For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூலான ரூ.80 பீருக்கு ஒரு காதல்... - My Story #181

கூலான ரூ.80 பீருக்கு ஒரு காதல்... - My Story #181

By Staff
|

எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து நான் பண்ற விஷயங்களுக்கு ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்ட ஆளே இல்லை. அது ஸ்கூல் படிக்கும் போதுமாகட்டும், இல்லை இப்போ வேலை பார்க்குற வரைக்கும் கூட, அப்படி தான். நான் திறமை சாலியா இருக்கேனா? இல்லை இது நான் வாங்கிட்டு வந்த வரமா? இல்ல நமக்கு அமையிற அடிமைங்க அப்படி இருக்காங்களான்னு தெரியல.

நான் என்ன பண்ணாலும் சரியா தான் இருக்கும்ன்னு சின்ன வயசுல இருந்தே என் அப்பா நம்புனாறு. எக்ஸாம் முடிச்சுட்டு வந்து எனக்கு நூறு மார்க் வந்திரும்ன்னு எல்லாம் நான் சொன்னதே இல்ல, நான் 65 மார்க் வரும்ன்னு சொன்ன கரக்டா 63 - 67 மார்க் வரும். அதே போல, நான் பெருசா எதுக்காகவும் பொய்யும் சொன்னது இல்ல.

அப்பா, அம்மா டெரரா இருந்தா தானே பொய் சொல்லணும். எனக்கு அந்த வாய்ப்பே அமைஞ்சது இல்ல. அவங்க ரொம்பவே எனக்கு க்ளோஸ். என்னோட முதல் பிரபோசல், எனக்கு வந்த முதல் பிரபோசல் அந்த இரண்டையும் என்கூட சேர்ந்து மொபைல்ல லவுட் ஸ்பீக்கர் கெட்டவங்க என் அப்பா, அம்மா தான், கூட என் அண்ணாவும் இருந்தான்.

என் வாழ்க்கையில எவ்வளோ பெரிய கஷ்டம் வந்தாலும் அத நான் கஷ்டமா நெனச்சதே இல்ல. ஏன்னா..., எனக்குன்னு உதவ நாலு பேர் என்ன சுத்தி இருந்துட்டே தான் இருந்தாங்க.

அப்படி தான் என் லவ்வரும். எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அதனாலேயே நான் லவ்வர்ன்னு எங்கயாச்சும் மென்ஷன் பண்ணி பேசுனா.. உடனே என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் இனிமேலாவது வைஃப்னு சொல்லுடான்னு சொல்வாங்க. ஆனா, எனக்க எப்பவுமே அவள லவ்வர்னு சொல்ல தான் பிடிச்சிருக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்சுரல்ஸ்!

கல்சுரல்ஸ்!

விஸ்காம் படிச்சதுனால எனக்கு காலேஜ் படிக்கும் போது இருந்த ஒரே எண்டர்டெயின்மென்ட் எந்த டிபார்ட்மெண்ட் ஃபங்க்ஷனா இருந்தாலும் உடனே இன்வைட் வந்திரும். கேமராவ தூக்கிட்டு போயிடுவோம். அப்படி தமிழ் டிபார்ட்மெண்ட் முத்தமிழ் விழா ஒரு இன்டர்காலேஜ் கல்சுரலஸ். அப்பதான் அவள முதல் தடவையா பார்த்தேன்.

 3 நாளா வேலை...

3 நாளா வேலை...

எங்கள் தமிழ் சார்க்கு என்மேல கூடுதலா ஒரு பிரியம் இருந்துச்சு. எனக்குன்னே தினமும் ஏதாவது டாபிக் தருவாரு, அதுல நான் கவிதை, பாட்டு எழுதி அவர்கிட்ட தருவேன். பிழை எல்லாம் திருத்தக் கொடுப்பாரு. இதனாலேயே காலேஜ் இரண்டாவது வருஷம் படிச்சுட்டு இருந்தப்ப முத்தமிழ் விழா ஈவன்ட் மேனேஜ்மெண்ட் என்ன பார்த்துக்க சொன்னாரு. இதனால 3 நாள் விடாம பல வேலைய இழுத்துப் போட்டுட்டு செஞ்சேன்.

விழா அன்னிக்கி!

விழா அன்னிக்கி!

முந்தன நாள் மிட்நைட் வரைக்கும் நிறையா வேலை பார்ததால, அன்னிக்கி கல்சுரல்ஸ்க்கு போக மனசு இருந்தாலும், உடம்பு ஒத்துக்கல. நானும், என் ஃபிரெண்ட்ஸ்ம் பேசாம பீர் குடிச்சுட்டு ஹாஸ்டல் ரூம்ல படுத்திடலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம்.

கடைசி நேரத்துல, என் ஃபிரெண்ட் ஒருத்தி... அவக்கூட ஸ்கூல்ல படிச்சா பொண்ணு ஒருத்தி கல்சுரலஸ்ல கலந்துக்க வரா.. அவளுக்கு நம்ம ஏரியா புதுசு... எங்க ரெஜிஸ்டர் பண்ணும், போட்டி எங்க நடக்குதுன்னு மட்டும் காண்பிச்சிடுன்னு சொன்னா... நானும் சரி! போறப்போக்குல ஒரு ஹெல்ப் பண்ணிட்டு அப்பறமா பீர் குடிச்சுக்கலாம்ன்னு காலேஜ்குள்ள போனேன்.

ஒரு சினிமா மாதிரி...

ஒரு சினிமா மாதிரி...

ஆனா, அன்னிக்கி பஸ் ஸ்டாப்ல நான் வெயிட் பண்ணிட்டு இருந்தபொண்ணு தான் எப்பவுமே என் கூட இருக்க போறாங்கிறது அப்போ எனக்கு தெரியாது. உலக அழகி ரேஞ்சுக்கு இல்லைனாலும், தமிழ் நாட்டு பொண்ணுகளுக்குன்னு ஒரு அழகு இருக்குமே... அது துளி கூட குறையாத அழகு அவளது. பார்க்க, பார்க்க கண்ணு இமைக்க மறுக்க வைக்கிற அழகு. அது போதுமே...! அப்பறம் என பீர் பிளான் கேன்சல் பண்ணிட்டு, கல்சுரல்ஸ் நடக்குற இடத்துக்குள்ள போயிட்டேன்.

மோதல்!

மோதல்!

காதல் மோதல்ல தான் ஆரம்பிக்கும்ன்னு சும்மாவா சொல்லி வெச்சாங்க நம்ம பெரியவங்க. என் காதலும் மோதல்ல தான் ஆரம்பிச்சது. நாம பாக்குற பொண்ணு நம்மள பார்த்தா எந்த அளவுக்கு ஒரு சந்தோஷம் வருமோ. அதே மாதிரி, நாம பாக்குற பொண்ணு நம்மள பாக்க ரொம்ப அலட்டிக்கும் போது... அதே அளவு கோபமும் வரும். எனக்கும் வந்திச்சு.

விடலயே!

விடலயே!

என் ஃபிரென்ட் மூலமா ஷார்ட் ஃபிலிம்ல நடிக்க நம்பர் கேட்டு பேச ஆரம்பிச்சு, ஃபிரெண்ட்ஸ் ஆகி... ஒரு கட்டத்துல அவளுக்கும் என் மேல லவ் இருக்குன்னு கண்டுபிடிக்க 50 நாள் ஆச்சு. இப்போ மாதிரி வாட்ஸ்-அப் எல்லாம் அப்போ இல்ல. அதுலயும்... நடுவுல ஒரு நாளுக்கு நூறு மெசேஜ் தான். அந்த நூறும் அவளுக்கு மட்டும் தான் போகும். ஒருவேளை சீக்கிரம் தீர்ந்துட்டா எப்படா... திரும்ப நைட் 12.00 மணி ஆகும்ன்னு பிரஷர் எகிறும்.

காத்திருந்து..

காத்திருந்து..

அப்படி ஒரு நாள் 12.00 மணிக்கு மேல் காத்திருந்த சொன்ன காதல் என்னது. பெரிசா... எந்த ரியாக்ஷனும் இல்ல... அவளும் பிரபோஸ் அக்ஸப்ட் பண்ணிட்டா. அன்னையில இருந்து, இன்னிக்கி வரைக்கும். 6 வருஷத்துக்கு மேல ஆச்சு. நான் என்னெல்லாம் தப்பு பண்ணுவேன்னு தெரிஞ்சும், நான் திரும்ப, திரும்ப தப்பு பண்ணாலும்... ஒரு நாள் திருந்துவேன்னு... அவ என் மேல வெச்சிருக்க நம்பிக்கை அதுதான் காதல்.

சண்டை!

சண்டை!

எங்களுக்குள்ள ஈகோ காரணமா பல சண்டை வந்திருக்கு... ஆனா, எங்களுக்குள்ள சாரி கேட்க மட்டும் ஈகோ வந்ததே இல்லை. அதிகபட்சம் ராத்திரி முடிஞ்சு, மறுநாள் விடியிறதுக்குள்ள எங்க சண்டை காணாம போயிடும்.

நான் அவள விட ரெண்டு மடங்கு அதிகமா சம்பளம் வாங்கு போது என்மேல என்ன லவ் வெச்சிருந்தாளோ.. அதே லவ் தான் அவ என்னைவிட நாலு மடங்கு அதிகமா சம்பளம் வாங்கும் போதும் வெச்சிருந்தா. நான் கொஞ்சம் மணி மைண்டட் பர்சன் தான். ஆனா, அவளோட காதல் தான், பணத்தைவிட, மனசு பெரிசுன்னு புரிய வெச்சது.

நான் ஒவ்வொரு முறை தோத்துப் போகும்போதும்... நீ ஜெயிக்கிற நேரம் ரொம்ப கிட்ட தான் இருக்குன்னு அவ சொல்ற அந்த வார்த்தை... அதுதான் லவ்.

ஈடிணையே இல்ல!

ஈடிணையே இல்ல!

நான் ஒரு சராசரி ஆம்பிளை தான். என்ன தான் அழகான பொண்டாட்டி இருந்தாலும்... வேற ஒரு அழகான பொண்ணு கிராஸ் பண்ணி போகம் போது தலை 180 டிகிரி திரும்பும். ஆனா, என் லவ்வர் (வைஃப்) அப்படி இல்லை. என் வைஃப் மட்டுமில்ல... நம்ம நாட்டுல இருக்கு 99% பொண்டாட்டிங்களுக்கு கோவில் கட்டி கும்பிடனும். ஏன்னா... அவங்க கல்யாணத்துக்கு அப்பறம் அவங்க ஃபிரெண்ட்ஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்றது கூட ரொம்ப கம்மி. நாம தான் எல்லாமேன்னு இருக்காங்க. அது ரொம்ப கஷ்டம்.

கேள்விக்குறி!

கேள்விக்குறி!

சில சமயம் யோசிச்சிருக்கேன். எப்படி இவ மட்டும் இவ்வளோ நல்லவளா இருக்கான்னு. குறை இல்லாத மனுஷங்களே.. இல்ல... ஆனா, கணவன், மனைவி உறவுக்குள்ள குறைய பெருசு பண்ணி பார்க்க கூடாதுன்னு மட்டும் நல்ல தெரிஞ்சுக்கிட்டேன்... அவக்கிட்ட இருந்து. ஒருவேளை, அவ என்ன இவ்வளோ தடவை மன்னிக்காம இருந்திருந்தா... நான் இப்படி புகழ்ந்து எழுதியிருப்பேனாங்கிறது கூட கேள்விக்குறி தானே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How A Single Shown Me My Ladylove? That is My Love Story!

How A Single Shown Me My Ladylove? That is My Love Story!
Desktop Bottom Promotion