'கறவ மாடு மூணு... காள மாடு ஒண்ணு...' - பிக் பாஸ் கூறும் காதல் கதைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

பிக் பாஸ் தான் கடந்த இரண்டு வாரங்களின் டிரென்டிங் டாப்பிக். யூடியூப் சென்று டிரென்டிங் வீடியோக்குள் சென்றால் 99% பிக் பாஸ் தமிழ் வீடியோக்கள் தான். சரி ஃபேஸ்புக்குள் வந்தால் அனைவரும் பிக் பாஸ் ஹேஷ்டாக் போட்டு தான் பதிவு செய்கிறார்கள்.

பத்து வருடங்களுக்கு முன்னர் வீட்டில் அம்மா, பாட்டிகள் மெட்டி ஒலி ராஜத்தை திட்டி தீர்த்தனர். இன்று ஆண் மக்கள் பிக் பாஸ் ஆர்த்தி, காயத்திரியை திட்டி தீர்க்கின்றனர். அவ்வளவு தான் வித்தியாசம்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாம் கண்டறிந்த விஷயம் மூன்று வகையிலான ஒருதலை காதல் கதைகள். இந்த மூன்று வகை காதல் கதைகள் எப்படி துவங்கும், எப்படி செயற்படும், இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என இந்த தொகுப்பில் காணலாம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓவியா!

ஓவியா!

வெளிப்படையாக தனது காதலை வெளிக் கூறிவிட்டு, எதிர்பாலின நபர் பதில் கூறும் வரை காத்திருப்பது அல்லது அவர்களை கவர தங்கள் சுட்டித் தனத்தை, திறமைகளை வெளிப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது முதல் வகை ஒருதலை காதல்.

யார் கூட்டும் இருக்காது!

யார் கூட்டும் இருக்காது!

இந்த மாதிரியான ஒருதலை காதல் நாம் பல தமிழ் சினிமாக்களில், உலக சினிமாக்களில் பார்த்திருப்போம். இவர்கள் தாங்கள் காதலிக்கும் நபரை ஈர்க்க யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். தங்களால் முடிந்தவற்றை மட்டும் செய்துக் கொண்டு காதலுடன் காத்திருப்பர்.

முடிவு!

முடிவு!

இது போன்ற காதல் கதைகளின் முடிவு பெரும்பாலும் சுபமாக தான் இருக்கும். எத்தனை நாட்கள் தான் காத்திருக்க வைக்க முடியும். பெண்களுக்கு நல்ல மனதுண்டு. ஒரு நாள் இறங்கி வந்து காதலை ஏற்றுக் கொள்வார்கள்.

ஜூலி!

ஜூலி!

தங்கள் காதலை தாங்கள் காதலிக்கும் நபர்களிடம் கூறாமல், மற்றவரிடம் கூறி, டிப்ஸ் கேட்பது, இது ஒத்துவருமா? ஆகாதா? என சந்தேகம் கொள்வது என சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு தாங்கள் காதலில் தான் இருக்கிறோமா என்றே தெரியாது. அ.ஆ.., எஸ்.ஜே.சூர்யா போல இருக்கு ஆனா இல்ல என்று சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

ஐடியா!

ஐடியா!

இவர்கள் நண்பர்கள், உடன் பணிபுரியும் நபர்களிடம், தான் எந்த அளவிற்கு அந்த நபரை காதலிக்கிறேன் என கூறுவார்களே தவிர, காதலிக்கும் அந்த நபரிடம் தங்கள் காதலை பற்றி கூற மாட்டார்கள். மாறாக, ஐடியா கொடு, எப்படி ப்ரபோஸ் பண்றது என தலையை சுற்றி மூக்கை தொட முயற்சிப்பார்கள்.

முடிவு!

முடிவு!

ஏறத்தாழ இது போன்ற காதல் கதைகள் ஷாஜகான் விஜய் கதை போல சுபமான முடிவாக இருக்காது. இவர்கள் காதலை கூறுவதற்குள் அந்த வடையை வேறு யாரோ கவ்விக் கொண்டு சென்றிருப்பார்கள்.

ஆரவ்!

ஆரவ்!

இவர்கள் தாங்கள் காதலிப்பதை மற்றவரிடமும் கூற மாட்டார்கள், காதலிக்கும் நபரிடமும் கூற மாட்டார்கள். தங்கள் மனதுக்குள் காதல் கோட்டையை கட்டி வைத்துக் கொண்டு, அதற்குள் கனவு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.

(ஆரவ் ரைசாவை தான் காதலிக்கிறார், அதை வெளிப்படுத்தவில்லை என சில புரளி கதைகள் வந்தவண்ணம் உள்ளன. சொல்ல முடியாது நாளைய நிகழ்ச்சியில் இதுவும் அரங்கேறலாம்)

தனிமை உலகம்!

தனிமை உலகம்!

கவிதைகள் எழுதுவது, கதைகள் எழுதுவது, வாங்கி வைத்த பரிசு பொருட்களை தாங்களே வைத்துக் கொண்டு தயக்கம் காட்டுவது என அந்நியன் அம்பி போல வாழும் ஜீவன்கள் இவர்கள். இவர்களது காதலை புலன் விசாரணை செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும்.

முடிவு!

முடிவு!

இவர்களுக்கு இந்த ஜென்மத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்வது கடினம். வீட்டில் நல்ல மகராசியாய் பார்த்து திருமணம் செய்து வைத்தால் எந்த குறையும் இல்லாமல் குடித்தனம் நடத்துவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Are The Three Kinds of One Side Love?

What Are The Three Kinds of One Side Love?