட்டார்கள். காதல் ப்ரேக் அப் ஆகிவிட்டது என்று இவர்களின் உறவில் இன்னொரு புரளி, அதோடு இருவரும் ட்விட்டரில் அன் ஃபாலோ செய்து விட்டதாகவும் செய்திகள் வந்தது.

விராத்தின் வீழ்ச்சி :

விராத்தின் வீழ்ச்சி :

காதலி மைதானத்தில் இருந்த போது சதம் விளாசிய விராத் இந்தப் பிரச்சனைக்குப் பிறகு மைதானத்தில் லேசாக சொதப்ப ஆரம்பித்தார். ஆம், விராத் ரொம்பவே டிஸ்ட்ரப்டாக இருந்தார்.

கிரிக்கெட் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? அனுஷ்காவுக்கு எதிராக கோஷங்களையும் மீம்ஸ்களையும் தெறிக்க விட்டார்கள்.

சரியான பதிலடி :

சரியான பதிலடி :

இதனால் கடுப்பாகிப்போன விராத், அனுஷ்காவை கிண்டலடித்தவர்கள் ட்ரோல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார் 'ஷேம்' என்று சுவற்றில் எழுதியது போன்ற ஒரு படத்தைப் போட்டு கீழே, அனுஷ்காவை தவறாக விமர்சிப்பவர்களே, இது ஒரு விளையாட்டு நான் மைதானத்தில் விளையாடுவதை யாராலும் கன்ட்ரோல் செய்ய முடியாது.

Image Courtesy

எல்லாம் பாசிட்டிவ் :

எல்லாம் பாசிட்டிவ் :

இதுவரை அனுஷ்கா எனக்கு கொடுத்திருப்பது பாசிட்டிவிட்டி மட்டுமே. உணர்வுகளுக்கு கொஞ்சமாவது மதிப்பு கொடுங்கள்.இதே போல உங்கள் வீட்டுப் பெண்களை பொதுவெளியில் ட்ரோல் செய்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் என்று தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Image Courtesy

மீண்டும் மலர்ந்த காதல் :

மீண்டும் மலர்ந்த காதல் :

பொதுவெளியில் ட்ரோல் செய்யப்பட்டிருந்ததால் மிகவும் மனமுடைந்த காணப்பட்ட அனுஷ்கா விராத்தின் பதிலினால் ஆசுவாசமடைந்தார். மீண்டு வந்தார் என்றே சொல்ல வேண்டும்.

அதன் பிறகு மீண்டும் பல இடங்களில் சேர்ந்து செல்ல, காமெரா கண்களில் சிக்க ஆரம்பித்தனர்.

யுவராஜ் கல்யாணம் :

யுவராஜ் கல்யாணம் :

அதன்பிறகு கடந்தாண்டு கோவாவில் நடைப்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜின் திருமணத்தில் பங்கேற்றது, மனீஷ் மல்ஹோத்ராவின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா என இருவரும் இணைந்தே போஸ் கொடுக்க கமெராக்கள் தொடர்ந்த க்ளிக்கியது.

Image Courtesy

நிச்சயதார்த்தம் :

நிச்சயதார்த்தம் :

அவ்வளவு தான். இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து, இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம், திருமணம் என்றெல்லாம் வதந்திகள் அதி வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து,

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எங்களைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி என்று சொல்லி விராத் கோஹ்லி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எங்களுக்கு நிச்சயதார்த்தம் எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. அப்படி நடக்கவிருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ட்விட் தட்டினார் விராட்.

எல்லா நாளுமே காதலர் தினம் தான் :

எல்லா நாளுமே காதலர் தினம் தான் :

இந்த வருடம் காதலர் தினத்தன்று அனுஷ்காவுடனான தன்னுடைய காதலை உறுதிப்படுத்தினார் விராத். நீ விரும்பினால் எல்லா நாளுமே காதலர் தினம் தான். உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நாளுமே எனக்கு அப்படித்தான் என்று அனுஷ்காவுடன் எடுத்த படத்த தன்னுடைய இன்ஸ்டாவில் சேர்த்திருந்தார்.

காதலே.... உயிரே :

காதலே.... உயிரே :

சர்வதேச பெண்கள் தினத்தன்று தன்னுடைய வாழ்க்கையில் இருக்கிற மிகவும் தைரியமான பெண்களுக்கு வாழ்த்து என்று சொல்லி தன்னுடைய அம்மாவுக்கும், காதலியான அனுஷ்காவுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

Image Courtesy

அமிர் கானின் கேள்வி :

அமிர் கானின் கேள்வி :

தீபாவளி சிறப்பு நிகழ்சியாக அமிர் கான் நடத்திய ஒர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விராத் பங்கேற்றார். அப்போது அனுஷ்காவுடனான காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதுவும் என்ன கேள்வி தெரியுமா?

அனுஷ்காவை ஏன் காதலித்தீர்கள் விராத்?

Image Courtesy

காதலிக்க காரணம் :

காதலிக்க காரணம் :

மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் விராத் சொன்னது இது தான், ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். அவள் மிகவும் நேர்மையானவள், எப்போதும் அவள் மனதிலிருந்தே தான் பேசுவாள் .

அதில் தான் விழுந்தேன். ஒரே ஒரு முறை தான் இன்னும் எழவில்லை என்று அசத்தியிருக்கிறார் லவ்வர் பாய்.

காதலிக்குச் செல்லப் பெயர் :

காதலிக்குச் செல்லப் பெயர் :

நமக்கு நெருக்கமானவர்களுக்கு உடனடியாக ஓர் செல்லப்பெயரை வைத்துவிடுவோம் தானே. அதே போல கோஹ்லியும் தன்னுடைய செல்லக் காதலிக்கு 'நுஷ்கீ' என்று பெயர் வைத்திருக்கிறார்.

தற்போது ஐந்து வருட காதல், திருமணத்தில் மெருகேறப்போகிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secret Love Story of Virat Kohli and Anushka sharma

Secret Love Story of Virat Kohli and Anushka sharma
Subscribe Newsletter