For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்பகத்தால் ஏற்பட்ட சிக்கல், காதலியைப் பிரிந்து சென்ற காதலன் - உண்மை சம்பவம்!

By John
|

காதல் எப்படி வரும், எப்போது வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், வர வேண்டிய நேரத்தில் நிச்சயம் வரும் என்று ரஜினி வசனத்தை ஆல்டர் செய்து சிலர் பில்ட்-அப் கொடுப்பார்கள்.

ஆனால், அது அப்படியே ரிவர்ஸ் ஆக்ஷனாகவும் பிரதிபலிப்பது உண்டு. காதலில் ப்ரேக்-அப் எப்படி ஏற்படும், எப்போது ஏற்படும், எந்த காரணத்தால் ஏற்படும் என்றெல்லாம் சொல்ல முடியாது.

சில சமயம் நாம் தம் காதல் துணைக்கு பிடிக்கும் என்று நினைத்து சில காரியம் செய்வோம். ஆனால், அவர்கள் அதற்கு நேரெதிராக ரியாக்ட் செய்து, ஏன் இப்படி எல்லாம் பண்ற, உனக்கு அறிவே இல்லையா என்று சண்டையிட்டு செல்வார்கள். சிலர் அந்த சண்டையை பெரிதுப்படுத்தி ப்ரேக்-அப் வரையிலும் கூட எடுத்து செல்வார்கள்.

அப்படியாக தான் இங்கே ஒரு சம்பவம் நடந்துள்ளது. தன் காதலனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதாக நினைத்து இந்த பெண் தன் உடலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள. அதையே காரணமாக வைத்து ப்ரேக்-அப் செய்து சென்றிருக்கிறார் அந்த இளைஞர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிஸி!

லிஸி!

என் பெயர் லிசி (ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்). நான் எப்போதுமே என் மார்பகங்கள் சார்ந்து சௌகரியமான உணர்வு கொண்டதில்லை. பள்ளி இறுதி ஆண்டுகளில் மற்ற பெண்களுக்கு வளைவு, நெளிவுகள் கொண்ட உடல்வாகு இருந்த போது. நான் மட்டும் பிளாட்டான உடல் வாகு கொண்டிருந்தேன். நிறைய பேர் என்னுடல் ஆண் தேகம் போல இருப்பதாக கூறி கேலி, கிண்டல் செய்ததுண்டு. இதெல்லாம் என்னை மனதளவில் மிகவும் தளர்ந்து போக செய்தது.

வளரும் போது...

வளரும் போது...

நான் வளர, வளர நான் என்னை பெண்ணாக உணரவே இல்லை. என்னிடம் தன்னம்பிக்கை இந்த காரணத்தால் குறைந்துக் காணப்பட்டது. என் இருபதுகளின் இறுதி காலத்தை எஎட்டிய போதிலும் என் உடல் வாகு ஆண் போன்ற தோற்றம் தான் கொண்டிருந்தது. என்னால் எந்தவிதமான ஆடைகளும் உடுத்த முடியும். ஆனால, லோ-கட் ஆடைகளை தவிர. லோ கட் ஆடைகளை உடுத்தினால் நான் மிகவும் கேலி, கிண்டலுக்கு ஆளாவேன்.

எப்படி மகிழ்வது?

எப்படி மகிழ்வது?

நான் கம்ஃபர்ட்டான உடல் வாகு தான் கொண்டிருந்தேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், நான் மற்ற பெண்களை போன்ற தேகம் கொண்டிருக்க விரும்பினேன். ஆண், போன்ற பிளாட்டான தேகம் எனக்கு பிடிக்கவில்லை. இப்படியொரு காலக்கட்டத்தில் தான் நான் காதல் வயப்பட்டேன்.

கடந்த வருடம்!

கடந்த வருடம்!

கடந்த வருடம் நான் மைக்கேலை சந்தித்தேன். மற்ற ஆண்கள் என் கண்முன்னே, சிலர் முதுகுக்கு பின்னே என் மார்பகங்களை குறித்து கேலி, கிண்டல் செய்திருக்கின்றன. ஆனால், அவன் ஒருவன் மட்டுமே அதை மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டான். ஒருமுறை கூட அவன் என்னையா, என் மார்பகங்களை குறித்தோ கவலைப்பட்டது இல்லை. அவன், நான் எப்படி இருக்கிறேனோ, அவ்வாறே ஏற்றுக் கொண்டான்.

சொகரியமான உணர்வு!

சொகரியமான உணர்வு!

மற்ற ஆண்கள் என் உடலை ஒரு கேலிப் பொருளாக காணும் போது மைக்கல் மட்டும் தான் என்னை சௌகரியமாக உணர செய்தான். நாங்கள் இருவரும் லிவ்-இன் உறவில் இருந்தோம். நாங்கள் இருவரும் நிர்வாணக் கோலத்தில் இருந்த போதிலும் கூட, மைக்கல் என்னை அசௌகரியமாக உணர செய்ததில்லை. அவன், என் உடலை நேசிக்க ஊக்கமளித்தான். என்னை ஒரு அழகானவள் என்பதை புரிந்துக் கொள்ள செய்தான்.

ஸ்மார்ட்!

ஸ்மார்ட்!

மைக்கல் ஒரு ஸ்மார்டான, நகைச்சுவை உணர்வுமிக்கவன். நிறைய பயணங்கள் மேற்கொள்வான். காபியும், இசையும் அவனுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள். மைக்கல் ஒரு ஹாட்டான ஆண்மகன். நாங்கள் இருவரும் லிவ்-இன்னில் இருக்கிறோம். நிச்சயம் திருமணம் செய்துக் கொள்வோம். குழந்தைகள் பெற்றுக் கொள்வோம் என்பதில் உறுதியாக இருந்தோம்.

6 மாதங்கள்!

6 மாதங்கள்!

நாங்கள் உறவில் இணைந்து ஆறு மாத காலம் சென்றிருக்கும். என் பாட்டியிடம் இருந்து எனக்கு வர வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டேன். நானும், பாட்டியும் மிகவும் நெருக்கமானவர்கள். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு இருந்து, மரணம் அடைந்தார். அவர் இறந்தே பிறகே அவரிடம் இருந்து எனக்கு வர வேண்டிய பணத்தை பெற்றேன்.

அறுவை சிகிச்சை!

அறுவை சிகிச்சை!

பாட்டி தான் இறந்த பிறகு உனக்கு கிடைக்கும் பணத்தை சந்தோசமாக செலவு செய் என்று கூறி இருந்தார். நான் மைக்கேலை சந்தோசப்படுத்த அந்த பணத்தை செலவு செய்ய நினைத்தேன்.

ப்ரெஸ்ட் ஆகுமேண்டேஷன் சர்ஜரி செய்துக் கொள்ள அந்த பணத்தை செலவு செய்தேன். ஏறத்தாழ ஒரு மாத காலம் எடுத்துக் கொண்டது. நான் மைக்கலிடம் அதுக்குறித்து சொல்லவில்லை. அவனுக்கு சர்ப்ரைஸ் அளிக்க விரும்பினேன்.

கடைசியாக!

கடைசியாக!

எனக்கு அறுவை சிகிச்சை செய்து மார்பகங்களை பெரிதுப்படுத்தும் அந்த நாளில் கொஞ்சம் பதட்டமாக காணப்பட்டேன். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்து மருத்துவர்கள் என்னை எழுப்பி, சிகிச்சை பயனை காண கூறிய போது மிகவும் த்ரில்லாக இருந்தது.

அதுவரை!

அதுவரை!

என் மேலாடைகள் குறித்து பெரிதாக அதுவரை நான் கவலைப்பட்டதே இல்லை. இனிமேல் நான் பி-கப் சைஸ் உள்ளாடை அணியலாம். இது எனக்கு மகிழ்ச்சியாகவும், த்ரில்லாகவும் இருந்தது. என் புது உடல் வாகினை கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, இரண்டு வாரங்கள் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மைக்கேலை காண்பதை தவிர்த்து வந்தேன்.

மீண்டும்...

மீண்டும்...

இரண்டு வாரங்கள் கழித்து மைக்கேலை காண ஜீன்ஸ் மற்றும் டீ-ஷர்ட் அணிந்து சென்றேன். ஆனால், நான் நினைத்ததை போல மைக்கேல் சர்ப்ரைஸ் ஆகவில்லை. அவன் என்னை குழப்பமான மனநிலையில் கண்டான். அதிர்ச்சி அடைந்தான்.

நான் என்ன செய்தேன் என்பதை அப்போது தான் மைக்கேலிடம் தெரிவித்தேன். அவனிடம் பொய் கூறி இரண்டு வாரம் பிரிந்து இருந்ததற்கு மன்னிப்பு கோரினேன். இதை எனக்காக தான் செய்துக் கொண்டதாக கூறினேன். என்னை கட்டியணைத்துக் கொண்டு. நன்றாக இருக்கிறது. நீ இன்னும் அதிகம் அழகாக காட்சி அளிக்கிறாய் என்று கூறினான்.

உண்மை!

உண்மை!

ஆனால், உண்மையில் மைக்கேலுக்கு நான் மார்பகங்களை பெரிதுப்படுத்திக் கொண்டது பிடிக்கவில்லை. நான் எப்படி இருந்தேனோ அப்படியே தான் என்னை விரும்பினேன். அந்த பிளாட் செஸ்ட் எனக்கு பெரிய பிரச்சனையாக இல்லை. அதுக்குறித்து ஈர்ப்போ, இரண்டாவது எண்ணமோ எனக்கு இல்லை. ஒரு பர்சனாக தான் உன்னை நேசித்தேன் என்று கூறினான்.

இரவு!

இரவு!

அன்று இரவு நாங்கள் படம் பார்த்துவிட்டு படுக்கைக்கு சென்றோம். இரண்டு வாரம் ஆகியும் எனக்கு மார்பக பகுதியில் சிறு வலி இருந்தது. ஆகையால், உன்னை காயப்படுத்த விரும்பவில்லை என்று சொல்லி, முழுமையாக குணமாகும் வரை செக்ஸில் ஈடுபட வேண்டாம் என்று கூறினான் மைக்கேல்.

மாற்றம்!

மாற்றம்!

நான் அவனுக்கு பிடிக்கும் என்று நினைத்த ஏற்படுத்திக் கொண்ட மாற்றம் அவனுக்கு பிடிக்காமல் போனது. நாட்கள் செல்ல, செல்ல எங்கள் உறவில் மாற்றங்கள் எழ துவங்கின. எங்கள் உறவில் இடைவெளி அதிகரித்தது. எங்கள் உறவை மீண்டும் புத்துயிர் பெற செய்ய நான் எத்தனயோ முயற்சி செய்தேன். ஆனால், கடைசியில் நாங்கள் இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

தேவையில்லை!

தேவையில்லை!

மைக்கேல், நான் இம்பிளாண்ட் வைத்துக் கொண்டிருக்க கூடாது என்று கூறினான். மைக்கேலிடம் விளையாட்டாக, அனைத்து காதலர்களும் தங்கள் காதலி இம்பிளாண்ட் வைத்துக் கொள்ள விரும்பும் வேளையில் உனக்கு மட்டும் இது பிடிக்கவில்லையா என்று கூறினேன்.

மைக்கேலுக்கு என் புதிய மார்பகங்கள் பிடிக்கவில்லை. நான் இம்பிளாண்ட்களை அகற்றவும் தயாராக இல்லை. என் உடல் என் உரிமை. இதுநாள் வரை, நான் ஒரு பெண்ணாக நானே உணராமல் இருக்க வைத்தது என் உடலமைப்பு. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறனே. தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறேன். இதை மீண்டும் இழக்க நான் தயாராக இல்லை.

காயம்!

காயம்!

ஒருவேளை எனக்கு பாட்டியிடம் இருந்து வரேவேண்டிய பணம் கிடைத்தவுடன், ஒரு நல்ல ஹாலிடே ட்ரிப் சென்று வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்றும் யோசித்தேன். இனிமேல், கடந்ததை நினைத்து யோசித்துக் கொண்டே இருப்பதில் எந்த பயனும் இல்லை.

இப்போது என் அறுவை சிகிச்சை காயங்கள் முழுதும் ஆறிவிட்டன. கூடிய சீக்கிரம் என் மனதில் ஏற்பட்ட காயங்களும் ஆறிவிடும் என்று நம்புகிறேன். என் இதயம் மீண்டும் தன்னிலை திரும்பும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Boy Friend Broke Up with the Woman, Because of Her Boob Job.

Woman Did a Boob Job to Surprise Her Boyfriend. But, He Hates it and Broke-Up With Her Relationship!
Story first published: Friday, October 26, 2018, 11:58 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more