TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
முதல் தவறு எனது ஜாதி, இரண்டாவது அவள் என்னைவிட மூத்தவள் - உண்மை கதை!
பொதுவாகவே நமது சமூகத்தில், வாழ்வியலில் தன்னை விட பத்து வயது மூத்த ஆணை திருமணம் செய்துக் கொண்டால் கூட பெரிய வித்தியாசமாக இருக்காது. ஆனால், ஒரே வயது, ஓரிரு மாதம் சிறிய ஆண் என்றாலும் கூட அண்டம் அளவிற்கு வாய் பிளக்கம் நமது சமூகம். அப்படி ஒரு உறவு தான் எனது. இதை விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களிலும், சில பிரபலங்களின் வாழ்க்கையிலும் கூட நாம் கண்டுள்ளோம்.
இது மூன்று வருடத்திற்கு முன் நடந்த காதல் கதை. நான் முதன் முதலாக அவளை கண்டேன். அவள் என்னை விட எட்டு மாதங்களே மூத்தவள். இது ஒரு சாதாரண உறவல்ல. எங்கள் இருவருக்குள் இருந்த கெமிஸ்ட்ரி மற்றும் புரிதல் அற்புதமானது. நாங்கள் நட்பாக தான் ஆரம்ப காலத்தில் பழகினோம்.நாட்கள் செல்ல, செல்ல நட்பு காதலானது. ஒரு நாள் நாங்கள் எதிர்பாராத சம்பவம் நடந்தது...
அந்த ஒரு நாள்...
அது என் கற்பனைக்கும், எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்ட நிகழ்வு. அவள் என்னிடம் காதலை கூறினால். நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நேரத்தை வீணடிக்காமல் உடனே ஓகே சொன்னேன். அவளது நம்பிக்கையை நான் வென்றேன். சில மதங்கள் கடந்தோடின, நாங்கள் எங்கள் உறவில் சீரியஸாக இருக்க விரும்பினோம். ஆகையால் ஒரு வேலை தேடினேன், அவளுடனான எதிர்காலம் குறித்து திட்டங்கள் ஆலோசித்தேன்.
வித்தியாசமானது..
மற்றவர்களோடு ஒப்பிடுகையில் எங்கள் உறவே சற்றே வித்தியாசமானது. எங்களுக்குள் சண்டையும் வந்ததில்லை, கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை. இன்னும் சொல்ல வேண்டும் எனில், அவள் இந்த உலகத்தை மற்ற அனைவரையும் விட அதிகமாக நேசித்தாள். அவள் எனக்காக சமைத்து எடுத்து வருவாள், அதிக அக்கறை எடுத்துக் கொள்வாள். நான் அவளது பெயரை எனது மொபைல் காண்டாக்டில் மனைவி என்றே சேமித்திருந்தேன்.
சினிமா...
எங்கள் காதல் ஒரு சினிமாவை போலவே இருந்தது. எங்கள் இருவரில் யார் ஒருவர் அப்சட் ஆனாலும், மற்றொருவர் எங்கள் காதல் எவ்வளவு அழகானது என கூறி சரி செய்துவிடுவோம். நாங்கள் பைத்தியக் காரத்தனமான காதலில் இருந்தோம். எங்கள் உறவில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன, ஆனால் அது எங்களுக்குள் எந்த பிரச்சனையும், சண்டையும் ஏற்படுத்தவில்லை. நாங்கள் ஒருவரை பற்றி இன்னொருவர் தவறாக மதிப்பிட்டதும் இல்லை.
ஓராண்டு காலம்...
இப்படியே ஓராண்டு காலம் ஓடியது... ஓர் சிறந்த நாளில் ஒரு பெரிய பிரச்சனை உண்டானது... இந்த இந்திய சமூகம். அவளது பெற்றோர் அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கினார்கள். இது தான் எனது கெட்ட கனவாக இருந்தது. நான் அவளது பெற்றோருடன் பேச தீர்மானித்தேன். ஆனால், அவள் இது சரியான நேரம் அல்ல, பொறுமையாக இரு என்றாள்.
ஜாதி!
அவளது பெற்றோர் எனது ஜாதியை காரணம் காட்டி எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவள் எங்கள் காதலுக்காக போராடினாள். ஆனால், அவளது அம்மா அவளை அடித்து என்னை மறக்கும் மாறு அவளது வற்புறுத்தி வந்தார். அவள், அவர்களால் எனது மனதை மாற்ற முடியாது என என்னிடம் கூறினாள். என்னால் முடிந்த வரை அவளது பெற்றோரின் மனதை மாற்ற போராடினேன். ஆனால், அவளது பெற்றோர் வேறு ஜாதி பையனுக்கு அவர்களது மகளை திருமணம் செய்து தர முன்வர வில்லை.
சில மாதங்கள்...
சில மாதங்கள் ஓடின... அவளது பெற்றோர் நான் அவளது உடல் சார்ந்த கவர்ச்சிக்காக தான் பழகுகிறேன்,. விரும்புகிறேன் என அவளிடம் கூறினார்கள். அவளது மொபைலையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். எப்படியோ அவளது அம்மாவின் மொபைலுக்கு அழைத்து பேச முயற்சித்தேன்.அவரும், மீண்டும் கால் செய்யாதே என இணைப்பை துண்டித்திவ்ட்டார்.
பிளாக்!
எங்களுக்குள் இருப்பது காதல் அல்ல, வெறும் ஈர்ப்பு தான் என்று கூறி அவளை மறக்க கூறினார். நான் அவளை தொடர்பு கொள்ள முடியாதபடி, வாட்ஸ்-அப், ட்விட்டர், ஃபேஸ்புக், என அனைத்து வழிகளிலும் என்னை பிளாக் செய்தனர். பிறகு சில காலம் எந்த அழைப்பும் இல்லை. என்னாலும் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. நானும் எனது முயற்சிகளை கைவிடவில்லை. மீண்டும் ஒருமுறை என் மனதை உடைக்க அவளது அம்மா கால் செய்தார்...
அவளுக்கு திருமணம்...
இந்த பிரச்சனைகள் துவங்கி ஏழு மாதங்கள் இருக்கும்.. ஒரு நாள் அவளது அம்மா கால் செய்து, அவளுக்கு திருமணமாக இருக்கிறது. ஒரு பெரிய குடும்பத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளோம் என கூறினார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. அழைப்பை கட் செய்தேன். எல்லா காதலும் இனிமையாக முடிவதில்லை. சில காதல்கள் பாதியிலேயே உடைந்துவிடுகின்றன.
தியாகம்!
இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, எங்கள் காதலுக்கு ஜாதியும், வயது வித்தியாசமும் பெரும் காரணமாக அமைந்தது. கைகோர்ப்பது மட்டும் தான் காதல் என்றில்லை, அவளுக்காக தியாகம் செய்வதும் காதல் தான். அவளை இன்றும் நான் நினைத்து கொண்டே தான் இருக்கிறேன். கடைசி வரை அவளை மீண்டும் ஒரு பார்க்க கூட முடியாத துர்பாக்கியசாளியாகிவிட்டேன்....