For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பொண்டாட்டி எப்பவும் சங்கடமாவே இருக்காங்களா? இதெல்லா நீங்க பண்ணுங்க எல்லா சரி ஆயிடும்!!

|

பெரும்பாலான திருமணமான ஆண்கள் இவ்வாறு புலம்புவார்கள்," அவ, எப்ப பாத்தாலும் ஒரு மாதிரியே இருக்கா, கேட்டா சங்கடம்'னு சொல்றா.. என்ன பிரச்சனைனே தெரியல.." என்று. ஏன் நீங்களே கூட இதை உங்கள் அம்மாவிடமோ, நண்பர்களிடமோ கூறி புலம்பியிருக்கலாம்.

ஒரே இடத்துல புருஷனும், பொண்டாட்டியும் வேலை பண்ணா இவ்வளோ பிரச்சனை வருமா என்ன?!!

ஆனால், என்றாவது அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? நேரடியாக போய் உங்கள் மனைவியிடம் கேட்டால், அவர்கள் ஒன்றுமில்லை என்று தான் கூறுவார்கள். ஆனால், அதன் பின்னன்னியில் சில பல காரணங்கள் ஒளிந்து இருக்கின்றன.

தங்களுக்கு மிகவும் பிடித்த ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 11 விஷயங்கள்!!!

ஆண்களுக்கு இதெல்லாம் ஒரு காரணமா என்று கொஞ்சம் மட்டமாக தெரிந்தாலும், பெண்கள் என்பவர்கள் வளர்ந்த குழந்தைகள் தான் என்பதை நாம் மறந்துவிட கூடாது, அவர்கள் அப்படி தான் இருப்பார்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாராட்டு கிடைக்காத போது

பாராட்டு கிடைக்காத போது

மனைவி எப்போதும் பாராட்டுதலை எதிர்பார்ப்பார்கள், அது அவர்களை ஊக்குவிக்கும் என்பது தான் உண்மை. அவர்கள் நன்கு சுவையாக சமைத்த போது ஒரு வார்த்தை "நல்லா இருக்கு டீ.." என்று நீங்கள் சொல்வது மட்டுமே அவர்களுக்கு போதுமானது. அவர்கள் எதிர்பார்ப்பது இந்த சிறு அங்கீகாரம் தான். பெரும்பாலும் ஆண்களும், குழந்தைகளும் இதை செய்வதே இல்லை. இது அவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். போக போக சங்கடமாக உணர்வார்கள் பிறகு மன அழுத்தமாக அது மாறும்.

குழந்தைகள் புரிந்துக் கொள்ளாமல் இருப்பது

குழந்தைகள் புரிந்துக் கொள்ளாமல் இருப்பது

பெரும்பாலும் வீட்டு தலைவனாக இருந்தாலும், குழந்தைகளை கண்டிப்பாக, அதட்டி வளர்ப்பது தாய் தான். அப்பாக்கள் கொஞ்சி கொஞ்சி நண்பனாகிவிடுவார்கள். அதனாலேயே பிள்ளைகளுக்கு அம்மா என்றால் சில சமயம் வெறுப்பு வரும். இந்த செயல் மனைவிகளை சங்கடமாக உணர வைக்கும். இதற்கு அப்பாக்களும் கொஞ்சம் நல்லது, கெட்டது எடுத்துக் கூறி குழந்தைகளை வளர்ப்பது அவசியம்.

 சமையல் சரியாக வரவில்லை என்றால்

சமையல் சரியாக வரவில்லை என்றால்

பல வீடுகளில் இது நடக்கும், அவர்கள் ஈடுபாட்டுடன் சமைத்த உணவு சரியான சுவையில் வரவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருந்துவர். அதுவும், ஏதாவது பண்டிகை நாட்களில் இனிப்புகள் சமைத்து அது சரியாக வரவில்லை என்றால் அவ்வளவு தான்.

நலம் விசாரிப்பது

நலம் விசாரிப்பது

உங்கள் மனைவி வேலைக்கு செல்பவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களை நலம் விசாரிப்பது அவசியம். தினமும் குறைந்தது அலுவலகம் சென்று வந்தவுடன் "எப்படி இருக்க, இன்னிக்கி என்ன பண்ண..." என்று நீங்கள் அவர்களிடம் கேட்டாலே போதுமானது. அதையும் தாண்டி அவர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களை பற்றி விசாரிக்கும் ஆணாக நீங்கள் இருந்தால்.... தெய்வம் சார் நீங்க!!!! இதுவே போதும் உங்கள் மனைவிக்கு எந்த சங்கசமும் வராது. மிகவும் சந்தோசமாக இருப்பார்கள்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

உங்கள் உடலில் இதயம் எப்படியோ, அப்படி தான் உங்கள் வீட்டில் மனைவி..., இவர்கள் இயங்குவது நின்றுவிட்டால் உங்கள் கதி அம்பேல்!! அவர்கள் ஓய்வெடுக்க மாட்டார்கள். நீங்கள் தான் அவர்களை ஓய்வெடுக்க கூற வேண்டும். மற்றும் சிறு சிறு உதவிகளை செய்ய வேண்டும். குறைந்தது செய்வது போல் நடிக்கவாவது வேண்டும். அதுவே அவர்கள் மிகப் பெரிதாக எண்ணி பெருமிதம் அடைவார்கள்.

உறுதுணையாக இருத்தல்

உறுதுணையாக இருத்தல்

பெரும்பாலும் இது எதிர்மறையாக நடக்கும் கணவனுக்கு ஏதாவது கவலை அல்லது பிரச்சனை என்றால் மனைவி உறுதுணையாக இருப்பார்கள், இது இயல்பு. இதே விஷயம், உங்கள் மனைவி கவலையாக இருக்கும் போது, நீங்கள் அவள் அமைதியாய் இருக்கட்டும் எல்லாம் சரியாகிவிடும் என்று இருக்காமல், அவருக்கு ஆறுதல் சொல்லி, உறுதுணையாக இருக்க வேண்டும்.

அம்மா பிள்ளைகள்

அம்மா பிள்ளைகள்

சில ஆண்கள் திருமணத்திற்கு பின்னும் கூட அம்மா பிள்ளைகளாக இருப்பார்கள். இதில் தவறொன்றும் கிடையாது, ஆயினும் உங்கள் அம்மா பேச்சை மட்டும் கேட்டுக்கொண்டு மனைவி சொல்வதை காதில் வாங்காமல் இருந்தால் அவர்கள் சங்கடமாக தான் இருப்பார்கள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Your Wife Is Stressed Out All The Time

Do you about the reasons why your wife is stressed out all the time? read here.
Story first published: Thursday, May 7, 2015, 11:43 [IST]
Desktop Bottom Promotion