மனைவியை எரிச்சலூட்டும் 7 செயல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இல்லறம் நல்லறமாக சிறக்கட்டும் என வாழ்த்து பெற்று கொண்டு துவங்கப்படும் எல்லா இல்லறமும் அப்படியே அமைந்துவிடுவதில்லை. மற்றும் சண்டை சச்சரவு இல்லாத உறவு, முழுமையடையாத உணவை போல. சண்டை போடலாம், ஆனால் மனைவியை எரிச்சல் அடைய வைக்கக் கூடாது. இதில் கணவன்மார்கள் கவனமாக இருக்க வேண்டும்.

தெரிந்தோ, தெரியாமலோ, பெரும்பாலும் ஓட்டை வாயின் காரணமாக கணவன் எனும் தவளைகள் தங்கள் வாயால் தான் கெடுகிறார்கள். மனைவிகளை எரிச்சலூட்டுகிறார்கள். எனவே, மனைவியை எரிச்சலூட்டும் செயலிகளில் இருந்து நீங்கள் ரிட்டையர்ட் ஆகவேண்டும் என்பது எங்களது பணிவான வேண்டுகோள். இல்லையேல் தினமும் டாம் அண்ட் ஜெர்ரி போல முட்டி மோதிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்மாவுடன் ஒப்பிடுதல்

அம்மாவுடன் ஒப்பிடுதல்

சமைப்பதில் இருந்து உங்களை கவனித்து கொள்வது வரை ஏதேனும் ஒன்றில் உங்கள் தாயுடன், தாரத்தை ஒப்பிட்டு பேசினால் நீங்கள் அவ்வளவு தான். மனைவிகளுக்கு அவர்களை மாமியாருடன் ஒப்பிட்டு பேசுவது சுத்தமாக பிடிப்பதில்லை.

மற்ற பெண்களுடன்

மற்ற பெண்களுடன்

மாமியாருடன் ஒப்பிட்டால் கூட காளியாக தான் மாறுவார்கள். மற்ற பெண்களுடன் ஒப்பிட்டால் பத்திரகாளியாக மாறிவிடுவார்கள். எனவே, உங்கள் மனைவியை ஒப்பிட்டு பேசுவதை மொத்தமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.

டிவி ரிமோட்

டிவி ரிமோட்

உங்கள் மனைவியிடம் இருந்து டிவி ரிமோட்டை பிடுங்கி வேறு சேனல் நீங்கள் பார்க்க முடியாது என்பது உண்மை. ஆனால், கிரிக்கெட் போட்டியின் போது இந்த டிவி ரிமோட்டிற்காக வீட்டில் பெரிய பிரளயமே வெடிக்கும். அதிலும் சீரியல் ஓடும் நேரத்தில் சொல்லவே தேவையில்லை.

பொருட்களை ஒழுங்காக வைப்பது

பொருட்களை ஒழுங்காக வைப்பது

எடுத்த பொருளை சரியான இடத்தில் வைப்பது மட்டுமின்றி அதை ஒழுங்காகவும் வைக்க வேண்டும். கண்டப்படி பொருட்களை வீசிவிட்டு செல்வது மனைவிகளை எரிச்சலடைய செய்கிறது.

வேலையில் குறிக்கிடுவது

வேலையில் குறிக்கிடுவது

அவர்களது தினசரி வேலைகளில் குறிக்கிடுவது. காபிக்கு பதிலாக சூப் கேட்பது, அவர்களுக்கு உதவிகிறேன் பேர்வழி என்ற பெயரில் உபத்திரவம் செய்வது போன்றவை மனைவிகளை எரிச்சல் அடைய செய்கின்றன.

புறக்கணிப்பது

புறக்கணிப்பது

அவர்கள் பேசும் போது, ஏதேனும் செயல்களில் ஈடுபடும் போது அவர்களை புறக்கணிப்பது போல நீங்கள் கண்டும் காணமல் வேறு செயல்களில் ஈடுபடுவது போன்றவை அவர்களை கடுப்பாக்குகிறது.

தவறை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது

தவறை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது

பெரும்பாலும் மனைவி அதிகம் எரிச்சலடைவது கணவன் தனது தவறை ஒப்புக் கொள்ளாமல் மழுப்பும் போது தான். எனவே, தவறை ஒப்புக்கொள்ளுங்கள். இல்லையேல், கண்டிபிடிக்க முடியாத அளவு தவறு செய்ய கற்றுக் கொள்ளுங்கள்!! (ஹி! ஹி!! ஹி!!!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Things That Will Irritate Your Wife

There are many husbands who just like to do these little things that will irritate their wives to a large extent.
Story first published: Wednesday, January 20, 2016, 17:13 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter