For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பேருந்தில் மலர்ந்த காதலால் அடைந்த ஏமாற்றம்... இந்நாள் வரை மறக்க முடியாத சோகம் - My Story #247

  By Staff
  |

  நான் ஏற்கனவே ஒரு காதலில் மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்கில் இருந்து விலகி வந்தவள். அது காதலா என்ற சந்தேகம் கூட என்னுள் பலமுறை எழுந்துள்ளது. அதனால் இருவரும் நல்லப்படியாக பேசியே ஒரு முடிவெடுத்து விலகிவிட்டோம்.

  அதன் பிறகு சில காலம் என் வாழ்க்கை ஏப்ரல்,மே மாதங்களை போல விடுமுறை நாட்களை கொளுத்தும் வெயில் வீணடிப்பது போல கொஞ்சம் வெறுமையாக தான் நகர்ந்தன. காதலிக்க வேண்டிய இளம் வயதில் ஒரு தவறான காதல் தேர்வால்... நான் தனியாக... சுற்றித்திரிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்.

  ஒரு மாற்றம் வேண்டும் என்பதால்.. என்னிடம் ஸ்கூட்டி இருந்த போதிலும், பேருந்துகளில் பயணிக்க ஆரம்பித்தேன். நிறைய புதிய நபர்கள், புதிய முகங்கள், ஜன்னல் ஓரமாக ஒரு இருக்கை தேடிப்பிடித்து வேடிக்கைப் பார்த்து கொண்டே நேரம் செலவழிப்பதை எனது பொழுதுபோக்காக வைத்திருந்தேன்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஒரு நாள்...

  ஒரு நாள்...

  அப்போது தான் ஒரு நாள் மாலை நேரம், பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தேன். நன்கு ஆஜானுபாகுவான தோற்றத்துடன் ஒரு ஆண் நின்றுக் கொண்டிருந்தான். ஜன்னலின் வெளிப்புறம் ஒட்டப்பட்டிருந்த விளம்பர ஸ்டிக்கர் காரணமாக அவனது முகத்தை பார்க்க இயலவில்லை. அவன் நான் இருந்த பேருந்தில் ஏறத்தான் முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.

  ஒருவேளையாக பேருந்து நகர, நகர ஓடிவந்த ஏறினான். அவன் வைத்திருந்த தோள்பையை என்னிடம் வைத்துக் கொள்ளுமாறு கொடுத்தான். எனக்கு, அவன் இதயத்தையே கொடுத்தது போல உணர்வு. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்பார்களே. அதே தான். ஆனால், இதுவும் தவறான தேர்வாக போய்விடுமோ என்ற அச்சம் என்னுள் கொஞ்சம் இருந்தது.

  ஒரு சில நிறுத்தங்கள்...

  ஒரு சில நிறுத்தங்கள்...

  பேருந்து நகர்ந்தது... என் இதயம் மட்டும் ஒரே இடத்தில் நகராமல் நின்றுக் கொண்டே இருந்தது. அடுத்த ஒருசில நிறுத்தங்களில் பேருந்தின் கடைசி ஸ்டாப் வந்தது. அவன் இறங்கிவிட்டான். ஆனால், என் மனம் அவன் மீதிருந்து அகலாமல் அப்படியே இருந்தது. அவன் வேறு வழியில் செல்ல, நான் என் வீடு திரும்பினேன். மீண்டும், மீண்டும் அவனது நினைவே. இதுநாள் வரை என்னுள் இப்படி ஒரு தாக்கம் ஏற்பட்டதே இல்லை.

  ஏமாற்றம்!

  ஏமாற்றம்!

  அவனை மீண்டும் அதே பேருந்தில் காணலாம் என்று கருதி தினமும் அதே பேருந்தில், அதே நேரம் பயணிக்க துவங்கினேன். ஆனால், அடுத்த ஒருசில நாட்களுக்கு அவன் என் கண்களில் சிக்கவே இல்லை.

  வந்தான்... ஒரு வாரம் கழித்து மீண்டும்... அதே பேருந்தில் தினமும் பயணிக்க துவங்கினான்... அதன் பிறகு அவனை காணும் வாய்ப்பை நான் ஒருமுறை கூட தவறவிடவில்லை. அவனிடம் நுட்பமாக பலவற்றை கவனிக்க துவங்கினேன். அவனது ஐடி கார்டில் இருந்து, அவன் எடுத்து வரும் பையில் இருந்து அனைத்தையும் கவனித்தேன். ஆனால், அவனது பெயரை மட்டும் அறிய முடியவில்லை.

  சில நாட்கள்...

  சில நாட்கள்...

  பேருந்திலேயே எங்கள் பயணம் சில நாட்கள் கழிந்தது. ஆரம்பத்தில் நான் மட்டுமே அவனே கண்டுக் கொண்டிருந்தேன். ஓரிரு வாரங்கள் கழித்தே நானும் தினமும் அதே பேருந்தில் வருவதை அவன் கவனிக்க துவங்கினான். ஆனால், என்னை சட்டை செய்யாமல் அவன் தன் வேலையில் கவனமாக இருந்தான்.

  ஒருமுறை எனக்கு டிரைவர் இருக்கை எதிரே முன்னாடி உட்காரும் வாய்ப்பு கிடைத்தது. முதல்முறையாக அவன் பின்னாடி இருந்து ஏறுவதை கண்டேன். ஆனால், அம்முறை நான் அவனை கவனிக்காததை போல நடித்தேன்.

  எப்படி?

  எப்படி?

  நான் உட்கார்ந்து வர., அவன் பேருந்தின் கடைசி வரிசையில் அந்த நெருக்கமான கூட்டத்தில் நின்றுக் கொண்டு வந்தான். என்னுள் கொஞ்சம் வருத்தமும் இருந்தது. அவனுக்காக எனது இருக்கையை அளிக்கலாம் என்றால், அதற்கும் வழியில்லை.

  அவன் காணாத போது அவனை பார்த்துவிட வேண்டும் என... அவனை நோக்கி முகத்தை திருப்பினேன்.... அவன் ஏற்கனவே என்னை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அப்போது தான் உணர்ந்தேன். அதிர்ச்சியில் உடனே வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டேன்.

  அழகான தருணம்...

  அழகான தருணம்...

  கடைசி பேருந்து நிறுத்தம் வந்தது. அனைவரும் இறங்கிக் கொண்டிருந்தனர். நான் டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த காரணத்தால் உடனே இறங்க முடியவில்லை. அவன் கொஞ்சம், கொஞ்சமாக என்னை நோக்கி முன்னேறி வந்துக் கொண்டிருந்தான். நான் இறங்கும் போது அவன் என் பின்னாடி நின்றுக் கொண்டிருந்தான். அதை இன்றும் என்னால் மறக்கவே முடியாது. அது என் வாழ்வில் நடந்த ஒரு அழகான தருணமாக கருதுகிறேன்.

  கனவு போல...

  கனவு போல...

  எப்போதும் போல எங்கள் பாதை இங்கிருந்த மாரத்தான் போகிறது என்று கருதி நடக்க துவங்கினேன். ஒருசில அடிகள் எடுத்து வைத்த பிறகு... அவனை பார்க்க திரும்பினேன்... அவன் பேருந்தை விட்டு இறங்கி நகராமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நிஜமாகவே என்னை தான் பார்க்கிறானா? இது கனவா, நிஜமா என்று புரியாமல் திகைத்துப் போனேன்.

  அதற்கு அடுத்த நாளில் இருந்து அருகருகே இருக்கும் இருக்கையில் நாங்கள் இடம் பிடித்து அமர்ந்தோம். ஆனால், ஒருமுறை கூட நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. இதுதான் காதலா... இந்த தயக்கம் தான் காதலா? என்று பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

  நடுக்கம்!

  நடுக்கம்!

  ஒவ்வொரு முறையும் அவனுடன் பேசலாம் என்று தைரியம் வரவழைத்துக் கொண்டு முயற்சி செய்வேன். ஆனால், என்னுள் இருக்கும் நடுக்கம் பெரும் தடையாக என்னை பேசவிடாமல் தடுத்தது. இதழ்கள் தான் பேசிக் கொள்ளவில்லையே தவிர, எங்கள் கண்கள் நிறையவே பேசத் துவங்கியிருந்தன.

  அவனை பற்றி நிறைய கனவு கண்டு வந்தேன். ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக நாங்கள் ஒருவரும் ஒரே இருக்கையில் அருகருகே அமரும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவனுக்கு யாரிடம் இருந்தோ அழைப்பு வந்தது. அப்போது தான் முதல் முறையாக அவனது குரலை நன்கு கேட்க முடிந்தது. மேலும், அவன் பேசியதை வைத்து ஒரு இஸ்லாமியன் என்பதையும் அறிந்துக் கொள்ள முடிந்தது.

  அவனை குறித்து கூடுதல் தகவல் அறிந்துக் கொள்ள அந்த அழைப்பு உதவியது என்று மகிழ்ந்தேன்.

  ரமலான்!

  ரமலான்!

  திடீரென ஒருமாதம் என்னால் அவனை சரியாக பார்க்க முடியாமல் போனது. நேரம் மாறி, மாறி வந்தபோதும் அவன் கண்ணில் படவில்லை. பிறகு தான் அது ரமலான் மாதம் என்பதால் அவன் விரதம் இருந்து வருவதால் பார்க்க இயலாமல் போனது என்பதை அறிந்தேன். ரமலான் முடியும் வரை காத்திருந்தேன். அவனுக்காக நானும் சேர்த்தே வணங்க ஆரம்பித்தேன். உணவு உண்ணாமல் அவன் வலிமை குறைந்துப் போக கூடாது என்று வேண்டிக் கொள்வேன்.

  வருத்தம்!

  வருத்தம்!

  ஆனால், ரமலான் முடிந்தும் கூட அவனை மூன்று மாதங்கள் பார்க்க முடியவில்லை. மேலும்மொரு கெட்ட செய்தியாக எனது அலுவலகம் வேறு இடத்திற்கு மாறுவதாக செய்தி அறிந்தேன். அதற்குள் அவனை பார்த்து பேசி, என் காதலை கூறிவிட வேண்டும் என்று விரும்பினேன். ஏறத்தாழ இந்த சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன.

  எப்படியும் என்றாவது அவன் என் கண்ணில் அகப்படுவான், அவனிடம் என் காதலை கூறலாம் என்று நீண்ட நாள் காத்திருந்தேன். ஆனால், அவனை பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை.

  திருமணம்!

  திருமணம்!

  எனக்கு இப்போது திருமணமாகிவிட்டது. அன்பான கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என் வாழ்வில் என்னை இவரை விட அதிகம் ஒருவரால் சிரிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

  என் வாழ்வில் பல கட்டங்களை கடந்து வந்துள்ளேன். ஆனால், கடைசி வரை அவனது பெயரை அறிந்துக் கொள்ள முடியாமல் போனதே என்று கொஞ்சம் வருந்தியது உண்டு. இதுக்குறித்து என் கணவரும் அறிவார்.

  வாழ்க்கையில் எது அமைய வேண்டுமோ, எது நமக்கானதோ... அவை மட்டும் தான் நமக்கு கிடைக்கும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Real Life Story: I Never Miss a Single Chance to See Him. He is My Romeo

  Real Life Story: I Never Miss a Single Chance to See Him. He is My Romeo
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more