Latest Updates
-
சரும வறட்சி அதிகமா ஏற்படுதா? அப்ப காய்ந்த ரோஜாப்பூ இதழை வெச்சு ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. -
இளநீரை வெட்டிய பிறகு எவ்வளவு நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்? இளநீரை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும்? -
பொய் சொல்வதில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு... உங்க ராசி எப்படி? -
சித்திரகுப்தர் எப்படி எமதர்மனின் உதவியாளராக மாறினார்? இறப்பிற்கு ஏன் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது தெரியுமா? -
செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைல் சோயா மிளகு குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கடவுளின் உணவு என்று அழைக்கப்படும் உணவு எது? இது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? -
இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு கல்லீரல் நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம் - புதிய ஆய்வில் தகவல்! -
ஐயங்கார் ஸ்டைல் சின்ன வெங்காய காரக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
டிசம்பர் மாத புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் வளர்ச்சியுடன், இரட்டிப்பு லாபமும் கிட்டும்! -
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் 2 நகரங்கள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உங்களின் இந்த பழக்கங்கள் எவ்வளவு வலிமையான உறவையும் பிரித்துவிடுமாம்... உடனே மாத்திக்கோங்க...!
வெற்றிகரமான உறவுகள் மரியாதை, நம்பிக்கை மற்றும் தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன.
வெற்றிகரமான உறவுகள் மரியாதை, நம்பிக்கை மற்றும் தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன. வெற்றிகரமான, பாதுகாப்பான மற்றும் நெருக்கமான உறவுகளுக்கு இருவரிடம் இருந்தும் முயற்சிகள் தேவைப்படும். அது இருக்கும் பட்சத்தில் உங்கள் உறவானது உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்வதற்கான பாதுகாப்பான இடமாக மாறும்.


பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது
தம்பதிகளுக்குள் பகிரப்பட்ட பொறுப்புகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் இரு கூட்டாளர்களிடையே பொறுப்புகள் சமமாகப் பிரிக்கப்பட வேண்டும். ஒரு உறவின் தொடக்கத்தில், ஒரு நபர் எப்போதும் பகிரப்பட்ட பொறுப்புகளில் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ள முனைகிறார். ஆனால் காலப்போக்கில், இது மிகவும் சோர்வ ஏற்படுத்தலாம். நாளடைவில் இது மனக்கசப்பு மற்றும் சண்டைகளுக்கு வழிவகுக்கும்.

தனிப்பட்ட கேளிக்கைகளுக்கு நேரம் ஒதுக்குவது
உறவுகளில், நாம் அடிக்கடி ஒன்றாக இருப்பதற்கு போதுமான நேரத்தை ஒதுக்குவதில்லை. ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்காமல், தனிப்பட்ட ஆர்வம் மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களுக்காக அதிகமாக திட்டமிடுவது மற்றும் நேரத்தை ஒதுக்குவது உறவை மோசமாக பாதிக்கும்.

தனிப்பட்ட மனஅழுத்தம்
தனிப்பட்ட மனஅழுத்தத்தை உறவிற்குள் நுழைய அனுமதிப்பது உறவின் முறிவுக்கு வழிவகுக்கும்.தனிப்பட்ட மனஅழுத்தத்தை இருவரும் ஒன்றாக சேர்ந்து சமாளிப்பது ஆரோக்கியமான ஒரு உறவின் அங்கமாகும். எனவே உங்களின் மன அழுத்தத்தை ஒருபோதும் உங்கள் துணையின் மீது திணிக்காதீர்கள்.

தொழில்நுட்பத்தால் ஏற்படும் சமநிலையின்மை
தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்துதல் மற்றும் அதையே சுரண்டுவது, சுற்றியிருக்கும் உறவில் கவனம் செலுத்தாமல் இருப்பது, அதிக தூரத்தை ஏற்படுத்தும். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறை அதிகரித்தவுடன் அது உறவுகளின் சமநிலையில் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உறவுகளில் உள்ளவர்களிடையே அதிக தூரத்திற்கு வழிவகுக்கிறது.

விமர்சனம்
உங்கள் துணையை எதற்கெடுத்தாலும் விமர்சிப்பது நல்லதல்ல, அவர்கள் எவ்வளவு தவறாக இருந்தாலும் சரி தொடர்ச்சியா விமர்சனம் உறவுகளில் தூரத்திற்கு வழிவகுக்கும்.உங்களின் விமர்சனத்தை நேர்மறையான முறையில் உங்கள் துணையின் மனதை காயப்படுத்தாமல் கூற வேண்டும். கடுமையான வார்த்தைகள் ஒருபோதும் புரிந்துணர்வைத் தராது ஆனால் வெறுப்பை கண்டிப்பாக தரும் என்பதை மறந்து விடாதீர்கள்.



Click it and Unblock the Notifications
