விஸ்பர், டிண்டர், சாராஹா... திசைமாறும் இளைய தலைமுறை!

Posted By:
Subscribe to Boldsky

இங்கே பிரச்சனை என்பது ப்ரேக்-அப் அல்ல, காதல்! எது உண்மையான காதல் என்ற புரிதல் இல்லாத காரணம் தான் இன்றைய தலைமுறையின் காதலில் நிறைய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

காதல் என்ற போர்வையில் காமம் தேடும் கூட்டம் ஒருபுறம், ஆணா, பெண்ணா என்றே தெரியாமல் காதல் வலையில் விழும் கூட்டம் ஒருபுறம். யார்? என்ன? என்றே தெரியாமல் கொஞ்சி குலாவ மட்டும் பயன்படுத்திக்கொள்ள திரியும் கூட்டம் ஒருபுறம்.

இந்த கூட்டத்தில் உண்மை காதலை தேடுவதும், பெறுவதும் மிகவும் அரிய காரியம் ஆகிவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டேட்டிங் செயலிகள்!

டேட்டிங் செயலிகள்!

டேட்டிங் ஆப்களின் வருகைக்கு பிறகு பஸ் ஸ்டேண்ட் காதல் மறைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். சமீபத்திய வரவான சாராஹா எனும் சுய மேம்பாட்டு செயலியை கூட நம்மில் பலர் டேட்டிங் செயலி போல தான் பயன்படுத்தி வருகிறார்கள். "ஐ வான்ட் டு டேட் யூ", "ஐ லவ் யூ.." என பித்துப்பிடித்து திரிகிறார்கள்.

உண்மை காதல்?

உண்மை காதல்?

ஹோட்டலில் சாப்பாடு கிடைக்கிறது, ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்துவிடுகிறது என வெளி சாப்பாடு சாப்பிடுவது தவறல்ல.

ஆனால், இதுவே அன்றாட வேலையாக இருந்தால், காலப்போக்கில் உங்கள் ஆரோக்கியம் சீர்கெட்டுவிடும் என்பதை மறந்துவிட கூடாது.

உண்மை காதல் என்பது வீட்டு சாப்பாடு போன்றது. சில சமயங்களில் கசக்கும், தீய்ந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதை மீட்டெடுக்க நிறைய வழிகள் இருக்கின்றன.

அதை தவிர்த்து, உடனே வீட்டு சாப்பாடு வேண்டாம், என்ன கருமமாக இருந்தாலும் பரவாயில்லை நான் வெளியே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்பது முற்றிலும் தவறு.

மோகம்!

மோகம்!

நல்லவன் என்றால் பழம், கெட்டவன் என்றால் கெத்து என்ற சூழல் நம்மை அறியாமல் நம்முள் வளர்த்து வருகிறோம்.

இளமை இருக்கும் வரை தான் இது கெத்து, கித்தெல்லாம். "இருபதுகளில் கொஞ்சம் ஒழுக்கமாக இருந்திருந்தால் இன்று நம் நிலை நன்றாக இருந்திருக்குமோ என்று..." முப்பதை தாண்டி வாழும் போது அச்சம் எழாத வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வளர்த்த மரத்தை அறுக்க வேண்டாம்!

வளர்த்த மரத்தை அறுக்க வேண்டாம்!

நமது கலாச்சாரம் உலகிலேயே உயர்ந்தது, சிறந்தது. நமது முன்னோர் வளர்த்து வைத்த கலாச்சாரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடவேண்டிய நாம். அலங்கார பொருட்கள் செய்கிறேன் என வெட்டிவிட வேண்டாம்.

மேற்கத்திய மக்கள் பின்பற்ற துவங்கியுள்ளது நமது உணவு பழக்கத்தை மட்டுமல்ல, கலாச்சார பழக்கங்களையும்.

ஆசை, ஆசையாக வளர்த்த மரத்தை நாமே அறுத்துக் கொண்டிருக்கிறோம்!

அச்சம் தவிர்!

அச்சம் தவிர்!

தன் காதல சொல்ல தயங்குறவன், வாழ தகுதி இல்லாதவன் என்பது வெறும் டயலாக் மட்டும் அல்ல. இங்கு காதல் என்பதை ஒரு பெண்ணிடம் ப்ரபோஸ் செய்வது மட்டுமல்ல, தனக்கு பிடித்த அனைத்து விருப்பங்களாக காண வேண்டும்.

காதல் என்பது ஒரு சிறந்த உந்து சக்தி. அதை நேரடியாக கேட்டுப் பெறுவது தான் ஆரோக்கியமானது. தான் நேசிக்கும் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தும் அளவு கூட தைரியம் இல்லாத ஒரு நபர். காதலை வெளிப்படுத்தவே தயங்கும் ஒருவர், பின்னாட்களில் காதலில் எழும் பிரச்சனை, திருமணத்திற்கு பிறகு எழும் சூழல்களை எப்படி கையாள முடியும்?

இழிவு!

இழிவு!

அன்றைய, "அட பொன்னான மனமே, பூவான மனமே, வைக்காத பொண்ணு மேல ஆச", "வர வர காதல் கசக்குதய்யா" போன்றவற்றில் பெண்களை அவதூறு பேசி, இழிவுப்படுத்தி வரிகள் ஏதும் இடம் பெறவில்லை.

ஆனால், இன்றைய "அடிடா அவள... உத டா அவள...", "உண்ம காதலே இங்க இல்ல சித்தப்பு... இங்க ஒருத்தன் சாகுறான்... ஆனா ஒருத்தன் வாழுறான்...", "ஒய் திஸ் கொலைவெறி.." இன்னும் எண்ணிலடங்காத எக்ஸ்டிரா பாடல்கள் பெண்களை எந்த அளவிற்கு கீழே போட்டு மிதிக்க முடியுமோ, அந்த அளவிற்கு அசிங்கப்படுத்தியுள்ளது.

காதல் உறவில் தான் விரும்பும் எதிர்பாலினத்தின் மீது ஒருவருக்கு இந்த அளவிற்கு கோபம் வர காரணம் என்ன? ஒன்று, அவர் தனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது. மற்றொன்று, மோசமான ஒருவனை தேர்வு செய்துவிட்டாளே என்ற ஆதங்கம்.

இதில், இரண்டாம் காரணம் எழும் போது பெண்களை வசைப்பாட ஆரம்பித்து விடுகிறது ஆண்களின் குறுஞ்செய்திகளும், பாடல் வரிகளும்.

ப்ரேக்-அப்!

ப்ரேக்-அப்!

இதில், முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், முந்திய காலத்தில் பலமுறை சண்டைப்போட்டு, மீண்டும் காதலில் இணைந்து. திருமணம் செய்துக் கொண்ட ஜோடிகளை நாம் பார்த்திருக்கிறோம்.

இன்றோ! ப்ரேக்-அப் ஆனால் அவ்வளவு தான், மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை, அதை எவருமே விரும்புவதும் இல்லை. சண்டையின் காயம் ஆறும் முன், மனம் ஆசுவாசம் அடைவதற்குள் இன்னொரு காதல் முளைத்துவிடுகிறது.

மீண்டும் ஒருமுறை! காதல் என்பது சிறந்த உந்து சக்தி! அதை சரியாக பயன்படுத்தினால் எந்த உயரத்தை வேண்டுமானாலும் எட்டிப்பிடிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Reasons Why This Generation Has a Difficulty in Finding a True Relationship!

    relationship tips in tamil, relationship difficulties, relationship goals, cheating relationships, love break up stories,
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more