தம்பதி இருவரும் நீண்ட நேரம் வேலை செய்வது, உறவில் எத்தகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய வாழ்வியல் முறையில் சமூகத்தில் இருக்கும் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்து, ஓர் அந்தஸ்தோடு இருக்க வேண்டும், இல்லை காட்டிக் கொள்ள வேண்டும் எனிலும் கூட கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று தான் ஆகவேண்டும். குறைந்தபட்சம் பிள்ளைகளை எல்.கே.ஜி.-யில் சேர்க்க அட்மிஷன் பீஸ் கட்டவாவது இருவரும் வேலைக்கு சென்று தான் ஆகவேண்டும் போல.

பணம் என்ற ஒற்றை சொல் தான் இன்று இந்த உலகை சுழல வைக்கின்றது. அதை சம்பாதிக்க தான் இருவரும் கால்களில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஓடுகிறார்கள். இப்படி வேலை, வேலை என்று ஓடுபவர்களின் வாழ்க்கை சந்தோசமாக இருப்பதில்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இது எவ்வளவு சதவீதம் உண்மை என்பது பற்றி இனிக் காணலாம்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரொம்ப நல்லதாம்

ரொம்ப நல்லதாம்

எத்தைகைய தாக்கம் என்றவுடன், எதிர்மறையாக எண்ண வேண்டாம். நீண்ட நேரம் வேலையில் ஈடுபடும் கணவன், மனைவி மத்தியிலான உறவு நல்லப்படியாக தான் இருக்கிறதாம். நீண்ட நேரம் அலுவலகத்தில் கழிப்பதால், மீதம் இருக்கும் நேரத்தை இவர்கள் இருவருக்குள் மட்டுமே பகிர்ந்துக் கொள்வதால் இல்வாழ்க்கை செழிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வு

ஆய்வு

சமீபத்திய ஆய்வில், 285 தம்பதிகள் பங்குபெற்றனர். இவர் அனைவரும் தினமும் அலுவலகம் சென்று பணிபுரியும் நபர்கள். இவர்கள் என்ன கூறுகிறார்கள் எனில், "நாங்கள் எங்கள் அலுவலக நேரம் மற்றும் மற்ற நேரத்தை சரியான அளவு பங்கிட்டு சமநிலையாக எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம் என்று கூறியுள்ளனர்.

புரிந்துக் கொள்கின்றனர்

புரிந்துக் கொள்கின்றனர்

மேலும் இவர்களுக்குள் இருக்கும் புரிதல் சிறந்து விளங்குகிறது. யாருக்கேனும் அதிக வேலை இருந்தால் அதை இவர்கள் புரிந்துக் கொள்கிறார்கள். மேலும், அசௌகரியங்கள் ஏற்படும் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகின்றனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

யாரேனும் ஒருவர் மகிழ்ச்சியின்றி காணப்பட்டால் அவர்களை மகிழ்ச்சியடைய வைக்க இவர்கள் முயல்கின்றனர். உடனே எங்காவது வெளியே செல்வது, அவர்களுக்கு பிடித்த காரியங்களில் ஈடுபடுவது என இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள்.

இறுக்கம்

இறுக்கம்

சில சமயங்களில் அரிதான இவர்களது நேரத்தை பங்கிட்டுக் கொள்ளும் போது. இவர்களுக்குள் இறுக்கம் மற்றும் இணக்கம் அதிகரிக்கிறது, என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தவறாக எண்ண வேண்டாம்

தவறாக எண்ண வேண்டாம்

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர் எனில், அவர்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்காது என எண்ண வேண்டாம். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அந்த புரிதல் இல்லை எனில் நாள் முழுக்க ஒன்றாக இருந்தாலும் சந்தோஷம் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Truth About Working Long Hours and How It Affects Your Relationship

The Truth About Working Long Hours and How It Affects Your Relationship. Its really good news.
Subscribe Newsletter