அவனை காதலிக்கிறேன். ஆனால், அவன் இச்சை பசிக்கு இரையாக நான் தயாராக இல்லை - My Story #229

Posted By: Staff
Subscribe to Boldsky

நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அவன் எனக்கு சீனியர். ஆனால், பள்ளிக் காலத்தில் நாங்கள் அதிகம் பேசி, பழகியது இல்லை. இதற்கும் எங்கள் இருவரின் வீடும் ஒரே பகுதியில் தான் அமைந்திருந்தது. மிக அரிதாக தான் நாங்கள் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டதுண்டு. பள்ளி முடிந்து நான் பக்கத்து ஊரில் கல்லூரி சேர்ந்தேன். அவன் வேறு ஒரு ஊரில் கல்லூரி பயின்று கொண்டிருந்தான்.

கல்லூரி சேர்ந்த பிறகு தான் எனக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எல்லாம் பரிச்சயம் ஆனது. அப்போது தான் அவனும் எனக்கு நண்பானான். முதலில் எப்போதாவது சாட்டிங் செய்து வந்தோம். பிறகு மொபைல் நம்பர் பகிர்ந்தோம். வாட்ஸ்-அப்பில் சாட்டிங் தொடங்கியது. பிறகு போன் கால், அதன்பின் நீண்ட நேர உரையாடல் என பேச்சு அதிகரித்துக் கொண்டே போனது, உறவும் நெருக்கமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிடிக்கும்!

பிடிக்கும்!

நாங்கள் பேச ஆரம்பித்து மூன்று மாதங்கள் இருக்கும். திடீரென ஒரு நாள் இரவு பேசிக் கொண்டிருந்த போது, எனக்கு உன்மேல் விருப்பம் இருக்கிறது. பள்ளி நாட்களில் நான் உன்னை நேசித்தேன். ஆனால், நீ என்னை விரும்பாமல் போய்விடுவாயோ என்ற அச்சத்திலும், உன் வீடு அருகேயே இருந்ததாலும், எங்கே வீட்டில் மாட்டிக் கொள்வேனோ என்று எண்ணி கூறாமலே இருந்தேன் என்று கூறினான்.

காதல்!

காதல்!

அவன் இதை கூறிய பிறகும் கூட ஒருசில மாதங்கள் நாங்கள் நட்பாக தான் பழகினோம். ஆனால், எப்போது நாங்கள் இருவரும் ஒரே நாளில் வெகேஷன் நேரத்தில் ஒன்றாக ஊருக்கு சென்று வர துவங்கினோமோ அப்போது தான் எங்களுக்குள் இருப்பது காதல் என்பது தெரியவந்தது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள கிடைக்கும் அந்த நேரத்தை தவறவிட கூடாது என்ற ஆர்வம் எங்களுக்குள் அதிகம் இருந்தது.

மலர்ந்தது!

மலர்ந்தது!

எங்களுக்குள் காதல் இருக்கிறது, நாங்கள் காதலித்து வருகிறோம் என்பதை அறியவே எங்களுக்கு ஒரு வருட காலம் பிடித்தது. அதன் பின் நாங்கள் மிகவும் நெருக்கமானோம். செல்போன் முத்தங்கள், சிணுங்கல்கள் என எங்கள் காதல் பல நூறு அடி தூரம் உயர பறந்துக் கொண்டிருந்தது. எங்கள் காதல் அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் சீராக தான் போய் கொண்டிருந்தது.

கேம்பஸ்!

கேம்பஸ்!

அவன் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலை வாங்க வேண்டும் என்று விரும்பினான். அதற்காக என்னுடன் பேசுவதை கூட குறைத்துக் கொண்டான். நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், அந்த வருடம் மொத்தமே நான்கைந்து கம்பெனிகள் தான் அவனது கல்லூரிக்கு வந்தன. அவன் கேப்ஸ் இன்டர்வியூவில் தேர்வாகவில்லை. மனம் உடைந்துப் போனான். அதன் பின் அவன் எடுத்த முடிவு கொடுமையாக இருந்தது.

பிரிவு!

பிரிவு!

உன் காதல் என் கவனத்தை திசை திருப்புகிறது. என்னால் படிக்க முடியவில்லை. அதனால் தான் கேம்பஸ் இண்டர்வ்யூவில் தேர்வாகாமல் போனேன் என்று கூறியதோடு, நாம் பிரிந்துவிடலாம் என்றும் கூறி போனை வைத்துவிட்டான். ஆனால், நான் அவனை விரும்பினேன். எப்படியும் அவன் என்னை தேடி வருவான் என்று எனக்கு தெரியும். இரண்டே நாளில் மீண்டும் அழைத்து என்னால் உன்னை பிரிய முடியாது, என் வாழ்வில் எனக்கு கிடைத்த வரம் நீ, உன்னை என்னால் விட முடியாது என்று கூறினான். நான் அவனை அதன் பிறகு அதிகம் நேசிக்க துவங்கினேன்.

நிபந்தனை!

நிபந்தனை!

ஆனால், அதன் பிறகு சில நிபந்தனைகள் விதித்தான், தன்னால் அதிக நேரம் பேச செலவிட முடியாது என்றும், நான் விரும்பும் போது தான் அழைத்து பேசுவேன் என்றும் கூறினான். அவன் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல துவங்கினான். நானும் எனது அக்காவின் திருமண வேலைகளில் பிசியாக இருந்தேன். ஆகையால், ஒரு மாதம் எப்படி போனது என்று தெரியவில்லை.

வேறு ஒரு பெண்...

வேறு ஒரு பெண்...

அவன் பயிற்சி வகுப்புகள் சென்ற இடத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது அறிய வந்தது. அதை அறிந்து அவனிடம் யார் அவள் என்று கேட்டதற்கு, உன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. கவலை படாதே என்று கூறி முத்தமிட்டு சென்றான். நானும் அதை நம்பி அவனை முட்டாள் போல காதலித்து வந்தேன்.

பொய்!

பொய்!

அக்கா திருமண வேலைகள் முடிந்து நான் கல்லூரி திரும்பிய போது, அவனுக்கு வேலை கிடைத்திருந்தது. ஆனால், அதை அவன் என்னிடம் கூறவே இல்லை. அவனது ஃபேஸ்புக் ஓபன் செய்து பார்த்து தான் நானே அதை அறிந்தேன். ஆனால், பயிற்சி வகுப்பு தோழியுடம் அனைத்தும் கூறி இருந்தான். அவனை அழைத்து திட்டினேன். சாரி மறந்துவிட்டேன். இதெல்லாம் பெரிய விஷயமா என்று கூறி வருந்தினான். அப்போதும் நான் ஏமார்ந்து போனேன்.

பெங்களூர்!

பெங்களூர்!

அவனும், அவனுடைய பயிற்சி வகுப்பு தோழியும் பெங்களூரு வேலை கிடைத்து சென்றனர். அங்கே புதிய அலுவலகம், புதிய நண்பர்கள் என குஷியாக இருந்தான். என்னிடம் எப்போதாவது தான் பேசுவான். நானும், புதிய இடம் தானே என்று விட்டுவிட்டேன். மூன்றே மாதத்தில், அவனை சென்னைக்கு மாற்றம் செய்தனர். அவனுக்கு அதில் விருப்பமே இல்லை. ஆனால், எனக்கு மிகவும் சந்தோஷம். இரண்டு மணி நேர தொலைவு தான் நான் தங்கியிருக்கும் வீடு இருக்கிறது.

வார இறுதியில்!

வார இறுதியில்!

ஒவ்வொரு வார இறுதியிலும் நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்துவிடுவான். என்னுடன் என் தோழிகள் இருவரும் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் வார இறுதி நாட்களில் வீட்டில் இருக்க மாட்டார்கள் என்பதால் எங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. நாங்கள் என்ன தான் நெருக்கமாக இருந்தாலும், நாங்கள் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை.

செக்ஸ்!

செக்ஸ்!

ஒருசில முறை வார இறுதி நாட்களில் என் வீட்டுக்கு வந்து போகும் போதெல்லாம் செக்ஸ் வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தினான். எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. ஒருமுறை மிகவும் கோபித்துக் கொண்டு எனக்கு வேறு ஆல் இல்லையா... நீ இல்லாட்டி விபச்சாரி கிட்ட கூட போவேன். என்ன ரொம்ப ஓவரா பண்ற என திட்டினான். அன்றுடன் முறிந்தது எங்கள் உறவு. நான் அவனை காதலிக்கிறேன் தான். அதைவிட அதிகமாக நான் என்னை காதலிக்கிறேன். எனக்கென தனி மரியாதை இருக்கிறது அதை நான் விட்டுவிட முடியாது.

இன்றும்...

இன்றும்...

இன்றைய தினம் கூட நான் அவன் மீது வைத்திருக்கும் காதல் குறையவில்லை. அவனும் என்னை நேசிக்கிறான் என்று தெரியும். ஆனால், நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அதை மீண்டும் மீட்டெடுக்க வேண்டாம் என்று உணர்கிறேன். எப்பேர்ப்பட்ட காதலாக, உறவாக இருந்தாலும் அதில் சுய மரியாதை என்பது மிகவும் முக்கியம். அதை இழந்து ஒரு உறவில் இருப்பதும், இறப்பதும் சமம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

I Love Him, But I Am Not Ready To Loss My Self Respect Just For His Lust - My Story!

I Love Him, But I Am Not Ready To Loss My Self Respect Just For His Lust - My Story!
Story first published: Thursday, April 12, 2018, 16:10 [IST]