For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா?

உங்கள் கூட்டாளரை உங்களிடம் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான உற்சாகத்தை நீங்கள் உணரலாம் மற்றும் உங்கள் அன்பை சூடான மற்றும் தீவிரமான முத்தத்தின் வடிவத்தில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.

|

ஒரு காதல் உறவில், முத்தம் என்பது சுவாரஸ்யமான ஒன்றாகும். முத்தத்தை விரும்பாதவர்கள் யாரும் இங்கு இல்லை. அனைத்து ஜோடிகளும் அவர்களது உறவில் முத்தத்தை எதிர்நோக்குவார்கள். நெற்றி, கன்னம், கண்கள் மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடிய லிப்-லாக் வரை, முத்தமிடுவது உங்கள் உறவை உண்மையில் மசாலாவை சேர்க்கும். முத்தம் கொடுக்கும்போதும், பெறும்போதும் உங்கள் முதுகெலும்புக்கு கீழே ஒரு உணர்வை அனுப்புவதோடு மட்டுமல்லாமல், உங்கள் கூட்டாளரிடம் உடல் ரீதியாக ஈர்க்கப்படுவதையும் உணர வைக்கிறது.

things-that-happen-when-you-kiss-your-partner

உங்கள் கூட்டாளரை உங்களிடம் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான உற்சாகத்தை நீங்கள் உணரலாம் மற்றும் உங்கள் அன்பை சூடான மற்றும் தீவிரமான முத்தத்தின் வடிவத்தில் நீங்கள் வெளிப்படுத்தலாம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த முத்தத்தின் சில நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்கள் துணை உங்களுக்கு முத்தம் கொடுக்கும்போது அல்லது நீங்கள் கொடுக்கும்போது நடக்கும் சிறப்பான விஷயங்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெருக்கத்தை அதிகரிக்கிறது

நெருக்கத்தை அதிகரிக்கிறது

உங்கள் துணையை நீங்கள் முத்தமிடும் தருணம், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான உடல் நெருக்கம் அதிகமாகிறது. உங்கள் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதுபோன்றும் மற்றும் நட்சத்திரங்கள் ஒளிர்வது போன்றும் நீங்கள் உணரலாம். நீங்கள் செய்ய விரும்புவது எல்லாம் அந்த தருணத்தில் உங்கள் துணையிடம் செய்யலாம். ஒருவருக்கொருவர் தொலைந்து போகும் மற்றொரு நிலை நெருக்கத்தை வளர்க்க தொடங்க முத்தம் முதன்மையாக இருக்கிறது. உங்கள் இருவரின் இதழ்கள் இணையும் தருணம், உடலும் உள்ளமும் சேர்ந்து இணைந்து நெருக்கத்தை அதிகரிக்கிறது.

MOST READ:சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா?

உணர்ச்சி பிணைப்பை வலுப்படுத்துகிறது

உணர்ச்சி பிணைப்பை வலுப்படுத்துகிறது

உங்கள் துணையை முத்தமிடுவது உங்களுக்கு வித்தியாசமான இன்பத்தையும் நெருக்கத்தையும் கொடுத்ததால், முன்பை விட உங்கள் கூட்டாளருடன் நீங்கள் உணர்ச்சி ரீதியாக பிணைந்திருப்பீர்கள். உடல் ரீதியான நெருக்கம் ஒரு உறவில் ஒரு முதன்மையான விஷயம் அல்ல என்றாலும், உங்கள் துணையுடன் நெருங்கிப் பழகுவதற்கு முத்தம் அவசியம். முத்தத்தின் போது நீங்கள் பெற்ற இன்பத்தை நீங்கள் நினைவுகூறும்போது, அது சிறப்புடையதாக உணர வைக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது

மன அழுத்தத்தை குறைக்கிறது

சில ஆய்வு முடிவுகள், முத்தமிடுவது உண்மையில் ஒருவரின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று கூறுகின்றன. உங்கள் துணை முத்தமிடும்போது, உங்கள் மனம் அதிக மகிழ்ச்சியான ஹார்மோன்களை உருவாக்குகிறது. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான நெருக்கத்தை நீங்கள் அனுபவிப்பதால், முத்தமிடுவது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும். ஆர்வம், காமம் மற்றும் அன்பு நிறைந்த ஒரு கணத்தை நீங்கள் வாழ்ந்த பிறகு நீங்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகமாகவும் இருக்கிறீர்கள்.

நேர்மறையாக யோசிக்க வைக்கிறது

நேர்மறையாக யோசிக்க வைக்கிறது

டோபமைன் மற்றும் ஆக்ஸிடாஸின் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்களின் வெளியீடு காரணமாக, நீங்கள் நன்றாக உணர ஆரம்பிக்கிறீர்கள். உண்மையில், உங்கள் துணையுடன் நீங்கள் கழித்த நெருங்கிய தருணங்களை நினைவுகூரும்போது கூட உங்களை அறியாமலேயே உங்கள் உதட்டில் சிரிப்பு இருக்கும். மேலும், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான உடல் தொடர்பு உங்கள் மனதை நேர்மறையான சிந்தனைகளால் நிரப்பும். உங்கள் துணையைச் சந்திக்கும் போது, உங்களிடம் இருக்கும் குறைகளை மறந்து நீங்கள் நேர்மறையான சிந்தனையுடன் இருப்பீர்கள்.

MOST READ:பெண்களே! ஆண்களை "அந்த " நேரத்தில் திருப்திபடுத்த நீங்கள் என்ன செய்யனும் தெரியுமா?

புரிந்துணர்வு தன்மை

புரிந்துணர்வு தன்மை

ஒரு வகையில், உங்கள் துணை உங்களை உண்மையிலேயே விரும்புகிறாரா இல்லையா என்பதைக் கண்டறிய முத்தம் உதவுகிறது. நீங்கள் இருவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறீர்களா இல்லையா என்பதை அறிய உங்கள் கூட்டாளர் பரிமாறிக் கொள்ளும் முத்த முறை உங்களுக்கு உதவும். உதாரணமாக, நீங்கள் அவரை அல்லது அவளை முத்தமிட முயற்சிக்கும்போது உங்கள் பங்குதாரர் உங்களை ஒதுக்கித் தள்ளினால், அவர் அல்லது அவள் அதில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். அல்லது அவர் அல்லது அவள் உங்கள் முத்தத்திற்குப் பதிலளிக்கவில்லை என்றால், உங்கள் கூட்டாளருக்கு உங்கள் மீது விருப்பம் குறைந்துள்ளதாகக் கருதலாம்.

விருப்பங்களை அறிய உதவுகிறது

விருப்பங்களை அறிய உதவுகிறது

முத்தத்தின் மூலம் உங்கள் கூட்டாளியின் விருப்பு வெறுப்புகளைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் முத்தமிடும் விதத்தை அவன் அல்லது அவள் விரும்பினால் அல்லது உங்கள் பங்குதாரர் நெருக்கமாக இருக்கும்போது விஷயங்களை கொஞ்சம் மெதுவாக எடுக்க விரும்பினால், உங்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கம் உங்கள் பங்குதாரர் விரும்புகிறாரா இல்லையா என்பதை அறிய இது உங்களுக்கு உதவும். உங்கள் கூட்டாளியின் உறுதிமொழிகளையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

MOST READ:உங்கள் படுக்கையறையில் நீண்ட நேரம் "விளையாட" இத பண்ணுங்க போதும்...!

செக்ஸ் உணர்வு அதிகரிக்கும்

செக்ஸ் உணர்வு அதிகரிக்கும்

உங்கள் செக்ஸ் இயக்கத்தை அதிகரிக்க முத்தம் நிச்சயமாக உங்களுக்கு உதவும். உங்கள் உடல் முழுவதும் இயங்கும் உணர்வுகளையும், உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் இடையில் ஒரு காந்த தீப்பொறியை உருவாக்கி, நீங்கள் மீண்டும் மீண்டும் அதே செயல்களைத் தேடுகிறீர்கள். அது உண்மையில் உங்களை நன்றாக உணரவைக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும், உங்களில் உள்ள ஹார்மோன்கள் உங்கள் கூட்டாளரிடம் உடல் ரீதியாக ஈர்க்கப்படுவதை உணர வைக்கும். இது இறுதியில், உங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக அமைய உதவுகிறது.

முத்தத்தின் அவசியம்

முத்தத்தின் அவசியம்

மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான தகவல்களுடன் நீங்கள் உடன்பட்டால், உங்கள் கூட்டாளரை அடிக்கடி முத்தமிடுவது ஏன் அவசியம் என்று உங்களுக்கு தெரியும். உங்கள் கூட்டாளருடன் அதிக அளவு நெருக்கம் மற்றும் மகிழ்ச்சியை நீங்கள் உணர பாலமாக இருப்பது முத்தம். உங்கள் கூட்டாளரை முத்தமிடும்போது நீங்கள் உண்மையிலேயே உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அது உங்கள் இருவருக்குள்ளும் வலுவான பிணைப்பை உருவாக்கும். உங்கள் உறவை வலுப்படுத்த உங்கள் துணையுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

things that happen when you kiss your partner

Here we are talking things that happen to your body when you kiss your partner.
Desktop Bottom Promotion