அலுவலக தொடர்பு குறித்து பெண்கள் கூறியிருக்கும் சில பகீர் வாக்கு மூலங்கள்... - இரகசிய டைரி!

By Staff
Subscribe to Boldsky

இதை நாம் தவறு என கூற முடியாது... ஆனால், தவிர்க்க கூடும். ஆம்! கட்டுப்பாடு இருந்தால் இதை தவிர்க்கலாம். இப்போதெல்லாம் நாம் வீட்டில் இருக்கும் நபர்களுடன் நேரம் செலவழிப்பதை காட்டிலும் அலுவலகத்தில் இருக்கும் நபர்கள் உடன் தான் அதிக நேரம் செலவழிக்கிறோம். வீட்டில் அதிக பட்சம் வாரத்தில் ஒரு நாள் தான் இருக்கிறோம்.

உறக்கம், சாப்பிடுதல், குளியல் நேரத்தை கழித்து பார்த்தால் நம் உறவுகளோட செலவழிக்கும் நேரம் மிக குறைவாக தான் இருக்கும்.

ஆகையால், அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவது என்பது இயல்பு. ஆனால், அது வெறும் ஈர்ப்பாக மட்டும் நின்று விட்டால் நல்லது. அதற்கு அடுத்த நிலை எட்டுவது தான் தவறு. வெறும் டேட்டிங்கில் துவங்கி, கேட்சப், பேக்கப் வரை முடியும் அலுவலக உறவுகள் நிறையவே இருக்கின்றன. இதில் திருமணமானவர், திருமணமாகாதவர் என்ற பிரிவினையே இல்லை.

இப்படியான அலுவலக தொடர்பு குறித்து பெண்கள் கூறியிருக்கும் சில பகீர் வாக்கு மூலங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏற்கனவே திருமணமானவன்...

ஏற்கனவே திருமணமானவன்...

அவனும், நானும் ஒரு கட்டத்தில் ஒன்றாக வெளியே சென்று வர துவங்கினோம். என்னை விட அவன் ஆறு ஆண்டுகள் வயதில் மூத்தவன். ஆரம்பத்தில் வெறும் நட்பாக மட்டுமே இருந்தது. ஆனால், சிறிது காலத்தில் அது நெருங்கிய தொடர்பாக மாறியது. அப்போது தான் எனது மற்றொரு அணியை சேர்ந்த நண்பன் மூலமாக அவன் ஏற்கனவே திருமணமாகி மூன்று வயது குழந்தைக்கு தந்தை என்பதை அறிய வந்தேன்.

இந்த செய்தி அறிந்த வேகத்தில் என்னை கோபம் எரிமலையாய் வெடித்தது. அவன் திருமணம் ஆனவன் என்பதை என்னிடம் இருந்து மறைத்து விட்டான். கையும், களவுமாக அவனை பிடித்து மண்டையில் உரைக்கும் படி திட்டி குட்பை சொல்லி பிரிந்தேன்.

எச்.ஆர் தலையிட்டு...

எச்.ஆர் தலையிட்டு...

எனக்கும் என் அணியின் மேலாளருக்கும் தொடர்பு இருந்தது. இதை யாரோ எச்.ஆர் வரை கொண்டு சேர்த்து விட்டனர். அதன் பின் எங்கள் உறவு ஒரு சீரியஸ் பிரச்சனையாக மாறியது. என்னை வேறு அணிக்கு மாற்றினார்கள். என் புதிய அணியுடன் ஒத்துப்போக கொஞ்சம் சிரமமாக இருந்தது.

ஆனால், நான் அணி மாறிய அடுத்த சில வாரங்களில் என் பழைய மேனேஜர் வேறு ஒரு பெண்ணுடன் டேட் செய்ய துவங்கிவிட்டான். ஒரு நாள் என் முன்னாடியே கையும் களவுமாக சிக்கினான்.

அசிங்கமான பிரிவு...

அசிங்கமான பிரிவு...

என் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஆணுடன் இரண்டு ஆண்டுகள் டேட்டிங் உறவில் இருந்து வந்தேன். எங்களுக்குள் ஒரு மோசமான பிரிவு உண்டானது. நாங்கள் இருவரும் ஒட்டுமொத்த அலுவலகத்தின் முன் நின்று சண்டையிட்டு கொண்டோம்.

எதிர்பார்த்தது போலவே, மொத்த அலுவலகத்தின் கிசுகிசுவாக எங்கள் பெயர் அடிப்பட்டது. ஒரு கட்டத்தில் என்னால் அதை கையாள முடியாமல் போக, வேலையை ரிசைன் செய்தேன்.

கவன சிதறல்!

கவன சிதறல்!

என்னுடன் பணிபுரிந்து வரும் நபர் மீது எனக்கொரு க்ரஷ் இருந்தது.நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோம். வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே அவனால் என் வேலையில் பெரும் கவன சிதறல் உண்டாவதை நான் உணர்ந்தேன்.

அவனை பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. அவனுடன் அடிக்கடி காபி பிரேக் செல்ல ஆரம்பித்தேன். பிறகு என் வேலையில் கவனம் செலுத்தலாம் என்று நினைக்கும் போது, என் டெஸ்க் அருகே வந்து நின்றுக் கொள்வான். என்னை ஈர்க்க முயற்சிப்பான்.

ஒரு கட்டத்தில் என் வேலையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து. அவனுடன் பிரிக்கப் செய்து கொண்டேன்.

செக்ஸ்!

செக்ஸ்!

நாங்கள் ஒரு கால் செண்டரில் வேலை செய்து வந்தோம். நாங்கள் இருவருமே லேட்-நைட் ஷிப்ட். அலுவலகத்தில் நாங்கள் எப்போதுமே ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்து வந்தோம். ஆனால், இரவு நேரத்தில் அது முடியவில்லை. ஒருமுறை நாங்கள் ரெஸ்ட்ரூமில் உறவு வைத்துக் கொண்டோம்.

எதிர்பாராத விதமாக யாரோ ஒருவர் அதை பார்த்துவிட்டார். அவர் மூலமாக எங்கள் அலுவலகம் முழுவதும் இந்த செய்து பரவியது. இது மேலாளார் வரை செல்ல நாங்கள் இருவருமே வேலையை ரிசைன் செய்துவிட்டோம்.

விரும்ப முடியவில்லை...

விரும்ப முடியவில்லை...

வெகு விரைவில் அவனிடம் பிரபோஸ் செய்தேன். நாங்கள் இருவரும் உறவில் இணைந்தோம். எங்கள் உறவு துவங்கிய ஒருசில மாதத்திலேயே அலுவலகத்தில் வேலை செய்யும் நபரிடம் காதலில் இருப்பது சரியான முடிவில்லை என்பதை அறிந்தேன்.

ஒரே நபரை வீட்டிலும், அலுவலகத்திலும் பார்த்துக் கொண்டே இருப்பது சற்று உறவில் எரிச்சலை ஏற்படுத்தலாம். எங்கள் இருவருக்குள் சலிப்பு ஏற்படுத்தலாம் என்று கருதினேன். ஆகையால், எங்கள் உறவு கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தது. சேர்ந்த வேகத்தில், எங்கள் உறவை முடித்துக் கொண்டோம்.

பயனுடைய நண்பர்கள்...

பயனுடைய நண்பர்கள்...

என்னுடன் பணிபுரியும் ஆண் மீது ஈர்ப்பு கொண்டிருந்தேன். அவனும் என்னுடம் ஈர்ப்பாக தான் இருந்தான். நாங்கள் இருவரும் பிரெண்ட்ஸ் வித் பெனிபிட் என்ற வகையில் உறவில் இருக்க விரும்பினோம்.

ஆனால், ஒரு கட்டத்தில் நான் உணர்வு ரீதியாக மிகவும் நெருக்கமாக நினைத்தேன். ஆனால், அவன் நேரெதிராக இருந்தான். நாங்கள் பிரிந்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிறது. நான் இந்த அலுவலகத்தை விட்டு செல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு முறை அவனை பார்க்கும் போதும், நாங்கள் சேர்ந்து இருந்த நினைவுகள் வந்து என்னை தொல்லை செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Secret Confession: Women Confess About Their Office Affair

    When we end up spending more time in office than home, it is inevitable that some of us may become romantically or physically involved with our colleagues. No matter how desirable an office romance may sound like, it comes with its own set of troubles.
    Story first published: Monday, May 14, 2018, 12:20 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more