பொண்டாட்டிக்கூட சந்தோஷமா இருக்கணும்னா வெட்கப்படாம இந்த 4 விஷயத்தை ஒத்துக்குங்க!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களுக்கு எப்போதுமே ஒரு கெத்து இருக்கிறது. அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவாக இருந்தாலும் சரி, மாப்பிள்ளை பெண்ணெடுத்த வீடு என்ற உறவாக இருந்தாலும் சரி, கணவன், மனைவி, காதலன், காதலி என எந்த உறவாக இருந்தாலும் தாங்கள் சற்றே கெத்தாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

இதனால், பெண்களை அவ்வபோது நொட்டை சொல்வதும், அவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை தோன்றும் போதெல்லாம் திரும்ப, திரும்ப கூறி கேலி கிண்டல் செய்வதும் என இருப்பார்கள். இதனால் தங்கள் கெத்தை நிலைநாட்டிக் கொள்வார்கள்.

ஆனால், நீங்கள் ஒரு பெண் அல்லது உங்கள் மனைவியின் மனதில் ஓர் உயர்ந்த இடத்தை பிடிக்க இதை எல்லாம் விட்டுவிட்டு ஒரு நான்கு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். முக்கியமாக இல்வாழ்க்கை சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்பும் ஆண்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இது உங்கள் வேலை இல்லை!

இது உங்கள் வேலை இல்லை!

துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, துவைத்த துணியை மடித்து வைப்பது, சுப காரியங்கள் என்றால் விழுந்து, விழுந்து வேலை செய்வது என இந்த வேலைகள் எல்லாம் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தவறேதும் இல்லையே!

தவறேதும் இல்லையே!

ஆம், இன்று இல்லறத்தின் மேன்மைக்காக பெண்களும் ஆண்களுடன் பங்கெடுத்துக் கொள்ளும் போது. இல்லற, வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாக இருக்கிறோம் என்பதை தாண்டி, ஆண்களும் சமப்பங்கு வேலை செய்வதில் எந்த தவறும் இல்லையே. எனவே, ஆண்களும் வீட்டு வேலைகள் செய்யாலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பொறாமை!

பொறாமை!

பெண்கள் என்றாலே பொறாமை குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் உடன் பணிபுரியும் பெண்களுடன் கிசுகிசு பேசுவது, மற்றவர் மீது பொறாமை படுவது, மற்றவர்களை விமர்சனம் செய்வதை தான் பெரும்பாலும் செய்து வருகின்றனர் என்ற பேச்சை மாற்ற வேண்டும்.

குடைச்சலும், தொந்தரவுகளும்!

குடைச்சலும், தொந்தரவுகளும்!

ஆண்களுக்கு இணையாக வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கு இருக்கும் அதே அலுவல் மன அழுத்தம், டார்கெட், மற்றும் இதர உயரதிகாரிகள் தரும் குடைச்சல், தொந்தரவுகள் என பலவன இருக்கும். அவர்களும் அனைத்தையும் தாண்டி வேலை செய்து வருகிறார்கள் என்பதை ஆண்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பேச்சுரிமை பறிப்பது!

பேச்சுரிமை பறிப்பது!

பெண்களுக்கு ஆண்கள் அவர்களது சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்பதே தவறான கருத்து. பெண்களின் சுதந்திரத்தை தங்கள் கையில் வைத்துக் கொள்ளும் உரிமையை முதலில் யார் கொடுத்தது. அதிலும், இந்த 21-ம் நூற்றாண்டில் பெண்களை கைக்குள் அடக்கி வைத்துக்கொள்ள நினைப்பது தவறு.

மனதினுள் வர மாட்டார்கள்!

மனதினுள் வர மாட்டார்கள்!

பெண்களை நீங்கள் கைக்குள் அடக்கி வைத்து ஆள நினைத்தால், அவர்கள் உங்கள் மனதினுள் வர மாட்டார்கள். எனவே, அவர்களது உரிமையில் கைவைக்க வேண்டாம். மேலும், அவர்களது உரிமை, சுதந்திரம் அவர்களுக்கே உரித்தானது. ஆண்கள் வெறும் காவலர்களே என்பதை ஆண்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்!

எங்களாலும் முடியும்!

எங்களாலும் முடியும்!

சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கிலேயே இந்திய பெண்கள், நாங்கள் ஆண்களுக்கு இணையானவர்கள் மட்டுமல்ல, அதற்கும் மேல் என என்பதை நிரூபித்துவிட்டனர். இதை ஆண்கள் உடனே, அவர்களது கோச் ஆண்கள் தானே, அதனால் தான் அவர்கள் வென்றார்கள் என விதண்டாவாதம் பிடிக்கக் கூடாது.

திறமை அனைவருக்கும் பொது!

திறமை அனைவருக்கும் பொது!

பெண்களாலும் வெற்றிகள் குவிக்க முடியும். பெண்களும், ஆண்களும் சமம் என்பதை ஆண்கள் முக்கியமாக ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த நான்கு விஷயங்களை நீங்கள் உங்கள் மனைவியிடம் ஒப்புக்கொண்டால் உங்கள் இல்வாழ்க்கையில் சந்தோஷம் நிரம்பும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Four Things You MUST Accept To Win The Heart Of Your Woman

Four Things You MUST Accept To Win The Heart Of Your Woman, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter