Just In
- 3 hrs ago
இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...!
- 4 hrs ago
இந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்... ஏனா இவங்க சைக்கோத்தனமா காதலிப்பாங்களாம்...!
- 5 hrs ago
மாரடைப்பு ஏற்படாம தடுத்து உங்க இதயத்தை பாதுகாக்க இந்த எண்ணெய் உதவுமாம்..!
- 6 hrs ago
ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபி
Don't Miss
- News
மாற்றுத்திறனாளி மகனை சுமந்து சென்ற தாய்.. உருகிய கலெக்டர் செய்த பேருதவி... இதயங்களை வென்ற அன்பழகன்!
- Movies
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- Automobiles
கொளுத்தும் வெயில்! வாகனங்களை பத்திரமா பாத்துக்கோங்க... நடுரோட்டில் கால் வாராம இருக்க என்ன செய்ய வேண்டும்?
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆண்கள் பெண்களிடம் இருந்து மறைக்கும் கசப்பான உண்மைகள் என்னென்ன தெரியுமா?
காதலை பொறுத்தவரை ஆண், பெண் இருவரிடையே அவர்களின் அன்பை தீர்மானிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன. இருவருக்கும் இடையில் இருக்கும் புரிதல் மற்றும் அன்பானது அவர்களுக்கு இடையில் இருக்கும் தகவல் பரிமாற்றம் மற்றும் ரகசியங்களை வெளிப்படுத்துதல் பொறுத்தே அமைகிறது. பெண்கள் தங்கள் கருத்து வேறுபாடுகள் மற்றும் உணர்ச்சிகளை உடனடியாக வெளிப்படுத்துபவர்களாகவும் கருதப்பட்டாலும், ஆண்கள் தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவோ அல்லது மேலும் மோதல்களைத் தவிர்ப்பதற்காகவோ பெரும்பாலானவற்றை மறைக்க முயலுகிறார்கள்.
சில சமயங்களில் தங்கள் கூட்டாளர்களுடன் தங்கள் உள் குழப்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை ஆண்கள் உணர்ந்தாலும், அவர்களின் பாதுகாப்பின்மை அல்லது ஆண் என்ற கர்வம் தோன்றுவதால் பின்வாங்கப்படுகிறார்கள். சமூக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவே ஆண்கள் இவற்றை மறைக்கிறார்கள். ஆண்கள் தங்கள் துணையிடம் இருந்து பொதுவாக மறைக்கும் விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மற்ற பெண்களால் ஈர்க்கப்படுவது
ஒரு ஆண் ஒரு பெண்ணிடமிருந்து மறைக்கும் மிக அடிப்படையான உண்மைகளில் ஒன்று மற்ற பெண்களிடம் ஈர்க்கப்படுவது. இது ஒரு பெண்ணை எரிச்சலடையச் செய்யலாம் அல்லது கோபமடையச் செய்யலாம், வேறு ஒருவரின் அழகையும் தோற்றத்தையும் யாரும் போற்றுவது இயல்பானது. ஆனால் இது ஒரு மனிதன் எப்போதும் தன் கூட்டாளரிடமிருந்து மறைத்து வைக்கும் ஒன்றாகும். அவர்களின் உறவில் எந்தவிதமான தவறான புரிதல் அல்லது சிறிய சச்சரவுகளையும் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது.

காதலி எரிச்சலூட்டுவதை வெளிப்படையாக கூறமாட்டார்கள்
சில நேரங்களில், நீங்கள் ஆழமாக காதலிக்கும்போது கூட, உங்கள் கூட்டாளர் மிகவும் எரிச்சலூட்டும் விதத்தில் நடந்து கொள்ளலாம். ஒரு பெண் அதை சத்தமாகக் கூறும்போது, ஒரு மனிதன் அதைக் கடந்து செல்ல அனுமதிக்கக்கூடும், மேலும் தங்கள் கூட்டாளர்களை உற்சாகப்படுத்த மற்ற சாத்தியங்களை நாடுவார்கள். ஆனால் அது எப்போதுமே அப்படி இருக்காது. சிலசமயம் ஆண்களும் பதிலுக்கு கோபப்பட வாய்ப்புள்ளது.
சாப்பிட்டவுடன் இந்த செயல்களை தெரியாம கூட செஞ்சிராதீங்க... இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து...!

நிதி இயலாமை
ஆண்கள் வீட்டை பராமரிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. ‘வீட்டின் நாயகன்' என்று நீங்கள் அழைக்கலாம். எனவே, சமுதாயத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த பாத்திரத்தின் காரணமாக, அவர்கள் நிதிப் பாதுகாப்பின்மை மற்றும் வேலை இயலாமை ஆகியவற்றின் அழுத்தங்களை உணரக்கூடும். இந்த பாதுகாப்பற்ற தன்மைகளை அவர்கள் உணர்ந்தவுடன், அவர்கள் தங்கள் கூட்டாளர்களிடமிருந்து அதை மறைப்பதை ஒரு புள்ளியாக மாற்றிவிடுவார்கள், ஏனெனில் அவர்கள் தங்களின் பாதிப்பு அல்லது பலவீனத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.

பாலியல் வலிமை இல்லாதது
உடலுறவில் அனுபவம் இல்லாதது அல்லது எந்தவிதமான உடல்ரீதியான நெருங்கிய உறவுகள் உண்மையில் ஒரு மனிதனின் பெருமைக்கு சவால் விடும். சொல்லப்போனால் அது முற்றிலும் அவர்களுக்கு தெரிந்தாலும், அவர்கள் அதை உண்மையிலேயே தங்கள் கூட்டாளர்களிடமிருந்து மறைப்பார்கள்.

உள்புற குழப்பங்கள்
பொதுவாக ஆண்கள் வலிமையாக எப்போதும் கம்பீரமான ஆணாக இருக்க வேண்டும் என்றுதான் அவர்களை சுற்றி இருப்பவர்கள் எதிர்பார்ப்பார்கள், ஆனால் அவர்களும் உணர்ச்சி சிக்கல்களால் பாதிக்கப்படுகிறார்கள், அதை வெளியேற்ற வேண்டிய அவசியத்தை உணர்கிறார்கள் என்பது நமக்கு புரியவில்லை. இருப்பினும், சமூக அமைப்பு அவர்களின் ஆழ்ந்த அச்சங்களையும் பாதிப்புகளையும் வெளிப்படுத்துவது அவர்களுக்கு மிகவும் கடினமாக்கிவிட்டது. அவர்கள் உங்களிடம் முழு நம்பிக்கையையும் செலுத்தும் வரை, அவர்கள் தங்கள் யதார்த்தத்தை மறைக்க தங்களால் முடிந்தவரை முயற்சிப்பார்கள்.
ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம்... அவர்கள் நீண்ட காலம் பூமியில் வசிக்க காரணம் இதுதான்...!

கடுமையான தோற்றத்தில் இருந்து தப்பிக்க நினைப்பது
வலுவான மற்றும் கடுமையான தோற்றத்தின் தொடர்ச்சியான தேவையைத் தவிர, ஆண்களும் இயல்பாக வாழ விரும்புவார்கள். ஒரு உறவில் இருக்கும்போது, அதில் பெரும்பகுதி தங்கள் கூட்டாளர்களை மகிழ்விப்பதோடு தொடர்புடையது, சில ஆண்கள் அனைத்து பாசாங்குத்தனத்தில் இருந்தும் மிகவும் சோர்வாக இருக்கிறார்கள். வலுவான ஆணாக தோற்றமளிப்பதற்குப் பதிலாக, அவர்கள் தாங்களாகவே இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் இமேஜ் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு காரணமாக இதனை மறைக்கிறார்கள்.