மனைவியாக ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 7 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாகவே சமூகத்தில் ஆண் தான் குடும்பத்தை தூக்கி நிறுத்த வேண்டும், ஆண் தான் மனைவியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண் தான் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி, கூறி அந்த ஆண் எந்த நிலையில் இருக்கிறான், அவனது உணர்ச்சிகள் என்ன என்பதை நாம் மறந்துப் போகிறோம்.

தகப்பனாக, மூத்தமகனாக, அண்ணனாக, கணவனாக ஒரு ஆண் அவனது குடும்பத்திற்காகவும், சமூகப் பொறுப்புகளுக்காகவும் தனது சொந்த உணர்வுகளையே கூட பலவிடங்களில் இழந்துவிடுகிறான். எனவே, மனைவியாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் இந்த ஏழு விஷயங்களை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகு தான்

அழகு தான்

மேக்-அப் செய்தலும், செய்யாவிட்டாலும் நீங்கள் அழகு தான். ஆண்கள், மற்ற பெண்களை புகழ்ந்து பேசும் வழக்கம் கொண்டிருக்கலாம். அதற்காக உங்களை மட்டமாக நினைத்துவிடுவார்கள். அழகாக இல்லை என்றால் வேறு பெண்ணை விரும்ப ஆரம்பித்துவிடுவார்கள் என்ற எண்ணம் கொள்ளுதல் தவறு.

அழகு தான்

அழகு தான்

பெண்கள் மட்டும் தான் உண்மையாக காதலிப்பார்கள் என்றில்லை, ஆண்களுக்கும் காதல் மற்றும் உறவுகளின் மதிப்பை பற்றி தெரியும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

உணர்வுகள்

உணர்வுகள்

ஆண்களுக்கும் உணர்வு உண்டு, அவனும் தினமும் பல சூழல்களை கடந்து தான் வாழ்ந்து வருகிறான் என்று மனைவி அறிந்திருக்க வேண்டும். அலுவலகம் முடிந்து வந்தவுடனே புலம்ப ஆரம்பிக்கக் கூடாது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

கணவன் தான் தன் மனைவியை சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. மனைவியும், கணவனை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள ஏதேனும் செய்யலாம்.

முட்டாள் அல்ல

முட்டாள் அல்ல

ஆண்கள் முட்டாள்கள் அல்ல என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். தோழிகளிடம் உரையாடும் போது, "அவருக்கு என்ன தெரியும், ஒண்ணும் தெரியாது" என கூறுவது பெண்கள் அவர்களுக்குள் கெத்தாக, பெருமிதமாக பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகள். இது தவறான அணுகுமுறை.

முட்டாள் அல்ல

முட்டாள் அல்ல

அதேப் போல கணவனிடம் எதுவாக இருந்தாலும் மறைக்காமல் செய்யுங்கள். தோழிக்கு உதவுவது, வீட்டாருக்கு உதவுவது போன்றவற்றை கணவனுக்கு தெரியாமல் செய்ய முயற்சிக்க வேண்டாம். இது பின்னாளில் பிரச்சனைகளை பூதாகரமாக மாற்றக் கூடியவை.

கொஞ்சுங்கள்

கொஞ்சுங்கள்

ஆண்கள் தான் கொஞ்ச வேண்டும் என்றில்லை, தினமும் பெண்கள் கூட கணவனை கொஞ்சி மகிழ்விக்கலாம். அவனது மன அழுத்தமாவது குறையும். முடிந்த அளவு வீட்டில் இருக்கும் பெண்கள் கணவன் வீடு திரும்பும் போது மங்களகரமாக காட்சியளித்தாலே கணவனது மனநிலை சுறுசுறுப்பாக மாறிவிடும்.

நம்பிக்கை

நம்பிக்கை

உங்கள் கணவர் மீது நம்பிக்கை வையுங்கள் நண்பர்களுடன் வெளியே செல்லும் போது பல கேள்விகளை கேட்பது, அலுவலக விஷயமாக வேலையில் இருக்கும் போது கால் செய்யாவிட்டால் சந்தேகப்படுவது போன்றவற்றை எல்லாம் பெண்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.

தாம்பத்தியம்

தாம்பத்தியம்

உடலுறவுக் கொள்ள விரும்புவது என்பது மிக இயல்பான காரியம். சிலருக்கு இதில் அதிக ஆர்வம் இருக்கும். அதற்காக கணவன் காம எண்ணம் அதிகமாக கொண்டிருக்கிறான் என என்ன வேண்டாம். வாரத்திற்கு மூன்று முறை வரை உடலுறவில் ஈடுபடு எண்ணுவது எல்லாம் மிக இயல்பானது.

தாம்பத்தியம்

தாம்பத்தியம்

சிலருக்கு 60 வயது வரைக் கூட உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை வரும். இது அவரவர் உடல் ஹார்மோன்களை பொருத்தது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Things Your Wife Should know About You

Seven Things Your Wife Should know About You, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter