என் முதல் கணவரும், இரண்டாவது காதலும் - My Story #203

Posted By: Staff
Subscribe to Boldsky

ஒரு ஸ்ட்ரிக்ட் அப்பா எப்படி இருப்பார்ன்னு என்கிட்டே கேள்வி கேட்டா? கண்டிப்பா எங்க அப்பாவ தான் கை காமிப்பேன். ஒருவேளை, என் வகுப்புல வேற யாராவது அவங்க அப்பா ஸ்ட்ரிக்ட்ன்னு சொன்னா கூட, எங்க அப்பாவ விடவா ஸ்ட்ரிக்ட்ன்னு வியந்து கேள்வி கேப்பேன்.

ஸ்ட்ரிக்ட்டுன்னு சொன்னதும் அவர கோபக்காரர்ன்னு நெனச்சிட வேண்டாம். ரொம்பவே பிராக்டிகலா யோசிப்பாரு. ஒரு ரூபா செலவு பண்ணா, அதனால ஏற்படுற லாபம் என்ன, நன்மை என்ன? அந்த ஒரு ரூபாய செலவிட அதவிட சிறந்த வழி ஏதாவது இருக்கான்னு பலமுறை யோசிச்சு தான் முடிவு எடுப்பாரு.

ஒருவேளை அவரு வளர்ந்த விதம் கூட இதற்கான காரணமா இருக்கலாம். எங்க தாத்தா, என் அப்பாவோட அப்பா, தன்னோட குடும்பத்துக்குன்னு பெரிசா காசு, பணம், சொந்த, பந்தம்ன்னு எதையும் சேர்த்து வைக்கல. சொத்த மொத்தமும் அழிச்சுட்டு போனாரு. அதுமட்டும் தான் நான் கேள்விப்பட்ட எங்க தாத்தா பத்தின வரலாறு.

அப்பாவுக்கு தப்பாத பொண்ணு என் அக்கா, அவளுக்கு படிப்பு, படிப்பு, படிப்பு தான் எல்லாமே. அரேஞ்சுடு மேரேஜ் பண்ணிக்கிட்டா. அவள போலவே அவர் கல்யாண வாழ்க்கையும் ரொம்ப நல்லப்படியா அமைஞ்சது. ஆனா, இத எல்லாம் காரணம் காட்டி என்னையும் அரேஞ்சுடு மேரேஜ் பண்ண சொல்றது எந்த விதத்துல நியாயம்.

எனக்கு டீனேஜ் வயசுல இருந்தே லவ் மேரேஜ் பண்ணனும்ன்னு ஆசை. ஆனா, எனக்கான காதல் அவ்வளவு சீக்கிரமா என் கண்ணுல படல. அதுல ஒரு ஃபெயிலியரும் கூட.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்காணிப்பு!

கண்காணிப்பு!

ஸ்கூல் படிக்கிற வரைக்கும் பெரிசா காதல், கீதல்ன்னு ஒண்ணுமே கிடையாது. ஏன்னா, நானும், என் அக்காவும் ஒரே ஸ்கூல். லஞ்ச் டைம்ல கூட அவ கூட உட்கார்ந்து தான் சாப்பாடு சாப்பிடனும். ஸ்கூல் லீடர், நல்லா படிக்கிற பொண்ணுன்னு என் அக்காவுக்கு ரொம்ப நல்ல பேரு வேற. அதனால், அவ தங்கச்சிங்கிற அடையாளம், அதனால கூடுதலா நாலு கண்ணுங்க என்னைய எங்க போனாலும் கண்காணிச்சுட்டே இருக்கும். இதுல லவ் என்ன, ஒரு பையன கூட ஏறெடுத்து பார்க்க முடியாது.

மார்க்!

மார்க்!

அக்கா எங்க ஊருல இருக்க காலேஜ்ல தான் படிச்சா. ஆனால், நான் எடுத்த சுமார் மார்க்குக்கு எங்க ஊருல இருக்க நல்ல காலேஜ் எதுலையும் சீட் கிடைக்கல. அதனால, வெளியூர்ல இருக்க 100% வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்குற காலேஜ் விளம்பரத்த பார்த்து ஒரு காலேஜ்ல சேர்த்துவிட்டாங்க. முதல் முறையா ஹாஸ்டல் வாழ்க்கையில சுதந்திரமா வாழ ஆரம்பிச்சேன்.

செம்ம லூட்டி!

செம்ம லூட்டி!

அதுவரைக்கும் நான் அவ்வளோ குறும்பு பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. என்ன சுத்தி 50-50 பிஸ்கட் மாதிரி பாதி பொண்ணுங்க, பாதி பசங்க இருப்பாங்க. பசங்களுக்கு ஈடா கலாட்டா பண்ணுவேன். முதல் ஒரு வருஷம் நல்லா தான் போச்சு. எனக்கும் லவ் பண்ற ஐடியா, எண்ணமும் இல்ல. ஜாலியா நாலு வருஷம் படிக்கணும்ன்னு மட்டும் தான் நெனச்சேன். ஆனா, லேட்டர் என்ட்ரில, என்ட்ரி கொடுத்தான் அவன்.

வயசு அதிகம்!

வயசு அதிகம்!

அவனுக்கு வயசு அப்பவே 25 இருக்கும். டிப்ளமோ முடிச்சுட்டு குடும்ப சூழல் காரணமா என்ஜினியரிங் பண்ண முடியாம, நடுவுல ஆறு வருஷம் வேலை பார்த்துட்டு. திரும்ப படிக்க வந்ததா, முதல் நாள் அறிமுகப்படுத்திக்கிட்ட போது சொன்னான். அவன் வெறும் ஸ்டூடன்ட் மட்டும் இல்ல, என் வகுப்புல இருந்த எல்லாருக்கும் கார்டியன் அவன்தான். எல்லாரையும் தன்னோட தம்பி, தங்கச்சி மாதிரி பாத்துக்குவான்.

ஆனா, எனக்கு மட்டும் அவனுக்கு தங்கச்சியா இருக்க பிடிக்கல.

காதல்!

காதல்!

அவன் முதல் நாள் அன்னைக்கு பேசினது என்ன ரொம்பவே டச் பண்ணிடுச்சு. அன்னையில இருந்து அவன் மேல ஒரு "இது" வந்திடுச்சு. அவன் முன்னாடி மட்டும் கத்தி கூச்சல் போடமாட்டேன். கலாட்டா பண்ண மாட்டேன். காதல்ங்கிற காரணத்தால இல்ல, அவன் பார்த்தா உடனே பத்து நிமிஷம் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவான்.

கல்யாணம்!

கல்யாணம்!

அந்த நேரத்துல தான் என் அக்காவுக்கு கல்யாணம் முடிவாகி இருந்தது. என் வகுப்புல இருந்து எல்லாருமே வந்தாங்க. அவன உட்பட. எங்க அப்பாவ யாருமே, அவ்வளோ சீக்கிரம் இம்பிரஸ் பண்ண முடியாது. ஆனா, வந்த ஒரே வாரத்துல என் அப்பாவ இம்பிரஸ் பண்ணிட்டன். தன்னோட அக்கா கல்யாணத்த போல விழுந்து, விழுந்து வேலை பண்ணான்.

செண்டிமெண்ட்!

செண்டிமெண்ட்!

குடும்ப பிரச்சனை காரணத்தால சில சொந்தங்கள் அக்கா கல்யாணத்துக்கு வரல. எங்க குடும்ப வழக்கம் படி, கல்யாணம் அன்னிக்கி மாப்பிள கால பொண்ணோட அண்ணா, தம்பி யாராவது கழுவி, மாலை போட்டு அழைச்சுட்டு வரணும். அதுக்கப்பறம் தான் முகூர்த்தம். ஆனா, எனக்கு கூட பிறந்த அண்ணா, தம்பியும் இல்ல., உறவுக்கார அண்ணா - தம்பி அன்னிக்கி யாருமே இல்ல.

கொஞ்சம் கூட யோசிக்காம, அப்பாக்கிட்ட சொல்லிட்டு, அவன் போய் கால கழுவிவிட்டான். அப்பா மனசுல முழுசா இடம் பிடிச்சுட்டான்.

ஓகே!

ஓகே!

சரி, நாம் ஏதுவும் அவன பத்தி அறிமுகம் பண்ண தேவையில்ல. எப்படியும், இவன காதலிக்கிறேன்னு சொன்னா, அப்பாவே ஒத்துப்பார்ன்னு நெனச்சா... அப்பா அவன தன்னோட மகன் மாதிரின்னு சொல்லிட்டரு.

அட! போங்கடா... உறவு முறைய மாத்திறீங்களேன்னு ஃபுல் மூட் அவுட் அன்னிக்கி.

பிரபோஸ்!

பிரபோஸ்!

இவங்கள விட்டா, அப்பா - மகனா மாறிடுவாங்கன்னு... காலேஜ் போனதும் முதல் வேலையா அவன்கிட்ட லவ் பிரபோஸ் பண்ணேன். அவன் என்ன பிடிச்சிருக்கு, பிடிக்கலன்னு சொல்லியிருந்தா கூட பரவாயில்ல....

வீக்கென்ட் பதில் சொல்றேன்னு சொன்னான். சரி பயபுள்ள ஓகே பண்ணிடுவான் போலன்னு அந்த வாரம் முழுக்க சந்தோசமா இருந்தேன்.

திரும்பவும்...

திரும்பவும்...

காலையில ஒரு படத்துக்கு போனோம். மதியம் ஹோட்டல்ல சாப்பிட்டோம். ஒரு மூணு மணி வாக்குல... பார்க் பக்கமா ஒரு வாக்கிங். சுமார் ரெண்டு மணிநேரம் எனக்கு அட்வைஸ் பண்ணான். அட்லீஸ்ட் இது வெறும் ஈர்ப்புன்னு சொல்லி அட்வைஸ் பண்ணியிருந்தா கூட பரவாயில்ல. என்ன ஒரு குழந்தை ரேஞ்சுக்கு நெனச்சு. இல்ல... நான் ஒரு குழந்தைன்னு சொல்லி, சொல்லியே அட்வைஸ் பண்ணான். அததான் என்னால தாங்கிக்க முடியல.

நல்லவன்!

நல்லவன்!

என்ன பண்றது, அவன் ரொம்ப நல்லவன். வேற யாராவது இருந்திருந்தா... நான் பிரபோஸ் பண்ணதும் மிஸ் யூஸ் பண்ணியிருக்கலாம். நான் கூட அந்த வயசுல ஒரு வேகத்துல தப்பு பண்ணியிருக்கலாம். ஆனா, அவன் ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்து சொன்னான். ஒரு கட்டத்துல நீ உண்மையாவே என்ன லவ் பண்ணியிருந்தாலுமே கூட.. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்க வயசு வித்தியாசம் ரொம்பவே அதிகம். அஞ்சு வருஷம் கழிச்சு தப்பு பண்ணிட்டமோன்னு வருத்தப்படுவன்னு சொன்னான்.

ஆனா, நான் அவன லவ் பண்ணது உண்மை தான். எல்லாருக்கும் சைல்டிஷ் லவ்வ்னு ஒரு லவ் இருக்கும். ஆனா, என்னோட லவ்வே சைல்டிஷ் மாதிரி ஆயிடுச்சு அவனோட அட்வைஸ்ல.

வேலை!

வேலை!

ஆனா, காலேஜ்ல கடைசி வரைக்கும் என்னோட ஒரு நல்ல பிரென்ட் அவன் தான். எந்த விஷயமா இருந்தாலும் அவன்கிட்ட வெளிப்படையா பேசலாம். என்ன இரகசியம், பிரச்சனை சொன்னாலும் அத அவனுக்குள்ளயே வெச்சுபான்.

காலேஜ் நாட்கள் முடிஞ்சுது. எனக்கு எங்க ஊருலயே ஒரு கம்பெனில வேலை கிடைச்சது. ஹாஸ்டல் விட்டு திரும்ப கூண்டு கிளியா அப்பாவோட அரவணைப்புல வாழ கிளம்புனேன்.

நோ லவ்!

நோ லவ்!

அவன காதலிச்சதுக்கு அப்பறம் என் லைப்ல வேற லவ்வே வரல. ரெண்டு வருஷம் முழு கவனமும் வேலையில தான் இருந்துச்சு. அப்பறம் ரெண்டு கம்பெனில ஜம்ப் அடிச்சேன். நாலு வருஷத்துல கைநிறையா சம்பளம்ன்னு கிட்டத்தட்ட வாழ்க்கை செட்டில்டு. இனி கல்யாணம் மட்டும் தான் பாக்கின்னு அப்பா அடிக்கடி சொல்ல ஆரம்பிச்சாரு. அப்படியே மாப்பிளையும் பார்க்க ஆரம்பிச்சாரு.

பெண் பார்க்கும் படலம்!

பெண் பார்க்கும் படலம்!

ஒரு நாள் என்ன பொண்ணுப் பார்க்க வராங்க நாளைக்கு சாயங்காலம் சீக்கிரம் வான்னு சொன்னாரு. பெரிசா ஷாக் எதுவும் இல்ல. எங்கப்பா எப்படியும் ஒரு நாள் இப்படி பண்ணுவார்ன்னு கடைசி ஒரு வருஷமா நான் எதிர்பார்த்த வார்த்த தான் இது.

என் அப்பாவ போலவே ஒரு கவர்மென்ட் ஜாப் பாக்குற மாப்பிளை. ரெண்டு வீட்டுல எல்லாருக்கும் ஓகே. எனக்கும் ஒகே.

கல்யாணம்!

கல்யாணம்!

மாப்புள பார்க்க கொஞ்சம் அமுல் பேபி மாதிரி தான் இருந்தாப்புல. உன் டேஸ்ட்டுக்கு ஒத்துவருமான்னு என் பிரெண்ட்ஸ் பல பேர் கேட்டாங்க. எனக்கும் அந்த டவுட்டு இருந்துச்சு. ஆனா, லவ் பண்ற காலம் எல்லாம் முடிஞ்சுது. இது குழந்தை பெத்து செட்டிலாக வேண்டிய காலம்ன்னு சொல்லி மனச தேத்திக்கிட்டேன்.

பெரிய ட்விஸ்ட் என்னனா? என் கணவர் செம்ம ஜாலி ஆளு. பார்க்க மட்டும் தான் அமுல் பேபி. பண்ற வேலை எல்லாம் தில்லாலங்கடித்தனம். லவ்வே இல்லாம போயிடுமோன்னு நெனச்சேன். என்னோட செகண்ட் லவ் ஸ்டோரி நான்ஸ்டாப்ல தூள் கிளப்பும்ன்னு எதிர்பார்க்குல.

"கடவுள் நமக்கு ஒன்னு தரலன்னா, அதவிட சிறந்ததா, நமக்கு ஏற்ற ஒரு விஷயத்த கொடுப்பான்னு..." என் அம்மா அடிக்கடி சொல்ற ஒரு வாக்கியம் அப்பதான் மனசுல பட்டுச்சு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

He is My First Husband But Second Lover - My Story!

He is My First Husband But Second Lover - My Story!