ஏன் இந்த சினிமாட்டிக் ரொமான்ஸ் ரியல் லைப்ல ட்ரை பண்ணக் கூடாதுன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

சினிமாவ பார்த்து கெட்டுப் போறதுல முதல் ஆளுங்க நாம தான். ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் கூட ரெண்டு படத்துல தொடர்ந்து நடிச்சுட்டா, ஒண்ணு அவன் வெச்சுருகான், இல்ல முடிச்சுட்டான்னு தான் நினைக்கும் ஒரு கூட்டம். இதே ஒரு ஹீரோ அரசியல் கருத்து பேசிட்டா, அடுத்து உடனே அந்த ஹீரோ அரசியல் கட்சி ஆரம்பிச்சு முதலமைச்சர் ஆயிடுவார்ன்னு சில முன்னணி கட்சிகளே நினைக்குது.

அதாவது, சினிமாவ ரியல் லைப்ல அதிகப்படியா ரிலவேட் பண்ணி பாக்குறது ரொம்ப தப்பு. சினிமால நடக்குற எல்லா விஷயமும் அதே மாதிரி ரியல் லைப்ல அப்ளை பண்ணி பார்க்க முடியாது. முக்கியமா நம்ம லவ் லைப்ல.

ரொமான்ஸ், கண்டவுடனே காதல்ன்னு பிரேமம், தீராத விளையாட்டு பிள்ளை, கத்தின்னு பல படங்கள பல காட்சிகள பார்த்து, இதே மாதிரி நம்ம லைப்லயும் நடக்கும்னு ஒருசிலர் கனவு காணலாம். அது கனவா மட்டும் தான் இருக்கும்ங்கிறத நீங்க மனசுல பசுமரத்தாணி போல பதிச்சு வெச்சுக்கணும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அன்லைக்!

அன்லைக்!

ஒருவேளை உங்க லவ்வர் சினிமாவுல வர மாதிரியே முக சாயல்ல வேணும்னா இருக்கலாமே தவிர, அக சாயல் கண்டிப்பா வேற மாதிரி தான் இருப்பாங்க அதனால, ஹீரோ பண்ற சில்மிஷ குறும்பெல்லாம் நாம ட்ரை பண்ணா என்னன்னு உங்க கேரக்டர கெடுத்துக்காதீங்க. அன்லைக் பண்ணா பரவாயில்ல மாத்திடலாம். பிளாக் பண்ணிட்டாங்கன்னா என்ன பண்ணுவீங்க ஜி?

பிராஜக்ட்!

பிராஜக்ட்!

சினிமால ஃபிரண்ட்ஸ் சொல்ற ஐடியால தான் பெரும்பாலும் லவ் சக்சஸ் ஆகும். காதல உயிரை கொடுத்து சேர்த்து எல்லாம் வைப்பாங்க.

காதல சேர்த்து வைக்கிறது மட்டுமில்ல, உங்களுக்கு செட்டாக இருந்த நல்ல காதல பிரிச்சு வைக்கிறதும் கூட நண்பர்கள் தான். நீங்க நினைக்கலாம் அட அவன் சக்சஸ்புல்லா லவ் பண்ணிட்டு இருக்கான். அவன் யோசனை கேட்டா நமக்கும் சக்சஸ் ஆகும்ன்னு. இது தான் நீங்க பண்ற பெரிய தப்பு.

ஒருவேளை உங்கள் ஃபிரண்ட் லவ்வுல கில்லாடியா இருக்கலாம். ஆனா, அவரு ஹேண்டில் பண்ற பிராஜக்ட் வேற, நீங்க ஜாயன்ட் பண்ண ட்ரை பண்ற பிராஜக்ட் வேற. புரிஞ்சதா...?

லிவ்-இன்

லிவ்-இன்

எல்லா லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பும் மெண்டல் மனதில்ன்னு ஓகே கண்மணி போல அமையும்ன்னு நினைக்கிறது தப்பு. அது ஸ்க்ரிப்ட். இது ரியல் லைப் கொஞ்சம் பிசிறுனாலும் லைப் அம்பேல் ஆயிடும். எப்படியும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்ல ஆயிரத்துல ஒன்னு ரெண்டு தான் ஒன்னு சேரும்கிறது வேற கதை. அதுலயும் ஒரு லாங் டைம், ஷார்ட் டைம்ன்னு ரெண்டு வகையறா இருக்கே... பார்த்து இருங்க!

பிரேமம்!

பிரேமம்!

இன்னொன்னு, ஆட்டோகிராப் காலத்துல இருந்து பிரேமம் காலம் வரைக்கும் நாம நம்பி ஏமார்ந்துட்டு இருக்க விஷயம் ஒன்னு இருக்கு. ஒரு லவ் போனா, இன்னொரு லவ் அமையும்ங்கிறது தான் அது. ஆமாம் பாஸ் அமையாது. சினிமால மட்டும் தான் அடுத்தடுத்து அமஞ்சுக்கிட்டே இருக்கும். ரியல் லைப்ல ஒன்னு அமையிறதே ஏழுமலையான் புண்ணியம். ரெண்டு, மூணு கேக்குறது / எதிர்பாக்குறது எல்லாம் மனிதத்தன்மையற்ற செயல் மை சைல்ட்!

உடனே வராது...

உடனே வராது...

கண்டதும் காதல் பிக்-அப் ஆகுறது எல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ். முதல் பார்வையில ஒன்சைடு லவ் எல்லாம் வர நூறு சதவீதம் சான்ஸ் இருக்கு. ஆனா, ரெண்டு பேருக்கும் பத்திக்கிறது எல்லாம் சினிமால மட்டும் தான் நடக்கும். அதனால, ஒரு பொண்ணு பார்த்ததுமே, ஃபிரண்ட்ஷிப் ரெக்வஷ்ட் அனுப்பச்சதுமே அவங்க உங்கள காதலிக்கிறாங்கன்னு மனச குழப்பிக்க வேண்டாம்.

பேனா, பென்சில், ஊதுபத்தி...

பேனா, பென்சில், ஊதுபத்தி...

சிக்னல்ல நிக்கிற பார்வையற்ற நபர்களுக்கு உதவி பண்றது, சின்ன குழந்தைங்க விக்கிற பேனா, பென்சில் காசு கொடுத்து வாங்கிட்டு மீதி சில்லறை நீயே வெச்சுக்கம்மான்னு விட்டுக் கொடுக்கறது எல்லாம் பார்த்து லவ் வரும்ன்னு நினைக்காதீங்க. இதெல்லாம் ஆதாம், ஏவாள் காலத்துலயே பழசாயிடுச்சு.

இப்போ இருக்க பொண்ணுங்க ரொம்ப ஈசியா, ஒரு பையன் இயல்பா எப்படி இருக்கான்னு பார்த்து தான் லவ் பண்றாங்க. நாங்க லவ்வ மட்டும் தான் சொன்னோம், மத்த வேற ஏதும் இல்ல.

ஒரே விளையாட்டு....

ஒரே விளையாட்டு....

ஊருக்குள்ள ஒருசில ப்ளேபாய்ஸ் இருக்கத்தான் செய்றாங்க. ஆனா, அதெல்லாம் தீராத விளையாட்டப் பிள்ளை மாதிரியே அமையும்ன்னு எதிர் பார்க்க கூடாது. அப்படியே ஒருத்தன் நம்மள ஏமாத்திட்டான்னு தெரிஞ்சா, இந்த காலத்து பொண்ணுங்க.. அவன வெச்சு செஞ்சிடுவாங்களே தவிர, போனா போகுதுன்னு மெச்சி கல்யாணம் எல்லாம் பண்ணிக்க மாட்டாங்க.

சமூக அக்கறை!

சமூக அக்கறை!

நாட்டுல நடக்குற அநியாயத்த தட்டி கேட்டா, அத பார்த்து பொண்ணுங்களுக்கு நம்ம மேல லவ் வரும்ன்னு நினைக்கிறீங்களா? கத்தி படத்துல சமந்தாவு சொன்னது கூட லவ் ஹிம் தான்... லவ் யூ இல்ல தெரியும்ல...

அநியாயத்த தட்டிக்கேட்டு ஃபேஸ்புக்குல ஸ்டேடஸ் போட்டா லைக்கே வராது. அப்பறம் எப்படி நீங்க காதல் எல்லாம் எதிர்பார்க்கலாம். கூடவே கூடாது. அப்படி ஒரு நெனப்பு இருந்தா தூக்குக் வீசிடுங்க.

அது ஸ்க்ரிப்ட்!

அது ஸ்க்ரிப்ட்!

சினிமாட்டிக் ரொமான்ஸ் மொத்தமா டைரக்டர் எழுதி வெச்ச ஒன்னு. அதுல ஹீரோ, ஹீரோயின் எந்த சூழல்ல இருப்பாங்க, அடுத்த என்ன பண்ணுவாங்கன்னு எல்லாமே எழுதி வெச்சுருப்பாங்க.

படத்துல பார்த்தமேன்னு மழை பேஞ்சா ரொமான்ஸ் பண்ணலாம்ன்னு நீங்க நினைக்கலாம். ஆனால், அன்னிக்குக் உங்க துணை என்ன சூழல கடந்து வந்தாங்க, ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு திரும்பும் போது அவங்களுக்கு என்னென்ன விஷயம் எல்லாம் நடந்துச்சுன்னு தெரியாம ரொமான்ஸ் ட்ரை பண்ணி மாட்டிக்காதீங்க.

இது எல்லா சீனுக்கும் பொருந்தும்.

க்ளைமேக்ஸ்!

க்ளைமேக்ஸ்!

தியேட்டர்ல நாம பாக்குற ரொமான்ஸ் ஜோடிக்குள்ள என்ன சண்டை வந்தாலும், க்ளைமேக்ஸ்ல ஒண்ணு சேர்ந்திடுவாங்க. ஆனால், சினிமால பார்த்த அதே பிரச்சனை எல்லாம் நம்ம ரியல் லைப்ல நடந்தா, நாம அதே மாதிரி ஒண்ணு சேர்வோம்ன்னு சொல்ல முடியாது. எனவே, ரொமான்ஸ் லைப்ல கொஞ்சம் கை, கால வெச்சுக்கிட்டு நேரம் வர வரைக்கும் காத்திருக்க வேண்டியது அவசியம்.

அவசரப்பட்டு வெண்ணெய் திரண்டு வரும் போது பானைய உடைசிடாதீங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why You Should Not Try Reel Life Romance in Real Life?

Why You Should Not Try Reel Life Romance in Real Life?
Story first published: Thursday, November 9, 2017, 12:32 [IST]
Subscribe Newsletter