3 வயசு சின்னவன லவ் பண்ணது என் தப்புதான் - My Story #204

Posted By: Staff
Subscribe to Boldsky

சச்சின் - அஞ்சலி, ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன், விண்ணைத்தாண்டி வருவாயா என பல முன் உதாரணங்கள் கொண்டு வயதில் இளையவனை காதலிப்பது ஒன்னும் பெரிய குற்றம் இல்லை என்ற எண்ணத்துடன் பயணித்தவள் நான்.

மாடர்ன் கருத்துக்கள், மேற்கத்திய கலாச்சாரக் கலப்பு என என் குடும்பத்திலேயே நான் மட்டும் சற்று வித்தியாசமான வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். கடவுள் நம்பிக்கையில் இருந்து, சடங்கு சம்பிரதாயம் என பலவற்றில் எனக்கு முரண்பட்ட கருத்து வேறுபாடு உண்டு.

அப்படியாக தான் இந்த காதலும். ஏறத்தாழ பாதி ஆண் போலவே வளர்ந்தேன், சமூகத்தில் நடந்துக் கொண்டேன். இப்படியான கருத்துக்கள் கொண்டிருந்த எனக்கு கல்லூரி காலத்தில் காதல், கீதல் என்று எந்த வெங்காயமும் இல்லை.

கல்லூரி முடிந்து வீட்டில் இருந்த காலத்தில் தான் அவனுடனான தொடர்பு தொடங்கியது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூப்பர் ஜூனியர்!

சூப்பர் ஜூனியர்!

அவனுக்கும் எனக்கும் இடையே தொடர்பு உண்டாக காரணமாக இருந்த ஒரே விஷயம்... ஒரே கல்லூரி என்பது மட்டும் தான். நான் மூன்றாம் ஆண்டு படித்து முடித்து வெளியேறிய போதுதான். அவன் முதலான் ஆண்டுக்கு என் கல்லூரியில் சேர்ந்திருந்தான். ஆக, கல்லூரி படிக்கும் போதோ, அதன் முன்னோரே நாங்கள் பார்த்துக் கொண்டதே இல்லை என்பது தான் உண்மை. பிறகு எப்படி காதல் என்று கேட்கிறீர்களா?

ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்!

நான் பெரும்பாலும் வாட்ஸ்-அப் தான் பயன்படுத்தி வந்தேன். நண்பர்கள் பலரது குடைச்சல் காரணமாக ஃபேஸ்புக் பக்கமும் தலைக்காட்ட வேண்டிய நிர்பந்தம் உண்டானது. தோழர்கள், சீனியர்கள், ஜூனியர்கள், உறவினர்கள் என்று மொத்தமே 200 பேரை கூட தொடவில்லை என்பது நட்பு வட்டாரம்.

ஒரு நாள் எப்போதும் போல கண்விழித்ததும் ஸ்மார்ட் போன் திரையில் விழித்த போது, ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு நோட்டிஃபிகேஷன் வந்திருந்தது. அவன் யாரென்றே தெரியவில்லை. உள்ளே முகவரிக்குள் சென்று பார்த்த போது என் ஜூனியருக்கு ஜூனியர், நான் படித்தே அதே கல்லூரி. அந்த ஒரு காரணத்திற்காக தான் அவனை நட்பில் இணைத்தேன்.

கவிஞன்!

கவிஞன்!

மூன்று வயது இளையவனாக இருந்தாலும், பேச்சிலும், எழுத்திலும் நல்ல முதிர்ச்சி பெற்றவன். அவனது எழுத்துக்கள் மீது கொஞ்சம், கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகரித்தது. சில சமயம் ஃபீடில் வரும் பதிவுகள் கண்டு, அவன் முகவரிக்குள் போய், வேறென்ன பதிவுகள் இட்டிருக்கிறான் என்று தேடிக் கொண்டிருப்பேன்.

அவனது பெரும்பாலான எழுத்துக்கள் பெண்மையை மதித்து இருந்தன. சிலர் கமெண்டுகளில் கேலி செய்திருந்தாலும் கூட, அதற்கும் தனது வார்த்தை ஜாலம் மூலம் நல்ல பதிலடிக் கொடுத்துக் கொண்டிருப்பான்.

புதியவன்!

புதியவன்!

அவன் எப்போதுமே என்னை சீனியர் அல்லது அக்கா என்று அழைத்ததே இல்லை, எப்போதுமே பெயருடன் முன் டியர் இணைத்தே அழைப்பான். என்னை மட்டுமல்ல, எல்லா பெண்களையும் டியர் என அழைப்பது அவனது பழக்கம். இது பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தவில்லை.

ஆனால், யாராவது நல்லது செய்திருந்தால், துளி அளவு சாதித்திருந்தாலும், லவ் யூ சொல்லி பாராட்டுவது அவனது வழக்கம். அவனது இந்த வழக்கத்தில் தான் முதல் முறையாக தடுமாறினேன்.

முதல் முறை...

முதல் முறை...

அவனுடன் எனது உரையாடல் மிகவும் எளிமையானதாகவும், ஃபார்மலாகவும் தான் இருந்ததது.

ஏறத்தாழ ஓரிரு மாதம் கழித்து அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்...

"என்ன ஆளே காணோம்... "என்று கேட்டான்.

"இல்ல, பேங் (Bank) எக்ஸாம்க்கு படிச்சுட்டு இருந்தேன். ஃபர்ஸ்ட் ரவுண்ட் பாஸ் ஆயாச்சு. செகண்ட் ரவுண்டுக்கு படிக்கணும்..." என்றேன்.

-- அடுத்த நொடியில்...

"வாவ்... செம்ம ஜி... லவ் யூ... கம்பியூட்டர் படிச்சுட்டு.. அதுல வேலை கிடைக்கலன்னு... வேற துறையில முயற்சி பண்றீங்க... பாருங்க... செம்ம..." என்று ஏதேதோ கூறி படபடவென மெசேஜ் செய்தான்.

முதல் 'லவ் யூ'

முதல் 'லவ் யூ'

என் தோழர்கள், தோழிகள், அப்பா, அம்மா, அக்கா, சகோதரன் என என் வாழ்வில் யாரிடம் இருந்தும் அந்த வார்த்தை நான் கேட்டதே இல்லை. முதல் முறையாக ஒரு லவ் யூ... மனதில் ஒரு தடுமாற்றம்.

இது அவனது இயல்பான பழக்கம் என்று அறிந்திருந்தாலும். அதன் பிறகு அவன் எழுதிய பெண்கள் மற்றும் காதல் பற்றிய கவிதைகள், கருத்துக்கள் எல்லாம் எனக்கெனவே எழுதியதாக தோன்றியது.

மொபைல் எண்!

மொபைல் எண்!

அவன் நான் நட்பை அக்ஸப்ட் செய்த முதல் நாளே வாட்ஸ்-அப் நம்பர் இருக்கா? என்று கேட்டான். ஆனால், நான் அதற்கு சில நாள் கழித்தே, யாரிடமும் வாட்ஸ்-அப் எண் பகிர்ந்துக் கொள்வதில்லை என்று கூறி இருந்தேன்.

இப்போது நானாக சென்று வாட்ஸ்-அப் நம்பர் கொடுத்தால் தவறாக எடுத்துக் கொள்வானோ என்ற எண்ணம் வேறு மனதுக்குள். ஆனாலும், பரவாயில்லை... அவனுக்கு மெசேஜ் செய்து பார்க்கலாம் என்று எண்ணினேன்.

நம்பவில்லை!

நம்பவில்லை!

நாம் முதலில் ஹாய் அனுப்பியதும், யார் என்று கேட்டான். நான் தான் என்று பெயரை கூறியதும். விளையாடாம யாருன்னு சொல்லுங்க என்றான்.

தொடர்ந்து நான் கூறிக்கொண்டே இருக்க... திடீரென கேட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்துவிட்டான்.

டேய்.. உங்ககிட்ட அவள பத்தி சொன்னது என் தப்பு தான்.. உடனே கலாய்க்கிறீங்களா? என்று திட்டி ரிப்ளை செய்தான்.

புகைப்படம்!

புகைப்படம்!

அவனது கவிதைகளை மட்டுமே எழுத்துக்களாக கண்ட எனக்கு முதன் முதலாக அவனது கெட்ட வார்த்தைகள் அதிர்ச்சியை அளித்தது. அதே அதிர்ச்சியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, எனது படங்களை எனுப்பினேன்...

எனது படங்களை கண்ட பிறகே அது நான் தான் என்று நம்பினான்.

பிறகு, நானும் அவனும் தொடர்ந்து நாள் தவறாமல் பேசிக்கொள்ள துவங்கினோம். தினமும், நான் கேட்கிறேன் என்று இரவு ஒரு காதல் கவிதை எழுதி அனுப்புவான். அதை எனக்கே டெடிகேட் செய்து ஃபேஸ்புக்கிலும் பதிவிடுவன். இதை எல்லாம் காதல் என்றே எண்ணி காற்றில் பறந்துக் கொண்டிருந்தேன் நான்.

காதல், கீதல்?

காதல், கீதல்?

நான் அவன் மீது காதல் ஊற்றெடுத்து மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த போது... ஒருமுறை நீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா? என்று கேட்டான். அதற்கான பதில் அளிக்க ஒரு மணி நேரத்திற்கும் மேல் யோசித்தேன். இப்போதே நான் அவனை காதலிப்பதை கூறிவிடலாமா? என்ற எண்ணம் ஒருபுறம். அவன் என்னை காதலிக்கிறானா? பிரபோஸ் செய்ய நினைக்கிறானா? என்ற எண்ணம் மறுபுறம். இதற்கு நடுவே ஒன்றும் கூறாமல் "இல்லை" என்று பதில் அளித்தேன். "ஓகே டியர்" என்று கூறி குறுஞ்செய்தி உரையாடலை முடித்தான்.

அக்கா மகள் மீது பிரியம்!

அக்கா மகள் மீது பிரியம்!

மெல்ல, மெல்ல அப்பா, அம்மா, அக்கா பற்றியும் அடிக்கடி விசாரிக்க துவங்கினான். அதிலும் என் அக்கா மகள் என்றால் அவனுக்கு மிகவும் பிரியம். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளும் போது இடையே சரியாக பேச்சு வராத அவளுடன் மட்டுமே அரை மணிநேரம் கொஞ்சி பேசுவான். சில சமயம் அதை லவுட் ஸ்பீக்கரில் போட்டு ரசித்துக் கேட்டதுண்டு. பல சமயம் அவன் பேசுவதை ரெகார்ட் செய்து கேட்டு ரசித்ததும் உண்டு.

ஆழமானது!

ஆழமானது!

இப்படியாக ஓரிரு ஆண்டுகள் கடந்தன. அவனும் கல்லூரி முடித்தான். அதன் பிறகே நாங்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ள துவங்கினோம். ஐந்தாறு முறை வெளியிடங்களில் நானும் அவனும் சந்தித்து பேசிக் கொண்டதுண்டு. ஃபேஸ்புக்கில் படமாக கண்டதை விட நேரில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இருந்தான்.

ஹ்ரித்திக் ரோஷன் மாதிரி ஆணழகன் எல்லாம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டு ஆண்களுக்கே உரிய அந்த ஈர்ப்பு அவனிடம் அதிகம். அதிலும், அவன் கண்கள் அகல விரித்து சிரிக்கும் போது அதை ரசிக்க நான் தவறியதே இல்லை.

சென்னை!

சென்னை!

வேலை கிடைத்து சில மாதங்களில் சென்னை கிளம்பினான். சமூக தளங்களில் அவனது உலாவுதல் குறையத் துவங்கியது. இராப்பகலாக வேலை அலைச்சல் என்று சில நாட்கள் புலம்பி இருக்கிறான். நானும், மீண்டும் அவன் ஊருக்கு வரட்டும் நேரிலேயே காதலை கூறலாம் என்று காத்திருந்தேன்.

ஆனால், திடீரென ஒருநாள் அவனது வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து... நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவன் வங்கி வேலையில் இருக்கிறாள் என்று கூறினான். அதுதான் நான் அவனிடம் இருந்து பெற்ற கடைசி செய்தி.

முடித்துக் கொண்டேன்!

முடித்துக் கொண்டேன்!

அதன் பிறகு, சில நாட்கள் அழுது தவித்தேன். எப்போதிருந்து காதலிக்கிறான், அந்த பெண் யார் என்று நானும் கேட்கவில்லை. ஏன் ரிப்ளை பண்ணவில்லை, நான் எப்படி இருக்கிறேன் என்று அவனும் கேட்கவில்லை.

நாங்கள் இருவருமே எங்கள் உறவை முறித்துக் கொள்ள நினைத்தோம் என்று கருதினேன்.

ஒருவேளை காதலிக்கிறேன் என்று கூறியும் பதில் கூறவில்லை என்ற அவன் கோபித்துக் கொண்டானா? இல்லை, நான் அவனிடம் பேசி இருக்க வேண்டுமா? என்று ஆராய எனக்கு விருப்பம் இல்லை.

பதிவுகள்!

பதிவுகள்!

அதற்கு முன்பு வரை அவனது காதல் குறித்தோ, அவன் காதலியுடன் படமோ அவன் எதுவும் பதிவு செய்தது இல்லை. ஆனால், இப்படியாக என்னிடம் அவன் காதலை பற்றி கூறிய ஒரு வாரத்தில் தொடர்ந்து பல புகைப்படங்கள் பதிவிட்டான். வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்ல் தினமும் ஒரு படம் போட்டு காதல் கவிதை கிறுக்கி வைத்திருப்பான். அதை எல்லாம் காண முடியாமல் அவனை அனைத்து சமூக தளங்களிலும் பிளாக் செய்தேன்.

ஆனால், அவன் மீது நான் கொண்ட காதல், அவன் திறமையின் மீது நான் கொண்ட ஈர்ப்பு... இதை எல்லாம் பிளாக் செய்ய ஆப்ஷன் இல்லாமல் இன்றும் அவனை குறித்து எண்ணி தவித்துக் கொண்டிருக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: I Dont Know Either He Cheated or Hidden The Truth!

My Story: I Dont Know Either He Cheated or Hidden The Truth!