மாலை நேரத்து மயக்கம் படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா?

Posted By:
Subscribe to Boldsky

மாலை நேரத்து மயக்கம் செல்வராகவன் எழுத்தில், கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி புத்தாண்டு தினத்தில் வெளியான மாறுபட்ட காதல் திரைப்படம். இன்றைய தலைமுறையின் வாழ்வியல் முறை, அவர்களின் கண்ணோட்டத்தில் காதல், உறவுகள் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் படமாக இது அமைந்திருக்கிறது.

தங்கமகன் படத்துல இதெல்லாம் நீங்க கவனிச்சிங்களா???

இன்றைய தலைமுறையினர் இல்லற பந்தத்தில் மிகவும் தடுமாறுகிறார்கள். இதற்கு காரணம் என்ன? பெற்றோர்களின் கவனமின்மை, சரியாக வளர்க்க தவறுதல், உறவுகள் குறித்த உண்மையான கண்ணோட்டம் தவறி மேற்கத்திய முறையின் கலப்பு என இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த படத்தில் இருந்து உறவு சார்ந்து இந்த தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விருப்பமில்லாத திருமணம்

விருப்பமில்லாத திருமணம்

பெற்றோர் ஏதோ படிப்பு, ஊதியம், வேலை என இந்த மூன்றை மட்டும் பார்த்து திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். ஆனால், அந்த ஆணின் / பெண்ணின் மனோபாவம், குணாதிசயங்களுக்கு ஏற்ற அல்லது ஏற்ப நடந்துக்கொள்ளும் பெண்ணை / ஆணை தான் திருமணம் செய்து வைக்கிறோமா என்று யாரும் எண்ணுவது இல்லை. ஒரு புதிய பந்தத்தை துவங்க இது மிகவும் அவசியம்.

டேட்டிங் கலாச்சாரம்

டேட்டிங் கலாச்சாரம்

நமது ஊரில், முழுவதுமாக இல்லையெனிலும், வளர்ந்து வரும் நகரங்கள், வளர்ந்த நகரங்கள் என அனைத்து தரப்பு மக்களும் வாழும் முக்கிய நகரங்களில் இவை மிகையாக வளர்ந்து வருகிறது. டேட்டிங் செய்வது, காதல் என்ற பெயரில் ஊர் சுற்றுவது, பிறகு சில மாதங்களில் கசக்கிறது என பிரிந்துவிடுவது, முதலில் இந்த வட்டத்தில் இருந்தும், மனப்பான்மையில் இருந்தும் இன்றைய இளைஞர்கள் வெளிவர வேண்டும். இல்லையேல், பின்னாட்களில் உங்கள் இல்லற வாழ்க்கையில் இதுவே பெரும் புயலாய் வீசலாம்.

உடன்பாடு இல்லாத உடலுறவும் கற்பழிப்பு தான்

உடன்பாடு இல்லாத உடலுறவும் கற்பழிப்பு தான்

மனைவியாகவே இருந்தாலும் கூட, அவள் உடன்படாமல் (அ) மறுப்பு தெரிவிக்கும் போது வற்புறுத்தி உறவில் ஈடுபடுவதும் கற்பழிப்பு தான். இது அவர்களை உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் பெரிதாய் பாதிக்கும்.

நண்பர்களின் உபதேசம்

நண்பர்களின் உபதேசம்

உங்கள் மனைவியின் முழு சுபாவம், சுயரூபம் உங்களுக்கு தான் தெரியும். எனவே அவரை எப்படி சமாதானம் செய்ய வேண்டும், உங்களின் ஆசைகளுக்கு இணங்க வைக்க வேண்டும் என்று நீங்கள் தான் யோசிக்க வேண்டுமே தவிர, எல்லாரிடமும் ஆலோசனை கேட்க கூடாது. உங்களால் முடியவில்லை எனில், நீங்கள் அவரை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை, நீங்கள் அவருக்கு ஏற்ற ஜோடி இல்லை என்பது தான் அர்த்தம்.

பெற்றோர்களின் கவனமின்மை

பெற்றோர்களின் கவனமின்மை

பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் என்று பெற்றோர் முதலில் கண்காணிக்க வேண்டும். பத்து வயதில் மொபைல், 15 வயதில் இன்டர்நெட் என வளரும் முன்னரே பழுக்க செய்வது கண்டிப்பாக ஓர் தீய விளைவை உண்டாக்கும். எனவே, அருகே இருந்து அவர்களை அரவணைத்து வளர்க்க பெற்றோர் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்.

கணவன் மனைவி புரிதல்

கணவன் மனைவி புரிதல்

நிச்சயம் செய்த திருமணமாகவே இருப்பினும் கூட, முதலில் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் அப்பா, அம்மா ஒருபோதும் உங்களுக்கு தீய நபரை திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். முதலில் புது நபருடன் பழக ஒரு மாதிரி தான் இருக்கும். எனவே, மெல்ல மெல்ல ஒருவரை முழுமையாக புரிந்துக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள். பிறகு இல்லறத்தில் இணையுங்கள்.

கற்றுக் கொடுக்க வேண்டும்

கற்றுக் கொடுக்க வேண்டும்

கண்டிப்பாக கணவனுக்கு தெரிந்த சில விஷயங்கள் மனைவிக்கும், மனைவிக்கு தெரிந்த சில விஷயங்கள் கணவனுக்கும் தெரியாமல் இருக்கலாம். கூச்சப்பட்டு அணுகாமல் இருந்தாலும் கூட, நீங்களே உங்களுக்கு தெரிந்ததை அவருடன் பகிர்ந்துக் கொள்ளலாம். உணவு, உடை, உறவு என அனைத்திற்கும் இது பொருந்தும்.

கெஞ்சுவது வேண்டாம்

கெஞ்சுவது வேண்டாம்

எக்காரணம் கொண்டும் ஆசையாக பேசம் தருணங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கெஞ்சுவதை தவிர்க்கவும். ஒரு கட்டத்திற்கு மேல் இது உங்களின் தரத்தை குறைத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Relationship Tips From The Movie Malai Nerathu Mayakkam

Recent tamil movie Malai Nerathu Mayakkam teaches so many relationship tips for this yonger generation about love and marriage.
Subscribe Newsletter